ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சபையில் சாத்தானின் இரண்டாவது வெற்றி

கடந்த பதிவில் சபையில் இருந்து கொண்டே பலருக்குத் தடையாகவும், பின்னர் மனந்திரும்பி கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள் தான் சாத்தானுக்கு முதல் வெற்றியைத் தேடித்தந்துள்ளார்கள்.

சபையில் சாத்தானின் இரண்டாவதுவெற்றி என்ன? யார் மூலமாக இது அவனுக்கு கிடைக்கிறது?

பிரியமானவர்களே ஒரு ரசசியத்தை உங்களுக்கு எழுதுகிறேன். ஒரு நாளும் சாத்தான் தேவபிள்ளைகள் மேல் ஜெயம் பெறவே முடியாது.

காரணம் சர்வ வல்ல தேவனுடைய பிள்ளைகளை, சிலுவையின் மேல் சாத்தானின் அதிகாரங்களை உரிந்து கொண்ட இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளை, தேவபிள்ளைகள் மீது வைராக்கியம் பாராட்டுகிற, முத்திரையை தரிப்பித்த பரிசுத்தாவியானவரின் ஆளுகையில் உள்ள பிள்ளைகளை சாத்தான் மேற்கொள்ளவே முடியாது.

ஆனால் தேவ பிள்ளைகள் மேலிருந்த கிருபை விலக்கப்படுமானால் தேவனுடைய கரம் நீக்கப்படுமானால் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக் கொண்டால் சத்துரு எளிதாக ஜெயம் எடுத்து விடுவான்.

சிம்சோன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதானாயிருந்தாலும் பெண்ணாசையால் இடறி தேவனுடைய கற்பனையை மீறி தன்னுடைய பெலன் தன் தலைமுடியில் இருக்கிறது என்கிற ரகசியத்தை வெளிப்படுத்தி தேவனுடைய கற்பனையை மீறினபடியால் நடந்தது என்ன?

பெலிஸ்தியர்கள் நம்முடைய பகைஞனான சிம்சோனை நம்முடைய தேவனாகிய தாகோண் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி தாகோணுககு பெரிய விழாவே எடுத்து விட்டார்கள்.

தேவ பிள்ளைகளே உங்கள் ஆவிக்குரிய வீழ்ச்சி சாத்தானுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதோடு தேவனுக்கு தலைகுனிவையும் தருகிறது என்பதை மறந்து போகக் கூடாது.

ஏலி தீர்க்கதரிசியின் காலத்தில் ஏலியின் பிள்ளைகள் தேவாலயத்தில் வேலை செய்கிற பெண்களோடு விபச்சாரப் பாவத்தில் ஈடுபட்டபடியால் கர்த்தர் அவர்களை அடிக்கத் தீர்மானித்தார்.

அதன் விளைவு என்ன? இரண்டு பேரும் கொல்லப்பட்டனர் அதோடு தேவனுடைய பெட்டியும் பெலிஸ்தரால் பிடிக்கப்பட்டு இரவில் தாகோணன்டையிலே வைத்தார்கள்.

தேவனுடைய பெட்டி அந்நிய விக்கிரகத்தின் கோவிலில் ஒரு கைதியைப் போல வைக்கப்பட்டது எவ்வளவு கேவலம் பாருங்கள் அதற்கு காரணம் யார்?

பரிசுத்தமாய் வாழ வேண்டிய ஆசாரியர்கள் பரிசுத்தத்தை குலைத்துப் போட்ட படியால் தேவனுடைய பெட்டி தாகோணின் கோவிலில்.

எனவே தேவபிள்ளைகள் தேவனுடைய கற்பனையிலிருந்து விலகினால் நாம் தேவனை சாத்தானுக்கு முன்பாக தலை குனியச் செய்கிறோம்.

இதைப் பயன்படுத்தி சாத்தான் தன்னைப் பெரியவனைப் போல காண்பித்து விடுகிறான். சரி இப்போது சபையில் சாத்தானின் இரண்டாம் வெற்றி பற்றி காண்போம்.

சபையில் அமர்ந்து கொண்டு சபைப் போதகரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் அவதூறாக பேசும்போது சாத்தான் சபையில் தன்னுடைய வெற்றியாக எடுத்துக் கொள்கிறான்.

போதகர்களை குற்றப்படுத்தும் போது அவர்களுக்குள் இருக்கும் அபிஷேகத்தை, அழைப்பை, அவர்களை அழைத்த தேவனை குற்றப்படுத்துகிறோம்.

ஒரு முறை ஒரு குறிப்பிட்ட லாட்ஜில் தங்கியிருந்த ஒருவரை மற்றொருவர் தகராறு காரணமாக லாட்ஜின் அறையில் வைத்து அடித்து விட்டார்.

இதையறிந்த லாட்ஜின் முதலாளிக்கு கடுமையான கோபம் வந்தது. இருவரையும் கூப்பிட்டு விசாரிக்கும் போது அடித்தவனைப் பார்த்து ஒரு வார்த்தையை சொன்னார்

“அவன் தவறே செய்தாலும் நீ என் லாட்ஜில் வைத்து அடித்தது தவறு “ அப்படியானால் என் லாட்ஜில் தங்குகிறவனுக்கு என்ன பாகாப்பு இருக்கிறது என்றார்.

ஆம் பிரியமானவர்களே யாரென்று தெரியாத ஒருவனை தனக்கும் அவனுக்கும் சம்மநதமில்லாத‌ ஒருவனை தன் லாட்ஜில் வந்து அடித்ததை சகிக்க முடியாத முதலாளிகள் பூமியில் இருக்கும் போது வானத்தையும் பூமியையும் படைத்தவர் சர்வ வல்லமையுள்ளவர் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவர் எப்படி தன் பிள்ளைகள் மீது கை வைக்க விடுவார். அவர்களை அவமதிப்பதை பொறுப்பார்.

மோசேயைப் பாருங்கள் ராஜ அரண்மனையில் சொகுசாக நாற்பது ஆண்டுகள், வனாந்திரத்தில் வெறுப்புடன் நாற்பது ஆண்டுகள் முடிவிலே எரிந்து போகாத முட்செடியின் அற்புதம். ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்த மோசேக்கு உன்னதரிடமிருந்து ஒரு உன்னத அழைப்பு. அதை ஏற்றுக் கொள்ளவோ மறுப்பு.

அடுக்கடுக்காய் தன் குற்றங்களை சுட்டிக் காட்டி அனுப்ப சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்று அழைத்த தேவனுக்கே ஆலோசனை கொடுத்தார். எப்படியோ தேவன் அவரை தேற்றி அனுப்பினார்
இப்போது மோசே எத்தியோப்பிய ஸ்திரியை விவாகம் பண்ணினதால் பாளயத்தில் குழப்பம் ஏற்பட்டு மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாய் பேசினார்கள்.

மனமுடைந்து‌ போன மோசே என்ன செய்திருப்பார் என்று நான் யோசித்து‌ப் பார்த்தேன்.

வீட்டிற்கு மனமடிவுடன் மோசே வருகிறார் அவன் அதிகமாய் நேசித்த எத்தியோப்பிய மனைவி அவரை இன்முகத்தோடு வரவேற்று சாப்பிடுங்கள் என்றாள்.

இவரோ மறுத்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டினார் கண்ணீரோடு கர்த்தரிடத்தில் சொன்னார்.

“ஆண்டவரே என்னை விட்டுவிடும் என்று அன்றே உம்மிடம் சொல்லவில்லையா? நான் குறைவுள்ளவன்” என்று சொன்னது‌ம் கர்த்தர் மோசேயை நோக்கி “என்ன விஷயம்? ஏன் அழுகிறாய் ?“ என்று எல்லாம் தெரிந்து‌ம் தெரியாதது‌ போல் விசாரித்தார்.

ஆண்டவரே நான் எத்தியோப்பிய ஸ்திரியை மணந்ததால் இங்கு பிரச்சனையாகிவிட்டது‌. எனவே என்னை விட்டுவிடும் நான் போகிறேன். என்றார்.

உடனே தேவன் மோசேயை நோக்கி மகனே உனக்கு கற்பனையை கொடுத்தது‌ நானல்லவா.

நான் கொடுத்த கற்பனையை நீ உன் கையினால் உடைத்தபோதே உன்மீது‌ நான் கோபப்படவில்லையே நீ அதை யோசிக்க வில்லையா?

கற்பனையை கொடுத்த எனக்கு மன்னிக்கவும் அதிகாரம் உண்டு என்பதை நீ அறிந்து‌ கொள். சரி நீ எழுந்து‌ ஆசாரிப்பு கூடாரத்துக்கு வா என்றார்.

அப்படியே மிரியாமையும் ஆரோனையும் கர்த்தர் ஆசாரிப்பு கூடாரத்துக்கு வரும்படியாக அழைத்தார்.

ஆரோனும் மிரியாமும் கர்த்தர் நம்மிடத்தில் மோசேயைப் பற்றி விசாரிக்கப்போகிறார், விசாரணை நடக்கப்போகிறது‌ என்று கெம்பீரமாய் ஆசாரிப்பு கூடாரத்திற்கு வந்தார்கள்.

மோசேயோ தன்னை நேசித்த, தான் செய்த தவறை மன்னித்த தேவ அன்பை எண்ணி கண்ணீரோடு வெளியில் நின்று கொண்டிருந்தார்.

மேகத்தூணில் இறங்கின தேவன் ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்.

விசாரணையில் சம்மந்தப்பட்ட மோசேயை விட்டு விட்டு நம்மை மட்டுமே தேவன் அழைக்கிறாரே என்ற எண்ணத்து‌டன் உள்ளே சென்ற போது எதையும் விசாரிக்காமல் அவர்களை கடிந்து‌ கொண்டு குஷ்டரோகத் தண்டனையை மிரியாமுக்கு கொடுத்து‌ அனுப்பினார்.

அதிர்ந்து‌ போனார் ஆரோன். விசாரணையே இல்லாமல் தண்டனையா? உலகத்தில் கூட இப்படி யாரும் விசாரிக்காமல் தண்டனை கொடுக்க மாட்டார்களே என்று யோசிக்கலாம்.

ஆண்டவரைப் பொறுத்த வரை விசாரிக்கப்பட வேண்டிய காரியமாக இதை கருதவில்லை.

ஆனால் மோசே இதை குற்றமாக நினைத்து மனம் உடைந்தபோது‌ தேவன் அதையே விசாரணையாக வைத்து‌ மன்னிப்பைய‌ளிப்பதாக கூறினார்.

மன்னிப்பு கொடுக்கப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது‌ ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்ததால் கொண்டு வந்தவருக்கே குஷ்டரோகத் தண்டனை வழங்கப்பட்டது‌.

சரி அப்படியானால் ஊழியம் செய்கிறவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் ஒன்றும் சொல்லக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம்.

சரி ஊழியர்கள் தவறு செய்யும் போது‌ என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். சில ஊழியர்கள் தங்கள் அறியாமையினாலே சிறு சிறு தவறுகள் செய்வதைப் பார்த்தால் அதை அப்படியே பெரிது‌ படுத்தி பலரிடம் சொல்லி அதைக் குற்றப்படுத்து‌வது‌ கூடாது‌.

மாறாக தேவ சமூகத்தில் ஜெபித்து‌ போதகர் தனியாய் இருக்கும் போது‌ “ஐயா என் உள்ளத்தில் நீங்கள் செய்யும் இந்தக் காரியம் உறுத்தலாக உள்ளது‌ “ என்று நீங்கள் சொல்லும் போது‌

தாழ்மையான, தேவனால் அழைக்கப்பட்ட, ஆவியானவரின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுபவராயின் முதலில் நீங்கள் வந்து அதை அவரிடத்திலே வந்து‌ நாகரிமாக அதே நேரத்தில் தைரியமாய் சொன்னதற்காக மிகவும் சந்தோஷப்படுவார்.

அதன் பின்பு தன் பக்கத்தில்இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்து‌ இதனால் தான் அந்த காரியத்தை செய்தேன் என்று சொல்லுவார்.

அல்லது‌ தனக்கு அது‌ இப்போது‌ தான் தவறு என்று பட்டதாக தெரியவந்தால் அதை திருத்திக் கொள்கிறேன் எனக்காக ஜெபித்து‌க் கொள்ளுங்கள் என்று இன்முகத்தோடு உங்களை அனுப்பி வைப்பார்.

மாறாக நான் அப்படித்தான் செய்வேன் கேள்வி கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது‌? என்று கடிந்து‌ கொண்டு அதையே பிரசங்கபீடத்தில் வைத்து உங்களை குற்றப்படுத்து‌ வாரானால் அப்படிப் பட்ட ஞானமற்ற போதகரிடமிருந்து‌ விலகியிருப்பதே நல்லது‌.

ஒரு வேளை இந்தப் பகுதியை வாசிக்கிற நீங்கள் ஒரு போதகராகவோ அல்லது‌ ஏதோ ஒரு ஊழியத்தை செய்கிறவர்களாயிருந்தால் நீங்கள் ஒரு சிலரை ஞானமுள்ளவராய் கண்டால் உண்மையுள்ளவராய் கண்டால் அப்படிப்பட்டவர்கள்

உங்களை விட சிறியவராய் இருந்தாலும் அவர்கள் சொல்லும் ஆலோசனையில் உண்மை இருப்பதைக் கண்டால் மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அப்படி செய்தால் கர்த்தரின் கரம் உங்கள் ஊழியத்தில் வல்லமையாய் செயல்படுது‌வடன் நெடுங்காலமாய் மங்கி யெரியும் உங்கள் ஆத்து‌மாவிலும் ஒரு அனல் உண்டாவதைப் பார்ப்பீர்கள்.

ஆனால் போதகரை குற்றப் படுத்த வேண்டும் என்பதையே பிரதானமாய் கொண்டு முரட்டாட்டத்து‌டன் குற்றப்படுத்வீர்களானால் உங்களுக்கு ஐயோ.

என்னைப் பொறுத்த வரை உங்களுக்கு போதகரின் சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லை யென்றால் அமைதியாக ஆராதனையில் கலந்து‌ கொண்டு தேவனைத் து‌தித்து‌ விட்டு நிம்மதியாய் வீடு வந்து‌ சேர்வது‌ நல்லது‌.

போதகர்கள் தெரிந்தே தவறையும் செய்து‌ கொண்டு மன்னராட்சி போல என்னைக் கேட்பவர்கள் யார் என்று சொல்லி ஆணவம் கொண்டிருந்தால் சபையும் வளராது‌ உங்கள் சொந்த ஆத்துமாவையும் கெடுத்து‌ப் போடுவீர்கள்.

ஆம் பிரியமானவர்களே சாபத்தோடும் பாவத்தோடும் வருகிற மனிதனை தேவன் நேசித்து‌ அவனை இயேசுவின் ரத்தத்தினால் கழுவி நீதிமானாய் மாற்றி தன்னை ஆராதிக்கும் படியாக சபையில் நாட்டுகிறார்.

கனி தரும் செடியாய் நாட்டப்பட்ட மனிதனைப் பார்த்த சாத்தான் “சாபத்தினால் நிமிர முடியாமல் இருந்த இவன்¢ இன்று கெம்பீரமாய் நடந்து‌ வருவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய சாபத்தையும் முறியடிக்க முயல்கிறான் என்றெண்ணி

 தனக்கு கொடுக்கப்பட்ட வரத்தினால் போதகரை அற்பமாய் எண்ணி நானும் ஊழியம் செய்கிறேன் பார் என்று சவால் விடச் செய்தால்

 போதகரின் சிறு தவறுகளையும் பெரிதாக ஊதி ஆத்து‌மாக்களுககு இடறலை உண்டு பண்ணி சாபத்தை உன் மீதே வருவித்து‌க் கொண்டால்

 காரணமில்லாமல் போதகருக்கு விரோதமாக எழும்பப் பண்ணினால்-------------------- அது‌வே சபையில் சாத்தானின் இரண்டாம் வெற்றி

கருத்துகள் இல்லை: