திங்கள், 5 ஜனவரி, 2009

மனதை விட்டு நீங்க மறுக்கும் அந்த நவம்பர் 27

இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம் இந்தியர் அனைவரும் ஒற்றுமைகொள்வோம். இந்தியர் நம்மில் வேற்றுமை காணோம்.

மும்பை தீவிரவாத தாக்குதலில் 180க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாயுள்ளனர். 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பலியாயுள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கோடிக்கணக்கான இந்திய மக்கள் அன்று உறக்கத்தை இழந்து சோகத்துடன் அந்த இரவை கழித்தனர். இப்படி அனைவரையும் பாதித்த சம்பவம் தான் அந்த நவம்பர் 27 அன்று நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல்.

தங்களுடைய மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதின்நிமித்தமே தாங்கள் இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதாக கூறிகொண்டாலும் அதனால் வரும் பாதிப்புகளை இவர்கள் சிந்திப்பதே இல்லை.

எத்தனை குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். எத்தனைபேர் உடல் ஊனத்தின்நிமித்தம் எதிர்காலத்தில் உழைக்கும் சக்தியை இழந்துள்ளனர். நாள்தோறும் வேதனை அனுபவிப்போர் எத்தனைபேர்..

ஏன் இதை இந்த தீவிரவாதிகள் யோசிப்பதே இல்லை. இந்தளவுக்கு இவர்களின் மூளை சலவை செய்யப்படுகிறதா?? என்னே கொடுமை

அதற்கு காரணம் நான் என்னுடைய மதத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையே காரணம் என்று கூறுவதை எந்த வகையில் ஏற்றுகொள்ளமுடியும். அப்படிப்பட்ட மதம் நமக்கு தேவையா??

கிறிஸ்த வேதத்தில் ஒரு வார்த்தை இப்படியாக உள்ளது மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிற வர்களுக்கு நன்மை செய்யுங்கள்;

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். என்று

இந்த வசனத்திற்கு உதாரணம் சில வருடங்களுக்கு முன் இந்துமத தீவிரவாதிகளால் ஒரிசாவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிராகம் ஸ்டெயின்ஸும் அவருடைய இரண்டு மகன்களும் கொல்லப்பட்டபோதும் அவருடைய மனைவி சொன்ன வார்த்தை பொன்னெழுத்துகளால் பொறிக்கபடவேண்டியது

"அதாவது என் கணவரையும் என்பிள்ளைகளையும் கொன்றவரை நான் மனதார மன்னிக்கிறேன் என்றாரே "

இதுவும் அவர் மதத்தின்மீது ஆழந்த பற்றுகொண்டதினால் வந்த வார்த்தைதானே

ஆக ஒரு மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வரும்போது அதனால் பிறருக்கு நன்மை ஏற்படவேண்டுமே தவிர அதினால் பிறருக்கு பாதிப்புவரக்கூடாது

இப்படிப்பட்ட கொடுர தாக்குதலில் தங்களுடைய உயிர் போனாலும் பராவியில்லை பொதுமக்களை காப்பாற்றுவோம் என்று போரிட்டு அதில் தங்களுடைய இன்னுயிரையும் ஈந்து வீரமணத்தை வீரமண்ணீலே அடைந்த வீர அதிகாரிகளுக்கும் வீர போர்வீரர்களுக்கும் என்னுடைய வீரவணக்கங்களும் அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

இவர்கள் ஆறுதலைடைய இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

கருத்துகள் இல்லை: