புதன், 7 ஜனவரி, 2009

மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர்

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் வருகிற புத்தாண்டு மகிழ்ச்சியின் ஆண்டாக அமையட்டும். அனைத்து வளங்களும் பெருகட்டும். இறைவனின் ஆசி எப்போதும் உண்டாகட்டும்.


உண்மையை தேடுவோம் பொய்களை களைவோம் மனித நேயம் காப்போம்மனிதர்களை நேசிப்போம்


தேவைகளில் இறைவனை சார்ந்து நிற்போம் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.


இறைவனின் கதவை அனுதினமும் தட்டுவோம் அவரிடம் நமக்காக வேண்டுதல் செய்வதை குறைத்து மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்வோம்

"பூமியிலே சமாதானமும் மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாவதாக"(லூக்கா 2:14). இந்த வார்த்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு மேசியாவின்(மஸீஹாவின்) பிறப்புப் பற்றி தேவ தூதர்கள் சொன்ன வார்த்தைகளாகும்.

நாம் இன்று உலகத்தின் நிகழ்வுகளைக் காணும் போது, இவ்வுலகத்தின் மிகப்பெரிய தேவை "சமாதானம் - Peace" என்பதை நாம் அறியலாம், இது மனதிற்கு வலியை உண்டாக்குகிறது.


நம்முடைய இந்த உலகம் எயிட்ஸ் போன்ற குணமாக்க முடியாத வியாதிகளால் வருத்தத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. உலகத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மதத்தை அடிப்படையாகக் கொண்டு இறைவனின் பெயரில் சில அடிப்படைவாதிகள் மற்றவர்களை கொல்வதை மிகவும் கவுரவமான செயல் என்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆம், நமக்கு அமைதியும் சமாதானமும் தேவை.


2008ம் ஆண்டு, மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஜெயந்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஐக்கிய நாடுகளின் சபை "சமாதான கலாச்சாரம் பற்றிய மேல்பட்ட கூடுகை(High-Level Meeting on the Culture of Peace)" என்ற ஒரு கூட்டத்தை கூட்டியது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், பன்கிமோன், ஒரு அவசர கோரிக்கையை முன்வைத்தார், "மதங்களின் இடையில் உரையாடலும், கலாச்சார நாகரீகங்களின் இடையில் உரையாடலும் என்றும் இல்லாத அளவிற்கு இவைகளின் தேவை இப்போது அதிகமாக உள்ளது" என்றார்.

இந்த மேல்மட்ட கூட்டத்தை "உரையாடல் மகாநாடு(Dialog Conference)" என்றும் அழைத்தனர்.


ஐ.நா சபையின் அதிகார சாஸனத்தில் "அமைதியை நிலை நாட்டவேண்டும்" என்பது மூலைக்கல்லாக இருக்கிறது. பைபிளின் ஒரு வசனப்பகுதி ஐ.நா சபையின் அதிகார சாஸனத்தில் இடம் பெற்று இருக்கிறது என்ற விவரம் உங்களுக்குத் தெரியுமா?

"அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்;" - இவ்வாசகம் மேசியாவின் சமாதானம் நிறைந்த‌ அமைதியான ஆட்சியில் நடக்கும் ஒரு தீர்க்கதரிசனமாகும்.


மதங்களின் இடையே நடக்கவிருக்கும் உரையாடலில், எல்லா நம்பிக்கையாளர்களும் மேசியாவாக‌ நம்பும், சமாதானத்தை உருவாக்கும் தன்னிகரில்லா நாயகனான‌ இயேசுக் கிறிஸ்துவை கருத்தில் கொள்வது சாலச் சிறந்ததாகும்.


இயேசு சமாதானம் தருபவர் என்று நம்புகிறவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டுமே அல்ல. இஸ்லாமியர்களும் இயேசுக் கிறிஸ்து மறுபடியும் கடைசிக் காலங்களில் வருவார் என்றும் மற்றும் அவர் தீமையை வென்று, உலகமனைத்திற்கும் சமாதானத்தை தருவார் என்றும் நம்புகிறார்கள்.

ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் ஒரு இஸ்லாமிய சஞ்ஜிகையில் "நிச்சயமாக அல் மஸீஹா(இயேசு) ஜிஹாதை அழிப்பார்;" என்று குறிப்பிடுகிறார்.

அல்லாவின் ரசூல் சொன்னதாக, சய்யதினா சலாமா பின் நுஃபைல் கூறும் போது, "ஜிஹாத் (பற்றிய கட்டளை), ஈஸா இபின் மர்யம் இறங்கி வரும் வரை நிறுத்தப்படாது("Sayyidina Salamah bin Nufayl has said that the messenger of Allah said, 'The (command of) Jihad will not be abolished until the descent of Isa Ibn Maryam.')" என்கிறார் (Seerat al-Mughlata', Musnad Ahmad).2


நாம் மேலே குறிப்பிட்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்களுக்கும், மேசியாவைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை நாம் காணலாம்.


அதாவது, சமாதான பிரபுவாகிய மேசியா "ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்;

ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை…. அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்;(ஏசாயா 2:4, சகரியா 9:10).


மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி இதர ஹதீஸ்கள் கூடச் சொல்கின்றன, 1) ஓணாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக வாழும், 2) மேசியாவின் ஆட்சி காலத்தில் உலகளாவிய‌ அமைதி/சமாதானம் நிலவும் போன்றவைகளைச் சொல்லலாம்.[3]


அனேக இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இப்போது உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் நிகழ்வுகளைக் கண்டு, இக்காலம் கடைசிக் காலம் என்றுச் சொல்கிறார்கள்.

ஆகையால், இந்த நேரத்தில் இயேசுக் கிறிஸ்துவின் அமைதி மற்றும் சமாதானம் தரும் செயல்களைப் பற்றி சிறிது சிந்திப்பது, இந்த தடுமாறும் உலகில் நன்மை பயக்கும்.

அதே நேரத்தில் கிறிஸ்துவின் முதல் வருகையின் போது, பூமியில் அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த அவரது அனேக செயல்கள், அவர் ஒரு அமைதி மன்னன் என்பதை காட்டுகின்றன.


மஸீஹாவின் முதல் வருகை

இயேசு பிறப்பதற்கு முன்பாக அவரைப் பற்றி "நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்துவார்(லூக்கா 1:79)" என்று கூறப்பட்டது.

இயேசுவின் போத‌க‌த்திலும் "ச‌மாதான‌ம் த‌ருவ‌து" மிக‌வும் முக்கிய‌ அம்ச‌மாக‌ இருந்த‌து, "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்"(ம‌த்தேயு 5:9).


ஒரு பெண்ணின் தீவிர வியாதியை இயேசு குணமாக்கிவிட்டு, அவளுக்கு சமாதானத்தைக் கூறி அனுப்புகிறார். இயேசு அவளைப் பார்த்து: "மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்" (லூக்கா 8:48).

இயேசு "சமாதானத்தோடே போ" என்ற வார்த்தைகளைச் சொன்ன இன்னொரு சூழ்நிலையும் உள்ளது. இந்த இடத்தில் அந்தப் பெண் ஒரு தீய செயல்கள் செய்பவளாக இருந்தாள்.

அந்த பெண்ணின் பாவங்களை மன்னித்துவிட்டு, இயேசு அவளைப்பார்த்து "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்" (லூக்கா 7:50).


இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் கடைசியிலும் ஒரு சந்தோஷமான வார்த்தைகளைக் கொண்டு இயேசு முடிக்கிறார். இயேசு தன் உலக வாழ்க்கையின் கடைசி காலத்தில் இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக இரண்டு சமாதானம் கூறுகிறார்.

லூக்கா 19ம் அதிகாரத்தில் இயேசுவை பின்பற்றினவர்கள் உரத்த சத்தமாக இவ்வாறு கூறினார்கள்: "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக".


மக்களின் இந்த வார்த்தைகளால் யூத தலைவர்கள் இடரல் அடைந்தார்கள், மற்றும் இப்படி மக்கள் சொல்வதை நிறுத்தும்படி இயேசுவிடம் முறையிட்டார்கள்.

ஆனால், இயேசு மறுத்துவிட்டார். பிறகு இயேசு இவ்விதமாக கூறினார்: "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்"(லூக்கா 19:38-44).


பைபிளுக்கு உரை எழுதியவகளின் கூற்றுப்படி, "கி.பி. 70ல் நடந்த ஜெருசலேமின் அழிவு, மேசியா அவர்களை சந்திக்க‌, தங்களிடம் வந்த போது, அவரை அங்கீகரிக்காமல், அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் விட்டதின் தேவ நியாயத்தீர்ப்புத் தான் அந்த அழிவு" என்றனர்(ஜான் மெக்கார்தர்).

இஸ்லாமியர்கள் இயேசு தான் மேசியா(மஸீஹா) என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், இஸ்லாம் கூட இயேசு மேசியா என்பதை அங்கீகரிக்கிறது("அல்-மஸீஹ்" என்ற பெயர் குர்‍ஆனில் 11 முறை வருகிறது).



கிறிஸ்துவின் தீர்க்கதரிசனம் தான் தேவனின் நியாயத்தீர்ப்பாக யூதர்கள் மீது வந்தது என்றாலும், இதற்காக, யூதர்கள் மீது கசப்பு வெறுப்புணர்ச்சிக் கொள்ள யாருக்கும் அனுமதியில்லை.

இதே போல, கிறிஸ்துவை அங்கீகரிக்காத அவர்களின் நிலை ஒரு மிகப்பெரிய குற்றமாக கருதிக்கொண்டு, யூதர்களின் நாட்டை உலக வரைப்படத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என்றுச் சொல்வதும் சரியானதல்ல

(இப்படி இஸ்ரவேல் நாட்டை வரைப்படத்திலிருந்தே நீக்கிவிடவேண்டும் என்று சில இஸ்லாமியர்கள் எண்ணுகின்றார்கள்). இஸ்ரவேலில் மீதியாக இருந்தவர்களை தேவன் ஒரு நாள் ஒன்று கூட்டுவார் என்று வேதம் சொல்கிறது.

இதோடு நின்றுவிடாமல், அவர்களை சீர்படுத்த, தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பின் விளைவுகளை அவர்கள் தாங்கிக்கொண்டு இன்றளவும் உலகத்தில் இருக்கிறார்கள், மற்றும் இவர்களே தேவனால் இரட்சிக்கப்பட்டு, உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் ஆசீர்வாதமாக மாறுவார்கள்.

வேதம் சொல்கிறது, "தேவன் அவர்களுக்கு காணாதிருக்கிற கண்களை கொடுத்தார் ..." பல இஸ்ரவேல் மக்கள் இன்னும் கடின இருதயமுள்ளவர்களாக இருக்கிறார்கள்,

இந்த நிலை எதுவரைக்கு நீடிக்குமென்றால், இஸ்ரவேலர் அல்லாத அந்நிய ஜனங்கள் அனைவரும் கிறிஸ்துவிடம் வரும் வரையிலும் இப்படி இருக்கும்.(ரோமர் 11:8,15,25, சகரியா 12:10, யோவேல் 2:28-32).


உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து தேவன் தன் மக்களை கூட்டிச் சேர்ப்பார். அவர் கீழ் கண்டவாறு வாக்கு கொடுத்துள்ளார்,

"அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்...

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 54:8-10).


இந்த "சமாதானத்தின் உடன்படிக்கை" என்றால் என்ன? பழங்காலத்தில், உடன்படிக்கைகள் ஒரு பலியை செலுத்தி உறுதிப்படுத்துவார்கள்.

மேலே நாம் கண்ட வாக்குத்தத்தம் சொல்லப்பட்ட வசனத்தின் முந்தைய பாகத்தில் ஏசாயா 53ம் அதிகாரத்தில், "மேசியா எப்படி பாவத்தை போக்கும் பலியாக உள்ளார்" என்பதை விளக்குகிறது:

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது"(ஏசாயா 53:5).


"சமாதானத்தின் நகரம்" என்று பொருள்படும் ஜெருசலேமில், மேசியாவாகிய இயேசு தன் சிறப்பான சமாதான ஊழியத்தை நிறைவேற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இயேசு கிறிஸ்து ஜெருசலேம் என்ற நகரத்தில் கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று அவரே முன்னறிவித்தார்.

இந்த ஜெருசலேம் என்ற பட்டண‌த்தில் தான், மனுஷ குமாரன் பற்றி முன்னறிவித்த அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் இடம் என்று இயேசு குறிப்பிட்டார்(லூக்கா 18:31-33).

இன்னும் வேதம் சொல்கிறது, "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று"(கொலோ 1:20).


இயேசுவின் சீடர்களில் ஒருவரான பேதுரு "ஒப்புரவாக்குதலும் மற்றும் சமாதானமும் கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நிறைவேறும்" என்று உறுதிப்படுத்துகிறார்.

அவர் கூறும் போது:"எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சாமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. …

யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். ….

அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்." (அப்போஸ்தலர் 10:35-43,

ஜெருசலேம் என்பது மிகவும் முக்கியமான இடமாகும், இங்கு தான் மனிதன் தேவனோடு சமாதானமானான்).

ச‌மாதான‌ம் த‌ருவ‌த‌ற்கும், பாவ‌த்திற்கும், ம‌ன்னிப்பிற்கும் இடையேயுள்ள‌ ஒற்றுமையை ஆராய்த‌ல்


இதற்கு முன்பு நாம் கண்ட நிகழ்ச்சியை நீங்கள் நியாபகத்திற்கு கொண்டு வரமுடியுமா? அதாவது பாவ வாழ்க்கையில் இருந்த‌ ஒரு பெண்ணை இயேசு மன்னித்து அனுப்பிய நிகழ்ச்சியை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

அப்பெண் செய்துக்கொண்டு இருந்த அவ்வளவு பெரிய பாவத்தை எப்படி இயேசுவினால் மன்னிக்க முடிந்தது? "இயேசுவின் பெயர் மூலமாக பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று பேதுரு சொல்வது மிகவும் முக்கியமானது.

இயேசுவின் தாய் மரியாள், தேவன் தெரிந்தெடுத்த பெயரையே தன் அற்புத குழந்தைக்கு இட்டதாக, குர்‍ஆனும் பைபிளும் நமக்கு போதிக்கின்றன.

வேதம் இப்படிச் சொல்கிறது, "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."(மத்தேயு 1:21).


முஹம்மத் ஐ. எ. உஸ்மான், என்ற மதிப்பிற்குரிய மஃப்டி (இஸ்லாமிய சட்ட நிபுனர்) அவரது "இஸ்லாமிய பெயர்கள்" என்ற புத்தகத்தில் "இயேசு" என்ற பெயருக்கு, "இறைவனே இரட்சிப்பு" என்ற பொருள் என்றுக் கூறுகிறார்.

இந்த பொருள் மற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுகளோடு ஒத்துப்போகிறது.


இப்போது நீங்களே முடிவு எடுங்கள்,


"இயேசு தான் மேசியா என்பதையும், சமாதான பிரபு என்றும் நான் நம்புகிறேனா? இயேசு தேவனின் இரட்சிப்பை கொண்டுவந்தார் என்பதையும், அவர் ஒருவர் மூலமாகத் தான் என் பாவங்கள் மன்னிக்கபபடுகிறது என்றும் நான் நம்புகிறேனா?"

கருத்துகள் இல்லை: