ஞாயிறு, 25 ஜனவரி, 2009

சத்தான சத்தியங்கள்

சங்கீதம் 139ஐத் தாவீது தைரியமாய் எழுதினான்; சங்கீதம் 51ஐ உடைந்துபோய் எழுதுகிறான். சங்கீதம் 23ஐ இசைக் கருவியை மீட்டி எழுதினான்; சங்கீதம் 51ஐ இதயத்தை மீட்டி எழுதுகிறான

பயம் நிறைந்த சீடர் பெந்தெகொஸ்தே நாளில் பயங்கர தூதுவராயினர்.சபை துவண்டு விட்டால் உலகம் மாண்டுவிடும். எழுப்புதல்களிலெல்லாம் எழுப்புதலே நமது தேவை.

சரித்திரம் திரும்புவதின் காரணம் மனித சுபாவம் மாறாதிருப்பதே. சரித்திரத்தினின்று நாம் ஒன்றும் கற்றுக்கொள்வதில்லை என்பதே நாம் சரித்திரத்தினின்று கற்றுக்கொள்வது.

கிறிஸ்தவம் தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்படாவிட்டாலும் கடினமாகக் காணப்பட்டது. மொத்தத்திலே அது நிராகரிக்கப்பட்டு விட்டது.

என்னைக் கேட்டால், கெட்டிக்காரரைக் கண்டு நான் சலித்துப் போய்விட்டேன் என்றே சொல்வேன். எளிமையான நற்செய்தியை நம்பினாலே போதும், எல்லாம் ஆகும்!

சங்கீதம் 139ஐத் தாவீது தைரியமாய் எழுதினான்; சங்கீதம் 51ஐ உடைந்துபோய் எழுதுகிறான். சங்கீதம் 23ஐ இசைக் கருவியை மீட்டி எழுதினான்;சங்கீதம் 51ஐ இதயத்தை மீட்டி எழுதுகிறான்.

விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் மனித இதயத்தைப் பரிசுத்த ஆவியானவர் திறந்து காட்டுவதே இப்போதையப் பெரும் தேவை.

தேவனுடைய ஆவியானவர் சத்திய ஆவியாக தவற்றை உணர்த்திக் காட்டுகிறார்; அக்கினியின் ஆவியாக அனலின்மையை உணர்த்துகிறார்;

அன்பின் ஆவியாக பகைமையை உணர்த்துகிறார்;விடுதலையின் ஆவியாக அடிமைத் தனத்தை உணர்த்துகிறார்;தேவனுடைய ஆவியாக மனிதனின் வெறுமையை உணர்த்துகிறார்;
பரிசுத்த ஆவியாக மனிதனுடைய பாவத்தைத் திறந்து வைக்கிறார்.

பாவம் ஒரு குறையல்ல, அது குஷ்டம்;அது திருக்கல்ல, கிறுக்கு;அது விகற்பமல்ல, விரோதம்;அது பலமின்மையல்ல, பாதகம்;

பேராணைக்கு இயேசு கிறிஸ்துவின் சபை விழித்துக்கொள்ளாவிடில், மனித வர்க்கத்தின் ‘வெடிகுண்டு விளையாட்டு’ கோடிக்கணக்கானோரின் கல்லறையாகிவிடும்.

இப்போது சபை தூங்கிக்கொண்டிருக்கலாம்,ஆனால் இதோ­­ -அது விழித்துக் கொள்ளும், வீறுகொள்ளும், வாகை சூடும்!

பவுலின் வாழ்க்கை:

அது மாற்று வாழ்வு-"நானல்ல, கிறிஸ்துவே.”அது விலைமதியா வாழ்வு-“எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணினேன்.”அது வீர வாழ்வு-“மிருகங்களோடு யுத்தம் செய்தேன்.”

அது தீர்க்கமான வாழ்வு - “ஒன்றைச் செய்கிறேன்.”அது முன்மாதிரியான வாழ்வு -“என்னில் கண்டதை, கேட்டதைச் செய்யுங்கள்.”

ஆவியானவர் கட்டுப்படுத்தின நாவில் அமிலமில்லை;ஆவியானவர் கட்டுப்படுத்தின இருதயத்தில் கசப்பில்லை;ஆவியானவர் கட்டுப்படுத்தின மனதில் தீய கற்பனையில்லை;

ஆவியானவர் கட்டுப்படுத்தின சித்தத்தில் பொறாமையில்லை;ஆவியானவர் கட்டுப்படுத்தின பாசத்தில் பேராசையில்லை.

ஜெபத்தில் ஓர் ஆபத்து உண்டென்றால் அது கடவுள் நமது வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான். அடுத்து சோதனை வரும்.

திருத்தூதுவன் பவுல் தன் ஆண்டவரைப் போலவே கட்டுப்பாடுள்ளவன் - தன் உடலைக் கட்டுப்படுத்தினான் : “என் உடலைக் கீழ்ப்படுத்தி அடக்குகிறேன்.”

தனிமைக்குத் தன்னைக் கட்டுப்படுத்தினான்: “எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்.” கேலிக்குத் தன்னைக் கட்டுப்படுத்தினான்: “கிறிஸ்துவுக்காய் நாங்கள் பயித்தியக்காரர்.”

ஏழ்மைக்குத் தன்னைக் கட்டுப்படுத்தினான் : “தேவையிலிருந்தோம்.”
ஒதுக்கலுக்குத் தன்னைக் கட்டுப்படுத்தினான்: “நாங்கள் அவமதிக்கப்படுகிறோம்.”

மரணத்திற்குத் தன்னைக் கட்டுப்படுத்தினான்: “நான் அனுதினமும் சாகிறேன்.” பாடுகளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்தினான்: “துன்புறுத்தப்பட்டும் நாங்கள் கைவிடப்படவில்லை.”

இதுவே நமது வேண்டுதலாகட்டும் :

“ஆண்டவரே, உமது நுகத்திற்கு எங்கள் கழுத்தைக் குனிந்து கொடுக்கிறோம்.”

பொருட்கள், பொருட்கள், பொருட்கள் என்ற அரிப்பு விசுவாசிகளைப் பிடுங்குகிறது, ஏனெனில் நாம் பிறரோடு போட்டி போட்டு வாழ்கிறோம்.

சபை எவ்வளவு உயிரோடிருக்கிறது என்பதைப் பொருத்துதான் உலகம் எவ்வளவு உயிரற்றிருக்கிறது என்று கணக்கிட முடியும்.

அதிகமாய்த் தோண்டி, அதிகமாய்த் தியானித்து, அதிகமாய்ப் பெற்றுக்கொண்டு, அதிகமாய்த் துதிப்பவர்களைத்தான் கடவுள் அதிகமாய் ஆசீர்வதிக்கிறாரோ என்று நினைக்கிறேன்.

இன்றைய மனிதனது குறையென்னவென கேட்டபோது, ஞானி ஆல்பர்ட் ஸ்வைட்சர் நொடிப் பொழுதில், “அவனுக்குச் சிந்திக்க முடியாது” என அடித்தார்.அவர் சரிதானோ?

கருத்துகள் இல்லை: