ஞாயிறு, 25 ஜனவரி, 2009

பைபிளில் உள்ளவை இறைவசனங்கள் என்று கிறித்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அது எவ்வாறு அருளப்பட்டது எனபது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

அதில் முதலாவது பைபிளில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்ப்டடது என்பதாகும்.

பைபிளின் ஒரு வார்த்தையிலும் தவறு இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நமபிக்கையின் காரணமாகத்தான் பைபிளின் கருத்துக்களுக்கு எதிரான தனது அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்ட கலீலியோவுக்கு கிறித்தவ சபை தண்டனை வழங்கியது.

புதிய ஆய்வுகள்

முதல் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மத ஆராய்ச்சிகள் பைபிளின் உறுதிப்பாட்டைக் குறித்த கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருந்தன.

1906 ல் குங்கல் என்ற ஆய்வாளர் பைபிளின் ஆதியாகம் சங்கீதம் ஆகிய புத்தகங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் சாராம்சம் இது தான்:

பைபின் எழுதப்படுவதற்கு முன் உள்ள பாரம்பர்யங்களை ஆய்வு செய்தால் மட்டுமே அதன் உறுதிப்பாட்டைக் குறித்த ஒரு முடிவுக்கு வர இயலும்.

பதிவு செய்ததும் செய்யப் படாததுமான பழய தகவல்களை ஆய்வு செய்யாதவரை பைபிளின் உறுதித் தன்மை கேள்விக்குரியதாகும்.

குங்களின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு டிபிலியோஸ் புல்ட்மேன் முதலிய பைபிள் பண்டிதர்கள் புதிய ஏற்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள்.

இவ்வாய்வு புதிய ஏற்பாடு எழுதப்படுவதற்கு முன்னா வாய்மொழியாக மட்டும் நிலை நின்றிருந்த பழய பாரம்பர்யங்களைக் குறித்த தகவல்களைத் தருவதாக அமைந்திருந்தது.

புதிய ஏற்பாடானது இயேசுவின் வாழ்வை அவருக்குப் பின் வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களுடன் தங்கள் விருப்பத்திற்கிணங்க உருவாக்கியதாகும் என்பதை இவ்வாய்வுகள் வெளிப்படுத்தின.

பைபிள் பற்றிய இத்தகைய ஆய்வுகள் அது இறைவனால் அருளப்பட்டது அல்ல என்பதை விளக்குவதாக உள்ளன.

இதனை ஒரளவுக்கு கிறித்தவ சபைகள் ஒப்புக் கொண்டாலும் பைபிளின் மூலக் கருத்து ஒன்றாக இருப்பதால் அது இறைவேதம் தான் என்று நியாயப் படுத்துவதைக் காண்கிறோம்.

பைபிள் கூறும் தகவல்களில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் இந்த வாதத்தையும் ஏற்பதற்குத் தடையாக உள்ளது.

குறிப்பாக இயேசு கிறித்துவின் வரலாற்றை விவரிக்கும் இடங்களில் கூட இத்தகைய முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க இயலாமல் திணறுகிறது கிறித்தவ சபை.

தொடரும் இன்ஷா அல்லாஹ்




முஜாஹித் அவர்களே

நீங்கள் கூறும் இந்த குறைவுள்ள கிறிஸ்தவ வேதம் தான் நிறைவான் ஆசீர்வாதங்களை எங்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

எனது 30 ஆண்டு கால உலக வாழ்க்கையில் நான் இயேசுவின் அன்பை அவரது இரத்தத்தால் கிடைத்த மீட்பை அனுபவித்து உணர்ந்துஇருக்கிறேன்.

என்னை போல பல கிறிஸ்தவர்களும் அப்படியே. வேதத்தின் உறுதித்தன்மையை விளக்கும் பல ஆய்வு முடிவுகளும் உள்ளன ஆனால் அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இது போன்ற உங்களது பதிவுகளால் ஒரு கிறிஸ்தவனை கூட உங்களால் மாற்ற முடியாது வீணாக முயற்சி செய்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள்


உங்கள் கருத்துக்கு நன்றி. பைபிள் உங்களுக்கு நிறைவான ஆசீர்வாதத்தைத் தந்து கொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளீர்கள். அது உங்கள் நம்பிக்கை அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.

நீங்கள் 30 ஆண்டு கால அனுபவத்தைச் சொல்வதைப் போன்று பலருக்கும் பல அனுபவங்களைச் சொல்ல முடியும்.

ஒரு இந்துவும் தன் மதத்தைப் பற்றி சொல்ல முடியும். முஸ்லிமும் சொல்ல முடியும். நமது விஷயம் அதுவல்ல.

வேதத்தின் உறுதித் தன்மையை விளக்கும் ஆய்வுகளையும் முடிவுகளையும் இங்கே பதியுங்களேன். நானும் தெரிந்து கொள்ளலாமே|

//இது போன்ற உங்களது பதிவுகளால் ஒரு கிறிஸ்தவனை கூட உங்களால் மாற்ற முடியாது வீணாக முயற்சி செய்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள்//

யாரையும் நிர்பந்தித்து மதம் மாற்றுவது எமது பணியல்ல. அவ்வாறு மாற்றவும் இயலாது. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் சத்தியம் என்று நம்பியிருப்பதை பிறருக்குக் கூறலாம்.

ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். இஸ்லாமியர்கள் தங்கள் தரப்பு வாதங்களைப் பதிவு செய்யலாம் என்று இந்த தளத்தில் அழைப்பு விடுக்கப்ப்டடதை மறந்து விட்டீர்களா?



பைபிளில் முரண்பாடுகள் உள்ளன என்று கூறியுள்ள நீங்கள் அந்த‌ முரண்பட்ட தகவல்கள் என்ன என்று கூறினால் தள நண்பர்கள் விளக்கம் அளிக்க வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

(இது தவறு, இதில் முரண்பாடுகள் உள்ளன என்று யார் வேண்டுமானலும் எதைப் பற்றியும் சொல்லலாம். because saying like this without any explanation or reason is simple and easy)

மேலும் பைபிளில் உள்ள அதிகாரங்கள் வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்டாலும் you can see the similarities in their writings. Though each book in new testament was written by different authors separately ,they all complement each other. This amazing thing is one of the proofs for the Bible.

மேலும் குரான் ஒரே நபரால் எழுதப்பட்டது. எழுதியவர் தனக்கு ஏற்ற மாதிரி மாத்தியோ அல்லது தவறாகவோ எழுதியிருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

மேலும் சிறு வயதில் இயேசு கிறிஸ்து செய்ததாக குரானில் சொல்லப்பட்ட‌ அற்புதங்கள் குரான் எழுதும் முன்பே எழுதப்பபட்ட (தள்ளுபடியாகமங்கள்) நூல்களில் உள்ளதே?

முகமது (சூனியத்தினால் பாதிக்கப்பட்டு பிரம்மையில்) தான் செய்யாத ஒன்றை செய்ததாக (அதாவது நடக்காத ஒன்றை நடந்ததாக) சொல்லியுள்ளார்.

இப்படிபட்ட ஒருவரின் வார்த்தையை எப்படி நம்புவது? ஒருவேளை அவர் அந்த பில்லி சூனிய‌ பாதிப்பினாலேயே அல்லா இறக்காத குரானை அவர் இறக்கியதாக(அதாவது நடக்காத ஒன்றை நடந்ததாக) சொல்லியிருக்கலாம் அல்லவா?



அன்பு நண்பர் முஜாகித் அவர்களே,

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா அல்லவா என்கின்ற தலைப்பில் இத்தளத்தில் தாங்கள் சகோதரர் உமர் மற்றும் தள அன்பர்களிடம் ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்.

அதற்கு சகோதரர் உமர் அவர்களும், சகோதரர் ரமேஷ் போன்றவர்களும் விரிவான பதிவுகளை இட்டிருக்கிறார்கள். அதை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு இங்கு ஒரு புதிய விவாதத்தை ஆரம்பிக்கிறீர்கள். இது முறையற்றது.

எனவே முதலில் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா என்கின்ற தலைப்பில் உள்ள விவாதத்தை முடித்துவிட்டு பின்பு புதுத் தலைப்பை விவாதத்திற்குக் கொண்டுவாருங்கள்.

அதுவே முறையாகும். அதுவரை ஏனைய தள நண்பர்கள் அவரது மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.




Mujahid wrote
வேதத்தின் உறுதித் தன்மையை விளக்கும் ஆய்வுகளையும் முடிவுகளையும் இங்கே பதியுங்களேன். நானும் தெரிந்து கொள்ளலாமே.



நீங்கள் மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல் செயற்படுகிறீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. எதற்கு முதலில் பதில் தர என தடுமாற்றமாக உள்ளது.

முதலில் இயேசுக் கிறிஸ்து இறைவனா? பைபிள் ஆதாரங்களையும் மற்றும் அக்காலப்பகுதியில் வாழ்ந்த பிரபல ஆசிரியர்களின் ஆய்வுகள் கடிதங்களையும் பிரசுக்கிறேன்.

குர் ஆனில் இயேசுவின் நிலை என்ன முகமதுவின் நிலை என்ன. இவர்களில் அதிக கனத்திற்குரியவர் இயேசுக்கிறிஸ்துவே என்ற குர்ஆனின் வசன எடுத்துக் காட்டுக்களையும் பிரசுரி்ககிறேன்.

இருப்பினும் கிடைக்கும் சிறிய நேரங்களையும் நூல்களை வாசிப்பது, குறிபபு எடுப்பதிலேயே செலவிடுவதால் விரைந்து பதில் தருகிறேன்

தேவன் தாமே உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவாராக

கருத்துகள் இல்லை: