புதன், 28 ஜனவரி, 2009

இயேசு ஒருவரால் தான் மீட்பா?

சிலநாள்களுக்கு முன்பு அதாவது கிறிஸ்துமஸ்க்கு முன்பு எனக்கு ஒரு மின்-அஞ்சல் வந்தது. விடுமுறை காலம் என்பதால், அதற்கு உடனடியாக பதில் தர முடியவில்லை.

மேலும் இந்த மின்-அஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பினால் முகவரி தவறு என்று திருப்பி வந்துவிட்டது. எனவே அதை இங்கு தருகிறேன்.

Sender's Name: danieleaswar
Sender's Email: man.ofrock.hotmail.com

Message:நீங்கள் எந்த கிருஸ்தவ மதப்பிரிவு என்று எனக்குத் தொரியாது ஆனாலும் என் சில கேள்விகளுக்கு பதில் தருவீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும்.

கேள்வி 1. இயேசு ஒருவராலே மீட்டு என்றால் மற்றதெய்வங்கள் அவர்களின் மதக்கெள்கைகள் எல்லாம் என்னபாடு? இது உங்கள் தாய்மட்டும் தாய் என்பது போலவும் மாற்றன்தாயை மிகவும் ஏலனமாய் எண்ணுவதாயும் தோன்றும் அல்லவா? உங்கள் பதிலை எந்த வேதவசனப்பிரயேகமும் இன்றி தெளிவாக வெளிப்படையாக எதிர்பார்க்கின்றேன்
நன்றிகள்

இதற்கு நம் பதில்...

கேள்வி:-நீங்கள் எந்த கிருஸ்தவ மதப்பிரிவு என்று எனக்குத் தொரியாது

பதில்:- மன்னிக்கவும். நான் ஒரு இந்து, என் சான்றிதல்களில் அவ்வாறு தான் உள்ளது, ஆனால் நான் கிறிஸ்துவ நம்பிக்கை உள்ளவன்,அதாவது மறுபிறப்பின் அனுபவம் கொண்டவன், அதை நம்புவன்.

மேலும் நான் ஞானஸ்தானம் எடுத்து உள்ளேன். என் பெயரை மாற்றி கொள்ள விருப்பமில்லை. நான் மதம் மாறவில்லை, மனம் மாறிஉள்ளேன் அவ்வளது தான்.

என் மனைவின் சான்றிதல்களில் மதம், ஜாதி எதுவும் கூறிப்பிடவில்லை. மேலும் சமீபத்தில் எங்ளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கும் நாங்கள் மதம், ஜாதி எதுவும் கொடுக்கவில்லை.

ஆனால் நாங்கள் ஒரு சபையில் உறுப்பினராக உள்ளோம். கிறிஸ்துவம் ஒரு மதமல்ல ஒரு மார்க்கம், மேலும் எங்கள் தளத்தில் வேதகம தெடுதல் பகுதி உள்ளது அதில் "மதம்" என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது என்பதை நீங்கள் தேடி பார்க்கலாம். விடை கண்டிப்பாக "0" தான்.

கேள்வி:- இயேசு ஒருவராலே மீட்டு என்றால் மற்றதெய்வங்கள் அவர்களின் மதக்கெள்கைகள் எல்லாம் என்னபாடு?

பதில்:- கண்டிப்பாக இயேசு ஒருவரால்தான் மீட்பு, இது வேதாகமம் எங்கும் நிறைந்து இருக்கும் உண்மை.

//உங்கள் பதிலை எந்த வேதவசனப்பிரயேகமும் இன்றி//

நான் எந்த வேதவசனமின்றி இந்து வேதத்தில் இருந்தும் குர்ஆனிலிருந்தும் பதில் தர முற்பட்டு இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமின்றி, கிறிஸ்தவரல்லாதோர் புனித நூலாக கொண்டுருக்கும் மற்ற வேதங்களிலும்கூட சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் அதன் அர்த்தங்களை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல இருப்பதினால், அறியாமலேயே அவற்றை கூறி வருகின்றனர்.

குறிப்பாக நமது இந்திய வேதங்களில் கூறப்படும் பிரஜாபதி புருஷாவாகிய மெய்தெய்வம் யார் என்பதை அறிந்துகொள்வற்கு உதவியாக கிழே கொடுக்கப்பட்டுருக்கிறவைகளை நிதானமாய் படியுங்கள்.

சாம வேதத்திலுள்ள தாண்டிய மகாபிரமாணத்தில், "பிரஜாபதி தேவப்பியம் ஆத்மனம் யக்னம் க்ருத்வ ப்ராயசித்த" என்பதின் விளக்கம் என்னவென்றால், கடவுள் தம்மையே பலியாக் கொடுத்து பாவத்தினின்றூ மீட்பை சம்பாதிப்பார் என்றும், சத்பதா பிரமாணத்தில் "பிரஜாபதி யக்னயக" அதாவது, தேவனே பிலயாக வேண்டும் என்றும், சாம வேதம் உத்ராட்சிக காண்டத்தின் 69-ம் அதிகாரம் 7-வது வாக்கியத்தில் , " உலகத்தை இரட்சிக்க தேவன் தந்தையாகவும், மகனாகவும், சக்தியாகவும் வெளிப்பட்டு வானத்திற்கும் பூமிக்கும் நடுவே உபத்திரவப்பட்டு சபையை மீட்பார்" என்றும் கூறப்பட்டு இருக்கின்றது.

இந்த உண்மையை, ஆயிரம் பெயர்களால் பிரஜாபதியைத் துதிக்கும் சகஸ்ரநாமவளி திட்டமும் தெளிவாக விளக்குகின்றது.

"ஒம் ஸிரி பிரம்ம புத்ராய நமக"
தேவக் குமாரனே வாழ்க

"ஒம் ஸிரி உமாத்யாய நமக"
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே வாழ்க

"ஒம் ஸிரி கன்னி சுத்தாயாய நமக"
கன்னியின் மகனாகப் பிறந்தவரே வாழ்க

"ஒம் ஸிரி தரித்திர நாராயணாய நமக"
ஏழைக் கோலத்தில் வந்தவரே வாழ்க

"ஒம் ஸிரி விதிர்ஷ்டாய நமக"
விருத்தசேதனம் செய்து கொண்டவரே வாழ்க !

"ஒம் ஸிரி பஞ்சகாயாய நமக"
ஜந்து காயங்களை எற்றவரே வாழ்க !

"ஒம் ஸிரி விருட்ஷ சூல அருதாய நமக"
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே வாழ்க !

"ஒம் ஸிரி மிருத்யஞ் ஜெய நமக"
மரணத்தை ஜெயித்தவரே வாழ்க

"ஒம் ஸிரி ஷிபிலிஷ்டாய நமக"
தம்முடைய மாம்சத்தை புசிக்கக் கொடுத்தவரே வாழ்க !

"ஒம் ஸிரி தஷிணா மூர்த்தியாய நமக"
பிதாவின் அண்டையில் அமர்ந்திருப்பவரே வாழ்க !

இதேப்போன்று முஸ்ஸிம் மக்கள் புனித நூலாகிய குர்ஆனில் கூட இயேசுவைப் பற்றி பல இடங்களில் கூறப்பட்டு உள்ளதை இங்கு காணலாம்.

"அதற்கவர் பரிசுத்தமான் ஒரு மகன் உமக்களிக்கப்படும் என்பதை உம்க்கு அறிவிப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் தான்" ஜிப்ராயில்(காபிரியேல்)- (மர்யம் சுரா 19:19)

இம்ரானுடைய மகள் மர்யம், அவர் தன்னுடைய கர்ப்பை காத்துக்கொண்டார். ஆகவே மர்யமாகிய அவருடைய கர்ப்பத்தில் நம்முடைய ஆவிகளிலிருந்து ஓர் ஆவியை ஊதினோம்.

அவர் தான் தன் இறைவனுடைய வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்துதுடன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டவர்களில் உள்ளவராகவும் இருந்தார்" (தஹ்ரீம் சுரா 66:12)

"இயேசு கன்னிமரியாளின் வயிற்றில் அற்புதமாக பிறந்தார்" (சுரா 19"16-33; 45-47; 3:42; 3:42; 21:91; 23:50)

அல்லாஹ் ஈஸாவை நோக்கி, பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும், என் உதவியினால் நீர் சொஸ்தப்படுத்தியதையும் நீர் என் அனுக்கிரகத்தைக் கொண்டு மரித்தோரை கல்லறையிலிருந்து உயிர் பெற்று புறப்பட செய்ததையும் நினனத்து பாரும்" (அலமாயிதா 5:110 அல் இம்ரான் 3:49)

உம்மை மரிக்க வைத்து, என்னளவில் உயர்த்திக் கொள்வேன்(3:55) என்று அல்லாஹ் இயேசுவை நோக்கி சொல்கிறார்.

குலாமன் ஸக்கியான்(சுரா 19:19)


மேலும் முஸ்லீம் மக்கள் எல்லோரும் ஈஸாமஸீக்(இயேசு கிறிஸ்து) மரிக்கவில்லை, அல்லாஹ் அவரை எடுத்துக்கொண்டார், மீண்டும் ஒரு நாள் வருவார் என்று நம்புகிறார்கள்.

மேலும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய இங்கு தட்டவும்.

ஏதோ எனக்கு தெரிந்த படித்த விசயங்களை இங்கு தந்து இருக்கிறேன். இது போக இந்து வேதங்களில் அனேக இடங்களில் கடவுள் வந்து தம்மையே பலியாக கொடுத்து இந்த உலகத்தை காப்பார் இன்று உள்ளதாக படித்து இருக்கிறேன்.

அவை எங்கு என்பது சரியாக தெரியாது. முடிந்தால் விரைவில் அவற்றை இங்கு தருகிறேன். எனக்கு தெரிந்து இயேசுவை தவிர வேறு எந்த தெயவமே அல்லது தெய்வ பலம் உள்ளவை என்று சொல்லப்படுகிறவர்கள், இந்த உலகமக்களுக்காக பலியானதாக சரித்தரிம் இல்லை.

கேள்வி :- இது உங்கள் தாய்மட்டும் தாய் என்பது போலவும் மாற்றன்தாயை மிகவும் ஏலனமாய் எண்ணுவதாயும் தோன்றும் அல்லவா?

பதில்:- இங்கு நீங்கள் தாய் என்பது கடவுளை குறிப்பிடுவதாக கருதுகிறேன். எங்கள் அம்மா எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் எங்களை வளர்த்தார் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர் தம்மை வாழ்கையையே எங்களுக்காக கொடுத்தார், அப்படி இருக்கும் போது நாங்கள் கண்டிப்பாக எங்கள் தாயை மற்றவர்களை(கவனிக்கவும் மற்ற தாய்களைவிட அல்ல)விட சற்று உயர்வாக தான் நினைப்போம்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் பெற்றோர்கள் மேன்மையானர்களே, இதில் வேறுபாடு எதுவும் இருக்காது. உங்கள் தாய் உங்களுக்காக என்ன செய்தார் என்பதை வைத்துதான் உங்கள் தாயின் மேல் உங்களுக்கு பாசம் வரும் என்பது என் கருத்து.

அதேபோல் தான் எம் தேவன் எமக்காக தம்மையே பலியாக கொடுத்தார், தன் பிள்ளைகள் தேவ இராட்சியத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.

அந்த அன்பு, அவர் எமக்காக கல்வாரி சிலுவையில் செய்த அந்த காரியம்,,, அதை நினைத்தால்,,, நண்பரே.. கண்டிப்பாக எம் தேவன் எமக்கு மேன்மைதான்.

எங்கள் தளத்தில் ஒரு கட்டுரை ஏற்றும் போது அது மற்றவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

எனக்கு தெரிந்த வரை மற்ற மதங்களையோ அல்லது மார்கங்களையோ தாக்கி நாங்கள் எழுதியதாக ஞாபக்ம இல்லை. அப்படி எதுவும் இருந்தால் கூறவும்.

கண்டிப்பாக நான் மாற்றானதாயை ஏலனமாய் எண்ணுவது கிடையாது. மற்றவர்கள் நம்பிக்கையை நான் கண்டிப்பாக மதிப்பேன், ஆனால் கண்டிப்பாக முடநம்பிகைகளை மதிப்பதில்லை. ( நல்லநேரம், ஜாதகம், பிற..)

படித்த நண்பர்களே உங்கள் கருத்தையும் முடிந்தால் இங்கு கூறுங்கள. இது சம்மந்தமாக உங்களுக்கு தெரிந்த விசயங்களை மற்றவர்களும் அறிந்து கொள்ள பகிரந்து கொள்ளுங்களேன்.

கருத்துகள் இல்லை: