வியாழன், 22 ஜனவரி, 2009

ஏன் நாம் இஸ்லாமியரின் கட்டுரைகளுக்கு பதிலளித்து வருகிறோம்?

உங்கள் தளத்தின் நோக்கம் என்ன, பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை

நம் தளத்தில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. சில கிறிஸ்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கலாம்.

அதாவது, இப்படி நேரடியாக கட்டுரை எழுதாமல், அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம், இன்னும் பல கேள்விகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த பதிவில் சில விவரங்களை கொடுக்கலாம் என்று நினைத்து, நானே கேள்விகளையும், பதிலையும் எழுதுகிறேன்.

நமக்கு கேள்விகள் மெயில் மூலமாக வந்தது என்றுச் பொய் சொல்லி நம்மால் கட்டுரைகள் எழுதமுடியாது. எனவேதான் தலைப்பு :

கேள்வியும் நானே, பதிலும் நானே என்று வைத்தேன்.

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?

என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும்.

பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

2. உங்கள் கட்டுரைகள் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறது சரியா?

முதன் முதலில் 7ம் நூற்றாண்டில் முகமது "யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தவறு", என்று சொன்னார்.
மக்கா மக்களின் வணக்க வழிபாடு தவறு என்றுச்சொன்னார். அப்போது அவர்கள் மனது புண்பட்டது.

முகமது "உண்மை" என்று நம்பின தன் செய்தியைச் சொல்லும் போது, சிலருக்கு அது வேதனையை கொடுக்குமே என்பதற்காக, தன் செய்தியை சொல்லாமல் இருந்துவிட்டாரா! இல்லையே?

இயேசு தேவனின் குமாரன் இல்லை என்று சொன்னார்? கிறிஸ்தவர்கள் புண்பட்டார்கள். இப்போதும் இஸ்லாமியர்கள் அதையே செய்கின்றனர்.

இதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை, சொல்லும் செய்தி உண்மையா இல்லையா என்று அவரவர் மனதிற்கு தெரியும். உண்மையென்று உங்கள் மனது சொன்னால், நம்புங்கள். இல்லையென்றால் விட்டுத்தள்ளுங்கள்.

இதைத்தான் நான் கிறிஸ்தவர்களுக்கு சொல்வேன். யாராவது இயேசுவைப் பற்றி விமர்சித்தால், உங்களுக்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள், இல்லையானால் விட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்கள் மீது அவதூறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

காயத்திற்கு மருந்து போடும் போது வலிக்கத்தான் செய்யும், அதற்காக நாம் மருந்துக்களே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? வியாதி போவது எப்படி?

இருந்தாலும், என் கட்டுரைகளில் பெரும்பான்மையாக வசன ஆதாரம் இல்லாமல் எதையும் முன்வைக்க மாட்டேன்.

மற்றும் "தறுதலைகள்", "காரி உமிழ்வார்கள்" என்று "இஸ்லாம் இணைய பேரவை" சொல்வதைப் போல நான் எழுதமாட்டேன், விமர்சிப்பவர்களை திட்டமாட்டேன்.

ஒருவேளை நான் சொன்ன ஆதாரம் அல்லது செய்தி தவறாக இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டால், உடனே நான் அதை என் கட்டுரையிலிருந்து எடுத்துவிடுவேன், அல்லது ஒரு குறிப்பு செய்தியை அதைப் பற்றி தெரிவிப்பேன்.

எல்லாரையும் நேசிக்கும்படி என் வேதம் சொல்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல? எனக்கு தெரிந்த சில உண்மைகளைச் சொல்வதுதான் என் நோக்கம்.

யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். அதற்காக நான் கட்டுரை எழுதுவதை நிறுத்தமுடியாது.

லூக்கா 8:16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட் டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

3. இஸ்லாமைப் பற்றி விமர்சிக்க கிறிஸ்தவத்தில் அனுமதியுண்டா? பைபிளிலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை ஆதாரமாக காட்டமுடியுமா ?

என் கட்டுரைகள் "இஸ்லாமை விமர்சிக்கின்றன" என்றுச் சொல்வதைவிட "என் நம்பிக்கை யைப் பற்றிய இஸ்லாமிய கேள்விகளுக்கு" அவைகள் பதிலாக அமைகின்றன எனலாம். இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், ஆரோக்கியமான விமர்சனம் நல்லது.

கிறிஸ்தவத்தில், ஒரு தேவனுடையை ஊழியக்காரன் எதிர் பேசுகிறவர்களுக்கும், மற்றவர் களுக்கும் சாந்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளான்.

2 தீமோத்தேயு: 2:24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லா ரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்.

25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

ஒரு தேவனுடைய ஊழியக்காரன் "கிறிஸ்தவர்களுக்கு கட்டுக்கதைகள்" சொல்லி அவர்களை சத்தியத்திலிருந்து சிலர் விலகச் செய்வதை காணும் போது, அவர்களுக்கு புத்திசொல்ல வேண்டும், கண்டனம் செய்யவேண்டும்.

2 தீமோத்தேயு: 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது,

2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

சில நேரங்களில் கடிந்துக்கொள்ளவேண்டிய அவசரம் வரலாம். இதைத்தான் CHRISTHAVAM தளமும் செய்துக்கொண்டு இருக்கிறது.

தீத்து: 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதரு டைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனை களுக்கும் செவிகொடாமல்,14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.

இப்படி இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் ஒரு ஊழியக்காரனின் கடமையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஊழியக்காரனே.

4. உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் .

கிறிஸ்தவர்கள் அப்படி தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிக குறைவு, காரணம்:

1. கிறிஸ்தவர்கள் பைபிளை படிக்கிறார்கள் (படிக்கனும்), எனவே, எது சரி எது தவறு என்று சரியாக நிதானிக்க அவர்களால் முடியும்.

2. ஆலயத்திற்குச் செல்லும் கிறிஸ்தவன் ஒவ்வொருவாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னைத்தான் சோதித்து அறிவான், போதகரின் போதகத்தைக் கேட்கிறான்.

எனவே, அவன் எல்லாரையும் நேசிக்கவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்.

3. பைபிளில் இல்லாத வார்த்தைகளை நாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அல்லா குர்-ஆனில் சொன்னது போல "யூதர்களையும், கிறிஸ்தவர் களையும் நண்பர்களாக" ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று, பைபிள் சொல்வதில்லை.

முஸ்லீம்களையும் மற்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நான் சொன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை அதிகமாக அறியும்போது, அவன் முஸ்லீம்களுக்காக அதிகமாக தேவனிடம் வேண்டுதல் செய்வான், அதற்கு பதிலாக விரோதிக்கமாட்டான் (விரோதிக்கக்கூடாது).

5. CHRISTHAVAM தளத்தில் இஸ்லாமிய கட்டுரைகள், செய்திகளை எல்லாரும் படிக்கிறார்கள், பதிவுசெய்கிறார்கள். இருந்தாலும், அதை படிக்கும் வாசகர்கள் என்ன பதில்(பின்னூடல்) எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.

முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம், காத்திருப்போம் தேவன் உதவிசெய்வார் என்று எழுதுகிறார் களே தவிர, அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று யாரும் எழுதுவதில்லை. அதுதான் கிறிஸ்துவம், இதைத்தான் இயேசு போதித்தார்.

எனவே, கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துகொள்ளமாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

5. உங்களின் இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

கட்டாயமாக பலன் தரும். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வது, ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புலிருந்து நடந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அது குறைவு, சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம்.

இப்போது சிலர் எழுத ஆரம்பித்துள்ளார்கள், முக்கியமாக தமிழ் கிறிஸ்தவ தள வாசகர்கள் "மைகோவை", " தேவன்", "ரமேஷ்பிஸ்", மற்றும் தனி தளம் மூலம் கட்டுரைகளை பதிக்கும் "உண்மையடியான்" என்றுச் சொல்லி பலர் எழும்பியுள்ளனர்.

இன்னும் சில ஆண்டுகளில் பலர் எழுத ஆரம்பிப்பார்கள். எத்தனையோ பேருக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, ஆனால், இப்போதுதான் அதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

முக்கியமாக ஆங்கிலத்தில் அனேக கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதாவது இவைகளை மொழிபெயர்த்தாலே போதும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் ஒன்றும் தனியாக கட்டுரைகளை எழுதவேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொல்வதும், இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்வதுமே என் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

6. ஒருவேளை உங்கள் முயற்சியினால், ஒரு நன்மையும் விளையவில்லை என்று வைத்துக்கொள்வோம்? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

இது என் வேலை இல்லை. இது தேவனின் வேலை. எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை பயன்படுத்தி சில கட்டுரைகளை எழுதுகிறேன், அவ்வளவு தான்.

எங்களுடைய வேலை விதையை விதைப்பது(தூவுவது), நீர் பாய்ச்சுவது அவ்வளவுதான், விளையச் செய்து தேவன்தான்.

இன்றைக்கு செடி நடுகிறோம், அது உடனே பலன் தருவதில்லை. அதற்கு பல ஆண்டுகள் ஆகும், அப்போது தான் அதன் கனிகளை நம் கண்களில் காணமுடியும். அது வரையில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

எனவே, பலன் உண்டா இல்லையா என்பது இப்போது கேள்வியில்லை.

பலன் விளையவில்லை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே பலன் விளைந்துவிட்டது. அதாவது தமிழிலே பல இஸ்லாமிய தளங்கள் உருவாகியுள்ளன. கேள்விகள் கேட்டு பதில் கொடுத்தால் தானே விவரங்கள் புரியும்.

அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

தமிழ் முஸ்லீம், இதுதான் இஸ்லாம் தளமும் தொடர்ந்து கிறிஸ்தவ தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவைகளுக்கு பதில்கள் தரப்படுகின்றன.

பல ஆயிரம் பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம்பற்றிய அறிவு பெருகிக்கொண்டு இருக்கிறது.

மற்றும் பல இஸ்லாமியர்களுக்கும் உண்மை கிறிஸ்தவம் என்னவென்று புரிந்து இருக்கும். எனவே காத்திருப்போம், ஜெபிப்போம், ஜெயம் பெருவோம்.

7. கிறிஸ்தவர்கள் முதல் முதலில் எப்போது இப்படி இஸ்லாமுக்கு பதில்கள், மறுப்புக்கள் எழுதினார்கள்?

முதன் முதலில் என்று சொல்லவேண்டுமானால், முகமதுவின் காலத்திலேயே கிறிஸ்தவர்களும், யூதர்களும் நேரடியாக அவரிடமே சில கேள்விகளை கேட்டுயிருப்பதை சொல்லமுடியும். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு விவரத்தை சொல்ல விரும்புகிறேன்.

அதாவது முஸ்லீம் காலிஃபா "அல்-மாமுன் (கி.பி. 813 to 833)" என்பவரின் அரச சபையில் இப்படி ஒரு "கேள்வி பதில்" நிகழ்ச்சி நடந்ததாக ஒரு புத்தகம் உள்ளது.

இந்த கருத்து பரிமாற்றம் கிறிஸ்தவரான அல்-கின்டி(Al-Kindy) மற்றும் முஸ்லீமான ஹாஷிமி(Al-Hashimi ) என்பவருக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த பரிமாற்றம் பாதுகாப்பை கருதி, அரச சபையில் நடத்தப்படாமல், தனியே நடந்ததாக சொல்லபடுகிறது.

இந்த புத்தகத்தில் முதலாவது, கிறிஸ்தவரகளை இஸ்லாமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறாதாம்,

அதனை கிறிஸ்தவர் மறுத்து, இஸ்லாமியர்களை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாக உள்ளதாம்.

இந்த புத்தகத்தில் கிறிஸ்தவர் கொடுக்கும் பதில் சுமாராக புத்தகத்தின் மொத்த அளவில் ஏழில் ஆறு பாகம் உள்ளதாம். நான் சில பக்கங்களை மட்டுமே படித்தூள்ளேன்.

இந்த புத்தகத்தை 1880ல் வில்லியம் முர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.

இவைகள் ஒரு சில விவரங்கள் மட்டுமே, முழுவிவரத்திற்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று பார்க்கவும். இன்னும் பலர் இப்படி பல காலங்களில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

8. உங்கள் கட்டுரைகளில், முஸ்லீம்களுக்கு "குர்-ஆனை", "ஹதீஸ்களை", "முகமதுவின் சரிதைகளை" படிக்கும் படி சொல்கிறீர்களே, இது கொஞ்சம் அதிமாகப் படவில்லை உங்களுக்கு? கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் பைபிள் படியுங்கள் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் எப்படி இருக்கும் ?

முதலாவது ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமியர்கள் முதலாவது குர்-ஆனைப் படிக்க ஆரம்பிப்பது அரபியில்தான். தங்கள் தாய் மொழியில் இல்லை.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் சில நல்ல வசனங்கள், ஹதிஸ்கள் மட்டும்தான் அவர் களுக்கு தெரியும், அதாவது நான் சொல்வது ஒரு சராசரி சாதாரண முஸ்லீமைப்பற்றி.

அதனால், தான் நான் அவர்களை குர்-ஆனை படிக்கும் படி சொல்கிறேன். ஹதீஸ்களை படிக்கும்படி சொல்கிறேன். குர்-ஆனை அரபியில் படிக்க உட்சாகப்படுத்தும் அளவிற்கு, தங்கள் தாய்மொழியில் படிக்க இஸ்லாமியர்கள் உட்சாகப்படுத்துவதில்லை.

நான் சொல்வது இந்திய முஸ்லீம்களைப் பற்றி. அவர்கள் அப்படி தாய் மொழியில் படித்தால், சில உண்மைகள் அவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து.

ஆனால், கிறிஸ்தவர்களின் நிலை அப்படி இல்லை. எல்லாரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் அதுவும் பல மொழிகளில் படிக்கிறார்கள். ஆகையினால், கிறிஸ்தவர்களைப் பார்த்து பைபிளை படி என்று சொன்னால், அவர்கள் அமோதிப்பார்கள்.

1. முகமதுவும் அவருடைய தோழர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக "எருசலேமில் உள்ள தேவலயத்தை" நோக்கியே தொழுதார்கள் என்றும், பிறகு தான் அதை "விக்கிரகங்கள் இருக்கும்" காபாவிற்கு முகமது மாற்றினார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

2. முகமதுவிற்கு முந்தைய வேதம் அல்லது நபிகள் பற்றி சந்தேகம் வந்தால், அதை தீர்த்துக்கொள்ள யூதர்களையும் அல்லது கிறிஸ்தவர்களை கேட்டு தெரிந்துக்கொள் என்று அல்லா அவருக்கு கட்டளை கொடுத்துள்ளது எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

3. முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

4. முஸ்லீம்களுக்கு தங்கள் மனைவிகளை அடிக்க அல்லா அனுமதி கொடுத்த வசனம் குர்-ஆனில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

5. முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் என்று எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், அதனால்தான் முதலாவது அவர்கள் மார்க்கம்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

கிறிஸ்தவம் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டுமா - இயேசுவின் வாழ்க்கையைப் படி.
இஸ்லாம் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டுமா - முகமதுவின் வாழ்க்கையைப் படி.

மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் நான் குர்-ஆன் படியுங்கள், ஹதீஸ் படியுங்கள் என்று சொல்கிறேன்.

இப்படி ஒரு முஸ்லீம் தளத்தில் " இஸ்லாமியர்களே நீங்கள் பைபிள் படியுங்கள், படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?


9. இப்படி கட்டுரைகளை எழுதுவதற்கு பதிலாக பல இஸ்லாமிய அறிஞர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அங்கு கேள்விகள் கேட்கலாம் அல்லவா? உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் அல்லவா ?


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் அனேகமாக நாம் கேள்வி கேட்கத்தான் அனுமதிக்கப்படுகிறோமே ஒழிய பதில் சொல்ல அல்ல.

அது மட்டுமல்லாமல், நமக்கு கொடுக்கப்படும் சில மணித்துளிகளில் நாம் என்ன சொல்லவருகிறோம் என்று சொல்வதற்கு முடிவதில்லை. எனவே, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், இப்படி இணையத்தில் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதுவதினால், நிறைய விவரங்களை ஆதாரங்களை நாம் சொல்லமுடியும்.

எனவே, நான் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்வேன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள், ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவேண்டாம்.

அதனால், ஒரு நன்மையும் நமக்கு உண்டாகப்போவதில்லை. ஏதாவது சொல்லவேண்டு மென்றால், இணையத்தில் எழுதுங்கள் இதனால் அதிக நன்மைகள் விளையும்.

10. நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் அனேக இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அவைகளில் பல கிறிஸ்தவ கேள்விகளுக்கும் அவர்கள் குர்-ஆன் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள்.

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படியுங்கள், அப்போது தான் பைபிள் சொல்லும் செய்திக்கும், குர்-ஆன் சொல்லும் செய்திக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் புரியும்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் செய்தியை மட்டும் கேட்டுவிட்டு இது தான் இஸ்லாம் என்று நினைக்கவேண்டாம். அது மிகப்பெரிய தவறு.

இஸ்லாமில் உள்ள சில நல்ல விவரங்களை மட்டும் தான் அவர்கள் முன்வைப்பார்கள், எனவே நீங்களாகவே குர்-ஆனை, ஹதீஸ்களை படியுங்கள். அப்போதுதான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு, ஒருவன் இஸ்லாமில் சேர்ந்துவிட்டபிறகு அதிலிருந்து வெளியே வந்து விட்டால், அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை உண்டு. பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி ஷரியா சட்டம் உண்டு.

அதை இஸ்லாமியர்கள் முதலில் உங்களுக்கு சொல்லமாட்டார்கள். டாக்டர் ஜாகிர் நாயக் கூட சொல்லியிருக்கிறார்,

இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால், அவனுக்கு மரணதண்டனை என்று. தெரியாமல் உள்ளே நிழைந்துவிட்டீர்கள், பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரமுடியாது.

இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை என்று சொல்லலாம், ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்குமானால், ஷரியா சட்டம் கொண்டு வந்தால், நிச்சயமாக இதே ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்.

மத்தேயு: 7:15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.

19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

கருத்துகள் இல்லை: