புதன், 28 ஜனவரி, 2009

மதமாற்றம்

இது தாங்க ஆசைகாட்டி மாதமாற்றம் செய்வது.. பதிவின் தொடர்ச்சி. இது ஜூ.வி.யிலும் ஒரு வலை பதிவிலும் வந்ததை இங்கு தந்து இருக்கிறேன். பாருங்க மதமாற்றம் எப்படி நடக்குதுன்னு

இதையும் படிங்க ஜூ.வி.யில் வந்தது:-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த குளோரி சந்திரா. தனி தொகுதியான இங்கு இவர், தலித் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அப்போதே இவரது வெற்றியை எதிர்த்து பலதரப்பிலும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் இவரிடம் தேர்தலில் தோற்றுப் போன எதிர்தரப்பினர்,

"கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினரான குளோரி சந்திரா, பொய்யான தகவல்களைக் கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்" என்று குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்கள்.

எதிர் தரப்பினர் எடுத்து வைத்த ஆதாரங்களை மறுக்க முடியாத சந்திரா, ‘அடிப்படையில் கிறிஸ்டியனான நான், 1994 வது வருடமே மதுரையிலிருக்கும் ஆரிய சமாஜம் என்ற அமைப்பின் மூலமாக இந்துவாக மாறிவிட்டேன்’ என்று கோர்ட்டில் சொல்லி அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்திருக்கிறார்.

சந்திராவின் இந்த வாக்குமூலம்தான் ஆர்ய சமாஜின் உண்மையான 'திருப்பணிகளை' வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சொல்கிறார், "பிப்ரவரி முதல் வாரத்துல சந்திரா குறிப்பிட்டுள்ள மதுரை ஆரிய சமாஜத்துக்குப் போனேன். அங்க ராஜேந்திரன்னு ஒருத்தர் இருந்தார்.

‘சொந்தக்காரர் ஒருத்தர் இந்து மதத்துக்கு மாறுனது மாதிரி சான்றிதழ் வேணும்’னு கேட்டேன். உடனே, எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க சம்மதிச்சார்.

நான், ‘ஜெயபால் டேவிட்’ங்கிற பேரை ‘செல்லையா’ன்னு மாத்தணும்னு எழுதிக்கொடுத்தேன்.

ஜெயபால் டேவிட் நெல்லை பேராயர்னு கூட தெரியாம ஐயாயிரம் ரூபாய வாங்கிக்கிட்டு அஞ்சு நிமிஷத்துல அவர செல்லையாவாக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் பேராயரோட அட்ரஸைத்தான் கொடுத்தேன்.

அன்னிக்கு சாயந்தரமே காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் பேரை ‘பெருமாள்சாமி’ன்னு மாத்தணும்னு எழுதிக் கொடுத்தேன்.

5.2.2007-ம் தேதியில இருந்து பீட்டர் அல்போன்ஸும், பெருமாள்சாமியாயிட்டார்!

சான்றிதழ்ல சட்டமன்ற உறுப்பினர்ங்கிறதை சுருக்கி, ‘ச.ம.உ.’ ன்னு எதுவும் புரியாமலே எழுதிக்கொடுத்துட்டாங்க. இதுக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. பணத்தைக் குடுத்து மதத்தை மாத்துற இந்த ரூட்டுலதான் சந்திராவும் போயிருக்கிறார்’’ என்றார் சண்முகம்.

இந்த விவகாரம் தொடர்பாக இப்போது ஆரிய சமாஜ நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறது போலீஸ். விளக்கமறிவதற்காக ஜூனியர் விகடன் நிருபர்கள் அங்கே சென்றபோது பதில் சொல்ல ஆள் இல்லாமல் பூட்டிக் கிடந்தது அந்த அலுவலகம்.

பீட்டர் அல்போன்ஸை அவருக்குத் தெரியாமலே இந்து மதத்துக்கு மாற்றியிருப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள்.

"இதுபற்றி நானும் கேள்விப்பட்டேன். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. மதத்தை வைத்து இந்த சமூகத்தில் எத்தகைய பித்தலாட்டங்கள் நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

பெருமாள்சாமியாக இருப்பதில் இந்த பீட்டர் அல்போன்ஸுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் பணி செய்வதற்கு மதம் எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

ஆனால், மதத்தை வைத்து இப்படி மக்களை ஏமாற்றும் நபர்கள் அபாயமானவர்கள். இப்படியெல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு மதத்தை மாற்றிச் சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் இதுபற்றி புகார் செய்யவிருக்கிறேன்..’’ என்று படபடத்தார். - நன்றி: ஜூனியர் விகடன்

மேலும் இது குறித்து ஒரு வலை பதிவில் ஒரு நண்பர் கீழ் கண்டவாறு கூறியுள்ளார்:-

ஆரிய சமாஜம் இதை உலகமெங்கும் செய்து வருவதாகவும், பஞ்சாபில் சுதந்திரத்துக்கு முன்பு பெருமளவில் முஸ்லிம்களை இந்துக்களாக ஆக்கியதாகவும் நேசக்குமார் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார்.

இவர்கள் இண்டர்நேஷனல் லெவலில் மதமாற்றம் என்ற பெயரில் காசு பார்க்கும் ஒரு கும்பல் என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

'அங்கே 8000 பேர் மதம் மாறுனாங்க, இங்கே 10,000 பேர் மதம் மாறுனாங்க என்று நண்பர் எழில் அடிக்கடி தன் வலைப்பதிவில் எழுதுவார். 'இது'தான் அந்த மதமாற்றமா? உலகளாவிய அளவில் நல்லா கல்லா கட்டியிருப்பாங்க போலிருக்கே!

இந்த ஆரியசமாஜம் ஒரு சமூக சேவை இயக்கம் என்பது போலவும் இங்கு சிலர் நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இது அந்தக்காலத்திய இந்து மதவெறி அமைப்புகளுள் ஒன்றுதான்.

"ஆரிய சமாஜிகள் ஒன்று மற்ற மதத்தினருடன் சண்டை போடுவார்கள். இல்லாவிட்டால் தங்களுக்குள்ளாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்" என்று 1924-லேயே காந்திஜி சொன்னார்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

'இந்து மதத்தை இழிவு படுத்தி இஸ்லாம் பக்கம் சாய்ந்து விட்டார் காந்திஜி' என்று சமாஜிகள் நாடெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். இதுபோன்ற பிரச்சாரங்களின் விளைவாகவே இறுதியில் காந்திஜி தனது உயிரையே இழக்க நேரிட்டது என்பது வரலாறு.

கருத்துகள் இல்லை: