ஞாயிறு, 25 ஜனவரி, 2009

வேதாகமத்தை ஏன் வாசிக்க வேண்டும்

அதன் செய்தி உண்மையும் சதாகாலத்திற்கும் உள்ளது.

மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் பூவைப் போலவுமிருக்கிறது: புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.(- 1 பேதுரு 1: 24-25)

கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்: நம்முடைய வார்த்தைகள் சத்தியம்:(- 2 சாமுவேல் 7: 28)
அது கடவுளால் அருளப்பட்ட வார்த்தை

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது: தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கின்றன.(- 2 தீமோத்தேயு 3: 16-17)

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
(- 2 பேதுரு 1: 21)


நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்: கர்த்தர் விளம்பினார்.(- எரேமியா 13: 15)

உங்கள் செவியைச் சாய்த்து, கேளுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்:
(- ஏசாயா 55: 3)

அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறியது

மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.(- மத்தேயு 4: 4)

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.(- லுக்கா 11: 28)

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு: அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(- யோவான் 5: 24)

நான் உலகத்திற்கு ஒளiயாயிருக்கிறேன், நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்: சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.(- யோவான் 8: 12,31,32,34,36)

அது நித்திய ஜீவனுக்கு வழிகாட்டுகிறது

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.(- 2 தீமோத்தேயு 3: 15)

நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது: தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்,

தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.

தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.(- 1 யோவான் 5: 9-12)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் ரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால் அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.(- யோவான் 3: 16-18)

பரிசுத்த வேதாகமத்தை எதற்காக வாசிக்கவேண்டும்?

ஏனென்றால் அதில் பின்வருவனவற்றைக் காண்கிறோம்

பாவமன்னிப்பு

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்.
( - அப்போஸ்தலர் 10: 43)

கடவுளiன் அன்பு

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல. அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.(- 1 யோவான் 4: 9,10)

அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்:(- 1 யோவான் 3: 16)

சமாதானம்

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு: அவர்களுக்கு இடறலில்லை.- சங்கீதம் 119: 165)

நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்: அதினால் உமக்கு நன்மை வரும். அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்.(- யோபு 22: 21,22)

நிச்சயமான ஒரு நம்பிக்கை

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (- 1 யோவான் 5: 13)

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.(- ரோமர் 15: 4)

தூய்மை

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே.(- சங்கீதம் 119: 9)

வாழ்க்கைக்கு வழிகாட்டி

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
(- சங்கீதம் 119: 105)

மகிழ்ச்சி

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது.
(- எரேமியா 15: 16)

கருத்துகள் இல்லை: