திங்கள், 5 ஜனவரி, 2009

அல்-அமின் (நம்பத்தகுந்தவர்)

அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்

இஸ்லாமுக்காக‌ வாதம் புரிப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் தீர்க்க‌த‌ரிசியின்நேர்மையைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் போது அடிக்க‌டி மேற்கோள் காட்டுவ‌து,முக‌ம‌துவிற்கு அல்-அமின்(Al-Amin or Al-Ameen) என்ற‌ பெய‌ர்கொடுக்கப்பட்டு இருந்தது என்பதைப் பற்றியதாகும்.

அல்-அமின் என்றால்,"நம்பத்தகுந்தவர்" என்று பொருளாகும், மற்றும் இந்த பட்டப்பெயர்முகமதுவிற்கு அவரின் உறவினர்கள் அவர் இறைவனின் ஊழியத்திற்கு வருவதற்குமுன்பாக கொடுத்து இருந்தார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.


முகமதுவின் கால மக்களில் இவர் மிகவும் நம்பத்தகுந்த நபராக இருந்தார்என்றும், மற்றும் இவர் ஒரு பொய்யையும் சொல்லாதவராக இருந்தார் என்பதால்இவருக்கு அல்-அமின் என்ற பட்டப்பெயரை அம்மக்கள் இவருக்கு கொடுத்தார்கள்என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள்.


இந்த வாதத்திற்கு கீழ் கண்டஹதீஸ் ஆதாரமாக தரப்பட்டுள்ளது:'...அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்றுஎப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார் [ஹெர்குலிஸ்].


நான்இல்லை என்றேன். 'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லைஎன்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கைசெய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பதுஎங்களுக்குத் தெரியாது என்றேன். ……….


இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர்பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம்கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய்சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றேஉறுதியாக நம்புகிறேன். ….

<அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? எனஉம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள்அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். ( பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7 )
<

இங்கே, முகமதுவின் எதிரியாக இருந்த அபு சுஃப்யான் என்பவர், பைஜான்டியம்ஆளுநரான ஹெர்குலிஸ் என்பவரை சந்தித்து பேசும் போது, முகமது ஒரு முறையும்பொய் சொல்லவில்லை மற்றும் அவர் தன் வாக்குறுதியை எப்போதும் காப்பவராகஇருக்கிறார் என்று ஒத்துக் கொண்டதாக, மேலே உள்ள ஹதீஸ் கூறுகிறது.
<

முஸ்லீம்கள் மேற்கோள் காட்டும் இன்னொரு விவ‌ரமும் உண்டு, அதாவது,இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களும்(unbelievers) முகமது ஒரு முறையும்யாரிடமும் பொய் சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொண்டதாக உள்ள ஹதீஸாகும்.


இபின் அப்பாஸின் அதிகார பூர்வமான ஹதீஸாக அறிவிக்கப் பட்டது என்னவென்றால்,"உன் உறவினர்களை எச்சரிப்பாயாக(மற்றும் அவர்களிடம் உள்ள ஒருசிலகுழுவினருக்கு எச்சரிப்பாயாக)" என்ற வசனம் இறங்கியப் போது, அல்லாவின்நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், சபா(Safa)வின் மிது ஏறி,உரத்த சத்தமாக கூப்பிட்டார்கள்:

உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்என்றார். இப்படி சத்தமாக கூப்பிடுவது யார் என்று அவர்கள் கேட்டார்கள்.முகமது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அவரிடம் வந்தார்கள்,


மற்றும்அவர்: ஓ இன்னாருடைய மகன்களே, இன்னார் இன்னாருடையை மகன்களே, ஓ அப்த் மனஃபுஉடைய மகன்களே, ஓ அப்த் அல் முத்தாலிஃப் உடைய மகன்களே, என்று அழைத்தார்,அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வந்தார்கள்.

அவர்(நபி):ஒருவேளை இந்தமலையின் அடிவாரத்தில் குதிரை வீரர்கள் நம்மை நோக்கி வந்துக்கொண்டுஇருக்கிறார்கள் என்று நான் சொன்னால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்றுகேட்டார்.


அதற்கு அவர்கள் மறுமொழியாக: உங்களிடம் நாங்கள் எப்போதும் ஒருபொய்யையும் காணவில்லை என்றுச் சொன்னார்கள். அவர் சொன்னார்: நல்லது,வரப்போகும் மிகக்கொடுமையான ஆபத்தைக் குறித்து நான் உங்களைஎச்சரிக்கிறேன்.


இந்த ஹதீஸை சொன்னவர் கூறினார், இதற்கு அபு லஹாப்கூறினார்: உனக்கு அழிவு உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை இங்கு கூட்டிச்சேர்த்தாய்? அவர்(பரிசுத்த நபி) எழுந்து நின்றார், அப்போது இந்த வசனம்இறங்கியது, "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்(111:1)".

அமாஸ் இந்த வசனத்தை சூராவின் கடைசியில் வாசித்தார். (SahihMuslim, Book 001, Number 0406 In English)மேலே கண்ட உரையாடல் அல்லது நிகழ்ச்சி முகமது ஒரு நேர்மையானவர் என்பதற்குஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.

இறைவன் தன் நபியாக அல்லதுதூதுவராக அனுப்பினார் என்று ஒரு பொய்யான வாதத்தை முகமது முன்வைக்கமாட்டார் என்று நம்புவதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரம் என்று முஸ்லீம்கள்நம்புகிறார்கள்.

முஸ்லீம்களின் இந்த வாதத்தில் அனேக பிரச்சனைகள் உள்ளன. குறைந்த பட்சமாகமுகமதுவின் காலத்தவர்கள் தங்கள் கைப்பட எழுதி வைத்த(No Written Records)ஒரு ஆதாரமும் இப்போது நம்மிடம் இல்லை.

இந்த ஹதீஸ்கள் அனைத்தும்முஸ்லீம்களால் எழுதப்பட்டது, இன்னும் சொல்லப் போனால், முகமதுவின்மரணத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.

மேலும், இந்த இஸ்லாமிய விவரங்கள் சந்தேகத்திற்கு உரியவைகள் ஏனென்றால்,முஸ்லீம்கள் க‌தைகளை இட்டுக் கட்டி தங்கள் நபி மிகவும் நல்லவராககாட்டுவதற்கு இப்படி செய்கிறார்கள்.

குர்‍ஆன் முகமதுவை எப்படிகாட்டுகிறதோ அதை விட நல்லவராக காட்டுவதற்கு முஸ்லீம்கள் முயற்சிசெய்கிறார்கள்! ஆகையால், முகமதுவின் எதிரிகள் அவருடைய நடத்தையைப் பற்றிமிகவும் புகழ்ந்தும், அவருடைய நேர்மையைப் ப‌ற்றி புகழ்ந்தும் பேசுவதாகஇருக்கும் இந்த விவரங்கள் பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதற்கும் மேலாக, ஓயாமல் முஸ்லீம்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்இப்படிப்பட்ட கதைகளுக்கு எதிர்மறையாக குர்‍ஆன் சாட்சி சொல்கிறது.

அதாவது,குர்‍ஆன் முஸ்லீம் அல்லாதவர்களின் வார்த்தைகளை பதிவு செய்து தன்னிடம்வைத்துள்ளது.(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக்கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்;

அவர்கள் உம்மைப்பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின்வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்‍ஆன் 6:33உம்மை

அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல்உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள்செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. குர்‍ஆன் 10:41(நினைவூட்டும்)

வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர்பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். குர்‍ஆன் 15:6(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால்,(உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்றுஅவர்கள் கூறுகிறார்கள்;

எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதைஅல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை)அறிய மாட்டார்கள். குர்‍ஆன் 16:101

"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரேஇட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில்அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்

ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்;"இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக்கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக்காண்பிக்கப்படுகின்றன."

(நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ளஇரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன்மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்றுகூறுவீராக! குர்‍ஆன் 25:4-6

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால்(வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாகபொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.குர்‍ஆன் 35:4

ஆனால், இவைகள் அனைத்தும் முஸ்லீமல்லாதவர்களால சொல்லப்பட்ட பொய்யானகூற்றுக்கள் என்று முஸ்லீம்கள் இந்த வசனங்களை ஒதுக்கிவிடுவார்கள். இப்படிமுஸ்லீம்கள் சொல்வதினால், அவர்கள் வாதங்களில் உள்ளமுரண்பாட்டை(inconsistency) இது காட்டுகிறது.

ஆனால், உண்மையில் இதேமுஸ்லீம்கள் தான் "முகமதுவின் நேர்மையை நிருபிப்பதற்குமுஸ்லீம்களல்லாதவர்களின் கூற்றுகளை ஆதாரங்களாக காட்டி முயற்சிஎடுத்துக்கொண்டு இருப்பது"


ஒரு வேளை, முஸ்லீம் அல்லாதவர்களின்(Unbelievers) சாட்சி/கூற்று முகமதுஒரு நேர்மையானவர் என்பதை நிருபிக்க போதுமானதாக‌ இருக்கிறது என்றுமுஸ்லீம்கள் சொல்லும் போது, அதே முஸ்லீம் அல்லாதவர்களின் சாட்சி/கூற்றுமுகமதுவின் நடத்தையை கேள்விக்குரியதாக்க போதுமானதாக இருக்கிறது என்றுநம்பலாம் அல்லவா?

இது எப்படி உள்ளதென்றால், கூழும் குடிக்கனும்,மீசையிலும் ஒட்டக்கூடாது என்றுச் சொல்வது போல முஸ்லீம்களின் கூற்றுஇருப்பது மிகவும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது


சில நேரங்களின் முஸ்லீம்கள் கீழ் கண்டவாறுச் சொல்லி திருப்தி அடைவார்கள்,அதாவது, "முகமதுவைப் பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன சொன்னார்களோ அதேபோலத் தான் மற்ற நபிகள் மற்றும் தூதர்கள் பற்றியும் நம்பிக்கைஇல்லாதவர்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது என்பார்கள்முஸ்லீம்கள்.

ஆனால், இதனை மட்டும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நம்பமாட்டார்கள் என்று முஸ்லீம்கள் சொல்வார்கள். முஸ்லீம்களின் இந்த கருத்துமிகவும் தவறானது, இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

முதலாவதாக, பைபிளின் நபிகளுக்கும், தூதர்களுக்கும் தேவன் இயற்கைக்குஅப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும்படிச் செய்து, அவர்கள் தனக்கு பதிலாகபேச அனுப்பப்பட்ட நபிகள் என்று வலுவான ஆதாரங்களோடு நிருபித்தார்.

இதன்காரணத்தினால், நம்பிக்கயில்லாதவர்களின் கூற்றுக்கள் பொய் என்றுநிருபனமாகிறது. இதற்கு எதிர்மறையாக, முகமது, தான் இறைவனால்அனுப்பப்பட்டவர் தான் என்பதை நிருபிக்கும் படி ஒரு அற்புதமும்செய்துக்காட்ட முடியாமல், தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்வதில் தோல்விஅடைந்துவிட்டார்

இரண்டாவதாக, இப்போது பிரச்சனை என்னவென்றால், "நம்பிக்கை இல்லாதவர்கள்சொன்னது சரியானதா என்பதல்ல, அதற்கு மாறாக, நம்பிக்கை இல்லாதவர்கள்முகமதுவின் நேர்மையைப் புகழ்ந்தார்கள் என்று சொல்லும் முஸ்லீம்களின்வாதம் உண்மையானதா என்பதாகும்".

குர்‍ஆன் சாட்சி சொல்வது போல, நம்பிக்கைஇல்லாதவர்களின் கூற்று உண்மையாகவே, முகமதுவை மட்டுப்படுத்தவதாகவேஇருந்தது.


மிகவும் முக்கியமாக, முகமது ஒரு நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் மற்றும்நேர்மையற்றவர் என்றும் தெரிந்துக்கொள்வதற்கு இஸ்லாமிய விவரங்கள்/ஹதீஸ்கள்போதுமான நம்பத்தகுந்த‌ ஆதாரங்களாக உள்ளன.

முஸ்லீம்கள் நினைப்பது போல‌முகமது ஒன்றும் நேர்மையின் நன்னடத்தையின் கலங்கரை விளக்கு அல்ல (Hewasn't the beacon of virtue and honesty that Muslims make him out tobe).

ஒரு எடுத்துக் காட்டுக்காகச் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் கூடசொல்வார், மற்றும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக தன்னை பின்பற்றுபவர்கள் பொய் சொல்லவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு(தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின்தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள்.

உடனேமுஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்றுதாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள்.

உடனே, முஹம்மத் இப்னுமஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக்குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள்.நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள்.


அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னுஅஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன்.அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள்கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்)வெட்டி விடுங்கள்" என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டுநறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி),'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து)பார்த்ததில்லை" என்று கூறினார்கள்

"மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையைநுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி(நுகர்ந்து பார்)" என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமாஅவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள்.

பிறகு தம் சகாக்களையும் நுகரக்கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்றுகேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)" என்று கூறினான். முஹம்மத்இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்"என்று கூறினார்கள்.

உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர்.பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத்தெரிவித்தனர். (Sahih al-Bukhari, Volume 5, Book 59, Number 369 inEnglish)

மற்றும்கெய்பர் கைப்பற்றப்பட்டபிறகு, 'அல் ஹஜ்ஜஜ் பி. இலத் அல் சலாமி' என்ற அல்பஹ்ஜ் என்ற இனத்தைச் சார்ந்தவர், நபியவர்களிடம் வந்து, 'என்மனைவியிடம்(உம் ஷய்பா டி அபூ தல்ஹா) என் பணம் உள்ளது,

(இவர்கள்இருவருக்கு முரத் என்ற மகனுண்டு). மக்காவிலுள்ள வியாபாரிகளிடம் எங்கள்பணம் உள்ளது, எனவே மக்காவிற்குச் சென்று அப்பணத்தை பெற்றுக்கொண்டுதிரும்ப அனுமதி கொடுங்கள் என்று கேட்டார்.

அனுமதி பெற்றுக்கொண்டு,மறுபடியும் இவர் நபியவர்களிடம் "நான் பொய் சொல்லியாக வேண்டும்" என்றுகேட்டார். அதற்கு நபியவர்கள் 'அவர்களிடம் சொல்" என்றுச் சொன்னார்.

அல்ஹஜ்ஜஜ் கூறினார், 'நான் மக்காவிற்குச் சென்றேன், அல்பைதா என்ற இடத்தில்சில குவாரிஸ் மக்கள் கெய்பருக்கு நபி சென்றாரே, அவர் எப்படி உள்ளார்என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.

ஹிரஜ் என்ற பட்டணம் மிகவும்முக்கியமான பட்டணம் என்றும், அதிக ஜனத்தொகையுள்ள மற்றும் அதிகபாதுகாப்புள்ள பட்டணம் என்றும் அவர்களுக்குத் தெரியும், எனவே, அவ்வழியேசெல்லும் வழிப்போக்கர்களிடம் ஏதாவது செய்தி கிடைக்குமா என்றுகேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களுக்குத்தெரியாது, எனவே என்னை அவர்கள் கண்ட போது, என்னிடம், "இவர் அல் ஹஜ்ஜஜ்பி.இலத் தானே, கண்டிப்பாக இவரிடம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும்.எங்களிடம் சொல்லவும்,

ஓ அபூ முஹம்மதே, அந்த வழிப்பறிகொள்ளைக்காரன்(highwayman) யூதர்களின் மற்றும் தோட்டங்களுள்ள ஹிரஜ் என்றபட்டணத்திற்கு சென்றான் என்று கேள்விப்பட்டோம்".

நான் "நீங்கள்சந்தோஷப்படும் ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றேன். என்ஒட்டகத்தின் இருபுறங்களிலும் அவர்கள் ஆர்வத்துடன் வந்து, "சொல் ஹஜ்ஜஜ்"என்றார்கள்.

நான் கூறினேன், "இதுவரை நீங்கள் கேள்விப்படாத அளவிற்கு அவர்தோல்வியை சந்தித்தார் மற்றும் அவருடைய சக தோழர்கள் வெட்டப்பட்டுமரித்தார்கள்; அவர் எப்படி பிடிக்கப்பட்டாரோ அதை நீங்கள் இதுவரைகேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்".

கெய்பரின் மக்கள், "நாம் இவரைகொல்லகூடாது, இவரை மக்கா மக்களிடம் அனுப்புவோம், இவர் கொன்ற மக்காமக்களுக்கு பழிக்கு பழியாக அவர்களே இவரை கொல்ல‌ட்டும்" என்றுகூறினார்கள்.

அவர்கள் எழுந்து மக்கா மக்களுக்கு சத்தமாக சொன்னதாவது, "இதோஒரு செய்தி உங்களுக்கு, முகமது இங்கு அனுப்பும் வரைக்கும் நீங்கள்காத்திருங்கள், பிறகு உங்கள் மத்தியில் அவரை கொல்லலாம்".

நான் "என்பணத்தையும், எனக்கு வரவேண்டிய தொகையையும் நான் வசூல் செய்துக்கொள்ளஎனக்கு உதவி செய்யுங்கள், வியாபாரிகள் அங்கு செல்வதற்கு முன்பு நான்மறுபடியும் கெய்பருக்குச் சென்று, முகமது மற்றும் அவரதுதொழர்களிடமிருந்து தப்பித்தவர்களை பற்றிக்கொண்டு இருக்க எனக்கு உதவிசெய்யுங்கள் என்றேன்".

அவ‌ர்க‌ள் எழுந்திருந்து என்னுடைய‌ ப‌ண‌ம்அனைத்தையும் வ‌சூல் செய்தார்க‌ள், நான் வ‌சூல் செய்து இருந்தாலும்இவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் என் வேலை முடிந்திருக்காது.

நான் என்ம‌னைவியிட‌ன் சென்று அவ‌ளிட‌ம் உள்ள‌ ப‌ண‌த்தையும் பெற்றுக்கொண்டு, நான்கெய்ப‌ருக்குச் சென்று வியாரிக‌ளுக்கு முன்பாக‌ நான் வாங்க‌ வேண்டும்என்றேன்.

அப்பாஸ் இந்த‌ செய்தியையும், என்னைப் ப‌ற்றியும்கேள்விப்ப‌ட்டு, நான் த‌ங்கியிருந்த‌ வியாபாரிக‌ளின் கூடார‌த்தின்ப‌க்க‌த்தில் வ‌ந்து நின்று என்னிட‌ம் செய்தி என்ன‌ என்று கேட்டார்.

நான்அவ‌ரிட‌ம் "நீ இர‌க‌சிய‌மாக‌ வைத்திருப்பேன் என்று சொன்னால், ஒருவிஷ‌ய‌த்தை உன்னை ந‌ம்பிச் சொல்கிறேன்" என்றேன். நான் அப்படியே இரகசியமாகவைப்பேன் என்று சொன்னார்.

நான் இப்போது நீ பார்க்கின்ற படி பணத்தை நான்வசூல் செய்துக்கொண்டு இருக்கிறேன், நான் உன்னை தனிமையில் சந்திக்கும் வரைகாத்திரு என்றேன், அவரும் சென்றுவிட்டார்.

எனக்கு மக்காவில் வரவேண்டியபணம் அனைத்தையும் நான் வசூல் செய்துவிட்டபிறகு, நான் கெய்பருக்குச் செல்லமுடிவு செய்தபோது, அப்பாஸை சந்தித்து சொன்னதாவது,

"நான் சொல்லும்செய்தியை மூன்று நாட்கள் இரகசியமாக வைத்திருந்து, பிறகு நீங்கள்சொல்லலாம், ஏனென்றால் அவர்கள் என்னை பிடித்துவிடுவார்கள் என்றுஅஞ்சுகிறேன்".

அப்பாஸ் அப்படியே நான் செய்கிறேன் என்றுச் சொன்னபோது, நான்சொன்னதாவது, நான் "உன் சகோதரனின் மகன் அந்த அரசனின் மகள் ஷபியாவைதிருமணம் செய்துக்கொண்டார், கெய்பர் கைப்பற்றப்பட்டது, அதனுள்இருப்பதெல்லாம் நீக்கப்பட்டது, இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரதுதோழர்களின் சொத்தாக மாறிவிட்டது" என்றுச் சொன்னேன்.

அவர் கேட்டார்"ஹஜ்ஜஜ் நீ என்ன சொல்கிறாய்?". நான் "ஆமாம், அல்லாவின் உதவியால் நடந்தது.என் இரகசியத்தை காத்துக்கொள்". நானும் ஒரு முஸ்லீம் தான், என்னுடையபணத்தை வசூல் செய்யவே நான் வந்தேன், என் பணத்தை இவர்கள்எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்துவந்தேன்.

மூன்று இரவுகள் கடந்த பின்பு,இந்த செய்தியை மற்றவர்களுக்கு உங்கள் விருப்பப்படி சொல்லலாம் என்றேன்.மூன்றாம் நாள் வந்தபோது, அப்பாஸ் தன் மேல் ஷால்வையை போட்டுக்கொண்டு,நறுமனம் பூசிக்கொண்டு மற்றும் தன் தடியை எடுத்துக்கொண்டு, காபாவிடம்சென்று அதை சுற்றினார்.

மக்கள் அவரைக் கண்டு, அவரிடம், "ஓ அபூ அல்-பதல்,இது மிகவும் துரதிஷ்டமானது என்றனர்". அதற்கு அவர், "இல்லை இல்லை, நீங்கள்சத்தியமிடும் அல்லாவின் உதவியோடு, முகமது கெய்பரை கைப்பற்றியுள்ளார்,மற்றும் அந்த நாட்டு மன்னரின் மகளையே திருமணம் செய்துள்ளார்" என்றுச்சொன்னார்.

முகமது அவர்களின் எல்லா சொத்துக்களையும் முடக்கிவிட்டார்,இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாகி விட்டதுஎன்றார். அவர்கள் கேட்டனர், "யார் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னது?".

அதற்கு அவர் "யார் உங்களுக்கு உங்கள் செய்தியை கொண்டுவந்தார்களோ, அவரேதான் சொன்னார், அவர் ஒரு முஸ்லீமாக இங்கு வந்தார், தன் பணத்தை வசூல்செய்துக்கொண்டார், மற்றும் முகமதுவிடம் அவரது தோழர்களிடம்சேர்ந்துக்கொள்ள மறுபடியும் சென்றுவிட்டார், இனி அவரோடு இருப்பார்"என்றார்.

அதற்கு அவர்கள், "ஓ அல்லாவின் மக்களே, அல்லாவின் எதிரிதப்பித்துக்கொண்டான். அவன் அப்படிப்பட்டவன் என்று தெரிந்து இருந்தால்,வேறு விதமாய் அவரை கவனித்து இருந்திருப்போமே" என்றனர். கடைசியாக ஒருஉண்மைச் செய்தி அவர்களை அடைந்துவிட்டது.

முகமதுவிற்கு தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொள்ளவும் பிரச்சனைஇருந்தது இல்லை:பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5518ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார்நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம்.

'ஜாம்' கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ)கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது. அப்போதுகோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது.

மக்களிடையே சிவப்பான மனிதர்ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூ மூஸா(ரலி) அழைத்தார்கள்.)ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூ மூஸா(ரலி), 'அருகில்வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதைச் சாப்பிடநான் கண்டுள்ளேன்' என்று கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், 'இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதைபார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே 'இதை இனிமேல்உண்ணமாட்டேன்' என்று சத்தியம் செய்து விட்டேன்' என்று கூறினார்.

அதற்கு அபூ மூஸா(ரலி) 'அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த்தெரிவிக்கிறேன்' என்று கூறி(விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: நான்நபி(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன்.

அப்போதுஅவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச்சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம்நாங்கள் வேண்டினோம்.

அப்போது அவர்கள் 'உங்களைச் சுமந்து செல்லஒட்டகங்கள் தர மாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். மேலும், 'உங்களைஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்)இல்லை' என்று கூறினார்கள்.

(சிறிது நேரத்திற்குப்) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில்கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே (எங்களைக் குறித்து)'அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள்எங்கே?' என்று (இரண்டு முறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது)எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளைவழங்கினார்கள்.

நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திப்போம். அப்போது நான் என்தோழர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாம் ஏறிச் செல்ல ஒட்டகம் தரமாட்டேன் என்று செய்த) தம் சத்தியத்தை மறந்து விட்டார்கள்.

அல்லாஹ்வின்மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களை, அவர்கள் செய்தசத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும்வெற்றியடைய மாட்டோம்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள்திரும்பி வந்தோம். அப்போது நாங்கள் திரும்பி வந்தோம்.

அப்போதுநாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏறிச் செல்வதற்காகத் தங்களிடம்ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச் செல்லும் ஒட்டகம்தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள்.

(ஆனால், பிறகு போரில் கிடைத்தஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) எனவே, நீங்கள் உங்களின் சத்தியத்தைமறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்' என்று சொன்னோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றிஅனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிஎந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச்சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்துஅதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்' என்று கூறினார்கள்.37 (Sahih al-Bukhari, Volume 7, Book 67, Number 427 in English)

முகமது, தன்னை பின் பற்றுகிறவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தையும்முறித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்:பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆட்சிப் பொறுப்பை நீயாக(விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்குவழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும்.

(நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்)விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து,அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தைமுறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு' என்று கூறினார்கள்.22

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது...(Sahih al-Bukhari, Volume 9, Book 89, Number 260 in English)ஒரு நபர்(ஆணோ/பெண்ணோ) மற்றவர்களை ஏமாற்றுவதை அனுமதித்து, மற்றும் முன்புஇருந்ததை விட மிகவும் மேலானது தனக்கு கிடைத்தவுடன் முன்பு செய்தசத்தியத்தை முறித்து விடும் நபர் ஒரு நேர்மையானவரா அல்லது நம்பத்தகுந்தவரா சொல்லுங்கள்?

இப்படிப்பட்ட நபர்(ஆணோ/பெண்ணோ) மீது நம்பிக்கைகொள்ளமுடியாது. ஏனென்றால், இவர் உண்மையைத் தான் சொல்கிறாரா அல்லதுநேரத்திற்கு ஏற்றது போல தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வாரா என்று தெரியாதபோது எப்படி அவர் மீது நம்பிக்கை கொள்ள முடியும்?

முடிவாக, அடுத்து நாம் பார்க்கப்போவது, முகமது ஒரு நம்பத் தகுந்தவர் அல்லஎன்பதை நிருபிக்கும் விவரங்களாகும்.

முஸ்லீம்கள் முகமதுவை மிகவும் நல்லவராக காட்டுவதற்கு பல கவர்ச்சிகரமானமற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை தயாரிக்கிறார்கள். முகமதுவை மிகவும்எதிர்மறையாக காட்டும் கதைகளை அவர்கள் தயாரிப்பதில்லை.

ஆனால், உண்மையில்,முகமதுவின் நடத்தைப் பற்றி மிகவும் தரம்குறைவாக உள்ள விவரங்கள், அவரதுநடத்தையை சரியாகக் காட்டும் விவரங்களாக அவர்களுக்கு காணப்படுகிறது,எப்போது? அவ்விவரங்களில் உள்ள சில எதிர்மறையான வாக்கியங்களைஒதுக்கிவிடும் போது

(In fact, the reports which reflect poorly onMuhammad's character have a greater chance of being true preciselybecause the Muslim tendency was/is to portray him in a more favorablemanner while omitting any negative statements).

இதில் மிகவும் தர்மசங்கடமான விவரம் என்னவென்றால், "முகமது நபியாகமாறுவதற்கு முன்பாக நேர்மையானவர் என்று பெயர் பெற்று இருந்தார் என்றுமுஸ்லீம்கள் சொல்வது உண்மையானால், அவர் நபியாக மாறிய பிறகு அவரிடம்இருந்த நேர்மையை விட, அதற்கு முன்பாக அவரிடம் அதிகமாக நேர்மை இருந்ததாகஅர்த்தமாகிறது".

நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய ஹதீஸை நம் நினைவிற்குகொண்டு வருவோம். இந்த ஹதீஸில் ஹெர்குலிஸ் அரசர் அபூ சுஃப்யானிடம் முகமதுபொய் சொல்லியுள்ளாரா? அல்லது தன் உறுதிமொழியை முறித்துக் கொண்டுள்ளாரா?என்று கேள்விகள் கேட்டுள்ளார்.

இந்த ஹதீஸின் இன்னொரு தொகுப்பைக்(anotherversion) காண்போம்:பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7….. 'அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்றுஎப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார்.

நான் இல்லை என்றேன்.'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்றுசொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கைசெய்துள்ளோம்.

அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பதுஎங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறைகற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடையபதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! .....

இவ்வாதத்தைச் செய்வதற்குமுன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்றுஉம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம்பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் முது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

நாம் மேலே பதித்த இந்த ஹதீஸ் முகமது பொய்யும் சொல்ல வில்லை மற்றும் தன்உறுதி மொழியையும் மீறவில்லை என்று பார்க்கிறோம். மட்டுமல்ல, அபூசுஃப்யான் என்பவர் கூட, முகமது பொய் சொல்லவில்லை, வாக்கு மாறவில்லைஎன்றுச் சொல்கிறார்!

ஆக, முகமதுவை இன்னும் நேர்மையாவராகவும் நம்பத்தகுந்தவராகவும் மாற்றுவதற்கு பதிலாக, அல்லா அவரை தீயவராகவும் மற்றும்நம்பத் தகாதவராகவும் மாற்றியுள்ளார்.

குர்‍ஆன் அல்லாவின் வார்த்தை என்றுமுஸ்லீம்கள் நம்புகிறார்கள், ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால்,முகமது பொய் சொல்லவும் தன் வாக்குறுதியை மீறவும் செய்தவர் அல்லா தான்.

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதைஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்ககிருபையுடையவன். அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்கபரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்,

மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம்மிக்கவன். குர்‍ஆன் 66:1-2மற்றும்:முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்றதுணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;.

அவர்களிடமிருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால்,(அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும்,அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்;

மேலும், அல்லாஹ்விடமே(நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. குர்‍ஆன் 3:28இவ்வசனத்திற்கு புகழ்பெற்ற சுன்னி உரையாளர் இபின் கதிர் கீழ் கண்டவாறுபொருள் கூறுகிறார்:நம்பிக்கையில்லாதவர்களோடு நட்புறவு கொள்ளக்கூடாது என்ற தடை:

இஸ்லாமின் மீது நம்பிக்கைக் கொள்ளாதவர்களோடு, முஸ்லீம்கள்நண்பர்களாக்கிக் கொள்ளக் கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார், அல்லதுமுஸ்லீம்களோடு அல்லாமல் நம்பிக்கையில்லாதவர்களோடு நெருங்கிய நட்பைகொள்ளக்கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார்.

இப்படிப்பட்ட செயல்களுக்குஎதிராக அல்லா தன் எச்சரிப்பை கீழ்கண்ட வசனம் மூலமாக தெரிவிக்கிறார். இதன்பொருள், அல்லா தடை செய்ததை யார் மீறுகிறார்களோ அவர்களை அல்லாவும்தள்ளிவிடுவார்.

இதே போல அல்லா சொல்கிறார்...<ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும்இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;

மற்றும்…<உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர் வழியை திட்டமாக தவறவிட்டு விட்டார>[60:1].

அல்லா சொல்கிறார் ….<முஃமின்களே ! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற)நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒருதெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தரவிரும்புகிறீர்களா?[4:144],

மற்றும் …<முஃமின்களே ! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாகஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள்தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.

உங்களில்எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச்சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.>[5:51].நம்பிக்கையாளர்கள் மற்ற நம்பிக்கையாளர்களாகிய முஹாஜிரின், அன்சார்மற்றும் பெடோயின் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டு,அல்லா சொல்கிறார்

நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராகஇருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டுஇருக்கும்.[8:73]

மறுபடியும் அல்லா சொல்கிறார்...<அவர்கள் மூலமாக ஆபத்து வரும் என்று கருதினால் தவிர> ஒருவேளைநம்பிக்கையாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களினால்(Unbelievers) தீமைஏற்படும் என்று பயப்பட்டால், இந்த சமயங்களில் இப்படி செய்ய வேண்டியதில்லை.

அதாவது, இந்த நேரங்களில் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கைஇல்லாதவர்களோடு நட்பு கொள்ளலாம், அதுவும் வெளிப் புறத்திற்கு நட்பு மாதரிகாண்பித்துக் கொள்ள வேண்டும், ஆனால், மனதளவில் அவர்களோடு நட்பு கொள்ளக்கூடாது.

அல்புகாரியில் அபூ அத்தர்தா சொன்னதாக பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது,"நாம் சில மக்களிடம் பேசும் போது, முகத்தைப் பார்த்து சிரிக்கிறோம்,ஆனால், நம்முடைய இதயம் அவர்களை சபித்துக் கொண்டு இருக்கும்".

அல்புகாரிசொல்கிறார், ஒரு எடுத்துக்காட்டிற்கு சொல்லவேண்டுமானால், அல்புகாரியில்பதிவு செய்யப்பட்டுள்ளது என்னவென்றால், அல் ஹஸன் கூறினார்,"உயிர்த்தெழுதலின் நாள் வரை தக்கியா அனுமதிக்கப் பட்டுள்ளது"... (Source;underline emphasis ours)

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,முகமது ஒரு நேர்மையற்ற மனிதராக மாறுவதற்கு பொறுப்பு அல்லா தான்.இப்படிப்பட்டவர் மீது யார் நம்பிக்கை கொள்ளமுடியும்!இது மட்டுமல்ல, யேகோவா தேவனின் கோபம் மற்றும் சாபம் முகமதுவின் மீதுவிழும்படியாக செய்ததும் அல்லா தான்.

அதாவது "செய்த உறுதிமொழியை" எவ‌ன்முறிக்கின்றானோ அவன் யேகோவாவிற்கு அருவருப்பானவன் ஆவான்:மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: "கர்த்தர்கட்டளையிடுவது என்னவென்றால்:

ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனைபண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன்வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின் படியெல்லாம் செய்யக் கடவன்."

எண்30:1-2"தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒருவார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீபூமியிலிருக்கிறாய்,

ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின்திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே;

அவர் மூடரில்பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச்செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்.

உன்மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அதுபுத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே; தேவன் உன்வார்த்தைகளினாலே கோபங் கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?"பிரசங்கி 5:2-6

ஆக, இதுவரை மேலே நாம் கண்ட இஸ்லாமிய விவரங்களின் படி, குர்‍ஆனில்வசனங்களாக உள்ள, நம்பிக்கயில்லாதவர்கள் முகமது பற்றி சொன்ன விவரங்கள்அனைத்தும் உண்மை என்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது, அதாவது அவர் பொய்சொல்லியுள்ளார் மற்றும் தான் செய்த சத்தியத்தை / வாக்கை முறித்துள்ளார்.

இதனால், முகமதுவை தன் காலத்தவர்கள்/உறவினர்கள் "அல் அமின்" என்றுகண்டார்கள் என்பது நிருபிக்கப்படாத விவரமாகும். முஸ்லீம்கள் இப்படிப்பட்டகதைகளை இட்டுக்கட்டியுள்ளார்கள்;

அல்லது ஒரு வேளை இந்த புகழாரம்உண்மையாகவே அவருக்கு கொடுத்து இருந்திருந்தாலும், தனக்கு சூட்டிய அந்தபுகழாரத்திற்கு ஏற்ப அவர் தன் வாழ்நாளின் மீதியான காலத்தில் வாழவில்லை,முக்கியமாக தன் கடைசி காலங்களில் வாழவில்லை.

ஆனால், இந்த புகழாரத்திற்கு தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார்,ஏனென்றால், உண்மையின் விலாசமாக வாழ்ந்திருக்கிறார் அவர். அவர் தான்கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து,

பிதாவின் பிழையற்ற ஆட்டுக்குட்டி."அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடையபரிசுத்தர் என்று சத்தமிட்டான்!" மாற்கு 1:24

"சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்,நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடையகுமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்என்றான்." யோவான் 6:68-69

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னைஅனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ள வனாயிருக்கிறான்,அவனிடத்தில் அநீதியில்லை." யோவான் 7:18"

என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப்பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத்தனியேயிருக்க விடவில்லை என்றார்." யோவான் 8:29"

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:௬

"ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின்தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்; அவரை நீங்கள்ஒப்புக் கொடுத்தீர்கள்;


பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது,அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரைநீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ண வேண்டுமென்றுகேட்டு, ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." அப் 3:13-௧௫

"இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில்கேட்டறிந்து, அவரால் போதிக் கப்பட்டீர்களே." எபேசியர் 4:௨௧

"நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர்நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,பாவமில்லாத வராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." எபிரேயர்4:௧௫

"பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்குவிலகினவரும், வானங்களிலும் உயர்ந்த வருமாயிருக்கிற இவ்விதமான பிரதானஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." எபிரேயர் 7:26

"நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்குஉங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவுநிச்சயம்!" எபிரேயர் 9:14

"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப்பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

<பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடையபிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போ மென்று இன்னும்வெளிப்படவில்லை;

ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவேநாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்றுஅறிந்திருக்கிறோம்.

அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கைவைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும்சுத்திகரித்துக் கொள்ளுகிறான்….அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கவெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை…..

பிள்ளைகளே,நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர்நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்." 1யோவான் 3:1-3, 5, 7

கருத்துகள் இல்லை: