சனி, 24 ஜனவரி, 2009

டாக்ட‌ர் அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு

முன்னுரை:

இஸ்லாமிய இணைய தளம் "கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது

இந்த கட்டுரையை இவர்கள் டாக்டர் அஹமத் தீதத் அவர்களின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியிருந்தார்கள்,

ஆனால், அவரைப் பற்றி அந்த புத்தகத்தில் ஒரு வரியும் எழுதாலும், தாங்களே ஆராய்ச்சி செய்து எழுதியதைப் போல எழுதியிருந்தார்கள்

[ கிறிஸ்தவர்களுக்கு பதில் எழுதும் போது எங்கள் தொடுப்பை கொடுப்பதில்லை, குறைந்த பட்சம் உங்கள் இஸ்லாமிய அறிஞரின் பெயரையாவது, புத்தகத்தின் பெயரையாவது கொடுக்கலாம் அல்லவா]

அஹமத் தீதத் அவர்கள் செய்த அதே தவறை இவர்களும் செய்துள்ளார்கள், அவரின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியது என்பதால், எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் எழுதியுள்ளார்கள்.

இந்த கட்டுரையில், இவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்படுகிறது. இது முதல் பாகம் தான், இன்னும் அனேக பாகங்கள் வெளிவரும்,

மற்றும் அஹமத் தீதத் அவர்கள் தான் என் ஆன்மீக தேடலுக்கு வித்தாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

இவரின் புத்தகங்களை படித்து பதிலை தேடும் வேட்டையை ஆரம்பித்து, பதில் கிடைத்த வுடன் , இப்படிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்

அஹமத் தீதத் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து மறுப்புக்களையும் இங்கு படிக்கலாம்.

ஆசிரியர் ஜான் கில்கிறைஸ்ட் அவர்களின் அனைத்து மறுப்புக்கள்/புத்தகங்களை இங்கு படிக்கலாம். டாக்டர் அஹமத் தீதத் அவர்களுக்கு இவர் அளித்த எல்லா மறுப்புக்களையும் படிக்கலாம்

யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

இக்கட்டுரையின் உப‌தலைப்புக்கள்

யோனாவின் அடையாளம்

• கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

• "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றால் என்ன?

• நினிவே மக்களுக்கு யோனா ஒரு அடையாளம் ஆவார்?

• யோனாவின் அடையாளமே அன்றி வேறு அடையாளமில்லை

• "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளுக்குள்ளே இதை"

• யோனாவின் அடையாளத்தின் முக்கியத்துவம்

• இயேசுவின் உயிர்த்தெழுதல்

• யார் கல்லை புரட்டியது?

யோனாவின் அடையாளம்

பைபிள் மற்றும் குர்‍ஆனின்படி, இஸ்ரவேல் நாட்டில் இயேசு தன் குறுகிய கால அந்த மூன்று வருட ஊழியத்தின் போது அனேக பலமுள்ள அற்புதங்கள் செய்தார்.

அந்த அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டு பல யூதர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

இயேசுவின் அற்புதங்கள் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தாலும், யூத தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டனர்,

மற்றும் அவரிடம் அடையாளம் காட்டும் படி, அல்லது வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டும் படி கேட்டனர்(மத்தேயு 16:1).

ஒரு முறை அவர்களுக்கு “ஒரே ஒரு அடையாளம் தருவேன்” என்று இயேசு பதில் அளித்தார்:

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்;

ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40)

யோனா என்பவர் இஸ்ரவேலின் ஒரு பெரிய தீர்க்கதரிசியாவார். அசீரியாவின் நினிவே என்ற பட்டணத்தின் அழிவு நாளைப்பற்றி அந்நாட்டு மக்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்லவேண்டு மென்று தேவனால் அவர் அழைக்கப்பட்டார்.

ஆனால், நினிவே பட்டணத்திற்குப் போகாமல் தர்ஷீஷ் என்ற பட்டணத்திற்கு அவர் போக நினைத்தபோது, அவர் செல்லும் கப்பலை மிகப்பெரிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு தாக்கியபோது, அந்த கப்பலில் பிரயாணம் செய்த மக்களால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார்

ம அப்போது அவரை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மீனின் வயிற்றிலிருந்து உயிரோடு தூக்கி எறியப்பட்டு அந்த நினிவே பட்டணத்திற்குள் சென்றார்.

அந்த மீனின் வயிற்றில் யோனா இருந்த மூன்று நாட்களைப் பற்றி "யோனாவின் அடையாளம்" என்று இயேசு குறிப்பிட்டார்.

மற்றும் இந்த ஒரே ஒரு அடையாளம் மட்டுமே, தன் மீது நம்பிக்கை வைக்காத யூதர்களுக்கு தான் கொடுக்கும் அடையாளம் என்று இயேசு கூறினார்.

தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரத்தில் உள்ள "இஸ்லாமிய பிரச்சார மையம் (Islamic Propagation Centre)" என்ற இயக்கத்தைச் சார்ந்த அஹமத் தீதத்(Ahmed Deedat) என்பவர், 1976ம் வருடத்தில் "யோனாவின் அடையாளம் என்ன?(What was the Sign of Jonah?)" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவ‌ர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும்.

ஆனால், உண்மையில், தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும்.

முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான்.

அஹமத் தீதத் அவர்களின் இந்த இரண்டு யூகங்களை ஆராய்ந்து, இந்த தலைப்பைப் பற்றி அலசி, யோனாவின் அடையாளம் என்றால் உண்மையில் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

1. கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

பைபிளில் உள்ள யோனா புத்தகத்தின் கிறிஸ்த‌வ‌ விள‌க்க‌வுரைக‌ளின்ப‌டி, யோனா மீனின் வ‌யிற்றிலிருந்த‌ அந்த மூன்று நாட்கள் அற்புத‌வித‌மாக‌ உயிரோடு பாதுகாக்க‌ப்ப‌ட்டு இருந்தார் என்ப‌தை நாம் அறிகிறோம்.

அவ‌ர் மீனின் வ‌யிற்றில் இருக்கும் போது ஒரு நாழிகையும் ம‌ரிக்காம‌ல் இருந்தார், மற்றும் அந்த மீன் அவரை உயிரோடு கரையில் போட்டது.

அஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது "யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் என்று கூறுகிறார்.


யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் உயிரோடு இருந்திருந்தால், இயேசு சொன்னது போல, தான் அப்படியே கல்லரையில் இருந்த நாட்களில் உயிரோடு இருந்திருக்கவேண்டும்,

இயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை.

ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார்,

எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார்.

இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும்.

ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது

அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை.

இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14-15)

மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது "உயர்த்தப்பட்டது - LIFTED UP" என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும்.

மோசே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும்.

சர்ப்பம் மோசேயினால் உயர்த்தப்பட்டது, யூதர்கள் ஆரோக்கியம் அடைவதற்காக, இயேசு உயர்த்தப்படவேண்டியது உலக நாடுகளின் ஆரோக்கியம், மற்றும் இரட்சிப்பிற்காக.

இந்த நிகழ்ச்சியில், மோசே உருவாக்கிய வெண்கல சர்ப்பமானது உயிரோடு இருந்ததில்லை, மற்றும் தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic- வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும்,

சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும்.

அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல. அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது

(அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார்,

அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன).

இவைகள் நமக்கு எதை காட்டுகின்றன? இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்ற விவரம் யோனாவோடும், "தூணில் உயர்த்தப்படுதல்" என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம்.

இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை

யோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி "யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்" என்று கூறுகிறார்.

அதாவது யோனா மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும்.

ஆனால், தீதத் அவர்கள் வழிமுறையைப் பின்பற்றி நாம் மேற்கோள் காட்டிய மற்ற வசனங்களை ஆராய்ந்தால், தீதத் அவர்கள் சொன்னதற்கு முரண்பட்ட விவாரம் தான் கிடைக்கிறது.

சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் "சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும்

இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது.

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.

ஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும்.

ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது

2. மூன்று நாட்கள் இரவும் பகலும் என்றால் என்ன?

இயேசு வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அதை தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்றும் ஒரு சிலரை தவிர உலகமுழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயம் அங்கீகரிக்கிறது.

இயேசு கல்லரையில் ஒரு நாள் மட்டும் தான் முழுவதுமாக‌ இருந்தார், அதாவது அந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் இருந்தார் என்று தீதத் அவர்கள் வாதம் புரிகின்றார்

மற்றும் வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவு என்று இரண்டு இரவுகள் மட்டும் தான் அவர் கல்லரையில் இருந்தார் என்றுச் சொல்கிறார்.

இப்படி சொல்வதின் மூலம், யோனாவின் அடையாளம் பற்றி இயேசு சொன்ன கால விவரத்தை மறுக்க முயன்றுள்ளார் தீதத் அவர்கள். தீதத் கூறுகிறார்:

"இரண்டாவதாக, இயேசு நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தையும் நிறைவேற்ற தவறிவிட்டார். கிறிஸ்தவ உலகின் சிறந்த கணித மேதாவி மூன்று நாட்கள் இரவும் பகலும் என்பதை கணக்கிட தவறிவிட்டார்."


துரதிஷ்டவசமாக, தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார்.

தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.

அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள்.

இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார்.

அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன்படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.

யூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை(serious mistake) செய்துள்ளார்கள்.

அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள்.

நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின்படி, அதே பொருள்படும்படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின்படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப்படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும்

நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் பேசும் போது, "இத்தனை நாட்கள் இரவும் பகலும்" என்ற வழக்கப்படி நாம் பேசுவதில்லை.

உதாரணத்திற்கு, ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு ஒரு ஊருக்கு செல்வதாக இருந்தால், நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "ஃபோர்ட்நைட்(Fortnight) அல்லது இருவாரங்கள் அல்லது 14 நாட்கள்" என்றுச் சொல்வார்.

நான் இதுவரையில் ஆங்கிலத்தில் இவ்விதமாக சொல்பவரை, அதாவது "நான் பதினான்கு நாட்கள் இரவும் பதினான்கு நாட்கள் பகலும் ஊருக்குச் செல்கிறேன்" என்று சொல்பவரை நான் கண்டதே இல்லை

அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் ( இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும்போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன‌ பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது.

இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு/எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும்போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும்.

அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்(

மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்(யாத் 24:18)

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் மீனின் வயிற்றில் இருந்தார்(யோனா 1:17)

யோபுவின் நண்பர்கள் அவரோடு ஏழு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து இருந்தார்கள் (யோபு 2:13)


எந்த ஒரு யூதனானாலும் சரி, "ஏழு பகல் மற்றும் ஆறு இரவுகள் - seven days and six nights" என்றோ அல்லது "மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் - three days and two nights " என்றோ கூறமாட்டார்,

உண்மையிலேயே அவர் இந்த குறிப்பிட்ட காலத்தை குறிப்பிட நினைத்தாலும் கூட‌ இப்படி கூறமாட்டார். எபிரேய மொழியின் பேச்சு/எழுத்து வழக்கத்தின் படி(colloquialism) எப்போதும் இரவும் பகலும் ஒரே எண்ணிக்கையை உடையதாக இருக்கும்.

ஒரு யூதன் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் பற்றிக் கூறுவதாக இருந்தாலும், “மூன்று பகல் இரவுகள்” என்று தான் கூறுவார்.

இந்த விவரம் பற்றி மிகவும் தெளிவான உதாரணத்தை அல்லது விளக்கத்தை எஸ்தர் புத்தகத்தில் காணலாம்.

அதாவது "யாரும் மூன்று நாட்கள் இரவும் பகலும்" ஒன்றுமே புசிக்கவேண்டாம், உபவாசம் இருங்கள் என்று எஸ்தர் இராணி சொல்கிறார் (எஸ்தர் 4:16).

ஆனால், மூன்றாம் நாளிலேயே, அதாவது இரண்டு இரவுகள் மட்டும் கழித்து, இராணி உபவாசத்தையும் முடித்துக்கொண்டு இராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்கிறாள்.

ஆக, யூதர்களின் வழக்கப்படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை,

இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், எப்போதும் சரி, இரவுகள் மற்றும் பகல்கள் பற்றிய எண்ணிக்கையைப் கூறும் போது இரண்டிற்கும் ஒரே எண்ணை குறிப்பிடுவார்கள்,

உண்மையில் பகல்களை விட இரவுகள் ஒன்று குறைவாக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட பேச்சு வழக்கத்தின் படி இன்று நாம் பேசுவதில்லை.

மட்டுமல்ல, நம்முடைய தற்கால பேச்சு வழக்கத்தின் பொருள் தான் அக்காலத்தின் பேச்சுக்களுக்கு வரும் என்றுச் சொல்லி திணித்து கட்டாயப்படுத்த முடியாது.

இந்த விவரம் பற்றிய மிகவும் தெளிவான ஆதாரம் ஒன்று பைபிளில் உள்ளது. இயேசு யூதர்களுக்குச் சொல்லியிருந்தார், அதாவது மூன்று நாட்கள் இரவும் பகலும் நான் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பேன் என்று.

ஆகையால், இயேசு சொன்ன இந்த விவரம் ஒரு வேளை தீர்க்கதரிசனமாக இரண்டு இரவுகள் முடிந்தவுடன் நிறைவேறி விடும் என்று எண்ணி, யூதர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட மறுநாளில் அதாவது ஒரே இரவு மட்டுமே ஆன பிறகு (சனிக்கிழமை), யூதர்கள் பிலாத்துவிடம் சென்று கீழ்கண்டவிதம் கூறினார்கள்:

ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.

ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள் (மத்தேயு 27:63-64).

"மூன்று நாளைக்குப் பின்" என்ற‌ சொற்றொடரானது "நான்காவ‌து நாளைக்" குறிக்கின்ற‌து என்று நாம் புரிந்துக் கொள்கிறோம்.

ஆனால், யூதர்களின் பேச்சு வழக்கின் படி(colloquialism), இது மூன்றாம் நாளைக் குறிக்கும் என்று யூதர்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனவே தான் யூத‌ர்க‌ள் மூன்று முழூ ப‌கல்கள் ம‌ற்றும் மூன்று முழூ இர‌வுக‌ள் க‌ல்லரையை பாதுகாக்க ஜாக்கிரதைப்படவில்லை, அதற்கு பதிலாக இரண்டாம் இரவு ஆனவுடன் மூன்றாம் நாள் வரை மட்டுமே காவல் காக்க பிரயாசப்பட்டனர்.

ஆக, யூதர்களின் பேச்சுவழக்கத்தின் படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்றுச் சொன்னால், மற்றும் "மூன்று நாளுக்குப்பின்" என்றுச் சொன்னால், நாம் நம் வழக்கத்தின் படி கருதுவது போல் அது மூன்று முழூ நாட்களின் மொத்த நேரத்தைக் குறிக்காமல், அதாவது 72 மணி நேரத்திற்கு பிறகு என்றுக் குறிக்காமல், அந்த மூன்றாவது நாளில் எந்த ஒரு பகுதியையும் குறிக்கும்

இந்நாட்களில் நம்மிடம் ஒருவர் வெள்ளிக்கிழமை மதிய சமயத்தில் வந்து "நான் உங்களை மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சந்திக்கிறேன்" என்றுச் சொல்வாரானால், அவர் நம்மை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமைக்கு முன்பு வந்து சந்திப்பார் என்று நாம் எதிர்பார்க்கமாட்டோம்.

அவர் செவ்வாய்க் கிழமைக்கு பிறகு தான் நம்மை சந்திக்கவருவார் என்று நான் எதிர்ப்பார்ப்போம்.

ஆனால், யூதர்கள் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவலைப்பட்டு, கல்லரையை மூன்றாம் நாள் வரை மட்டும் பாதுகாத்தால் மட்டும் போதும் என்பதால், அரசரிடம் சென்று ஞாயிறு வரைக்கும் காவல் வைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும், அதாவது "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றாலோ அல்லது "மூன்று நாளுக்கு பின்பு" என்றுச் சொன்னாலோ, தங்கள் வழக்கத்தின் படி அந்நாட்களில் அது மூன்றாம் நாளை குறிக்குமே அல்லாமல், மூன்று முழு நாட்களுக்கு பின்பு நான்காம் நாளை குறிக்காது.

ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், நம்முடைய பேச்சு வழக்கில் இல்லாத ஒரு சொற்றொடரை படிக்கும் போது எப்படி அதன் பொருளை சரியாக புரிந்துக் கொள்வது?

இதற்கு பதில் "யூதர்கள் எப்படி அக்காலத்தில் அவர்களின் பேச்சுவழக்கத்தின் படி படித்தார்கள்" என்பதை புரிந்துக்கொண்டால் தான் நமக்கு அச்சொற்றொடரின் அர்த்தம் சரியாகப் புரியும்.

இயேசுவின் சீடர்கள் மிகவும் தைரியமாக, "இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்றுச் சொன்னபோது, அதாவது ஞாயிறு அன்று வரை இரண்டு இரவுகள் மட்டுமே கடந்திருந்தாலும், சீடர்கள் இப்படி தைரியமாகச் சொன்னபோது(அப் 10:40), எந்த ஒரு யூதனும் சீடர்களிடம் வந்து தீதத் அவர்கள் இப்போது சொல்வது போல, மூன்று இரவுகள் கடக்காமல் இரண்டு இரவுகள்தானே ஆனது அப்படியானால் எப்படி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று கேள்வி கேட்கவில்லை.

இந்த பிரச்சனை அக்கால யூதர்களுக்கு இருந்ததில்லை, ஏனென்றால், அவர்களின் பேச்சு வழக்கம் அவர்களுக்கு மிகவும் நன்றாகவே புரிந்து இருந்தது.

ஆனால், தீதத் அவர்களுக்கு யூதர்களின் பேச்சு வழக்கம் தெரியாத காரணத்தால் தான், இயேசுவின் தீர்க்கதரிசனத்தை தாக்கி எழுதுகிறார்,

அதாவது, இயேசு மூன்று முழு பகல்கள், மூன்று முழு இரவுகள், கல்லரையில் இல்லை, அவர் 72 மணி நேரம் கல்லரையில் இல்லை,

ஆகையால் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை என்று அறியாமையினால் இப்படிச் சொல்கிறார். (ஆக, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இரவும் பகலும் இருந்ததும், 72 மணி நேரம் கொண்ட மூன்று முழு இரவும் பகலும் அல்ல, மூன்றாவது நாளிலேயே அவர் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டிருப்பார்).

இதுவரை நாம் கண்ட விவரங்களைக் கொண்டு, இயேசு யூதர்களுக்கு காட்டுவேன் என்றுச் சொன்ன அடையாளத்திற்கு எதிராக அஹமத் தீதத் அவர்களின் பலவீன வாதத்தில் உள்ள குறைபாடை நாம் வெளிக் கொணர்ந்துள்ளோம்.

அடுத்ததாக, யோனாவின் அடையாளம் என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாக நாம் ஆராய்வோம்.

கருத்துகள் இல்லை: