ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சூழ்ச்சி - வீழ்ச்சி - எழுச்சி

சிறகொடிந்த பறவை மீண்டும் உயரங்களில் பறக்க முடியுமா? கால் ஒடிந்த கவரிமான் மறுபடியும் கன்மலையின்மேல் தாவிக்குதித்துஓட முடியுமா?

பயங்கரமான பாவ படுகுழியிலே விழுந்துபோன விசுவாசி, பின்வாங்கிப் போனவன் மறுபடியும் தேவனுக்கு ஊழியம் செய்யமுடியுமா? அவருக்கென்று பிரகாசிக்க முடியுமா?

நிச்சயமாய் தேவகிருபையினாலே முடியும்.

சூழ்ச்சியாலே வீழ்ச்சி தர சுற்றிலும் வலை விரித்தாலும் சாத்தான் விதவிதமாய் வியூகங்கள் தந்திரமாய் அமைத்தாலும் விலக்கப்பட்ட கனியதனைப் பறித்துப் புசிக்கச் செய்தாலும்
ஜீவ விருட்ச கனியைத்தர ஜீவனையே தந்துவிட்டார்.

இச்சைக்கு இடங்கொடுத்து ஏதேனை இழந்துவிட்டாலும் பட்சமாய் இரட்சிக்கும் இயேசுவை நாம் இழக்கவில்லை மேட்டிமைக்கு இடங்கொடுத்து மேன்மையை இழந்தாலும்
முத்திரிக்கப்பட்ட நம் புத்திரசுவீகாரத்தை இழக்கவில்லை

விழுந்தவர்கள் எழுந்திருப்பதில்லையோ? - தவறுதலாய் வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ? ஆகையால்இன்ன நிலையிலிருந்து விழுந்தேன் என்பதை நினைத்து
மறுபடியும் எழும் எவரையும் மகிமையால் நிறைத்திடுவார்

விழுந்து போன் தூதன் அவன் வீண்முயற்சி பலிக்காது இழந்து போன உன்னை அவர் தேடும் முயற்சியும் நிற்காது ஏழுதரம் விழுந்தாலும் நீதிமான் எழுந்திருப்பான்
இரட்சிக்கப்பட்ட ஜனமே யார் உனக்கு ஒப்பாவான்?

பிழை என்னும் புயல் பரவி புகழ்மரத்தை சாய்த்தாலும் அழைப்பை பெற்ற தேவமனிதன் உன்னையது சாய்ப்பதில்லை செதுக்குகின்ற சிற்பியவர் சேவை விட்டு ஒதுக்கவில்லை
தண்டித்தபோதும் அவர் உன்னிலுள்ள தாலந்தை எடுப்பதில்லை

நா அசைவால் நாறும் பிணம் நடக்கும்போது சிறகொடிந்த பறவை சீர் பெறாதா?
உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் போது உன்னதர் ஊழியம் உயிர்பெறாதா?

மூன்று முறை விழுந்தாலும் பேதுரு மூவாயிரம் பேரைஎழுப்பிவிட்டான் தவறிய தாவீது தன்காலத்தில் தேவ சித்தம்செய்திட்டான் தூக்கிஎடுப்பாரே கர்த்தர் விழுவோரை தம் கிருபையால் தாங்கி

கருத்துகள் இல்லை: