செவ்வாய், 6 ஜனவரி, 2009

முன்னால் முஸ்லீமும் அவரின் ஆலோசனையும்: குரானை படி,

பைபிளையும் கிறிஸ்தவத்தையும் தாக்கி எழுதும் இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்வது, உங்கள் இஸ்லாமிய நூல்களை படிக்கும் படி நாங்கள் மற்றவர்களை கேட்டுக்கொள்கிறோம்,

அதற்கான தொடுப்புகளையும் தருகிறோம், அது போல, நீங்கள் எங்கள் பைபிளின் தொடுப்பை, பைபிள் காமண்டரிகளின் (உரைகளின்) தொடுப்பை உங்கள் தளங்களில் தரமுடியுமா? தரமாட்டீர்கள்.

படித்தேன் பதித்தேன்: பெல்ஜியத்திலிருந்து முன்னால் முஸ்லீம்

இன்று Faith Freedom தளத்தில் ஒரு கட்டுரையை படித்தேன், முழுகட்டுரையை தமிழாக்கம் செய்யாமல், நான் முக்கியமாக கருதிய ஒரு சில விவரங்களை மட்டும் தரலாம் என்று விரும்புகிறேன்.

பெல்ஜியத்திலிருந்து முன்னால் முஸ்லீம் என்ற பெயரில் வெளியான கட்டுரையை ஒரு முன்னால் கத்தோலிக்கர் எழுதினார். என்னடா இவன் குழப்புகிறானே என்று நினைக்காதீர்கள். இவர் இஸ்லாமை விட்டு விலகியதற்கு காரணம், குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய ஆரம்ப கால முகமதுவின் சரித்திர புத்தகங்கள் , குர்‍ஆன் உரைகள்(காமண்டரிகள், தஃப்சீர்கள்) என்றுச் சொல்கிறார். எப்படி என்று அறிய தொடர்ந்து படியுங்கள்.


1. இவர் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர்.

2. இவர் இஸ்லாமுக்கு மாறியது தன் பெற்றோருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், தன் பெற்றோர்கள் அவரை அன்பாக கவனித்துக் கொண்டதாக கூறுகிறார். இப்படி தன் பெற்றோர்கள் நடந்துக்கொண்டதாலும் இன்னும் பல நல்ல காரணங்களாலும், தன் பெற்றோர்கள் "ஒரு நல்ல கிறிஸ்தவர்கள்" என்று சொல்கிறார்.


3. அனேகர் இஸ்லாம் பற்றி தெரிந்துக் கொள்ளாமல் அதற்கு மாறுகிறார்கள், அப்படி மாறியவரில் இவரும் ஒருவர். அதாவது, ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் "என்னை திருமணம்" செய்துக்கொள்வாயா என்று கேட்டபோது, நீ இஸ்லாமுக்கு மாறினால் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று அப்பெண் சொன்னதால், இவர் இஸ்லாம் பற்றி எதுவும் தெரிந்துக் கொள்ளாமல் மாறியுள்ளார், (காதலித்து இருப்பார் என்று தோன்றுகிறது)

4. ஒருவரிடம் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள விருப்பம் என்றுச் சொல்லும் போது, அவர்கள் இஸ்லாமை அழகான மார்க்கமாக காட்டும் புத்தகங்களை மட்டும் தருவார்கள், இது உண்மையான இஸ்லாமை நம்மிடமிருந்து மறைத்துவிடும் என்கிறார் இவர்.

5. இவர் தன் முன்னேற்றத்தில் கண்ணோட்டமாக இருந்ததாலும், மற்றும் அக்காலத்தில் இணையம் இல்லாததாலும், இவர் இஸ்லாம் பற்றி எப்படி அறியவேண்டும் என்று தெரியாமல், விருப்பமில்லாமல் பல வருடங்களை கழித்துள்ளார்.

6. குர்‍ஆனில் உள்ளதை சரியாக புரிந்துக்கொண்டவர்கள் சிலரே, ஏனென்றால், குர்‍ஆனின் அமைப்பு மிகவும் குழப்பம் நிறைந்ததாகவும், ஒரு கோர்வையாக இல்லாமலும், மற்றும் ஒரு தலைப்பிலிருந்து உடனே வேறு ஒரு தலைப்பிற்கு திடீரென்று தாவுவதாலும், அனேகருக்கு குர்‍ஆன் புரிவது கடினமே, என்று இவர் கருதுகிறார்.


7. இவர் இதுவரை குர்‍ஆன் வசனத்தால் கவரப்பட்டு, மனதை தொட்டுச் செல்லும் வசனத்தால் நான் இழுக்கப்பட்டேன் என்றுச் சொல்லக்கூடியவர்களை இவர் சந்திக்கவில்லையாம்.


8. முகமது மிகவும் புத்திசாலி என்றுச் சொல்கிறார், அதற்கு காரணத்தை இவ்விதமாகச் சொல்கிறார், அனேக முரண்பாடுகள், பிழைகள் உள்ள குர்‍ஆனை அவரால் எப்படி விற்க முடிந்தது என்று ஆச்சரியப்படுகிறார்.
threats (the unbelievers are fuel for hell Quran, 2.24)


9. பக்தியுள்ள முஸ்லீம்களே, குர்‍ஆனை புரிந்துக்கொள்வது கடினம் என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் குர்‍ஆன் ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறார்கள் ஆனால், அதனை புரிந்துக்கொள்ள வேறு 10 புத்தகங்கள் துணைக்கு வேண்டும், ஒரு வழிகாட்டியாக இருக்கும் புத்தகம் தெளிவாக புரியவேண்டுமல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார்.

10. சில ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியிடம், ஏன் இஸ்லாம் பற்றிய அனைத்துச் செய்திகளும் தீயதாக வருகின்றன? உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது? என்று கேட்டாராம்.

ற்கு அவர் மனைவி இஸ்லாம் பற்றிய அனைத்து விவரங்களும் புத்தகங்களில் தெளிவாக உள்ளது என்றார்களாம், அதனால், பல புத்தகங்களை வாங்கினாராம், இணையத்தில் என்ன புத்தகங்கள் கிடைக்கும் என்று தேடிய போது, கீழ் கண்ட தளங்கள் கிடைத்ததாம்.

website:

http://www.prophetofdoom.net/
http://www.news.faithfreedom.org

11. இவர் கீழ் கண்ட புத்தகங்களை வாங்கி படித்தாராம். இவைகள் இஸ்லாமிய புத்தக கடைகளிலும் கிடைக்கும், ஆனால், இந்த புத்தகங்கள் இஸ்லாம் பற்றி என்ன சொல்கின்றனவே, அவைகளைத் தான் "இஸ்லாமுக்கு எதிராக உள்ள தளங்களும்" சொல்கின்றன. இவைகளை படித்த பிறகு தான் ஒரு இஸ்லாமியராக இல்லை என்றுச் சொல்கிறார்.

[b]1. Quran குர்‍ஆன்

2. The authentic traditions of Muhammad (Sahih Hadith) by Bukhari: 9 books அல்புகாரி ஹதீஸ் தொடுப்புக்கள்

3. A summary of the authentic traditions of Muhammad by (Sahih) Muslim: 2 books சஹி மூஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள்

4. Life of the Prophet: oldest biography by Ibn Ishaq முகமதுவின் சரிதை

5. Life of the Prophet: Tabari: 4 books முகமதுவின் சரிதை

6. Life of the Prophet: Ibn Sa'd: 2 books முகமதுவின் சரிதை

7. Shariah book called Umdat as-salik / Reliance of the Traveller of the Shafi'i school (1 of the 4 large schools of Islam recognized by the Al-Azhar university in Egypt). This is not an original source but it is how the Quran, the hadith and the biographies of the Muhammad are interpreted by Muslim scholars and are being turned into laws. This book is incredibly user-friendly and I use it to check my interpretation of the Quran and the Hadith. ஷரியா

12. இப்போது நான் முஸ்லீமாக இல்லை, ஏனென்றால், இஸ்லாமின் ஆரம்ப கால புத்தகங்கள், சரித்திர நூல்கள் இஸ்லாமையும், முகமதுவையும் நல்ல வெளிச்சத்தில் காட்டக்கூடியவையாக இல்லை என்றுச் சொல்கிறார். எனவே தான் இஸ்லாமுக்கு எதிரடையாக இருக்கும் தளங்கள் இந்த புத்தகங்களை படிக்கச்சொல்கிறார்கள் என்கிறார் இவர்.


13. இதற்கு அடுத்து பல குர்‍ஆனின் நெருடலாக இருக்கும் வசனங்கள், ஹதீஸ்களை அவர் மேற்கோள் காட்டுகிறார். இந்த ஹதீஸ்கள், வசனங்கள் பற்றி அறிந்துக்கொள்ள, இந்த கட்டுரையை மூலக் கட்டுரையில் (http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=2160 I am a Ex-Muslim from Belgium ) படித்துக் கொள்ளுங்கள்.

பிறகு கடைசியாக, முஸ்லீம்களை இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்.


இக்கட்டுரையின் ஆங்கில மூலம்: I am a Ex-Muslim from Belgium


இனி என் கருத்து...


இப்போது இவர் கிறிஸ்தவராக இருக்கிறாரா இல்லையா ?

இக்கட்டுரையை எழுதியவர் இஸ்லாமை விட்டு வெளியேறியதற்கு காரணம் இஸ்லாமிய புத்தகங்களாகிய, குர்‍ஆன், குர்‍ஆனின் உரைகள், ஹதீஸ்கள், சரித்திர நூல்களை போன்றவற்றை குறிப்பிடுகிறார்.

இப்போது இவர் கிறிஸ்தவராக இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இவர் கிறிஸ்தவராக இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத பட்சத்தில் ஏன் கிறிஸ்தவ தளங்களில் இதனை பதிக்கிறாய் என்று என்னிடம் சிலர் கேள்விகள் கேட்கக்கூடும்.

இக்கேள்விக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமைப் பற்றி சரியான அறிவு நமக்கு (முஸ்லீம்களுக்கானாலும் சரி, கிறிஸ்தவர்களுக்கானாலும் சரி, மற்ற யாவருக்கும்) தேவையானால், நாம் படிக்க ஆரம்பிக்க வேண்டியவைகள், குர்‍ஆன், ஹதீஸ்கள், மற்றும் சரித்திர நூல்கள் என்பதை தெரிவிக்கத் தான் இந்த கட்டுரையை நான் பதிக்கிறேன்.

எனவே, நான் எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன், முக்கியமாக இஸ்லாமியர்களிடம் கேட்டுக்கொள்வது, இஸ்லாமை முழுவதுமாக அறிய நீங்களே குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், உரைகளையும் சரித்திர நூல்களையும் படியுங்கள், அப்போது சத்தியத்தை அறிவீர்கள், அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.


இப்போதுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் எழுதும் புத்தகங்களை படித்தால், அதில் இஸ்லாம் பற்றிய உண்மை முழுமையாக இருக்காது, எனவே, ஆரம்ப காலத்தில் இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்களுக்காக எழுதப்பட்ட புத்தங்களை படிக்கவேண்டும்.


பைபிளையும் கிறிஸ்தவத்தையும் தாக்கி எழுதும் இஸ்லாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, உங்கள் இஸ்லாமிய நூல்களை படிக்கும் படி நாங்கள் மற்றவர்களை கேட்டுக்கொள்கிறோம், அதற்கான தொடுப்புகளையும் தருகிறோம்,

அது போல, நீங்கள் எங்கள் பைபிளின் தொடுப்பை, பைபிள் காமண்டரிகளின் (உரைகளின்) தொடுப்பை உங்கள் தளங்களில் தரமுடியுமா? தரமாட்டீர்கள்.

கருத்துகள் இல்லை: