ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பெண்ணுக்கு எது முக்கியம்?

முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுத்து விட நாம் எப்பொழுதும் விரும்புகிறோம்.

ஆனால் முக்கியமானவைகள் என்று நாம் பட்டியலிட ஆரம்பிக்கும் போது குழப்பமும் சோர்வுமே ஏற்படுகிறது.

அப்படியானால் பெண்களுகு எது முக்கியம் என்பதை தீர்மானிப்பது எவ்வளவு கஷ்டமானதாக இருக்கும் பாருங்கள்.

நம் சமுதாயத்தில் பெரும்பாலும் பாரம்பரியங்களப் பின்பற்றியே ஒரு பெணுக்கு எது முக்கியம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் சகோதரி ஆன்னி ஜோசப் அவர்கள் வேதாகம பிண்ணனியில், அடிப்படையில் ஒரு பதிலை தந்துள்ளார்கள்.

ஒரு பெண் வாழ்க்கையில் மகள், மனைவி, மருமகள், தாய், மாமியார் என்ற முக்கியமான பொறுப்புகளை வகிக்க வேண்டியது வருகிறது.

நாம் இதில் எந்த பொறுப்பில் இருந்தாலும் நமக்கு எப்பொழுதும் எது முக்கியம் என்பதை வேதம் சொல்லும் ஒரு சம்பவத்தில் காணலாம்.

"அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.39.

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.40.

மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.41.

இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக, மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42.

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். (லூக்கா: 10:38-42)".

மேலேயுள்ள சம்பவத்தின் மூலம் நாம் கற்று கொள்ள வேண்டியது, நாம் தேவையில்லாமல் அனேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டுக் கலங்காமல் ந‌ம்மை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மரியாள் இயேசு அவர்கள் வீட்டில் சிறிது நேரமே இருப்பார் என்பதை அறிந்து அந்த நேரத்தில் பற்பல வேலைகளைச் செய்து வீணாக்காமல் இயேசுவின் பாதத்திலமர்ந்து அவரின் வசனத்தைக் கேட்பதையே முதலாவது தெரிந்து கொண்டாள்.

முதலாவது தேவனுக்கும் அவரின் காரியங்களுக்கும் முக்கியத்துவம் தருதல் நலமாயிருக்கும்.

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும், மற்றும் அவளின் மேன்மைகள் என்ன போன்றவை வேதத்தில் அனேக இடங்களில் உண்டு.

நாம் அதில் ஒருசில பகுதிகளைக் குறித்துப் பார்ப்போம்.

திருமணம் ஆகாதவர்களுக்கும் இது பயனுள்ளதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்

(மனைவி என்ற ஸ்தானத்திலுள்ள‌)ஒரு ந‌ல்ல‌ குண‌சாலியான‌ பெண்ணின் மேன்மையையும், செயல்களையும் அவ‌ளால் அவ‌ள் குடும்ப‌த்தின் மேன்மையையும் நீதிமொழிகள்: 31:10, 31 வ‌ச‌ன‌ங்க‌ள் மிக‌வும் அழ‌காக‌ விள‌க்குகின்ற‌ன‌.

"குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.11.

அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.12.

அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.13.

ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.14.

அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.15.

இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.16.

ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.17.

தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.18.

தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.19.

தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.20.

சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.21.

தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.22.

இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.23.

அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.24.

மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.25.

அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.26.

தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.27.

அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.28.

அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து,29.

அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.30.

செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.31.

அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. (நீதிமொழிகள்: 31:10- 31)"

ஒரு நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று மேலேயுள்ள வசனத்தை வாசித்த போது தெரிந்து கொண்டவைகள்

*தன் கணவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகுதல்

*அவரின் உயர்வுக்குக் காரணமாகுதல்

*தன் கணவனிடம் அன்பு, அக்கறை கொள்ளுதல்

*த‌ன் வீட்டிற்கான‌ வேலைகளைத் தானே உற்சாக‌மாக‌ச் செய்த‌ல்

*திட்ட‌மிடுத‌ல்

*வீட்டு நிர்வாக‌ம் ம‌ற்றும் ப‌ண‌ வ‌ரவு செலவுக‌‌ளை திற‌ம் ப‌ட‌
கையாளுத‌ல்

*த‌ன் ச‌ம்பாத்திய‌த்தை தன் வீட்டிற்கேதுவாய் ச‌ரியான‌ ப‌டி
பயன்ப‌டுத்துத‌ல்

*க‌ஷ்ட‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு இர‌ங்கி த‌ன்னால் முடிந்த‌ உத‌வியை செய்த‌ல்

*த‌ன் குடும்ப‌த்தாருக்கு இன்ன நேரத்தில் இது தேவைப்படும் என்று
அறிந்து அவ‌ர்க‌ளுக்கு அதை provide ப‌ண்ணுத‌ல்

*ந‌ல்ல‌ உடைக‌ளை உடுத்துத‌ல்

*வாயின் வார்த்தைக‌ள் அன்பாக‌வும், ஞான‌மாக‌வும் இருத்த‌ல்

*சோம்ப‌லாயிராம‌ல் சுறுசுறுப்பாய் இருந்து த‌ன் வீட்டுக்
காரிய‌ங்க‌ளின் மேல் க‌ண்ணோக்க‌மாயிருத்த‌ல்

*க‌ர்த்த‌ருக்குப் ப‌ய‌ப்ப‌டுத‌ல்

(இந்த காலத்தில் தான் பெண்கள் வெளில வேலைக்குப் போய்ட்டு வீட்டு வேளைகளையும் கவனிச்சிக்கிறாங்கன்னு நினைக்கிறோம்.

ஆனால் பழைய ஏற்பாடு காலத்திலேயே இது எவ்வளவு அழகா சொல்லப்பட்டிருக்கு).

‌இதில் எல்லோருக்கும் எல்லா குணமும், திறமையும் இயற்கையாக இருப்பதில்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டாம்.

நாம் நம்மிடம் உள்ள குறைகளை விசுவாசத்தோடு ஜெபத்திலே தேவனிடம் எடுத்துச் செல்வோம்.

நாமும் இந்த இடங்களில் தேவனுக்குத் திறந்து கொடுப்போம். நமது குறைகளை நிறைவாக்குவார், நமது பெலவீனங்களில் அவர் பெலனாயிருப்பார்.

"மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்பபடிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.23.

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.24.

ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.(எபேசியர்: 5:22 -24)”

இங்கு கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு முறையோடு ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு முறை ஒப்புமைப்படுத்தப் பட்டுள்ளது.

ஒரு சபை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவியும் தன் கணவனுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

காலம் மாறிவிட்டது( தேவ‌னுடைய‌ வார்த்தை மாறாது). ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் அடிமையில்லையே என்று தோன்றலாம்.

ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இது அடிமைத்தனமில்லை.
ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் GM, manager... போன்ற‌ பதவிகள் இருக்கும்.

இதில் தனிப்பட்ட முறையில் யாரும் யாருக்கும் அடிமையில்லை. ஆனாலும் GM postக்கு கட்டுப்பட்டது தானே manager post .

ஒவ்வொருவரும் தன் தன் வேலையை சிறப்பாக செய்தால் தான் நிறுவனம் வளரும்.

தலைவரே இல்லாமல் ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டப்படி பொறுப்புகளை எடுத்துக் கொண்டால் அந்த நிறுவனத்தின் நிலையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

பள்ளியில் கூட வகுப்புக்கென்று ஒரு தலைவரை நியமிப்பதில்லையா? அது போலத் தான் நம் குடும்பமும்.

தேவன் தன் பிள்ளைகளுக்கு ஒரு குடும்ப அமைப்பைக் கொடுத்திருக்கிறார். தேவன் முதலாவது ஆதாமைப் படைத்தார். பின்னர் ஏவாளைப் படைத்தார்.

மேலும் முதலாவது தவறு செய்ததும், ஆதாம் தவறு செய்யத் தூண்டியதும் ஏவாள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

அப்போது கூட ஆண்டவர் ஆதாமிடம் தான் காரணம் கேட்டார். அதனால் பெண்கள் குறைந்த்வர்களோ,மட்டமானவர்களோ இல்லை.

கிறிஸ்துவிற்குள் ஆணென்றுமில்லை, பெண்ணென்றுமில்லை,அனைவரும் ஒன்றாயிருக்கிறோம் என்று வசனம் சொல்கிறது.

திரும‌ண‌ம் ஆகாதவ‌ர்க‌ளுக்கு: அவரின் சித்தப்படி ஒரு நல்ல துணை மற்றும் நல்ல கணவன் வீட்டார் அமைய வேண்டும் என்று நம் திருமணத்திற்காய் விசுவாசத்தோடு ஜெபித்தல் முக்கியம்.

திருமணத்திற்கென்று தயாராகும் போது தான் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டுமென்றில்லை.நீங்க‌ள் க‌ல்லூரியில் ப‌டித்துக் கொண்டிருந்தாலும் ஜெபிக்கத் தொடங்கலாம்."

கருத்துகள் இல்லை: