திரிகோண ஜோதிடரின் பேட்டி(+ நம்ம நிருபர் நிம்மி)
சபரிமலையின் பெயரை கெடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் உள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்த கிறிஸ்தவர்கள் எப்படியாவது சபரி மலைக்கு கெட்ட பெயரை உண்டாக்கி பக்தர்களின் கூட்டத்தைக் குறைக்க இது போன்ற நாடகம் ஆடி வருகின்றனர்.(கொடுமைடா சாமி...!)
சபரி மலை குறித்து வரும் தகவல்களை பொது மக்களும், பக்தர்களும் நம்பக்கூடாது. சபரிமலையில் ஹிந்துக்களை விட கிறிஸ்துவர்களின் ஆதிக்கம் தற்போது அதிகமாக உள்ளது.
இதை தக்க வைத்துக் கொள்ள இது போன்று திட்டம் போட்டு செய்து வருகின்றனர்.(ஏன் அமெரிக்காவையும் இதில் இழுத்து விடுங்களேன்.)
இந்த விவகாரத்திற்கு வெளிநாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து ரூ.150 கோடிக்கு மேல் பணம் வந்துள்ளது.(எப்படி வந்தது? பணமாகவா? செக்காகவா? சும்மா அடிச்சு விடாதிங்கண்னே..)
இந்த பணத்தைக் கொண்டு சபரிமலையின் புகழை கெடுக்க திட்டமிட்டுள்ளனர். வரும் 2009ம் ஆண்டுக்குள் இந்த பிரச்சனையை உருவாக்கிய அனைவருக்கும் அழிவு நிச்சயம்.(அட யாகவா முனிவர் பேச்சு மாதிரியே இருக்குங்க உங்க பேச்சு!)
அவர்களுக்கு பெரிய பயங்கரமான தண்டனை கிடைக்கப் போவது நிச்சயம்.(அது சரி...)
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக