செல்லம்பட்டியில் இருக்கும் செட்டப் செல்லப்பா அவர்கள் நாட்டு நடப்பு பற்றிய பல கேள்விகளை இனி வரும் வாரங்களில்
இந்த பகுதியில் தமது கேள்வி கணைகளை தொடுப்பார்.
கேள்வி:- தமிழ்நாட்டில் சில பத்திரிக்கைகள் மட்டும் கிறிஸ்துவத்திற்கு எதிரான நிகழ்ச்சிகளையும், கட்டுரைகளையும், செய்திகளையும் தொடர்நது எழுதி வருகின்றனர் ஏன்?
பதில்:- எல்லா பத்திரிக்கைகளும் அவ்வாறு செய்தில்லை, குறிப்பாக ஒரு(பூ) பத்திரிக்கை மட்டும் அவ்வாறுசெய்திகளை வெளியிடும். அதுவும் நேரடியாக இருக்காது, ஒரு செய்தியாக அதை கூறும்.
அதில் அந்த பத்திரிக்கை மிகவும் திறமை படைத்தது.
அதே சமயத்தில் தன் கிறிஸ்துவ வாசகர்களை இழக்காமல் இருக்கவும், தான் ஒரு நடுநிலை பத்திரிக்கை என்பதாக காட்டிக்கொள்ளவும் சில உள்ளூர் கிறிஸ்துவ நிகழ்சிகளை பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிடுவதுண்டு.
சமீபத்தில் காரைக்காலில் நடந்த சீகல்பால்கு பற்றிய செய்திகளை அது வெளியிடவில்லை. பொதிகையின் செய்திகளில் அந்த நிகழ்ச்சி பற்றி இரு நாட்கள் கூறினார்கள்.
தினதந்தியிலும் அந்த செய்தி வந்தது. மேலும் தினதந்தியின் வாசகர்கள் பெரும்பாலும் தென்தமிழகத்தை சேர்நதவர்கள்(இது கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி) மட்டுமல்ல அந்த பத்திரிக்கை நடத்தும் சமுதாயத்தை சேர்ந்தவர்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பதால் எதிரான செய்திகளை வெளியிடாது.
கேள்வி:- ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டத்தை திரும்ப பெற்றுவிட்டோம் என்று அறிவித்து மக்களை ஏமாற்றியுள்ளாரே. கலைஞர் வந்துதான் அந்த சட்டத்தை முறையாக நீக்கியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து.
பதில்:- நம்மில் அனேக மடையர்கள் இருப்பது இருவருக்குமே தெரியும்(பிரபலமான ஊழியக் குடும்பம் மக்களை எவ்வாறு எல்லாம் ஏமாற்றுகின்றனர் என்பதை அவர்களும் அறிவார்கள்.)
2002-ம் ஆண்டில் தமிழக அரசு ஒரு அவசரச்சட்டம் மூலம் மதமாற்ற தடைச்சட்டதை சட்டமன்றத்தில் வைக்காமல் கொண்டுவந்து.
பின்னர் நடந்த 2004-ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த பெறும் தோல்வி காரணமாக அரசு மக்களின் எதிர்ப்புக்கு உண்டான சில சட்டங்களை திரும்ப பெற்றது.
அதில் மதமாற்ற தடைச்சட்டம் ஒன்று. அதற்கான அரசானையும் வெளியிடப்பட்டது. பின்னர் அதை அனைவரும் மறந்து போனர்கள்.
பின்னர், 2006-ல் சட்டமன்ற தேர்தல் வந்தது, தேர்தல் பிரச்சாரத்தின் போது திரு.கலைஞர் அவர்கள் "இன்னும் மதமாற்ற தடைச்சட்டம் திரும்பபெறவில்லை, அது உயிரோடுதான் இருக்கிறது.
ஒரு சட்டத்தை திரும்ப பெறவேண்டுமானால் சட்டமன்றத்தில் அதை வைத்து அனுமதி பெற வேண்டும்.
இவர்கள் அவ்வாறு செய்யவில்லை, அவர்கள் பிறப்பித்த
அரசானை ஆறு மாதத்திற்கு மட்டும் தான் செல்லும்,எனவே அந்த சட்டம் உயிரோடுதான் இருக்கிறது" என்று போகிற போக்கில் பற்றவைத்து சென்றார்.
அதுவும் சட்டமன்ற கூட்டத்தெடர் முடிந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் இவ்வாறு கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசு எந்த சட்டத்தையும் பிறப்பிக்க கூடாது என்பது தேர்தல் விதி.
மட்டுமல்ல மதமாற்ற தடைச்சட்டம் திரும்ப பெறப்படுகிறது என்று அறிவித்த பின்னர் சுமார் நான்கு முறை சட்டசபை கூடியது, அப்போது ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் கூட இது குறித்து பேசவில்லை.
சட்டத்தை சட்டசபையில் வைத்து திரும்ப பெறவேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை.
அப்போது எல்லாம் அமைதியாக இருந்து விட்டுதேர்தல் என்று வந்த உடனே இதை குறித்து திரு.கலைஞர் மற்றும் அவரை ஆதரிக்கும் சில தலைவர்கள் அது குறித்து வினா எழுப்பினர்.
எதற்காக? கிறிஸ்தவர்கள் மேல் உள்ள அக்கறையாலா? இல்லை இயேசுவின்பால் கொண்ட பேரன்பு காரணமாகவா?
அப்படி அக்கறை இருப்பவர்கள் ஏன் கடந்த காலங்களில் சட்டம் திரும்ப பெற்ற விதம் சரியான முறையில் இல்லை, சட்டமன்றத்தில் வைத்து திரும்ப பெற வேண்டும் என்று ஏன் கூறவில்லை,?
ஏனென்றால், 15% மேல் இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக.( அவர்களில் பெறும்பான்மையானவர்கள் வாக்களிக்கவே செல்லுவதில்லை என்பது வேறு விஷயம்).
மேலும் 1984-ல் சுப்ரிம் கோர்டின் ஜந்து நீதிபதிகள் கொணட் குழு சட்டமன்றத்தில் வைக்காமல் எந்த ஒரு சட்டதையும் ஒரு அரசானையின் மூலம் திரும்ப பெறலாம், அது செல்லும் என்று கூறியது.
இருந்தாலும் திரு.கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் இவ்வாறு கூறுகிறார் " மரணத்தில் சந்தேகம் இருந்தால் திரும்பவும் போஸ்ட்மார்டம் செய்வதில் தவறு இல்லை". இந்த பேச்சு தேர்தலுக்கு பின்.
திரு.கலைஞர் அவர்கள் மேல் எனக்கு எப்போதும் ஒரு வித மதிப்பு உண்டு, ஒரு வேளை தமிழுக்காக இருக்கலாம், மற்றபடி அவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான்.
இதற்காக செல்வி.ஜெயலலிதாவை நான் ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். அவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான். இவர்களையும் கண்னை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஒரு கிறிஸ்துவ கூட்டம் இங்கு உண்டு.
கேள்வி:- உண்மையிலே இந்தியாவில் கிறிஸ்தவம் வளர்ந்து வருகின்றதா?
பதில்:- அதில் என்ன சந்தேகம். குறிப்பாக ஆந்திராவிலும், ஒரிசாவிலும் விசுவாசிகளின் எண்ணிக்கை(கவனிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அல்ல) அதிகரித்து வருகிறது.
அதேபோல் குஜராத்தின் தென்பகுதிகளிலும் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கேள்வி:- திருப்பதியில் நடந்து வரும் சம்பவங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இதற்கு என்றே ஒரு தனி பதிவு விரைவில் வரும்.
கேள்வி:- பிஷ்ப் - ஆனந்தராஜ் சமீபகாலமாக தமிழ்நாட்டை கலக்கிவருகிறாரே?
பதில்:- ஆம், நீங்கள் சொல்லுவது உண்மைதான், அவருக்காக தமிழ் தினசரிகளும், புலனாய்வு பத்திரக்கைகளும் சற்றுதாராளமாகவே இடம் ஒதுக்கி உள்ளனர்.
பத்திரிக்கைகளில் வந்த செய்தியின்படி அவர் வேதாகமக் கல்லுரிக்கு சென்று படிக்காமலேயே சுயமாக தான் பிஷப் என்று கூறிவந்துள்ளார்.
அவர் வீடு கட்டி தருவதாக மக்களிடம் வாங்கிய தொகையை விட, காண்டிராக்டர்களிடம் வாங்கிய தொகை தான் அதிகமாக உள்ளது.
எப்படியும் சுமார் 50 கோடி தேறும் என்றும் பத்திரிக்கை வட்டாரங்கள் கூறுகின்றன. அவ்வாறு கிடைத்த பணத்தின் பெறும் பகுதியை நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க பயன்படுத்தி உள்ளார்.
ஜீ.வீ- யின் செய்திபடி அவருக்கு 11 மனைவிகள். ஆண் குழந்தைக்காக இவர் அவ்வாறு செய்துள்ளார். இது போல் அவ்வப்போது எதாவது செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கும்,
இது மாதிரியான செய்திகள் இல்லை என்றால், தமிழ் நாட்டின் டீக்கடைகள் கலையிழந்து காணப்படும். ம்ம்ம்.... என்ன பண்றது இதுமாதிரி செய்திகளை எல்லாம் படித்து விட்டு ஒதுக்கி தள்ளுங்கள்.
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக