தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை எதிர்மறையான நிலையில் பைபிள் காட்டுகின்றது என்றுச் சொல்லி, முஸ்லீம்கள் அடிக்கடி பைபிளை தாக்குவார்கள்.
நோவா அதிகமாக திராட்சை ரசத்தை குடித்த நிகழ்ச்சியும், லோத்து தன் மகள்களோடு சயனித்ததும், தாவீது விபச்சாரம் செய்ததும் இன்னுமுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையான இறைவனின் தீர்க்கதரிசிகளின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது, என்று முஸ்லீம்கள் வாதிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வெட்கப்படக்கூடிய செயல்களுக்கு தீர்க்கதரிசிகள் தூரமானவர்கள் என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பைபிள் திருத்தப்பட்டது என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள்.
இப்படிப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு ஏற்கனவே பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது.
குர்ஆனும் இஸ்லாமிய பாரம்பரிய நூல்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றிச் சொல்லும் போது அவர்கள் நூறு சதவிகிதம் பரிசுத்தவான்களாக காட்டாமல் சிறிது குறைவாகவே காட்டுகின்றது என்பதை இந்த கட்டுரையில் உங்களுக்கு காட்டவிரும்புகிறோம்.
இஸ்லாமிய ஆரம்ப கால நூல்கள் கூட தாவீது செய்த விபச்சார செயலோடு கூட சேர்த்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை அங்கீகரிக்கின்றது என்பதை அறியும் போது இதை படிக்கின்ற உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
1. இஸ்லாமும் ஆபிரகாம் பொய் சொல்லுதலும்:
உதாரணத்திற்கு, குர்ஆனும், ஹதீஸ்களும் ஆபிரகாம் பொய் சொன்னார் என்று அங்கீகரிகின்றன. பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3358
'இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும்.
அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது" என்று கூறியதுமாகும். .
(மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம்(அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா(அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.
அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்" என்று கூறப்பட்டது.
உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா(அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான்.
சாரா(அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான்.
அவன் (சாரா(அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான்.
உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான்.
அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான்.
அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்" என்று சொன்னான்.
பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள்.
இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள்.
அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான்.
ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.
2. ஆபிரகாம் அல்லாவை சந்தேகித்தார் என்று கூட ஒரு ஹதீஸ் சொல்கிறது:
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4694
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.
ஒசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன்.
இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம்.
அல்லாஹ், “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது)
ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்' என்று பதிலளித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
3. நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாத அளவிற்கு குர்ஆனால் எதிர்மறையாக சொல்லப்பட்டவர் இன்னொருவர் இருக்கிறார், அவர் தான் யோசேப்பு: குர்ஆன் 12:23,24
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் -
(அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (குர்ஆன் 12:23)
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்;
இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (குர்ஆன் 12:24)
"யோசேப்பு அந்த போத்திபாரின் மனைவி மீது விருப்பம் கொண்டே இருப்பார்" என்று குர்ஆன் சொல்கிறது, அதாவது, அந்த போத்திபாரின் மனைவியோடு அவர் விபச்சாரம் செய்ய விருப்பம் கொண்டே இருப்பார் என்று சொல்கிறது.
ஆனால், பரிசுத்த பைபிள், குர்ஆனின் இந்த கருத்தை மறுத்துச் சொல்கிறது, அதாவது, இந்த தீய செயலை செய்ய யோசேப்பு திடமாக மறுத்தார் என்றுச் சொல்கிறது. ஆதியாகமம் 39:6-10
ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக் குறித்தும் விசாரியாதிருந்தான்.
யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை;
இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
4. தன் மகள்களை கற்பழிக்க தீய மக்களிடம் ஒப்புக்கொடுத்த இஸ்லாமிய நபி லோத்து:
லோத்து தன்னிடம் வந்த விருந்தாளிகளை காப்பாற்றவேண்டி, தன் ஊரின் மக்களிடம் தன் மகள்களை ஒப்படைத்துவிடுகிறேன் என்றும், தன் விருந்தாளிகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார் என்று குர்ஆன், பைபிள் சொல்வது போலவே அப்படியே சொல்லியுள்ளது. குர்ஆன் 11:77 - 79
நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார். (11:77)
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள்.
(அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்;
இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.( 11:78)
(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.(11:79)
குர்ஆன் 15:67-71
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். (15:67)
(லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;" (15:68)
"அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார். (15:69) அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (15:70)
அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார். (15:71)
தன் பிள்ளைகளின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமை இல்லையா? அவசரம் ஏற்பட்டால், தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமையில்லையா?
இப்படி இருந்தும், இங்கு லோத்து என்பவர் தன் மகள்களாகிய கன்னிப்பெண்களை தீயமக்கள் கற்பழிக்க ஒப்புக்கொடுப்பதை காண்கிறோம்.
இதில் ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இதே கதையை பைபிளும் சொல்கிறது (பார்க்க ஆதியாகமம் 19:1- 9).
இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லீம்கள் இந்த கதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இந்த கதைப் பற்றி ஏன் முஸ்லீம்கள் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றிய காரணம் மிகவும் தெளிவாக உள்ளது,
அது என்னவென்றால், இதே கதை தங்கள் புத்தகத்திலும் இருப்பதால் தான்! இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், பைபிளுக்கு எதிராக முஸ்லீம்களின் விமர்சனங்கள் அனைத்தும் புகையால் தங்கள் குர்ஆன் நிகழ்ச்சிகளை மறைக்கும் செயல்களுக்குச் சமமாகும்.
அதாவது பைபிளில் உள்ள அதே நிகழ்ச்சி அல்லது கதை குர்ஆனிலும் இருந்தால், அதை எந்த காரணத்தைக் கொண்டும் முஸ்லீம்கள் ஒரு பிரச்சனையாக வெளியே கொண்டுவரமாட்டார்கள்.
இது பரிசுத்த பைபிளைத் தாக்கும் முஸ்லீம்களின் கபடவேஷத்தை அப்படியே காட்டுகிறது. இப்படிப்பட்ட கதைகள் பைபிளில் சொல்லப்பட்டதால், அது இறைவனின் வேதம் இல்லை என்றுச் சொல்லும் அதே முஸ்லீம்கள், அதே கதை குர்ஆனில் இருப்பதால், குர்ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம் என்றுச் சொல்லும் தகுதியை இழக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
வியாழன், 8 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக