புதன், 7 ஜனவரி, 2009

பைபிள் வார்த்தை பைபிளில் இல்லையா?

முன்னுரை:

இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், கீழ் கண்ட ஒரு விவரத்தை தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் என்று ஒரு கட்டுரையை நம் தமிழ் முஸ்லீம்கள் வெளியிட்டு இருந்தார்கள்.

அதாவது பைபிள் என்ற பெயர் பைபிளில் இல்லை என்று இவர் சொல்லியுள்ளார். ஆனால், இது சரியான தகவலா? அல்லது இது ஒரு பொய்யா? இதை அலசுகிறது இந்தக் கட்டுரை.

அதுமட்டுமல்ல, பைபிள் என்ற வார்த்தை குர்‍ஆனில் இருக்குமானால் எப்படி இருக்கும்? மேலும் அறிய படியுங்கள்.

எம். எம். அக்பர் அவர்கள்:

கிறித்தவர்கள் வேதமாகக் கருதும் பைபிளுக்கு பைபிள் என்ற பெயர் பைபிளில் எங்கும் இல்லை. பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்ப்டட புத்தகங்களின் ஒரு கோர்வைக்கு பைபிள் என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது என்பதே ஆய்வுகள் வழங்கும் சான்று .


முஸ்லீம்களின் தவறான புரிந்துக்கொள்ளுதல்

"பைபிளைப் பற்றி குர்‍ஆன் குறிப்பிடவில்லை, ஆனால், தீர்க்கதரிசிகளாகிய மோசே, தாவீது, இயேசு போன்றவர்களுக்கு வெளிப்பட்ட வெளிப்படுகளைப் பற்றித் தான் குர்‍ஆன் குறிப்பிடுகிறது"

பதில்

இது முஸ்லீம்களின் இன்னொரு ஆதாரமற்ற கற்பனையாகும். முஸ்லீம்கள் இப்படியாக நினைத்துக் கொள்கின்றனர்,

அதாவது குர்‍ஆனில் "பைபிள்" என்ற வார்த்தை இல்லை என்பதால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் தேவனுடைய வார்த்தைச் என்றுச் சொல்லும் பைபிளை முஸ்லீம்கள் இறைவனின் வார்த்தை என்று நம்புவதில்லை.

ஆனால், "பைபிள்" என்ற வார்த்தையைப் பற்றி கிரேக்க மொழியில் தேடினால், கண்டிப்பாக இந்த வார்த்தை "பிப்லியா - Biblia" என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பதை அறிந்துக்கொள்ளலாம்,

மற்றும் பிப்லியா என்றால் "புத்தகங்கள்" என்று பொருள் ஆகும். பைபிளில் 66 புத்தகங்கள் இருந்த போதிலும் அதனை ஒரு புத்தகமாக தொகுத்த போதிலும், அதன் ஆசிரியர் ஒருவரே, பரிசுத்த ஆவியானவர், மற்றும் மொத்த எழுத்துக்களின் கருப்பொருளும் ஒன்று தான்,

அது: விடுதலைத் தரும் தேவனின் மேசியாவின் வருகையாகும் (The advent of God's Messiah-Deliverer). மட்டுமல்ல, யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதமாகிய புத்தகத்தை(அரபியில் அல்-கிதாப்) குர்‍ஆனும் குறிப்பிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

குர்‍ஆனிலிருந்து ஆதாரங்கள்:

குர்‍ஆன் 2:113

"யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) ……..

குர்‍ஆன் 3:79

ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது.

ல் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).

முஹம்மத் அஸத்(Muhammad Asad) என்ற ஒரு இஸ்லாமிய அறிஞர், குர்‍ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, "அரபியில் கிதாப்" என்பதற்கு பொருள் "பைபிள்" என்பதை புரிந்துக்கொண்டு, அதன்படி மொழிபெயர்த்துள்ளார்.

ஆக, யூதர்களும் கிறிஸ்தவர்களும் மாற்றப்படாத புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று குர்‍ஆன் குறிப்பிடுகிறது.

குர்‍ஆனின் காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கைகளில் இருந்த ஒரு புத்தகம் அது பைபிள் தான், அதே பைபிள் தான் இன்றும் நம்மிடம் உள்ளது.

பைபிள் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தமுள்ள வார்த்தையைத் தான் குர்‍ஆனிலும் அரபியில் பயன்படுத்தப்பட்டுள்ளது,

அதாவது அல்-கிதாப், அல்-முகத்தஸ், பரிசுத்த புத்தகம்(al-Kitab al-Muqaddas, the Holy Book). குர்‍ஆனில் கிதாப் என்ற வார்த்தை, முகமதுவின் காலத்திலும், அதற்கு பிறகும் அரபிக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய புத்தகத்தையே அது குறித்தது.

இரண்டாவதாக, கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தின் படி பார்த்தாலும், "பைபிள்" என்ற வார்த்தை கிறிஸ்தவ வேதத்தில் உள்ள வார்த்தையிலிருந்து தான் வந்தது என்பதை காணலாம்.

"பைபிள்" என்ற வார்த்தையின் மூல வார்த்தை கிரேக்க மொழியின் "பிப்லியா – Biblia (books)" என்ற வார்த்தையாகும். பைபிளுக்கு வெளியே இந்த‌ வார்த்தையை கி.பி. 150ல் 2 க்ளமண்ட் 14:2ல் காணலாம்:

"... புத்தகங்கள் (the books -ta biblia) மற்றும் அப்போஸ்தலர்கள் சபை என்பது.... ஆதிமுதல் இருந்ததாக கூறுகிறார்கள்."

"பிப்ளியா" என்பது "பிப்ளியன்" என்ற கிரேக்க மொழி வார்த்தையின்
panமையாகும். "பிப்ளோஸ்" என்ற வார்த்தைக்கு இதற்கு மூல வார்த்தையாகும் ("Biblia" is the plural form of the Greek "biblion", which is itself a diminutive of "biblos").

மூன்றாவதாக, இந்த வார்த்தை தேவனின் வெளிப்பாடாகிய பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். யோவான் 20:30

சங்கீத புஸ்தகத்திலே(biblo): ……..என்றும் எழுதியிருக்கிறது. அப் 1:20

…. ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப் பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில்(en biblo ton propheton) எழுதியிருக்கிறதே. அப் 7:43.

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில்(en to biblio tou nomou) எழுதப்பட்டவைகளை யெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. கலாத்தியர் 3:10.


இந்தப் புஸ்தகத்திலுள்ள(tes propheteias tou bibliou) தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்(en tou biblio) எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின்(tou bibliou tes propheteias) வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளி 22:18-19


மேலே நாம் குறிப்பிட்ட வசனங்கள் நமக்கு "பைபிள்" என்ற வார்த்தை கிறிஸ்தவர்களின் பரிசுத்த புத்தகங்களில் இருக்கும் வார்த்தையிலிருந்து வந்தது என்று தெரிவிக்கின்றன. முடிவாக, யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கு பயன்படுத்தப்பட்ட "பைபிள்" என்ற வார்த்தை சரியான ஆதாரங்கள் இல்லாமல் கொடுக்கப்பட்ட பெயர் இல்லை,

அதற்கு பதிலாக தேவனின் வெளிப்பாடுகள் அடங்கிய ஆதார வசனங்கள் அப்பெயருக்கு உண்டு என்பதை நான் கண்டுக்கொள்ளமுடியும்.

முடிவுரை:அருமையான இஸ்லாமிய அறிஞர் திரு எம். எம். அக்பர் அவர்களே, பைபிள் என்ற வார்த்தை பைபிளில் இல்லை என்ற முடிவிற்கு வர நீங்கள் செய்த ஆராய்ச்சி என்ன?

பைபிள் என்றால் புத்தகங்கள் என்று பொருள் என்று தெரிந்துக்கொண்ட நீங்கள், அந்த வார்த்தை பைபிளில் உள்ளதா இல்லையா என்று தேடிப்பார்க்க மாட்டீர்களா?

கிரேக்க வார்த்தையின் பொருளை தெரிந்துக்கொண்ட நீங்கள், கிரேக்க புதிய ஏற்பாட்டில் ஒரு முறையாவது தேடிப் பார்க்க தவறிவிட்டீர்களே!?!

இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்டுரையில், எம். எம். அக்பர் அவர்கள் சொல்லியுள்ள "புர்கான்" என்ற அரபி வார்த்தையைப் பற்றி அலசுவோம்.

இந்த வார்த்தை வரும் இடங்களிலெல்லாம் இது குர்‍ஆனையே குறிக்குமா? அல்லது இந்த புர்கான் என்ற வார்த்தை பைபிளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இவ்வார்த்தையை பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என்ன? என்பதை கர்த்தருக்கு சித்தமானால் அலசுவோம்.

கருத்துகள் இல்லை: