புதன், 28 ஜனவரி, 2009

மிஷனெரிகளுக்காக எவ்வாறு ஜெபிக்கலாம்?

பொதுவாக போர்முனையில் முதல் வரிசையில் நிற்கும் வீரர்கள் மற்ற வீரர்களை விட அதிக கனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும.

பின்னால் நிற்க்கும் வீரர்கள் அவர்களை உற்ச்சாக படுத்தும் விதத்தில் செயல்பட்டால் தான் வெற்றி பெறமுடியும் .

எனவேதான் நமது இந்திய இராணுவம் கூட எல்லை பாதுகாப்பு படைக்கு அதிக முக்கியதும் கொடுத்து வருகிறது.

நமது தேவனின் பணியில் ஈடுபட்டுள்ள மிஷனெரிகளும் தினமும் பலதரப்பட்ட கனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர்களுக்கு நம்முடைய ஜெபம்தான் ஒரு ஊக்கமான மருந்தாக அமையும். நம்மில் அனெகர் மிஷனெரி பணி குறித்து ஜெபிக்கும் போது குறிப்பாக ஜெபிப்பதில்லை.

பணிதளத்தில் அவர்கள் எவ்வாறு உள்ளனர்?, அவர்கள் இருக்கும் சுழ்நிலை எப்படிபட்டது?, என்று நாம் அறிந்து ஜெபிக்கு வேண்டும.

இந்த கட்டுரையில் களத்தில் முதல் வீரராக நிற்க்கும் நமது மிஷனெரிகளின் பலதரபட்ட ஜெபத் தேவைகளை கொடுத்துள்ளோம்.

1.கிறிஸ்துவைப் பற்றிய உண்மையைப் பேசுவதற்கு வேண்டிய தைரியத்துக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபியுங்கள்.

சிலவேளைகளில், தங்களைச் சந்திப்பவர்களிடம் அவர்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசமுடியாதபடி (நாமெல்லாருக்கும் நிகழ்வதுபோல) மிஷனெரிகளை பயம் ஆட்கொண்டு தடுத்துவிடக்கூடும்.

ஜெபிக்கவும்:

வீரத்தனம் மற்றும் தைரியம்: தங்களைச் சற்றியுள்ளவர்களிடம் தங்கள் நம்பிக்கையைப்பற்றிப் பேச மிஷனெரிகள் பயப்படாமிலிருக்க ஜெபியுங்கள்
ஞானம்:

தேவன் ஆயத்தப்டுத்தியிருக்கும் மக்களை மிஷனெரிகள் அணுகவும், தங்கள் பேச்சில் கவனமாயிருக்கவும் ஞானம் கிடைக்க ஜெபியுங்கள்

கனிகள்: நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளவும், மிஷனெரிகள் தங்கள் அயலகத்தார், நண்பர்கள் முதலியோருடைய வாழ்வில் தேவன் கிரியை செய்வதைப் பார்க்கும்படியாகவும் ஜெபியுங்கள்

2.ஆவியில் பலப்பட ஜெபியுங்கள்

சபை நிறுவப்படாத அநேக இடங்களில் மிஷனெரிகள் பணிபுரிகின்றனர். தங்கள் மதத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தாலும் மூடநம்பிக்கையிலும் நூதன கருத்திலும் மூழ்கிகிடக்கும் மக்களிடையே அவர்கள் ஊழியம் செய்கின்றனர்.

நற்செய்தியறிவிக்கும் வாய்ப்புகளைத் தேடும் பொழுது அவர்கள் ஆவிக்குரிய போராட்டத்தில் சிக்குகிறார்கள்.

ஜெபியுங்கள்

புத்துணர்ச்சி: வேதவசனங்கள் மூலம் தேவன் பேசி, தினமும் தன்னைப்பற்றியப் புதிய கருத்தைக் கற்றுக்கொடுக்கவும், அவர்களைத் தம் ஆவியினால் புதுப்பிக்கவும் ஜெபியுங்கள்.

சகிப்பும் மனபலமும்: சோதனைகளைச் சகிக்கவும் பிசாசின் தாக்குதலுக்கு எதிர்த்துநிற்கவும் தேவபலம் கிடைக்க ஜெபியுங்கள்

எதிர்ப்பு பெருகிவருவதைக் கண்டாலும் அவர்கள் நிலைத்துநின்று தங்கள் பணியில் தொடருவதற்கு வேண்டிய மனவுறுதிக்காக ஜெபியுங்கள் மகிழ்ச்சி:

சிருஷ்டிப்பிலும் தங்கள் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளிலும் தேவகிரியைக் கண்டு ஆவியானவர் அருளும் மகிழச்சியினால் அவர்கள் நிரப்பப்பட ஜெபியுங்கள்.

3.சக ஊழியர்களோடு கொணடுள்ள உறவுக்காக ஜெபியுங்கள்

ஊழியத்தில் குழுக்களே மையமாகும். கிறிஸ்துவுக்காக தங்கள் பகுதிகளில் ஒருங்கிணைந்து தாக்கத்தை ஏற்படுத்தும்படி, குழுக்களில் பணிபுரிய ஊழியர்களை அனுப்புவது அருட்பணித்தலைவர்களின் பொறுப்பாகும்.

தீர்மானங்கள் எடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் குழுத்தலைவர்களுக்கு ஞானம் தேவை.

ஜெபியுங்கள்

அருட்பணித்தலைவர்களுக்காக: குழுக்களுக்காக:

ஒருவருக்கொருவர் ஊழியம் செய்துகொண்டு ஒருமைப்பாட்டுடனும் அன்புடனும் இருக்க ஜெபியுங்கள்.

குழுத்தலைவர்களுக்காக: சீரியமுறையில் குழுஉறுப்பினர்களுடன் தகவல்தொடர்பு வைத்துக்கொள்ளவும், தீர்மானங்களை எடுப்பதிலும் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் தேவஞானம் கிடைக்கவும் ஜெபியுங்கள்

அலுவலகங்கள் இங்குள்ள குழுக்கள் கர்த்தரில் பலப்படுத்தப்படவும், ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தவும் ஜெபியுங்கள்.

4.மனதிலும் உடலிலும் பலப்பட ஜெபியுங்கள்:

தனிமையும், மாறுபட்ட கலாச்சாரமும் மனவெழுச்சி அழுத்தத்தை உண்டாக்குகின்றன.

மதம், கலாச்சாரம், சமூகம் மற்றும் அரசியல் வாழ்வை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் போது,சமூக அழுத்தம் அதிகமதிகமாகத் தோன்றலாம். உடல் நலத்துக்காகவும் உடல்பாதுகாப்புக்காகவும் ஜெபிக்க வேணடும்

ஜெபியுங்கள்

உடல்நலமும், பாதுகாப்பும்: தனிமையான சூழ்நிலையிலுள்ள மிஷனெரிகள் உடல்பலத்துடனும், நலத்துடனும், பாதுகாப்புடனும் இருக்கும்படியும், உபத்திரவம் வரும்போது அவர்களுக்குத தேவையான உதவி கிடைக்கும்படியும் ஜெபியுங்கள்

சமுதாய தேவைகள்: சமுதாய நிகழ்ச்சிகளில் தகுந்த ஞானத்தோடு அழைப்பை ஏற்று பங்கு கொள்ளவும், தக்க வேளையில் சரியான நிலை எடுக்கவும் ஜெபியுங்கள்

பிள்ளைகள்: மிஷனெரிகளின் பிள்ளைகள் உடல், மனவெழுச்சி மற்றும் ஆவிக்குரியரீதியில் பாதுகாக்கப்பட ஜெபியுங்கள்

ஆபத்துகள்: ஆபத்து நிறைந்த சூழ்நிலைகளில் மிஷனெரிகள் தேவசமாதானத்தையும், வல்லமையையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள்

5. குடும்ப உறவுகளுக்காக ஜெபியுங்கள்

மிஷனெரிகள் தங்கள் குடும்பங்களுக்குள் நல்ல உறவைக் கட்டிக்காக்க வேண்டுவது அவர்கள் சாட்சி பகர்வதற்கு முக்கியமாகும்.

தனிமையோடு போராடும் தனி மிஷனெரிகளுக்காகவும்,தங்கள் குடுப்பங்களைப் பற்றிய நினைவுகளால் துன்புறுபவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.

தனிநபராக இருப்பதை அடிக்கடி சந்தேகிக்கும் ஒரு கலாச்சாரத்தில் இவர்களுடைய முன்மாதிரியும் வாழ்க்கைமுறையும் ஒரு தீவரசாட்சியாக விளங்க ஜெபியுங்கள்

ஜெபியுங்கள்

தகவல் தொடர்பு: மிஷனிரிகளின் குடும்ப உறவுகளுக்காக - அதில் அழுத்தங்கள் இருந்தாலும் ஒருவரையொருவர் பரிந்து கொண்டு ஒருவரோடொருவர் சீரான முறையில் தொடர்பு வைத்துக் கொள்ள - ஜெபியுங்கள்

தனிமிஷனெரிகளின் கவலைகள்: தனிமிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்டுவர்களுக்காக, குடும்ப உறவினர்களின் நினைவால் வாடுபவர்களுக்காக, தனிமையுணர்வோடு போராடும் தனிமிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்

நெருக்கிய உறவினர்கள்: நற்செய்திப்பணிக்காகப் பிரிந்து வந்துவிட்ட மிஷனெரிகளின் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.

குறிப்பாக, கிறிஸ்தவரல்லாத உறவினர்களையும், மிஷனெரிப் பணியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் கவலைப்படும் குடும்பங்களையும் ஜெபித்தில் நினைவுகூருங்கள்.

6.மொழியைக் கற்றுக்கொண்டிருப்பவர்களுக்காக ஜெபியுங்கள்

நற்செய்தியை மக்களுக்குத் தெளிவாகச் சொல்வதற்காக, மிஷனெரிகள் அவர்கள் மொழியை நன்கு கற்கவேண்டியுள்ளது. மாநிலமொழியையும் அந்தந்தப் பகுதி வரிவடிவமில்லாத மொழியையும் கற்பது வாழ்நாள் முழுவதும் நடைபெற வேண்டிய ஒன்று.

ஜெபியுங்கள்

தொடர்புகள்: தங்கள் நண்பர்களுடன் நற்செய்தியைத் தெளிவாகப் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றபடி மிஷனெரிகள் அவர்கள் மொழியைக் கற்றுக் கொள்வதில் ஆர்வங்கொள்ளும்படி ஜெபியுங்கள்

நேரத்தை ஆதாயப்டுத்துதல்: மிஷனெரிகள் தங்கள் மொழித் திறமையை வளர்த்துக்கொள்ளத் தக்கமுறையில் அந்தந்தநாள் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்பட ஜெபியுங்கள்

குடும்ப வாழவு: குடும்பப் பொறுப்புகளுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ள மிஷனெரித் தம்பதியர்களுக்காக ஜெபியுங்கள்.

நண்பர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவும், மொழியைக் கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு நேரம் கிடைக்க ஜெபியுங்கள்

மனவுறுதி: மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கும் மிஷனெரிகள் கடைசிவரை மனவுறுதியோடிருக்க ஜெபியுங்கள்

7. மக்களுக்காகவும் அவர்களுடைய மாநிலங்களுக்காவும் ஜெபியுங்கள்

புதுவிசுவாசிகள் தங்கள் குடும்பங்களிலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றனர்.

அவர்கள் உறுதியாய் நிலைத்திருக்க, சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவைப் பின்பற்றி தங்கள் விசுவாசத்தில் முதிர்ச்சி பெற்றவர்களாயிருக்க அவர்களுக்குத் தைரியம் இருக்க வேண்டும். அதிகாரத்திலுள்ளோர், நற்செய்தி இலகுவாகப் பரவுவதைத் தடைசெய்கிறார்கள்.

செய்தித்தாள்கள், பத்திரிக்கை கட்டுரைகள் மற்றும் தெலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்காவும் அவற்றின் தலைவர்களுக்காகவும் எவ்வாறு குறிப்பாக ஜெபிப்பது என்பதுபற்றிய கருத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜெபியுங்கள்

திறந்தமனங்கள்: கிறிஸ்துவைப்பற்றி அறியாதவர்கள் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போதும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிகழச்சிகளைக் கானும்போதும், இணைதளத்தின் மூலம் தொடர்புகொள்ளும் போதும் அல்லது கிறிஸ்தவர்களைப்பற்றி அறியவரும் போதும் திறந்தமனதுடன் இருக்க ஜெபியுங்கள்

விசுவாசமும் தைரியமும்: நற்செய்தியைக் கேட்டவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விசுவாசமும் தைரியமும் கொள்ள ஜெபியுங்கள்

உள்ளூர் கிறிஸ்தவர்கள் தீவிர சீடர்களாக மாற உதவுபவர்களுக்கு ஞானம் கிடைக்க ஜெபியுங்கள்

வாய்ப்புகள் மாநிலங்களில் புதிய "வாசல்கள்" திறிக்கப்படவும அடைபட்டதுபோல் தோன்றும் இடங்களில் புது சுதந்திரத்திற்காகவும் ஜெபியுங்கள்

அதிகாரிகள் அதிகார்த்திலுள்ளோர் கிற்ஸ்துவ அருட்பணிகளைத் தடைசெய்யும் அரசுக்கொள்கைகளை உருவாக்காதபடி ஜெபியுங்கள்.

அதிகாரிகள் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய உண்மைகளுக்கத் திறந்தமனதுடன் இருக்கவும், மிஷனெரிகளுக்கு குடியிருப்பு அனுமதி முதலிவற்றை தடங்கலின்றி வழங்கவும் ஜெபியுங்கள். தேவையான இடங்களில் கர்த்தர் இடைபடவும் ஜெபியுங்கள்

கருத்துகள் இல்லை: