புதன், 28 ஜனவரி, 2009

என்ன நடக்கிறது வட இந்தியாவில்?

தற்போது செய்திதாள்களில் 'வட இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனெரிகள் மற்றவர்களை கட்டாய மதம் மாற்றம் செய்கின்றனர்' என்ற செய்தியை அடிக்கடி வெளியிடுகின்றனர்.

நான் வேதாகம மொழி பெயர்ப்பு மென்பொருள் ஊழியத்தில் இருப்பதால் வட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு ஊழியங்களை பற்றிய ஒரு விரிவான கட்டுரை எழுத முற்பட்டு இருக்கிறேன்.

இது வட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உங்களுக்கு கூறும்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஐரோப்பிய கிறிஸ்துவம் மிஷனெரிகளின் வருகை காரணமாக பாரதத்தின் தென் பகுதியில் ஆரம்பித்தது.

அவர்களின் அயராத பணியால் தென்பகுதியின் கடலோர பகுதிகளில் ஒரளவு மக்கள் தங்கள் பாவ வழிகளை விட்டு மனம் திரும்பி இயேசுவை ஏற்றக் கொண்டனர் சிலர்.

இவ்வாறு சிறிது சிறிதாக கிறிஸ்துவம் பாரதத்தில் பரவத் தொடங்கியது. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை.( எல்லா ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்கள் இல்லை)

அவர்களின் ஆட்சி அதிகாரத்தை கிறிஸ்துவம் பாதிக்காதவரை அதை அனுமதித்தனர். இருந்தாலும் ஒரு சில இடங்களில் கிறிஸ்துவத்தை அவர்கள் தடை செய்தனர்.


தங்கள் சமுதாய பணிகளான- மருத்துவம், கல்வி, இலக்கியசேவை என பல வழிகளில் எல்லா மக்கள் மத்தியிலும் கிறிஸ்துவத்தை பற்றிய ஒரு நல்ல எண்ணத்தை உண்டு பண்ணியிருந்தனர்.

கத்தோலிக்கர்கள் மற்றும் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள் நிறுவிய கல்வி கூடங்கள், மருத்துவமனைகள் மூலமாக அனைவரும் பயன் அடைந்துவந்தனர்.

உயர்ஜாதி மக்களுக்கு மட்டும் கல்வி என்று இருந்த நிலை மாறி, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைக்கும் படி செய்தனர். இதற்காக அவர்கள் செய்து வந்த வேதாகம மொழிபெயர்ப்பு பணி மிகவும் உதவியது.

(இந்தியாவில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகம்.)

ஆங்கிலேய அரசாங்க பணிகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் அவர்களும் இதை தடை செய்ய விரும்பவில்லை.

ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒடுக்கப்பட்டபோது கிறிஸ்துவ மிஷனெரிகள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர் அதற்காக அவர்கள் சிறை தண்டனையும் பெற்றனர்.

திராவிட பகுதிகளில் உள்ள மக்கள் எப்போதும் ஒரு திறந்த மனப்பான்மை உடையவர்களாய் இருந்தபடியால் பொதுவாக அவர்கள் கிறிஸ்துவத்தை எதிர்த்ததில்லை. இவ்வாறு பாரதத்தின் ஒரு பகுதியில் மட்டும் அதிவேகமாக நற்செய்தி பரவ தொடங்கியது.


வடக்கு தேய்ந்தது தெற்கு வாழ்ந்தது.

தற்போது உள்ள பெருளாதார சுழ்நிலையில் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்கள் நல்ல நிலையில் உள்ளன(ஒரு வேளை கணினி சார்ந்த துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம்). அதேபோல்தான் கிறிஸ்தவமும்.

தென்பகுதியில் நற்செய்தி பரவத்தொடங்கிய அதேசமயத்தில் வடபகுதியின் சில பகுதிகளில் , குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும் ஒரளவு மக்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டனர்.

இருந்தாலும் அனேக பகுதிகளில் மிஷனெரிகள் எதிர்ப்பைச் சந்தித்தனர்.

வடபகுதியில் தென்பகுதியை விட அதிகமான ஜாதி அடுக்குகள் இருந்தன, தாழ்த்தப்பட்ட மக்கள் விலங்குகளை விட மிகக்கேவலமான முறையில் நடத்தப்பட்டனர்.

இதனால் அவர்கள் மெதுவாக கிறிஸ்துவத்தை நாடி வரத்தெடங்கினர். அவ்வாறு வருபவர் களில் ஒரு சில பேர் இரட்சிக்கப்பட்டு இயேசுவை பின்பற்றத் தொடங்கினர்.

இதன் காரணமாக வட இந்தியாவில் கிறிஸ்தவம் எனப்படுவது தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாக கருதப்பட்டது. மேலும் ஆங்கிலேயர்கள் மாட்டுக்கறி உண்பதால் அவர்களும் அவர்கள் மதமும் தாழ்த்தபட்டவர்களுடையதாக கருதப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை பறைங்கியர் என்றும் கூறுவதன் காரணமும்கூட இதுதான்.

இதுதவிர அனேக காரணங்களை வட இந்தியாவில் நற்செய்தி பரவத்தடையாக இருந்ததாக கூற முடியும். ஆனால் அவ்வாறு கூறுவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் என்னிடம் இல்லை.

சுதேசி மிஷனெரி இயக்கங்கள்

ஐரோப்பிய மிஷன்களின் ஊழியத்தால் தென் தமிழகம் மற்றும் கேரளாவிலும் ஒரு எழுப்புதல் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உருவானது.

இதன் விளைவாக அனேக சுதேசி மிஷன் இயக்கங்கள் மலர்ந்தது.( மேலும் தகவலுக்கு திருநெல்வேலிக்கு கிறிஸ்துவம் வந்தது- என்ற நூலை படிக்கவும்).

குறிப்பாக IMS இந்தியாவில் முதல் சுதேசி மிஷனெரி இயக்கங்கள் உருவானது.

அந்த இயக்கங்கள் தமது ஊழியஙக்காரர்களை மாநிலத்தின் பல பகுதிக்கும் நற்செய்தியைச் சொல்ல அனுப்பி வைத்தது. இவ்வாறு நம் இந்திய சகோதரர்களுக்கு நற்செய்தி சொல்ல நாமே புறப்பட்டோம்.

சுதந்திரத்திற்கு பிறகு

நம் பாரத தேசத்தின் சுதந்திரத்திற்கு பிறகும் அனேக ஜரோப்பிய மிஷனெரிகள் இங்கு இருந்தாலும், இந்திய அரசங்கத்தின் கட்டளைக்கு இணங்க மெதுவாக அவர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்லத் தொடங்கினார்கள்.

சுதேசி மிஷனெரி இயக்கங்களின் வளர்ச்சியாலும், ஜெபிக்கும் சபைகளாலும், மக்களாலும் நற்செய்தி எந்த வித இடர்பாடுகளும் இன்றி செல்லத் தொடங்கியது.

இதேசமயத்தில் வடஇந்தியாவின் பல பகுதிகள் இருண்ட நிலையில், சந்திக்கப்படாத மக்கள் அதிகம் இருக்கும் பகுதியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் சில அலுவலர்கள் மற்றும் பிற அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் இணைந்து சென்னை கடற்கரையில் சந்திக்கப்படாத மக்களுக்கு என ஜெபிக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு அவர்கள் ஜெபிக்கும்போது வட இந்திய பகுதிகளை குறித்த தேவனின் திட்டத்தை புரிந்துகொண்டனர், இதன் விளைவாக FMPB (நண்பர் சுவிஷேச ஜெபக் குழு) என்ற சுவிஷேச இயக்கத்தை தங்கள் சொந்த பணத்தின் முலம் ஆரம்பித்தனர்.

தத்தமது வேலை இராஜினாமா செய்து அதன்முலம் வரும் பணத்தைக் கூட இயக்கத்தின் வளர்ச்சிக்கென்று கொடுத்தனர்.

இந்த சமயத்தில் CSI-யில்( தென் இந்திய திருச்சபையில் ஏற்பட்ட எழுப்புதலின் காரணமாக அனேக கிறிஸ்தவர்கள் இந்த இயக்கத்தில் சேரத் தெடங்கினர்.

1977-ஆண்டுவாக்கில் FMPB -தமது சுமார் நாற்பது ஆயிரம் செலவில் முதல் ஒலித் தகட்டை வெளியிட்டது. காலத்தால் அழியாத சிறந்த பாடல்களை சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் தந்தார்கள். இதில் வரும் பாடல் வரிகளான

"கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ய மேன்மைக்காய் கஷ்டப்பட்டவர்கள் நஷ்டப் பட்டதில்லை"

மற்றும்

"மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி உண்டே
சிந்தையில் ஆத்தும பாரம் கொண்டு சேருவோம் வரீர் திருசபையே"

இந்த பாடல்கள் இன்றும் கூட நம் சிந்தனையை தூண்டும் பாடலாக உள்ளது.

இந்த பாடல்கள் 70-80 களில் தமிழகத்தில் சபைகளில் எழுப்புதல்களை கொண்டு வந்தன. அந்த பாடல்கள் காலம் பல கடந்து இன்றும் சபைகளில் விரும்பி பாட படுகின்றன.

கருத்துகள் இல்லை: