அவுட்லுக் (Outlook) என்ற பிரபலமான சஞ்சிகையின் பதிப்பாசிரியர் ஆனந் மகாதேவன் என்பவர்
நான் கிறிஸ்த்வனாக மாறியது ஒரு மதமாற்றம் அல்ல அது மன மாற்றம் என்கிறார்.
தனக்கு நேர்ந்த மனமாற்ற அனுபவத்தை மிகவும் ருசிகரமாக இந்துவெறியர்களின் அபத்தங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் பதித்துள்ளார்.
நான் ஒரு பிராமணணாக பிறந்தேன். நான் ஒரு புரோகிதரின் பேரனாக இருந்தேன் அவரை மிகவும் நேசித்தேன்.
நான் நன்றாக படித்தவன். என்னுடைய தற்போதைய பணி நான் எப்படி அறிவுள்ளவன் என்பதை குறிக்கிறது.
நான் போதுமான வசதியுடையவன் என்னுடைய வருமானம் என்னை சமுதாயத்தின் உயர் நடுத்தர மக்கள் வகையில் வைத்துள்ளது.
அது என்னை உயர்ந்த ஜாதியான பணக்காரனாக மாற்றும் என்று அநுமானிக்கிறேன்.
வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் நான் ஏதோ தாழ்த்தப்பட்ட பழங்குடியோ அல்லது வறுமையில் வாடும் பரிதாபமான ஏழையோ இல்லை.
இருந்த போதிலும் நான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதை தெரிந்து கொண்டேன்.
உலகம் என்னை நான் கிறிஸ்தவத்திற்கு மதம்மாறியவன் என்று சொல்லும். ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் கிடையாது.
இயேசு கிறிஸ்து மூலமாக கடவுள் மீதான என்னுடைய நம்பிக்கையை ஒரு மதம் என்பதை விட ஒரு உறவாகத்தான் பார்க்கிறேன்.
என்னை யாரும் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ மதம் மாற்றவில்லை என்று பதிவுகளுக்காக நான் தைரியமாக கூறமுடியும்.
நான் ஒரு இந்தியன் என்று சொல்லும் தேசிய அடையாளத்தினிமித்தம் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.
மேலும் என்னுடைய கலாச்சாரத்தின் படி நான் ஒரு இந்துவாக அடையாளம் காட்டப்டுவதில் மிகுந்த சமாதானம் உடையவனாக இருக்கிறேன்.
என்னுடைய பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயரையுடையவனாகத் தான் இருக்கிறேன்.
என்னுடைய நம்பிக்கையில் பங்கு வைக்கும் என் மனைவியும் தன்னுடைய இந்து பெயரோடு தான் இருக்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருக்கும் நல்ல அருமையான் இந்து பெயர்களைத் தான் வைத்துள்ளோம்.
ஒரு வேளை இந்த பகுதியை வாசிக்கும் என்னுடைய சக பணியாளர்கள் மற்றும் மிகவும் பழக்கமானவர்களுக்கு இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம்.
அவர்களுக்கு என்னுடைய நம்பிக்கைப் பற்றி அறிகுறிகள் கிடையாது பொதுவாக நான் யாரிடம் அதை அறிவிக்கப் போகிறதில்லை.
ஆனால் ஒரு வேளை யாராவது என்னிடம் என் வாழ்க்கையில் எப்போதும் நிரம்பியிருக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் என்ன காரணம் என்று கேட்டால் நான் மிகவும் சந்தோஷத்தோடு அவர்களிடம் அதை பகிhந்து கொள்ளுவேன்.
நான் இந்த பகுதியை எழுதுவது ஒரு முக்கியமான குறிப்பை வலியுறுத்துவதற்குத்தான் -
என்னுடைய மாற்றம் என்பது மதத்தை மாற்றியது அல்ல ஆனால் ஒரு இதய மாற்றம் என்பதாகும்.
இதை தெளிவாக விளக்குவதற்கு நான் மற்ற பிரமாண சிறுவர்களைப் போல் சென்னையில் சிறுவனாக இருந்த நாட்களுக்கு செல்ல வேண்டும்.
ஒரு சிறந்த புரோகிதராக இருந்த என்னுடைய தாத்தா என்னை எப்பொழுதும் கவரக் கூடியவராக இருந்தார்.
நான் அவர் மீது முழு அன்பு கொண்டாடினேன் நடக்கப் பழகுபவனாக எப்பொழுதும் அவருடன் ஒட்டியிருந்தேன். அவரும் என்னை வெகுவாக நேசித்தார்.
என்னுடைய எந்த விருப்பத்தையும் அவர் நிறைவேற்றாமலிருந்ததில்லை.
ஆனால் என்னுடைய ஆரம்ப காலங்களில் அவர் தீவிதமாக ஈடுபட்ட வந்த மதத்தோடுகூட என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை.
பிறகு, என்னுடைய பள்ளி நாட்களில் நான் அவரோடு கூட என்னுடைய கோடை விடுமுறை செலவிட்டேன்.
அவருடன் காவேரியில் இறங்கி ஆசாரங்களை அனுசரித்து வந்தது போன்ற பல நினைவுகள் இன்றும் என் மனதில் மறையாமல் இருக்கிறது.
நான் அநேக ஸ்லோகங்களை கற்றேன் இன்றும் அவற்றில் சில எனக்கு ஞாபகம் இருக்கிறது.
ஆனால் அவற்றில் எதையும் நான் புரிந்து கொள்ளவில்லை எதுவும் என்னை கடவோளோடு இணைக்கவில்லை.
நான் 19 வயதாக இருந்தபோது, நான் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் என்னுடைய கிறிஸ்தவ நண்பன் அவனது வீட்டில் நடக்கும் ஜெபத்திற்கு அழைத்தான்.
ஒரு வேளை அவன் வீட்டின் ஏதாவது பார்ட்டிக்கு அல்லது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாலும் நான் போயிருப்பேன்.
அவனது வீட்டில் அவனும் அவன் சகோதரியும் எனக்காக ஜெபித்தார்கள். அது ஒரு எளிய ஆனால் மகிழ்ச்சியான உரையாடல் கடவுளுடன், ஐந்து நிமிடம் தான் நீடித்தது.
அதன் முழுவரிகளும் எனக்கு நினைவிலில்லை ஆனால் அவர்கள் என்னுடைய வாழ்க்கை, எதிர்காலம், தொழில் மற்றும் குடும்பத்திற்காக ஜெபித்தார்கள்.
அது ஒரு சாதாரண நிகழ்வுதான்- எந்த அற்புதமோ தேவ தூதர்களோ வரவில்லை.
அவர்கள் செய்ததெல்லாம் தங்களுடைய ஊக்கமான கண்ணீரின் ஜெபத்தை சர்வ வல்லமையுள்ள இறைவனிடமும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுத்தார்கள்.
அவர்கள் ஆமென் என்று சொன்னபோது, இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் ஏற்பட்டதை உணர்ந்தேன்.
இது கடவுளடனான ஒரு விசுவாச சந்திப்பு இதை புரிந்து கொள்வதற்கோ, காரணப்படுத்துவதற்கோ அல்லது விவரிப்பதற்கோ நான் முயற்சி செய்வதில்லை.
நான் இதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் இது என்னுடைய விசுவாசம் நான் நம்புவதற்காக தெரிந்து கொண்டேன்.
அந்த மாலை வேளையில் நான் என்னுடைய மதத்தை மாற்றவில்லை, அதற்கு பின்னும் இல்லை. இந்து என்னுடைய அடையாளம் ஆகும் மதம் இல்லை, இன்று வரை அப்படித்தான்.
அந்த மாலை வேளையில் நான் பெற்றுக் கொண்ட கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. மாறாக அது இயேசுவுடனான ஒரு தீவிர உறவாகும்.
கடந்த 15 வருடங்களாக நான் இந்த இயேசுவை இன்னும் நெருக்கமாக அறிந்து கொண்டேன். அவர் தான் பாவமற்ற பரிசுத்த தேவ குமாரன் என்பதை அறிவேன்.
என்னுடைய தொழில், வாழ்க்கை, கனவுகள், வெற்றி தோல்விகள் இன்னும் என் உறவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் நான் பேசக்கூடிய ஜெபிக்ககூடிய என்னுடை மிகச் சிறந்த நண்பர் என்று அறிவேன்.
ஒரு வேளை நான் ஒரு நல்ல புத்தகத்தை படித்தாலோ, நல்ல ஒரு சினிமாவைப் பார்த்தாலோ, அல்லது ஒரு நல்ல ஹோட்டலில் சுவையான உணவை உண்டாலோ என் எல்லா நண்பர்களுக்கும் அதைப் பற்றிச் சொல்லுவேன்.
இயேசுவில் நான் ஒரு மிகச் சிறந்த ஆச்சரியமான நண்பனை, வழிநடத்துபவரை, தலைவரை, இரட்சகரை மற்றும் தெய்வத்தை கண்டிருக்கிறேன்.
நான் எப்படி அவரைப் பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் சொல்லாமல் இருக்கமுடியும்?
ஒரு வேளை யாராவது கவனித்து, இயேசுவில் விசுவாசம் வைக்க கடந்து வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
உலகம் இதை மதமாற்றம் என்று சொல்லும் ஆனால் நான் என்னுடையதைப் போல இதை ஒரு இதய மாற்றம் என்றுதான் கூறுவேன்.
ஆனால் நான் சொல்லுவதையெல்லாம் கேட்கும் படி யாரையும் நான் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோமாட்டேன்.
அப்படி செய்வது என்னுடைய விசுவாசத்திற்கு அர்த்தமற்றதாகும்.
ஆனால் எந்த வஞ்சனையும், கட்டாயமும், லஞ்சமும் இல்லாமல் என்னுடைய விசுவாசத்தை பிரசங்கிப்பதற்கும், கடைபிடிப்பதற்கும் எனக்கு சட்டப் பூர்வமாக அதிகாரமுண்டு.
இப்படிப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் கூட ஒவ்வொரு நாளும் மிக கொடுமையான முறையில் இந்த சிறந்த இந்திய நாட்டில் மீறப்படுவதென்பது மிகவும் வேதனையளிக்ககூடியதாயுள்ளது.
(ஆனந்த் மகாதேவன் பதிப்பாசிரியர், அவுட் லுக்)
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக