திங்கள், 5 ஜனவரி, 2009

குரான் முரண்பாடுகள்

மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை தூதன் சொன்னதாக குர்-ஆனில் இரண்டு இடங்களில் வருகிறது குர்-ஆன் 3:42 , 45 மற்றும் குர்-ஆன்19:17-19.

மரியாளிடம் பேசியது ஒரு தூதனா? அல்லது பல தூதர்களா?குர்-ஆன் இயேசுவைப் பற்றிப் பேச பேச பல தவறுகளையும், முரண்பாடுகளையும்செய்துள்ளது.

குர்-ஆன் 3:42, 45 வசங்கள் சொல்கின்றன "மரியாளிடம் பலதூதர்கள் பேசினார்கள்". குர்-ஆன் 19:17-19 வசங்கள் சொல்கின்றன"மரியாளிடம் ஒரு தூதன் பேசினான்".

1. பல தூதர்கள் பேசினார்கள் (குர்-ஆன் 3:42, 45):அல்லா கீழ்கண்ட வசனங்களில் "மலக்குகள்" (தூதர்கள்) என்று பன்மையில்சொல்வதைக் காணலாம்.3:௪௨

(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ்உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும்ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட(மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்),3:45 மலக்குகள் கூறினார்கள்;

'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துவரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி)நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்.

அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும்(இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

2. ஒரு தூதன் பேசினான் குர்-ஆன் 19:17-19:கீழ்கண்ட வசனங்களில் அல்லா ஒரு தூதனை அனுப்பியதாகவும், மரியாள் ஒருதூதனிடம் பேசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.19:17

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒருதிரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை(ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில்தோன்றினார்19:18

(அப்படி அவரைக் கண்டதும்,) 'நிச்சயமாக நாம் உம்மை விட்டும்ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால்(நெருங்காதீர்)" என்றார்.19:19

'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரைஉமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.மேலே சொன்ன வசங்களை நாம் பார்த்தால், இந்த முரண்பாடு மிக சுலபமாகபுரியும்.

சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அல்லா இரண்டுமுறை தூதர்களைஅனுப்பினார். முதல் முறை பல தூதர்களை அனுப்பியதாகவும், மரியாளின்சந்தேகம் முழுவதுமாக தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு தூதனை அனுப்பியதாகச்சொல்கிறார்கள்.

ஆனால் இதுவும் சரியான பதிலில்லை. காரணம் இரண்டு முறையும்மரியாள் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்.௧௯

:20 அதற்கு அவர் (மர்யம்), 'எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான்நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்உண்டாக முடியும்?" என்று கூறினார்3:47

(அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும்தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாகமுடியும்?"

(அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான்நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன்அதனிடம் 'ஆகுக" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.

"எனவே, இது ஒரு குர்-ஆனின் முரண்பாடு தான். சில இஸ்லாமியர்கள்சொல்கிறார்கள், தூதர்கள் இரண்டு முறை மரியாளை சந்திக்கவில்லை, ஒருமுறைதான்.

பின் ஏன் அல்லா "தூதர்க்ள்" என்றுச் சொல்கிறார் என்றுகேட்டால் ? சொல்லப்பட்ட செய்தியின் நிமித்தமாகவும், காபிரியேல் தூதனின்தனித்தன்மையின் நிமித்தமாகவும் மரியாதைக்காக "தூதர்கள்" என்றுச் சொன்னார்என்றுச் சொல்கிறார்கள்.

இதுவும் ஒரு சரியான பதிலாக இல்லை.உதாரணம்: "முதலமைச்சர் வந்தார்" என்பதைவிட "முதலமைச்சர் வந்தார்கள்"என்று பன்மையில் மரியாதைக்காக சொல்வார்கள் என்று உதாரணம் காட்டுவார்கள்சில இஸ்லாமியர்கள்.

இந்த உதாரணத்திலும் உள்ள ஒரு தவறு என்னவென்றால், "பன்மை" சேர்க்கப்படுவதுபெயர்ச்சொல்லுக்கு (NOUN க்கு) இல்லை வினைச்சொல்லுக்கு (VERB க்கு)ஆகும்.

ஒரு முதலமைச்சரை குறிப்பிடும் போது :"முதலமைச்சர்கள் வந்தார்கள்" என்றுச் சொல்லமாட்டார்கள், ---> NOUN க்குபன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு, இது ஒருவரைக் குறிக்காது.

"முதலமைச்சர் வந்தார்கள்" என்று தான் ஒரு முதலமைச்சருக்கு மதிப்புதரும்போது சொல்வார்கள். VERB க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அல்லா "தூதர்கள்" என்று NOUN க்கு பன்மை சேர்த்துயிருப்பதினால்,கண்டிப்பாக பல தூதர்களை குறிக்கிறதே தவிர மதிப்பின் காரணமாக அல்ல.இதைப்பற்றி இஸ்லாமியர்களின் பதில் என்ன? அதற்கு மறுப்பு என்ன என்பதைஇங்கு விவரமாக காணலாம்.

நடந்து முடிந்த நிகழ்ச்சியை சொல்லும் போது குர்-ஆன் பல தவறுகளையும்முரண்பாடுகளையும் செய்துள்ளது. எனவே, குர்-ஆன் சொல்லும் இயேசுவின்பிறப்பின் நிகழ்ச்சி ஒரு திரித்து சொல்லப்பட்டது என்பதுதெளிவாகப்புரியும்..

கருத்துகள் இல்லை: