குர்-ஆன் 3:443:44 (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்;இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;
மேலும், மர்யம் யார்பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி ) தங்கள்எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை;
(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.ஊரிம் தும்மீம் போட்டுப்பார்த்து முடிவு எடுப்பது யூதர்கள் முறை:வில் எறிந்து முடிவு எடுப்பது அரேபியர்களின் வழக்கம், யூதர்களின்அல்ல.
யூதர்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டுமானால், தீர்க்கதரிசிகளிடம்கேட்பார்கள், அல்லது ஆசாரியர்களிடம் உள்ள ஊரீம் தும்மீம் என்ற கற்கலை(like Dise) போட்டு பார்ப்பார்கள்.
இதன் மூலமாக ஒரு காரியத்தை செய்யலாமா,இல்லையா என்பதை அறிந்துக்கொள்வார்கள். இது தான் கர்த்தர் போதித்த விதம்.(பார்க்க யாத் 28:30, லேவி 8:8, எண் 27:21, உபா 33:8, 1 சாமு 14:41,23:9-12, 28:6, எஸ்றா 2:63)
லேவி 8:8 அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம்தும்மீம் என்பவைகளையும் வைத்து,எஸ்றா 2:63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும்,
இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச்சொன்னான்.
வில் எறிந்து முடிவு எடுப்பது அரபியர்களின் முறையாகும். மரியாளின்வளர்ப்பை யார் பார்க்கவேண்டுமென்று, வில் எறிந்து பார்த்தார்கள் என்றுச்சொல்வதிலிருந்து, குர்-ஆன் இன்னொரு சரித்திர பிழையை செய்துள்ளது.
எனவேதான் சில புத்திசாலி அறிஞர்கள், குர்-ஆனை மொழிபெயர்க்கும் போது,"எழுதுகொல் எறிந்து" பார்த்தார்கள் என்று மாற்றி எழுதுகிறார்கள்.குர்-ஆன் 3:443:44
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்;இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார்பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள்எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை;
(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.யூசுப் அலி சரியாக மொழிபெயர்த்துள்ளார்.
இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து ஆதாரம்:
முகமதுவின் தாத்தா முத்தாலிப் ஒரு முறை "ஜம்ஜம்" கிணரை சுத்தம்செய்துக்கொண்டு இருந்தார், அவர் நிறைய கஷ்டத்தை சந்தித்தார், இதனால் ஒருவேண்டுதல் செய்தார்.
இந்த வேலை நல்லபடியாக முடிந்தால், தன் 10 மகன்களில்ஒரு மகனை "ஹுபாலுக்கு(காபாவின் ஒரு விக்கிரகம்)" பலியிடுவேன் என்று.அப்படியே வேலை நல்லபடியாக முடிந்தது.
ஆனால் தன் மகன்களை இழக்கவிருப்பமில்லாமல், மகனுக்கு பதிலாக ஒட்டகங்களை தருவதாக சொல்லி, வில்எறிந்தால் அது முகமதுவின் தந்தையின் பெயரில் விழுந்தது, அவருக்கு பதிலாகஒட்டகங்களை கொடுத்தார் என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது.
வில் பற்றிய இந்நிகழ்ச்சியை இஸ்லாமிய தளங்களிலும் காணலாம்.பார்க்க : Islamic-Awareness.0rg
ஆக, முகமது, மக்காவிலுள்ள காபாவின் பழக்கவழக்கங்களை, ஆயிரம் மைல்களுக்குஅப்பால் உள்ள யூதர்களின் வழக்கமாகச் சொல்லி, மறுமடியும் ஒரு தவறை குர்-ஆனில் சேர்த்துவிட்டார்.
திங்கள், 5 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக