வேத புத்தகத்தில் பணம் மற்றும் உலக பொருள்களின்மேல் ஆசை வைத்து அழிந்து போல பலருடைய வரலாறை பார்க்கமுடியும்.
அதில் தன்னையும் அழித்து தன் குடும்பத்தையும் கல்லெறியுண்டு அழிய வைத்த ஆகான் என்னும் யூதா கொத்திரத்தானை பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
இப்படி கூண்டோடு அழிந்து போவதற்கு ஆகான் செய்த காரியம் தான் என்ன?
அவனே தன் வாயால் சொல்லும் சாட்சியின் வார்த்தைகள் இதோ:-
"கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்;(யோசுவா 7:21)
இஸ்ரவேலர்கள் எரிகோ பட்டணத்தை பிடிக்கும் பொது கர்த்தர் அவர்களிடம் எரிகோவில் உள்ள பொருட்கள் எல்லாம் சாப தீடானது என்றும வெள்ளியும் பொன்னும் மட்டும் கர்த்தருடைய போக்கிசத்திலே சேரும் என்று கட்டளை இட்டிருந்தார்.
ஆனால்
கொள்ளையில் கிடைத்த போர்வை, வெள்ளி, பொன் இவற்றால் கரவப்பட்ட ஆகான், அவற்றை இச்சித்து கர்த்தரின் கட்டளைக்கு விரோதமாக எடுத்து கொண்டு தனது கூடாரத்தின் அடியில் புதைத்துவைத்தான், அதனால் கூண்டோடு அழிந்து போனான்.
"மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்" என்று அறிக்கை செய்தும் இரக்கம் கிடைக்காமல் அழிந்து போய் எல்லோருடைய பரிதாபத்துக்கும் உள்ளன இந்த ஆகானை போல நாம் ஆகாதிருக்க அகானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கிய பாடங்கள் :
1. அன்று எரிகோவில் இருந்த பொருட்கள் போல, இந்த உலகித்தில் உள்ள பொருட்கள் எல்லாம் பிதாவினால் உண்டாகாமல் உலகத்தினால் உண்டானவை என்றும் இந்த உலகத்தின்மேல் ஒருவன் அன்பு கொண்டால் பிதவிடத்தில் அவனுக்கு அன்பு இல்லை என்று வேதம் சொல்கிறது.
"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்"I யோவான் 15,16
நான் வாழ்வதற்கு அதயாவசியமான தேவை உள்ள பொருட்கள் எதுவோ அது மட்டுமே நாம் இந்த உலகத்தில் இருந்து எடுத்து பயன்படுத்த வேண்டும்.
மேலும் வாங்கி சேர்த்துவைத்தால், புதைத்து வைத்தல், வங்கியில் வைத்தல் எல்லாம் ஆண்டவருக்கு பிரியமானது அல்ல.
நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவும் "பூமியில் உங்களுக்கு பொக்கிசங்களை சேர்த்து வைக்கவேண்டாம்" என்றும் "உன்னிடத்தில் கேட்பவனுக்கு கொடு" உன்னிடம் கடன் வாங்க விரும்புபவனுக்கு மனம் கோணாதே" என்றும் சொல்லி பண விஷயத்தில் தாராளமாக இருக்க வேண்டும் என்று கட்டளைஇட்டுள்ளார்.
எனவே உலக பொருட்கள் மற்றும் பணத்தை கையாளும் விதத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை.
2. ஆகான் செய்த இரண்டாவது தவறான காரியம் தான் பிடிபடும் வரை உண்மையை மறைத்து வைத்தது:
யோசுவா இஸ்ரவேல் ஜனங்கள் பெயரில் சீட்டு போட்டு, அவன் பெயர் வரும் வரை அவன் தன் பாவத்தை அறிக்கை செய்யவில்லை.
எனவேதான் அவன் பிடிபட்ட பிறகு பாவம் செய்தேன் என்று சொல்லியும் மன்னிப்பை பெறாமல் போனான்.
இதுவும் கிறிஸ்த்தவ ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கையே!
செய்யும் செயல் பாவம் என்று தெரிந்த பிறகும், ஆண்டவர் சமூகத்தில் அதை அறிக்கை செய்து மன்னிப்பை பெறாமல் எதாவது சாக்கு போக்கு சொல்லி நாளை தள்ளும் விசுவாசியே திருடனை போல எதிர்பாராத நேரத்தில் ஆண்டவர் வந்த பிறகு நீ எவ்வளவுதான் அழுது புரண்டு மன்னிப்பு கேட்டாலும் ஆகானுக்கு கிடைக்காது போல மன்னிப்பை பெற முடியாது. எனவே இன்றே ரகசியமான பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்புங்கள்.
3. ஆகானின் வாழ்க்கையில் இருந்து நாம் அறிய வேண்டிய இன்னொரு முக்கியமான பாடம் என்னவென்றால் அவனுக்கு இருந்த பொருளாசை அவனை மட்டுமல்ல அவன் குடும்பத்தையே அழித்தது போல ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக சேர்த்து வைக்கும் பொருள் அவன் குடும்பம் மற்றும் சந்ததிகளையும் தாக்கும் வல்லமை உடையது.
அன்று பழைய ஏற்பட்டு சபையில் அப்படி ஒருவன் இருந்ததால் அந்த சபை முழுவதுமே சத்துருக்கு எதிர்கொண்டு நிற்க முடியாயாமல் போயிற்று ஆயி மனிதர்கள் சபையில் உள்ள ஏறக்குறைய 36 பேரை வெட்டி போட்டார்கள் என்று யோசுவா 7:5 சொல்கிறது
இதில்இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யும் ஒருவன் சபைக்குள் இருந்தால் அவன் தானும் கெடுவதோடு சபையில் உள்ள பலரையும் கெடுப்பான்.
எனவே அப்படிப்பட்ட்வகள் சபையில் இருப்பதை அறிந்தால் காணிக்கைக்க்காகவும் வேறு எந்த காரணத்துக்காகவும் சபையில் வைக்கமால் யோசுவா செய்தது போல களை எடுக்கவேண்டியது மிக அவசியம்.
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக