தாவுத் (உண்மை பெயரல்ல) இந்தோனேசியாவில் வாழும் ஓர் இளம் முஸ்லிம் ஆவார். இவர் கடந்த 1991ம் ஆண்டின் ரமலான் மாதத்தில் ஒரு நாள் இரவு கனவு கண்டார்.
அதில் அவர் தனது கரங்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது இயேசுவைப் போல் உருவம் தரித்த ஒரு மனிதர் வந்தார்.
இயேசு அந்தக் கயிற்றைத் தொட்டவுடன் அது அவிழ்ந்து விழுந்தது. 'அந்தச் சிலுவையைத் தேடு' என்றார் இயேசு.
அது என்ன பொருள் என்று அறியாததால் தாவுத் 'எந்தச் சிலுவை' என்று கேட்டார். இயேசு மீண்டும் 'அந்தச் சிலுவையைத் தேடு' என்றார்.
மறுநாள் காலையில் அந்தக் கனவின் பொருள் என்ன என்று காண முற்பட்டாலும் சில தினங்களில் அவர் அதனை மறந்து விட்டார்.
ஆனால், இயேசு மறக்கவில்லை! ஈராண்டுகள் கழித்து ரமலான் மாதத்தில் தாவுதுக்கு இன்னொரு கனவு தோன்றியது.
அதில் 'அந்தச் சிலுவையைத் தேடுமாறு நான் உன்னிடம் உத்தரவிட்டேன். ஏன் நான் சொன்னதைச் செய்யவில்லை?' என்று இயேசு கேட்டார்.
அதற்கு 'அந்தச் சிலுவை எங்கே இருக்கிறது? அதனை நான் எப்படித் தேட வேண்டும்?' என்று தாவுத் மறுமொழியாகக் கேட்டார்.
இயேசு வெகு தொலைவில் உள்ள ஒரு மலையைச் சுட்டிக்காட்டி, 'அங்கே போய் தேடு' என்றார்.
அக்கனவில் தாவுத் காடுகளையும் முட்களையும் கடந்து வெகு தொலைவு ஓடிச் சென்றார்.
இறுதியாக அவர் ஒரு வெட்டாந் தரையில் அந்தச் சிலுவையைக் கண்டார். இயேசு தேடச் சொன்ன சிலுவை இதுதான்.
மறுநாள் தாவுத் மசூதி தலைவராகிய ஒரு இஸ்லாமிய குருவை(இமாம்) சந்திக்கச் சென்றார். அவரிடம் அந்தக் கனவின் பொருளை வினவினார்.
அதற்கு அந்த இஸ்லாமிய குரு, 'அந்தச் சத்தியத்தைத் தேடு' என்று பதிலுரைத்தார். அந்த இரவில் அவர் இன்னொரு கனவையும் கண்டார்.
அக்கனவில் அவர் ஒரு கிறிஸ்தவ மயானத்தைக்(இடுகாடு) கண்டார். அந்தப் கல்லரைகளின் ஒரு முனையில் அவர் சிலுவைகளைக் கண்டார்.
திடீரென்று அந்தப் கல்லரைகள் திறந்திடவே அதிலுள்ள மக்கள் இயேசு அவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்த வானத்திற்கு நேராகச் சென்றார்கள்.
தன்னிடம் அந்தச் சிலுவை இல்லாததால் அவர் அதற்குத் தயாராகவில்லை என்று தாவுத் உணர்ந்தார் .
மறுநாள் காலையில் இந்தக் கனவு அவரை மிகவும் சஞ்சலப் படுத்தியது. தனது கிராமத்திற்கு அருகில் இருந்த தேவாலயத்தின் போதகரைக் காணச் சென்றார்.
போதகர் வேதத்தைத் திறந்து, தாவுதுக்கு இயேசுவே வழியும் ஜீவனும் சத்தியமுமாய் இருக்கிறார் என்பதை உணரச் செய்தார்.
தேவாலயத்திற்குச் சில வாரங்கள் சென்ற பிறகு, தாவுத் தனது உள்ளத்தை இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்தார். ஒரு வேதாகமக் கல்லூரியில் பயின்று வரும் அவர், சக முஸ்லீம்களுக்கு சாட்சி பகர சித்தமாயிருக்கிறார்.
சனி, 24 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக