கீழே கொடுக்கப்பட்ட மேற்கோள்கள் கடந்த சில ஆண்டுகளாக செய்தித் தாள்களில் வெளியான செய்திகளாகும்.
அக்டோபர் 19, 1994 "அரப் இஸ்ரேலிய அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்கு அருகாமையில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஒரு பேருந்தில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால், 22 பேர் மரித்தார்கள் மற்றும் 48 பேர் காயமடைந்தார்கள், இந்த சம்பவம் இஸ்ரேலில் உள்ள டெலவீவ் என்ற இடத்தில் நடந்தது".
ஜூலை 18, 1995"யூதர்களின் ஏழுமாடி குடியிருப்பில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால், 26 பேர் மரித்தார்கள் மற்றும் 127 பேர் காயமடைந்தார்கள். இச்சம்பவம் அர்ஜன்டைனா பெவுனோஸ் ஐர் என்ற இடத்தில் நடந்தது".
பிப்ரவரி 26, 1993"பூமிக்கடியில் வெடித்த ஒரு குண்டினால், நியூயார்க்கில் 110 மாடி கட்டிடமாகிய மான்ஹாட்டன் உலக வர்த்தக மையம் ஆட்டம் கண்டதால், 5 பேர் மரித்தனர் மற்றும் 1000 பேருக்கு அதிகமானவர்கள் காயமடைந்தார்கள், அனேகமாயிர மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள புகை பிடித்த படிகட்டிலிருந்து தப்பி ஓடினார்கள்."
மே 4, 1992"எகிப்தில் மன்ஷிட் நசர் என்ற இடத்தில், 13 எகிப்திய கிறிஸ்தவர்கள் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
பத்து கிறிஸ்தவ உழவர்கள் தங்கள் வயல்களில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது கொலை செய்யப்பட்டார்கள். பத்து வயது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொண்டு இருந்த ஒரு கிறிஸ்தவ ஆசிரியை சுட்டு கொலை செய்யப்பட்டாள். ஒரு கிறிஸ்தவ மருத்துவர் தன் வீட்டிற்கு வெளியே கொல்லப்பட்டு கிடந்தார்".
மேலே சொல்லப்பட்ட செய்திகள் தீவிரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றிய ஒரு சில விவரங்கள் மட்டுமே.
இந்த எல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே இருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை என்னவென்றால், "அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள்".
மற்ற மத அடிப்படைவாதிகளும் வன்முறையில் அவ்வப்போது ஈடுபடுகிறார்கள், ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் "வன்முறை" மற்ற எல்லா மத அடிப்படை வாதிகளின் ஒட்டுமொத்த வன்முறையை விட மிஞ்சிவிடுகிறது.
இஸ்லாமியர்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள்?
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிறப்பிலிருந்தே மனிதாபமானம் அற்றவர்களாகவும், தீயவர்களாகவும் இருக்கிறார்களா? என்று கேட்டால், நிச்சயமாக பதில் "இல்லை" என்பது தான்.
இஸ்லாமியர்கள் மற்றவர்களைப்போல சாதாரண மக்களே. அவர்களில் தகப்பன்மார்கள் இருக்கிறார்கள், சகோதரர்கள் இருக்கிறார்கள், நல்ல மகன்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளராகவும், மற்றும் வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு பணிபுரியும் சக ஊழியர்களாகவும் அதே நேரத்தில் உங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் இப்படிப்பட்ட வன்முறையில் நடந்துக்கொள்ளும் போது அவர்கள் மனதில் என்ன நினைவுகள் ஓடிக்கொண்டு இருக்கும்?
ஒருவர் இதனை புரிந்துக்கொள்ளவேண்டுமானால், ஒரு முக்கியமான மற்றும் மிகவும் ஆபத்தான இஸ்லாமிய போதனையாகிய "ஜிஹாத் (JIHAD – HOLY WAR)" பற்றி நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.
நாம் ஒரு முக்கியமான விவரத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது:
எல்லா அரபியரும் இஸ்லாமியர் அல்லர்
எல்லா இஸ்லாமியரும் அரபியர் அல்லர்
மற்றும்எல்லா இஸ்லாமியரும்
இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அல்லர்".
நாங்கள் ஒரு மதத்தை தாக்க முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, எல்லா சமுதாயங்களையும் சீரழிக்கும் அந்த மதத்தில் உள்ள ஒரு ஆபத்தான கோட்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவர முயற்சி எடுக்கிறோம், அவ்வளவே.
ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி, தான் ஜிஹாதில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, தன் மூலமாக மற்றவர்கள் கொடூரமாக காயப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை,
அதற்கு பதிலாக "தான் தன் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுகிறான்" என்பதை மட்டுமே நினைக்கிறான். இப்படி வன்முறையில் ஈடுபடுவதினால், தனக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் கிடைக்கும் என்று கருதிவிடுகிறான்.
ஜிஹாத் (JIHAD – HOLY WAR)
இஸ்லாமியர்களின் புனிதமான கடமைகளில் ஜிஹாதும் ஒன்று. "ஜிஹாத்" என்ற வார்த்தை ஒரு அரபி வார்த்தையாகும், இதன் பொருள் "போராடுதல் (Struggle)" என்பதாகும்.
ஆக, ஜிஹாத் என்பது இஸ்லாமுக்காக போராடுவதாகும், அதாவது எதை தியாகம் செய்தாவது, எப்படியாவது போராடுவதாகும், இதில் வன்முறையும் உள்ளடக்கமே. இப்படிப்பட்ட ஜிஹாதை "புனிதப் போர்" என்றுச் சொல்வார்கள்.
வன்முறையை நியாயப்படுத்த குர்ஆனில் வசனங்களை தேட இஸ்லாமியர்களுக்கு பிரச்சனையே இருப்பதில்லை. அதே போல, ஹதீஸ்களில் இதற்கான வரிகளைத் தேட இஸ்லாமியர்களுக்கு கடினம் ஒன்றுமில்லை.
இந்த குர்ஆனும் ஹதீஸும் வன்முறையைப் பற்றி சொல்வதோடல்லாமல், அவைகளை செய்ய தூண்டுவதாகவும் இருக்கின்றன.
[குர்ஆன் என்பது இறைவனின் வேதம் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். முஹம்மது சொன்னது, செய்தது என்றுச் சொல்லி அவரது செயல்களை பதிவு செய்யப்பட்ட தொகுப்பையே ஹதீஸ்கள் என்பார்கள்.]
குர்ஆனில் ஜிஹாத் (JIHAD IN THE QURAN)
"இஸ்லாமியர்கள் அல்லாத" மக்களை தனக்கு பதிலாக பயப்படவைக்கவேண்டும் என்று அல்லா இஸ்லாமியர்களுக்கு கட்டளை தருகிறார்.
… இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; ….(8:60)
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.(9:14)
… நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும். (8:12)
ஹதீஸ்களில் ஜிஹாத்(JIHAD IN THE HADITH)
இஸ்லாமியர்கள் ஜிஹாத்தில் ஈடுபடவேண்டுமென்று முஹம்மது ஹதீஸ்களில் சொல்கிறார்.
முஹம்மதுவிடம் ஒரு முறை இவ்விதமாக கேட்கப்பட்டது: ஒரு முஸ்லீமுக்கு அல்லாவின் மீதும் அவரது தூதரின் மீது நம்பிக்கை வைக்கும் செயலுக்கு அடுத்துள்ள நல்ல செயல் எது? அதற்கு அவர் பதில் அளித்தார்: "அல்லாவிற்காக ஜிஹாதில் ஈடுபடுவது தான்". (Al Bukhari vol 1:25)
ஒரு முறை முஹம்மது சொன்னார்: "அல்லாவைத் தவிர தொழுதுக் கொள்வதற்கு வேறு யாருமில்லை என்று மக்கள் சொல்லும் வரை அவர்களோடு போரிட நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்".(Volume 9, Book 84, Number 59 )
இதே போல இப்படியும் அவர் சொல்லியுள்ளார்: அல்லாவின் மிது நம்பிக்கை வைப்பதினாலும், அவரது தூதரை நம்புவதாலும் ஒருவர் ஜிஹாத்தில் ஈடுபட வேறு எதுவும் அவரை கட்டாயப்படுத்தாது.
இது போல ஜிஹாதில் ஈடுபடுவருக்கு அல்லா பரிசு அளிப்பார் அல்லது போரில் கிடைத்ததில் பங்கு கிடைக்கும் அவர் உயிரோடு இருந்தால், ஒருவேளை மரித்துவிட்டால், சொர்க்கத்தில் அவர் அனுமதிக்கப்படுவார். (Al Bukhari vol 1:35)
முஹம்மது: ஒரு எடுத்துக்காட்டு (MOHAMMED: AN EXAMPLE)
இஸ்லாமிய நபி தான் மக்காவில் தன் புதிய மதத்தை பிரச்சாரம் செய்யும் போது, கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களிடம் சமரசத்தோடு நடந்துக்கொண்டார். அவர் இவ்விதமாக கூறினார்: ….;
"எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - …. (29:46).
ஆனால், அவரின் இப்படிப்பட்ட மனப்பான்மை அவருக்கு வலிமை வந்தவுடன் மாறிவிட்டது. இப்போது அல்லா அவருக்கு இவ்விதமாகச் சொல்கிறார்:
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.( 9:29)
கிறிஸ்தவர்களை விட யூதர்களை முஹம்மது அதிகமாக வெறுத்தார் என்று தெரிகிறது. முஹம்மது தான் வாழ் நாட்களில் யூதர்களை அழித்துவிட வேண்டுமென்றே அதிக முயற்சிகளை மேற்கொண்டார்.
முஹம்மது கூறுகிறார்: "யூதர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள், இந்த பூமி அல்லாவிற்கும் அவரது தூதருக்கும் சொந்தமானது. இந்த நாட்டை விட்டு(அரேபியா) உங்களை துரத்தப்போகிறேன், ஆகையால், உங்களிடம் ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அவைகளை விற்றுவிடுங்கள்".
முஹம்மதுவின் காலத்தில் மதினாவில் மூன்று யூத வம்சங்கள் (குழுக்கள்) இருந்தன. இவைகளில் "கயின்கா - Qaynqa " மற்றும் "பனி அல்-நதிர் (Bani-al-Nudair)" என்பவர்கள் இரண்டு யுத வம்சங்களாகும்.
இந்த இரண்டு பிரிவினர்களை முஹம்மதுவின் மனிதர்கள் முற்றுகையிட்டு பிடித்துக்கொண்டார்கள். உணவுப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள்.
அவர்கள் உயிர் பிழைக்கவேண்டுமானால், முஹம்மது சொல்வது போல செய்யவேண்டுமென்று கட்டளையிட்டார்கள்.
மற்றும் அவர்கள் மதினாவை விட்டு வெளியேற வேண்டுமென்றும், முஸ்லீம்கள் தங்களுக்கிடையில் பகிர்ந்துக்கொள்வதற்காக, தங்கள் உடமைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு செல்லவேண்டுமென்றும் கட்டாயப்படுத்தினர்.
மூன்றாவது யூத இனமான "பனி குரைஜா" ஒன்றும் தப்பவில்லை. அபூ சுஃப்யான் தலைமையில் குரைஷிகளோடு நடந்த போரில் முஹம்மது முற்றுகையில் மாட்டிக்கொண்டார்.
இந்த பனி குரைஜா குழு அபூ சுஃப்யானுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டார்கள்.
இந்த முற்றுகை ஒரு முடிவிற்கு வந்தவுடன், இவர்கள் தன் எதிரியான அபூ சுஃப்யானுக்கு உதவுவதாக ஒப்புக் கொண்டதால், முஹம்மது இந்த யூத இனத்தை மன்னிக்கவே இல்லை.
முஸ்லீம்கள் இந்த பனி குரைஜா இனத்திற்கு எதிராக வந்தனர், இவர்களின் வீதிகளை 25 நாட்கள் முற்றுகையிட்டனர்.
இதற்கு முன்பு இரண்டு யூத இனத்திற்கு முஹம்மது இட்ட நிபந்தனையைப் போல, தங்கள் உடமைகளை கொடுத்துவிட்டு, அமைதியாக நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக இவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொன்னார்கள்.
ஆனாலும், முஹம்மது இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் சைத் இபின் மோஅஜ்(Saad iben Moaz) என்ற ஒருவரை நியமித்தார்.
இந்த சைத் என்பவர் பனி குரைஜா இனத்தின் ஆண்கள் அனைவரின் தலைகள் துண்டிக்கும்படியும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்கும்படியும் மற்றும் இவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முஸ்லீம்கள் பங்கிட்டுக்கொள்ள கட்டளையிட்டார்.
மதினாவின் முக்கிய இடத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, அவைகளில் முஹம்மது இரவெல்லாம் கஷ்டப்பட்டு வெட்டிய தொல்லாயிரம் மனிதர்களின் உடல்களை போட்டு மூடினார்கள். .
(See Ibn Hisham: The Propeht's Biography: vol 2 pages 40&41. 0- பார்க்கவும், இபின் இஷாமின் முஹம்மதுவின் சரிதை, பாகம் 2 பக்கங்கள் 40 மற்றும் 41)
அன்பான நண்பர்களே:
இவைகள் அனைத்தும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுகள். இப்படிப்பட்ட வன்முறை நிகழ்வுகள் தான் இஸ்லாமிய மனப்பான்மையாக உருவாகியுள்ளது.
இதில் மிகவும் ஆபத்தானது என்னவென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதே போல நிகழ்ச்சிகளை, வன்முறையை இந்த 21ம் நூற்றாண்டில் காட்ட முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நம்முடைய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள். நம் நாட்டில் இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சை வசனங்கள் ஆளட்டும்.
உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்(மத்தேயு 26:52)
உண்மையை அறிந்துக் கொள்ளுங்கள்
உண்மையை பின்பற்றுங்கள்
உண்மையை பரப்புங்கள்
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
திங்கள், 5 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக