ஞாயிறு, 11 ஜனவரி, 2009

வஞ்சகத்தின் கீழ் சபை

கடைசி நாட்கள் வேதனை, வருத்தம், துன்பம், அழுத்தம், பிரச்சனை மற்றும் போராட்டம் நிறைந்ததாய் இருக்கும். இதற்கான காரணம் ஏசாயா60:2 ல் காணப்படுகிறது.

இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

காரிருள் ஜனங்களை மூடும் என்று வேதவசனம் வெளிப்படுத்துகிறது.

காரிருள் என்பது எதைக் குறிக்கிறது?

கொலொசேயர் 1:13 இருள் என்பது ஒரு வல்லமை என்று வெளிப்படுத்துகிறது.

அது செயலில் உள்ள பிசாசின் வல்லமை ஆகும். வேறுவிதமாகக் கூறுவதானால் அனேகருடைய வாழ்கையை கட்டுப்படுத்தும் பிசாசின் வல்லமை ஆகும்.

இதன் விளைவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை மோசமாக்குகிற கடினமான சூழ்நிலைகளினூடாகச் சென்று வேதனை,வருத்தம், துன்பம், அழுத்தம், பிரச்சனை மற்றும் போராட்டம் ஆகியவை நிறைந்ததவர்களாக இருப்பார்கள்.

ஆனால் அதேவேளையில், மகிழ்ச்சி,துதி மற்றூம் பாடல் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிற ஒரு கூடடம் ஜனங்களும் இருப்பார்கள்.

அதன் காரணமென்னவெனில் இருளின் அதிகாரங்கள் அவர்களை தாக்க முயற்சித்தாலும் அவர்கள் தாக்கப்படாதவர்களாக இருப்பர்.

தேவனின் பலத்த வல்லமை அவர்களை சூழ்ந்து இருக்கும். அவர்களை நோக்கி எய்யப்படுகிற எதிரியின் அம்புகள் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை.

இவர்களே இயேசு லூக்கா10:19ல் சொன்னபடி,ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது என்ற வாக்குத்தத்தத்தை உண்மையாக பெற்றனுபவிக்கிறவர்கள் ஆவர்.

ஆம். எதுவும், எதிரியின் எந்த ஆயுதமும், எந்த திட்டமும், எந்த அம்பும் அவர்கள் மீது விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அவர்கள் தேவனுடைய பலத்த வல்லமையுள்ள வசனத்தின்படி பாதுகாக்கப்படுவார்கள்.

உண்மையைச் சொல்வதானால், இவர்கள் சூழ்நிலைகளைப் பார்த்து நகைக்கிறார்கள். வியாதி அவர்கள் மீது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

பொருளாதாரப்பிரச்சனை அவர்கள் மீது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. துர்ச்செய்தி அவர்கள் மீது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

அவை ஏற்படுத்துகிற ஒரே ஒரு விளைவு, அவை அவர்களை தங்கள் இருதயத்தில் ஆழத்திலிருந்து அதிகமதிகமாக ஆண்டவரை துதிக்கவும் பாடவும் செய்யப்பண்ணுகின்றன.


அனேகர் இம்மக்களின் நடத்தையை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

அனேகர் பின்வருமாறு ஆச்சரியப்படுவர்:

இந்த சூழ்நிலையின் மத்தியில் இவர்களால் எப்படி மகிழ்ந்து களிகூரமுடிகிறது?

அவர்களை தாக்குகிற சூழ்நிலைகளால் பதிக்கப்படாமல் ஒரு வெற்றியுள்ள வாழ்கையை இவர்களால் எப்படி வாழமுடிகிறது.

இவர்களுடைய வாழ்கையின் இரகசியம் என்ன?

எல்லாவேளைகளிலும் இவர்களை ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை வாழப்பண்ணூவது எது?

இவர்கள் மட்டும் வாழ்க்கையை சந்தோசமாய் அனுபவிக்குமடி தேவன் இவர்களை தெரிந்து கொண்டாரோ?

இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன காரணம்?

அடுத்துவருகிற செய்திகளில் இயற்கைக்கப்பாற்பட்ட வெற்றியுள்ள வாழ்க்கைக்கான இரகசியத்தை விவரிக்க முயற்சி செய்கிறோம்.

இயேசுவே ஆன்டவர் என்பதையும் நீங்கள் வாழ்கிற இடத்தில் நீங்கள் அவருடைய நன்மையைக் காணவேண்டும் என தேவன் விரும்புகிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

கருத்துகள் இல்லை: