கடந்த மாதத்தில் ஒரு போதகர் நவம்பர் 15ற்குள் சுனாமி வரும் என்று கர்த்தர் சொன்னதாக எச்சரித்திருந்தார்.
ஆனால் அந்நாட்களில் கடலில் சீற்றங்கள் காணப்பட்டாலும் சுனாமி ஏதும் ஏற்படவில்லையே,
இது புறஜாதியார் மத்தியில் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது போல் ஆகிவிட்டதே என்று பலரும் எண்ணினார்கள்.
இது குறித்து தேவபிள்ளைகளுக்கு எழுதுவது அவசியம் என அறிந்ததால் என் கருத்துக்களை கட்டுரையாக இங்கே தருகிறேன்.
இந்த செய்தி எனக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இன்னும் பரவலாக தமிழகம் முழுவதும் இந்த செய்தி பரவியிருந்தது உண்மைதான்.
அந்நாட்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதையும், சென்னையில் பல இடங்களில இரவில் போலிசார் கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியதையும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதையும் நாமறிவோம்.
இது ஒருபுறமிருக்க இந்த செய்தி வந்தததிலிருந்து இரவும் பகலும் தேவஜனங்கள் ஜெபித்ததையும் உபவாசமிருந்தததையும் மறுக்க முடியாது.
தேவன் ஒரு காரியத்தை தன்னுடைய தாசர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அதிலே ஒரு நோக்கமிருக்கும்.
உதாரணமாக சோதோம் கோமாராவின் பாவம் கொடியதாய் இருந்ததால் அதை அழிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த தீர்மானத்தை தன் தாசனாகிய ஆபிரகாமுக்கு அறிவித்தார்.
ஆனால் ஆபிரகாமோ கர்த்தரிடத்தில் அத்தேசத்தில் இருக்கும் நீதிமான்கள் நிமித்தம் அதை அழிக்க வேண்டாம் என்று விண்ணப்பம் பண்ணினான்.
ஆனால் பத்து நீதிமான்கள் கூட இல்லாத நிலையில் அது அழிக்கப்பட்டது.
எனவே கர்த்தர் தான் தீர்மானித்திருந்த தீர்மானத்தை தன் தாசன் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக அறிவித்து அதை உறுதிப்படுத்தினார்,
இன்னொரு சம்பவத்தில் கர்த்தர் யோனா என்ற தீர்க்கதரிசியை நோக்கி 40 நாட்களில் நினிவே பட்டணம் அழிந்து போகும் என்று பிரசங்கிக்கச் சொன்னார்.
அப்படியே அவரும் பிரசங்கித்தார். நினிவே மக்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்பி தங்களை தாழ்த்திய போது தேவன் அவர்களுடைய கிரியைகளைக் கண்டு மனமிறங்கி அதைச் செய்யாதிருந்தார்.
இதைப்பார்த்ததும் யோனா கர்த்தரிடம் கோபப்படுவதைப் பார்க்கிறோம். தான் சொன்ன தீர்க்கதரிசன்ம் நிறைவேறாமல் போகவே, தான் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி, தன்னுடைய வாயின் வார்த்தை நிறைவேறாமல் போனால் ஜனங்கள் என்ன நினைப்பார்கள்? என்றெண்ணுகிறார்.
கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணும் போது“ ஆ கர்த்தாவே நான் என் தேசத்தில் இருக்கும் போதே நான் இதைச் சொல்லவில்லையா?
இதனிமித்தமே நான் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்டுகிறவருமான தேவனென்று அறிவேன் “
இந்த சம்பவத்தை பார்க்கும் போது கீழ்காணும் காரியங்கள் தெரியவருகிறது
1. இந்த தீர்க்கதரிசனம் கர்த்தர், யோனா, மற்றும் நினிவே நகர மக்கள் சார்ந்தது.
2, தேவனுடைய நோக்கம்¢ நினிவேயை அழிப்பது தான் என்றால் யோனாவுக்கு அதன் அழிவைக்குறித்து பிரசங்கிக்க கட்டளையிடாமல் நேரடியாக நினிவேயை அழித்திருக்கலாம்.
ஆனால் தேவனுடைய விருப்பம் நினிவேயின் அழிவல்ல மாறாக நினிவே மக்களின் மனம் திரும்புதலே. எனவே மக்கள் மனம் திரும்ப 40 நாட்கள் கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
3, ஆனால் யோனாவைப் பொறுத்த வரை இந்த 40 நாட்கள் நினிவேயை அழிப்பதற்கு ஆயத்தமாக்கப்படும் நாளாகவே எண்ணினான்.
இதனால் குறித்த நாட்களில் நினிவே அழிக்கப்பட வில்லை யென்பதால் தான் உரைத்த தீர்க்கதரிசனம் நடக்கவில்லையென்ற ஆதங்கம்.
இன்னொரு பக்கத்தில் தேவனுடைய மனதை முமுமையாக அறிந்த யோனா இரக்கமும் உருக்கமும் தீங்குக்கு மனஸ்தாபப்டுகிற தேவன் முதலில் அழிப்பேன் என்று சொல்வார் பின்பு மனந்திரும்பினால் மன்னித்து விடுவார்
இடையில் நமக்கேன் வம்பு எனறெண்ணி தர்சிசுக்கு கப்பல் ஏறி ஓடிப்போன தன்னை விடாப்பிடியாக அழைத்து வந்த தேவன் இன்று தான் எண்ணியபடியே மன்னித்து விட்டாரே என்ற மன வருத்தம்.
இந்த சம்பவத்தில் தான் எதிர்பார்த்த மனந்திரும்புதல் நினிவே மக்களிடையே வந்ததால் மன்னித்து விட்டார்.
மற்றுமொரு சம்பவம் II நாளாகமம் 18ம் அதிகாரத்தில் நினைவூட்டப்பட்டுள்ளது. யூதாவின் ராஜாவாகிய ஆகாப் கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு யுத்தம் பண்ண போகலாமா என்பதற்காக கர்த்தரிடத்திலிருந்து விசாரிப்பதற்காக நானூறு தீர்க்கதரிசிகளை அழைத்து விசாரித்தான்.
அப்போது நானூறு பேரும் ஒரே வாக்காக தேவன் யுத்தத்தில் வெற்றியைத் தருவார் என்று சொன்னார்கள்.
ஆனால் மிகாயா என்னும் தீர்க்கதரிசியிடத்தில் விசாரித்தபோது ஆகாப் ராஜா யுத்தத்தில் மரித்துப் போவார என்றும்¢ போரில் வெற்றியைப் பெற முடியாது என்றுரைத்தார்.
II நாளாகமம் 18-19 ம் வசத்தில் கர்த்தர் இவ்விதமாய் செரன்னார் “ஆகாப் கிலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு அவனுக்கு போதனை செய்பவன் யார்? “ என்று கேட்டார்.
இங்கு கர்த்தருடைய விருப்பம் ஆகாப் ராமோத்தில் வைத்து மடிய வேண்டும் என்பது தான். அந்த விருப்பம் நிறைவேற என்ன செய்யலாம் என்றாலோசனை செய்தபோது ஒரு ஆவி “அவனுடைய தீர்க்கதரிசிகளின் வாயில் பொய்யின் ஆவியாக இருப்பேன்” என்றது.
கர்த்தரும் அதற்கு உத்தரவு அருளினார். அப்படியே அந்த ஆவி நானூறு தீர்க்கதரிசிகளின் வாயில் பொய்யின் ஆவியாக வந்தமர்ந்தது.
அதை அடையாளம் காண முடியாத அந்த நு£னூறு தீர்க்கதரிசிகளும் தங்களை அறியாமலேயே பொய் தீர்க்கதரிசனம் உரைத்தனர்.
ஆனால் தேவனுடைய இருதயத்தை அறிந்த மிகாயாவுக்கு பரலோகத்தில் என்ன நடந்ததது என்பதை தேவன் காண்பித்ததால் உண்மையை உரைத்தார்¢¢.
இந்த சம்பவத்தில் தேவனுடைய மன்னிப்புக்கு இடமில்லையாதலால் அதை செய்வதற்கு தன்னுடைய தாசர்களை பயன்படுத்தாமல் அத்திட்டத்தை நிறைவேற்றும் முழு பொறுப்பும்¢ பொய்யின் ஆவியின் கையில் கொடுக்கப்பட்டது .
எனவே மேலே கண்ட நிகழ்வுகளிலிருந்து,
1. தேவன் சில காரியங்களை தன் தாசர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தெரிவிக்கிறார்
2. சில காரியங்களை மனந்திரும்பினால் மன்னிப்பு என்ற வகையில் எச்சரிப்புக்காக தெரிவிக்கிறார்
3. சில காரியங்கள் மன்னிப்புக்கே இடமில்லாமல் தெரிவிக்கப்படுகிறது
எனவே இந்த சுனாமி எச்சரிக்கையானது
-- அந்த போதகரைப் பற்றியும் அவருக்கும் தேவனுக்கும் உள்ள உறவு பற்றியும்,
-- ஒரு வேளை இந்த வெளிப்படுத்துதல் தேவனால் கொடுக்கப்பட்டிருந்தால் கொடுக்கப்பட்டதன்¢ நோக்கமென்ன
-- இதற்காக ஜெபித்த தேவபிள்ளைகளின் மன்றாட்டின் ஜெபங்கள் தேவனுடைய சந்ததியில் செய்ததென்ன போன்றவற்றைப் பொறுத்தேயுள்ளது.
சனி, 10 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக