சனி, 27 டிசம்பர், 2008

தேவ குமாரரின் பிறப்பும் கிறிஸ்மஸ் பண்டிகையும்

'கிறிஸ்துமஸ் ' என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பதும், கிறிஸ்தவ‌ர்க‌ள் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு கி.பி. 336ஆம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.

இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ஆம் நாள்தானா ? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர்.

பைபிளில் எந்த இடத்திலும் இயேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், 'பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார், '

என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், 'நடு‌ங்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆடு மாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது... '

என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றிவிட முடிவு செய்து அறிவித்தன!முதன் முதலில் கிறிஸ்துமஸ் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.


ரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்து அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் அறிவிக்கின்றது.

இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார்.


WDகிறிஸ்துமஸ் நாளில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை அளித்துத் தங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொள்கின்ற உன்னதம் துவங்கியது எதனால் ?

ஏன் இந்த நாளில் மட்டும் பரிசுப்பொருட்களை அளித்துக் கொள்கின்றார்கள் மக்கள்.

புனித மத்தேயு எழுதிய பரிசுத்த வேதாகமத்தின்படி, 'உலகை உய்விக்கப் பிறந்துள்ள அன்னை மேரியின் தவப் புதல்வராம் குழந்தை இயேசுவைக் கண்டு தரிசிக்க வந்த மூன்று ராஜாக்கள் அந்தக் குழந்தையின் முன் மண்டியிட்டு வணங்கினர்.

பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொக்கிசங்களைத் திறந்து பொன்னும் பொருளும் பரிசுகளாக அளித்தனர்... ' என்ற அந்த நாள் தான் பரிசுகள் இன்று வழங்கப்படுவதின் மூலமாகக் கருதப்படுகின்றது.


WDஎந்த நாளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிப் படர்ந்துள்ள ஒரு விடயம் ஆகும். கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் முதன் முதலாக வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை லண்டன் மாநகரைச் சாரும்.

கிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம்.

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது.

குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புகளோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா!

கருத்துகள் இல்லை: