வியாழன், 2 ஜூலை, 2009

தவறை மன்னிக்கும் தேவன்!

நம்மால் நமக்கே உதவி செய்ய முடியாத நிலை என்ற சூழ்நிலை நம்முடைய வாழ்வில் ஏற்படுவதுண்டு. அதுவரைக்கும் தன்னால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை சில மனிதர்களுடைய எண்ணத்தில் இருப்பதுண்டு.

ஆனால் அந்த தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு எப்போதும் உதவுவதில்லை. தன்னை வணங்கவும் தொழுது கொள்ளவும் வேண்டுமென்று இறைவன் விரும்புவது ஒரு புறமிருக்க‌, தன்னைத் தேடுகிறவர்களையும், வணங்குகிறவர்களையும் தொழுது கொள்ளுகிறவர்களையும் இறைவன் உயர்வான நிலைமைக்கு ஆசீர்வதித்ததை நாம் பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

உடனே இறைவன் தன்னைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நியாயமும் தேடாதவர்களுக்கு ஒரு நியாயமும் வைத்திருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றும் இல்லையா? அப்படியில்லை; இறைவன், தம்மை எப்பொழுதும் தேடுகிறவர்களுக்கு எப்போதுமே பலனளிக்கிறார் என்றும் இதுவரை அவரைத் தேடாதவர்கள் எப்பொழுது அவரைத் தேடுகிறார்களோ அப்பொழுது பலனளிப்பார் என்பதும்தான் உண்மை.

பரிசுத்த வேதாகமத்தில் தேவனைத் தேடிக் கண்டு கொண்ட அநேகருடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் வாசிக்கிறோம். ஆதியாகமம் 16ம் அதிகாரத்தை வாசிக்கும் போது ஒரு எகிப்திய பெண்மணியைக் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

அவளுடைய பெயர், ஆகார்; அவள் கர்ப்பவதியாயிருந்தாள். ஆகார் தேவனை தேடாமல் குழந்தையில்லாதத் தன் எஜமாட்டியை ஏளனமாகப் பேசிக்கொண்டிருந்தாள். எஜமாட்டியுடைய மனது எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? கர்ப்பவதியாக இருந்த ஆகாருக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை.

அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த எஜமானனுடைய மனைவியும் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை. எஜமாட்டியுடைய கணவனும் உதவி செய்யவில்லை; எனவே பாலைவனத்தை நோக்கி ஓடினாள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்ற எண்ணத்தோடு என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கிறாள். அவள் மனதில் தனக்கு உதவி செய்ய்ய யாருமே இல்லையே என்று ஏங்கின அந்த ஏக்கத்தை தேவன் கண்டு தன்னுடைய தூதனை அவளிடத்தில் அனுப்பினார்.

அப்பொழுது இறைவனுடைய தூதன் ஆகாருக்கு தோன்றி " ஆகாரே எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?" என்று கேட்டார். அதற்கு பதிலாக அவள் " என் எஜமாட்டியை விட்டு ஓடிப்போகிறேன்" என்றாள்.

அப்பொழுது தூதனானவர் " நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப் போய், அவளிடம் அடங்கியிரு. உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன், அது பெருகி எண்ணிமுடியாத தாயிருக்கும்" என்றார்.

அப்பொழுது ஆகார் : இந்த இடத்தில் என் ஆண்டவரைக் கண்டேன் என்று சொல்லி என்னைக் காண்கிற தேவன் என்று அந்த இடத்திற்குப் பெயரிட்டாள்.

அவள் அப்படியே கீழ்ப்படிந்து தன் எஜமாட்டியின் வீட்டிற்கு திரும்பிப்போய் தன் எஜமாட்டிக்கு அடங்கி இருந்தாள். தேவதூதனுடைய வார்த்தையின்படியே அவளுக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது. அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டார்கள்.

தேவனை எப்பொழுதும் தேடுகிறவர்களுக்கு தேவன் எப்போதுமே பதில் அளிக்கிறார் என்றும், கஷ்டத்தின் மத்தியில் தன் தவறை உணர்ந்து தேவனைத் தேடிய வேளையில் ஆகாருக்கு தேவன் உதவி செய்தார் என்றும் இதன் மூலம் அறிந்து கொள்ளுகிறோம்.

அதே சமயம் ஆகார் தன் தவறை உணர்ந்து தேவனுடைய அறிவுரையைக் கேட்டு திரும்பி வந்ததால் அவளுடைய எஜமாட்டியும் அவளை ஏற்றுக் கொண்டு அவளை நல்லமுறையில் நடத்தினாள்.

இப்பொழுதும் உங்களில் யாராவது அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பீர்களானால் உங்கள் தவறுகளை உணர்ந்து இறைவனைத் தேடும் போது அவர் உங்களை ஆறுதல் படுத்தி உங்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை நீங்கள் வாழவேண்டும் என்று அவருடைய தூதர்களாகிய இறைப்பணியாளர்கள் மூலம் பேசுவார்.

போதனை : நமக்கு நாமே உதவி செய்து கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையானது அதிகமானால் கர்வத்தையும் அகங்காரத்தையும் உண்டு பண்ணிவிடும். அப்படியானால் நம்முடைய தேவையின் மத்தியில் நமக்கு உதவி செய்ய யாருமே வரமாட்டார்கள்.

அப்படி நம்மை அறியாமல் நாம் தவறு செய்தால் நாம் இறைவனைத் தேட வேண்டும். அப்பொழுது நம்முடைய இறைவன் தவறுகளுக்குத் தக்கதாக நம்மைத் தண்டிக்காமல் நமக்கு உதவிச் செய்ய யாரும் இல்லையே என்று ஏங்குகிற நம்முடைய கஷ்டங்களை அறிந்து நம்முடைய தவறுகளை நமக்கு மன்னித்து புதிய வாழ்வையும் புதிய ஆசீர்வாதத்தையும் தருவார். அவரை நாம் எப்போதும் தேடவேண்டும்.

ஜெபம் : அன்பின் பரலோகப்பிதாவே, என் தவறுகளை எனக்கு மன்னியும். நான் பிறருக்கு தவறு செய்யாமல் என்னைக் காத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.

சுய நீதியின் சுயரூபம், மூத்தமகன்!

குடும்பத்தின் பிள்ளைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனாலும் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்பது தானே ஒவ்வொரு பெற்றோரின் கனவாயிருக்கும்.

இரண்டு பிள்ளைகள் என்பது இரண்டு கண்கள் போலத்தானே! அதில் எந்த கண்ணை வெறுத்து எந்த கண்ணை நேசிக்க முடியும்? சுண்ணாம்பும் வெண்ணெயும் பார்க்க ஒரே போல் இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்ணெயையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிற பெற்றோர்களைப் பார்ப்பது மிக மிக அரிது. பிள்ளைகள் நம் அன்பிற்குரியவர்களாயிற்றே!

ஒரு மகன் ஊதாரியாக இருந்தாலும் அவனை வெறுத்து விடுகிற தகப்பனையோ தாயையோ பார்ப்பது மிகவும் அரிது! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!

அப்படியாக லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் 15ம் அத்தியாயம் 28 முதல் 32 வரையுள்ள வசனங்களில் ஒரு மூத்த குமாரனைப்பற்றி நாம் வாசிக்கிறோம்.

திரும்பி வந்த இளைய மகனை ஏற்றுக் கொண்டான் தகப்பன். அதைக்குறித்து இதற்கு முந்தைய செய்தியாகிய "திருந்தி வந்த இளைய மகன்" இல் வாசிக்கிறோம்.

அதைக் கண்ட மூத்த மகனோ கோபமடைகின்றான். தகப்பனுக்கு தன் இளைய மகனுடைய வரவில் சந்தோசப்படவா? இல்லை இவ்வளவு நாளும் தன்னோடிருந்த மூத்த மகனுடைய மூர்க்கத்தை மூடவா? என்று என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்தான்.

மூத்தமகனை உள்ளே வருமாறு தகப்பன் வருந்தி அழைக்கிறான். மூத்த மகனோ வரவில்லை. அப்பொழுது தகப்பன் மனம் எப்படி துடித்திருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

தன் இளைய மகன் தன்னை விட்டுப் போன போது அவனைப் பிரிந்த ஏக்கத்தில் இருந்த தகப்பனுக்கு மூத்த மகன் ஆறுதல் அளித்து, உற்ற துணையாக இருந்தது உண்மை தான். அப்படி தகப்பன் மன வேதனைப்பட்ட போது அவனுக்கு ஆறுதல் சொன்னவன், இப்பொழுது தகப்பன் சந்தோசப்படும் போது தள்ளி நிற்பது ஏன்?

"மகனே நீ என்னோடு எப்போதும் இருக்கிறாய். ஆனால் உன் தம்பியோ காணாமல் போனவன் திரும்பி வந்து விட்டான்" என்று தகப்பன் சொல்லக் கேட்டவன் தன் தம்பி திரும்ப வந்ததற்காக சந்தோசப்பட்டிருக்க வேண்டியதிருக்க துக்கப்படுவது ஏன்?

"நாம் சந்தோசமாயிருக்க வேண்டுமே" என்று கூறிய தகப்பனின் தொனியில் ஒரு உண்மை தெரிகிறது. அப்படி சந்தோசப்படுவது நியாயம் தானே என்று சொல்லுகிற தகப்பனின் சந்தோசத்தை நிறைவேற்றாமல் தகப்பனுடைய சந்தோசத்தைக் கண்டு மனம் வெதும்புவது எப்படி சரியாகும்? என்பது தான் அந்த உண்மை.

"என்னுடையதெல்லாம் உனக்குரியது" என்று வாக்குரைத்த தகப்பனின் வாக்கை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவன் இந்த மூத்த மகன். நமக்கென்று நம் தகப்பன் எதை வைத்திருக்கிறானோ, அதை நம்மைத் தவிர யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

திரும்பி வந்த தம்பிக்கு தகப்பன் தன் சொத்தைக் கொடுத்து விடுவானோ என்று சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த சந்தேகத்தையும் தெளிவாக்கும் விதத்தில் அமைந்தது தகப்பனுடைய வாக்குறுதி.

தன் தம்பியை மீண்டும் வீட்டில் சேர்த்தது தகப்பன் செய்தது தவறு என்று நினைப்பதன் மூலம் நல்லது செய்கிற தகப்பனுடைய சுதந்திரத்தையும் இரண்டு குமாரர்களையும் ஒன்று போல நேசிக்கிற தகப்பனுடைய அன்பையும் தன் சுய நன்மைக்காக எதிர்பார்ப்பது போல் இருக்கிறதல்லவா!

தவறே செய்யாத பரிசுத்தவான்கள் யாரும் இந்த உலகில் இல்லை. நாம் செய்த எத்தனையோ தவறுகளை உணர்ந்து திருந்தி வருகிறவேளையில் நம் தகப்பன் நமக்கு மன்னித்தாரல்லவா!

தவறு செய்த யாராக இருந்தாலும் அவர்களை மன்னிப்பது தானே மகான்களுடைய குணாதிசயம்! அப்படிப்பட்ட தகப்பனுடைய குணத்தை நானும் பெறாமல் போனதென்னவென்று எண்ணாமல் இருப்பது எப்படி சரியாகும்?

பிறருடைய தவறுகளை நாம் திருத்துவது என்பதும் அதை விமரிசிப்பது என்பதும் வெவ்வேறு வித்தியாசமான காரியங்கள். திருத்துவதும் அவர்கள் திருந்த உதவுவதும் நல்லது. அதை விட்டு விட்டு விமரிசிப்பதற்க்கு காரணம் சுயநீதி என்ற சுயநலமே!

போதனை : தங்களுடைய வாழ்க்கையில் அநேகக் காரியங்களில் மக்கள் சுயநலவாதிகளாயிருப்பதோடு மாத்திரமல்ல சுயநீதிக்காரர்களாயும் மாறி விடுகிறார்கள். சுய நீதி என்பது நம்மாலன்றி வேறு யாராலும் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி.

மற்றவர்கள் எல்லோரும் தவறு செய்கிறவர்கள் என்றும், தாங்கள் செய்வது எல்லாமே சரியென்றும் நினைப்பது எந்தவிதத்திலும் நமக்கு உதவாது. பிறர் நம்மை திருத்தவோ, பிறர் திருந்தவோ நாம் உதவுவோம்; விமரிசிக்க வேண்டாம்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய பாவங்களுக்காக மரிக்காமல் தன் நீதியே மேல் என்று எண்ணாமல் உலகின் மக்கள் அனைவருடைய பாவங்களையும் தன் மேல் ஏற்றுக் கொண்டு பிறருக்காக மரித்தார். அந்த சுயநலமற்ற தியாகத்தை நாம் பின்பற்றுவோமாக!

ஜெபம் : அன்பின் பரலோகப்பிதாவே, என் நீதியெல்லாம் அழுக்கான கந்தை துணியைப்போல் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளுகிறேன். தேவ நீதியை நிறைவேற்ற விரும்புகிறேன். நான் பிறருடைய தவறை விமரிசிக்காமல், அவர்கள் திருந்தும்போது சந்தோசப்பட எனக்கு உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்

"இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்தின் மூலம் வந்த எந்த தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்படி தேவன் வழி செய்தார்"

உலகத்தில் பாவம் பெருகினபோது பாவத்திற்குரிய தண்டனையை பாவம் செய்த மக்களுக்கு அளிக்காமல் மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக விலங்குகளையும் பறவை களையும் மக்கள் பலி செலுத்தி வந்தனர்.

அதன் காரணமாக அப்பாவி விலங்குகள், பறவைகள் உயிரை விட்டன. இந்த நிலைமை மாறி மனிதனைப் பாவ வழியை விட்டுத் திருத்தும்படிக்கு பல தேவ மனிதர்களையும் இறைப்பணியாளர்களையும், தீர்க்கதரிசிகளையும் இறைவன் உலகிற்கு அனுப்பினார்.

மனிதர்களோ இறைப்பணியாளர்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமலும் தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளை நிராகரித்தும் ஜீவித்து வந்தனர். தொன்று தொட்டு பலியிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கையும் குறையவில்லை.

பாவம் செய்கிற மனிதர்களுக்காக ஏன் ஒரு விலங்கு மரிக்க வேண்டும்? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டிய இடத்தில் அப்பாவி விலங்குகள் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? பாவம் செய்த மனிதன் தண்டிக்கப்படுவது தானே உலக நீதி!.

தேவனோ அன்பின் வடிவானவர்; அன்பே உருவானவர். அவர் பாவம் செய்கிற மனிதர்களையோ, அவர்களுடைய பாவங்களுக்காக அப்பாவி விலங்குகளையோ தண்டிக்க விரும்பாமல் பாவிகளை மன்னித்து, அவர்களுடைய பாவங்களை நீக்கி, பாவம் செய்வதற்கு காரணமாயிருக்கின்ற சாத்தானின் பிடியிலிருந்து விடுதலையாக்கவும் அவர்களுக்கு நன்மை செய்யவும் அவர்களுக்கென பலியிடப்படவும் ஒரு நிரந்தர பலியாக மரிக்கும்படி, தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார்.

தேவ மனிதர்களையும் இறைப்பணியாளர்களையும் மனிதர்கள் நம்பாமல் போனதால் இயேசு கிறிஸ்து தாமே அவர்களுக்காக மரிக்கும் முன்பு அவர்களுக்கு அறிவு புகட்டவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் அநேக ஞான உபதேசங்களையும், நல்வழிக்கதைகளையும், உவமை களையும் சொல்லி வந்தார்.

ஆனாலும் மனிதர்கள் பாவம் செய்வதையும், பிறருக்கு தீமை செய்வதையும் விட்டு விடவில்லை. ஏன் இயேசு கிறிஸ்துவையே அவர்கள் குற்றங்கண்டுபிடித்தார்கள். அவருக்கு விரோதமாக அவதூறான வார்த்தைகளைப் பேசி வந்தார்கள்.

அவரை தேவ குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் அவரை விசுவாசிக்காமல் போனார்கள். அப்படியே மனிதர்கள் தங்களைப் படைத்த தேவனையே புறக்கணித்தார்கள். மனிதர்களை தண்டிக்காமல் மக்களுடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவே பலியாக மரிக்க வேண்டும் என்பது தேவனுடைய முடிவான தீர்மானமாயிற்று.


இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்


மனுமக்களுக்காக இயேசு ஏன் மரிக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி உண்டாகலாம். இறைவன் நினைத்திருந்தால் பாவத்திற்குரிய தண்டனையை இல்லாமல் ஆக்கியிருக்கலாம். ஆனால் நீதி செய்கிற தேவன் அப்படி செய்வது அநீதியாக இருக்கும் அல்லவா!

எனவே பாவத்திற்குரிய தண்டனையை மக்களுக்குக் கொடுக்காமல், தேவன் தன் அன்பின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுத்தார். எனவே இயேசு மனுமக்களுக்காக மரித்தார். அதினாலே நாம் பாவத்திற்குரிய தண்டனையிலிருந்து விடுதலையாக்கப்படுகிறோம்.

அதோடு அநேக ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்ளுகிறோம். அவற்றில் சில முக்கியமான மூன்று ஆசீர்வாதங்களை நான் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. இயேசுவின் மூலம் பாவத்திலிருந்து விடுதலை
2. இயேசுவின் மூலம் வியாதியிலிருந்து விடுதலை
3. இயேசுவின் மூலம் சாபத்திலிருந்து விடுதலை


1. பாவத்திலிருந்து விடுதலை

வேதாகமத்தை வாசிக்கும் போது பழைய ஏற்பாட்டில் ஒரு பாம்பின் மூலம் ஏவாள் ஏமாற்றப்பட்டு தேவன் இட்ட கட்டளையை மீறி பாவம் செய்ததின் நிமித்தம் பாவம் மனுகுலத்தில் நுழைந்தது. (ஆதியாகமம் 3:1-13)

பின்பு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த இஸ்ரவேல் மக்களை பாம்பு கடித்தது. மக்களுடைய பாவங்களிலிருந்து அவர்களுக்கு விடுதலை உண்டு பண்ணும்படிக்கு தேவன் ஒரு வழி உண்டு பண்ணினார்.

அதாவது தேவன் மோசேயை நோக்கி வெண்கலத்தினால் ஒரு பாம்பை உண்டு பண்ணி அதை ஒரு கோலின் மேல் ஒட்டவைத்து அதை எல்லோரும் பார்க்கும் படி உயர்த்து; அதை நோக்கிப் பார்த்தவர்கள் அனைவரும் பிழைப்பார்கள் என்று சொன்னார்.

அப்படியே பாம்பு உண்டு பண்ணப்பட்டது. மோசே (மோசஸ்) அதை ஒரு கோலின் மேல் முனையில் கட்டி வைத்தான். அதை நோக்கிப் பார்த்த அத்தனை பேரும் பாம்பு கடியிலிருந்து குணமடைந்தார்கள். (எண்ணாகமம் 21:7-9)

அதனால்தான் எல்லா மருந்து கடைகளிலும் ஒரு கோலில் பாம்பு சுற்றியிருப்பது போல ஒரு அடையாளம் (symbol) இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

புதிய ஏற்பாட்டில் பாம்புக்கு பதிலாக இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்தின் மூலம் வந்த எந்த தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்படி தேவன் வழி செய்தார். (யோவான் 3:14- 15)

பாவம் எதுவும் செய்யாத இயேசு கிறிஸ்து உலகின் மக்களுடைய பாவத்திற்காக கோரச் சிலுவையில் தொங்கினார். எனவே நீங்கள் எந்த பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்திலிருந்தும் அந்த பாவத்தின் தண்டனையிலிருந்தும் விடுதலையாக வேண்டுமென்றால் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

நிச்சயம் உங்களுக்கு சமாதானமும் மோட்சமும் கிடைக்கும். இது பலருடைய வாழ்வில் நடை பெற்றுக் கொண்டிருக்கிற ஒரு உண்மை சம்பவமாக இருக்கின்றது.

பாவம் செய்ததின் மூலம் வருகின்ற குற்ற உணர்வின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போன எத்தனையோ பேர் சிலுவையில் தொங்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து என்னுடைய பாவங்களுக்காகத் தானே அவர் சிலுவையில் தொங்கி மரித்தார்;

இனி மேல் நான் அந்த பாவத்தின் குற்ற உணர்விலே வாழ வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்து மனம் திரும்பியிருக்கின்றார்கள். அதன் மூலமாக சமாதானமும் ஆசீர்வாதமும் அடைந்திருக்கிறார்கள்.

2. வியாதியிலிருந்து விடுதலை

நம்முடைய சரீரத்திலே வியாதி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இயற்கையின் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகள் நம் சரீரத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் வியாதிகள் வரலாம். வயதாகும்போது உடல் உறுப்புகளும் உடலின் உள்பகுதியில் செயல்படுகின்ற நாளங்களும் சுரப்பிகளும் மூட்டு எலும்புகளும் ஓய்வின்றி செயல்படுவதால் பழுதடைகின்றன.

சரியான உணவு பழக்க வழக்கங்களை நாம் கடைபிடிக்காமல் இருப்பதாலும் நாம் பலவீனப்படுகிறோம். இந்த வியாதிகளை சரியான உணவு பழக்க வழக்கங்கள் மூலமும் போதிய உடற்பயிற்சி மூலமும் ஓரளவு தற்காலிகமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

ஆனால் முற்றிலுமான சுகம் கிடைக்க வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின் அற்புத வல்லமையினால் மாத்திரமே முடியும். காரணம் அவர் சர்வ வல்லமையுடையவர். இயற்கையை அவராலே கட்டுப்படுத்த முடியும். புதிய உடல் அணுக்களையும் திசுக்களையும் அவராலே படைக்க முடியும்.

எனவே தான் பிறவியிலிருந்தே பிறக்கும் போதே கண்பார்வையில்லாதவர்களுக்கு கண் பார்வையளித்தார், நடக்கமுடியாதவர்களை நடக்கச்செய்தார், காது கேளாதோர் காது கேட்கச்செய்தார். அவரிடம் சுகம் பெறுவோம் என்ற விசுவாசத்தில் வந்த வியாதிஸ்தர்கள் எல்லாரையும் சுகப்படுத்தினார்.

ஏசாயா என்ற தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன் (ஏசாயா 53:4-5) "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடையத் துக்கங்களைச் சுமந்தார்;

நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்று தீர்க்கதரிசன மாகச் சொன்னார். அது இப்பொழுதும் நிறைவேறியிருக்கிறது.

புதிய ஏற்பாட்டிலும் " நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவரு டைய தழும்புகளால் குணமானீர்கள் (1 பேதுரு 2:24) என்று வாசிக்க முடிகிறது.

தேவனுடைய கற்பனைகளுக்கு மீறி நாம் செய்த பாவங்களின் மூலம் வருகின்ற வியாதிகளின்றும், நம்முடைய ஒழுக்க நெறி தவறிச் செய்த பாவங்களின் மூலம் வருகின்ற வியாதிகளினின்றும் அல்லது கிரமங்களை மீறிச் செய்த பாவங்களின் மூலம் வருகின்ற வியாதிகளின்றும் நமக்கு சுகம் தரும்படிக்கு எந்த பாவமும் மீறுதலும் செய்யாத இயேசு மரித்தார்.

எனவே நம்முடைய பாவங்களின் காரணமாக சில வியாதிகள் நமக்கு ஏற்படுகின்றன. அந்த வியாதிகளை சுகப்படுத்த நாம் பாவ மன்னிப்பைப் பெறவேண்டும்.

நாம் பாவமன்னிப்பைப் பெறவேண்டுமானால் இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார் என்று உணர்ந்து அந்த பாவங்களை விட்டு விட்டு இயேசுவை பின்பற்ற வேண்டும்.

38 வருடங்களாக வியாதியாக இருந்த ஒரு மனுஷனை இயேசு குணப்படுத்திய பின் " நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" (யோவான் 5:14) என்று சொன்னார்.

கால் நடக்க முடியாத ஒரு மனிதனிடம் "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" (மாற்கு 2: 9) என்று சொல்லி அவனை நடக்கச் செய்தார்.

சில வியாதிகள் பிசாசின் கிரியைகள் மூலம் நமக்கு வருகிறது. ஒரு சிறுபையன் வலிப்பு வியாதியினால் (epilepsy) அவதிப்பட்டான்.

அப்பொழுது சீடர்களால் அவனைச் சுகப்படுத்த முடியவில்லை. இயேசுவிடம் கொண்டு வந்த போது அவர் அந்த சிறுவனைப்பிடித்திருந்த பேயை அதட்டினார், உடனை அவனை விட்டு ஓடிப்போய் விட்டது. உடனே சிறுவன் சுகமானான். (மத்தேயு 17:18)

இதிலிருந்து அந்த சிறுவனைப் பாதித்த வலிப்பு வியாதிக்கு பிசாசின் வல்லமையும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

இன்னொரு இடத்தில் ஊமையும் செவிடுமான ஒரு பையனை குணப்படுத்தும் போது " ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று கட்டளையிட்டு அந்த ஆவியை அதட்டினார். அப்போது அந்த ஆவி அவனை விட்டு ஓடிப்போனது அந்த சிறுவன் குணமடைந்தான். ( மாற்கு 9:25)

அந்த சிறுவன் பேசாமலும் காது கேளாமலும் இருக்கக்காரணம் ஒரு அசுத்த ஆவிதான் என்று அறிந்து கொள்ள முடிகிறது. சில சமயங்களில் மருத்துவர்கள் சொல்லுவார்கள், ஊமையும் செவிடும் என்பது குணப்படுத்த முடியாத ஒரு வியாதி. அது தானாக குணமடைய வேண்டும்.

இல்லையென்றால் கடவுள் தான் சுகம் கொடுக்க முடியும் என்று சொல்லுவார்கள். உண்மை தான். மருத்துவர்கள் எல்லா வியாதிகளையும் சுகப்படுத்த முடியுமென்றால் உலகில் யாருமே மரிக்க மாட்டார்களே!

சில சமயம் மருத்துவர்கள் நோயாளியைச் சோதித்துப்பார்த்து விட்டு, எங்களால் ஒரு குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லாம் நன்றாக இருக்கிறது. வியாதிக்கு என்ன காரணம் என்ன மருந்து கொடுப்பது என்று தெரியாமல் இருக்கிறோம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயேசு சிலுவையில் மரித்ததின் மூலம் பிசாசின் தலையை நசுக்கி மரணத்தை ஜெயித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவாசிப்போம்; அப்பொழுது பிசாசின் மூலம் வருகின்ற எல்லா வியாதிகளினின்றும் சுகம் கிடைக்கும்.

3. சாபத்தினிறு விடுதலை

நம் முன்னோர் செய்த தவறுகள் மூலம் வருகின்ற சாபங்கள் பின் சந்ததியினரைத் தொடர்ந்து வருகின்றன. அதன் விளைவாக வியாதிகள் ஏற்படுகின்றன. அந்த சாபங்கள் மூலம் வருகிற வியாதிகளைத்தான் மருத்துவர்கள் பரம்பரை வியாதி (hereditary) என்று கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட வியாதிகளைத் தொடர்ச்சியாக மருந்து எடுப்பதன் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் என்கின்றனர். நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்று யாருமே சொல்லுவதில்லை.

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் இப்படிப்பட்ட வியாதிகளிலிருந்து நிரந்தர சுகம்பெற முடியும். அதோடு சில வீடுகளில் தொடர்ச்சியான மரணங்கள், அடுத்தடுத்து நடைபெறும் சாலை விபத்துக்கள், குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கெல்லாம் குறிப்பிட்ட வியாதிகள், வரிசையாக எல்லா பிள்ளைகளுக்கும் குழந்தையில்லாத் தன்மை இவைகள் கூட சாபத்தினால் வரவாய்ப்பு உண்டு.

சபிக்கப்பட்டவனை சிலுவை மரத்தில் தொங்க வைக்க வேண்டும் என்ற சட்டம் பழைய ஏற்பாட்டில் இருந்தது. (உபாகமம் 21:23)

அப்படியே சாபம் எதுவும் இல்லாத இயேசு கிறிஸ்து நம்முடைய சாபங்களைத் தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவை மரத்தில் நம்முடைய சாபங்களுக்காக மரித்தார். நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் சாபத்திலிருந்து விடுதலை பெறுகிறோம். (கலாத்தியர் 3:13).

சாபத்தின் மூலம் அநேக ஆசீர்வாதங்களை நாம் இழந்து விடுகிறோம். இயேசு கிறிஸ்து நம்முடைய சாபங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு அவர் நமக்காக சாபமானார் என்று விசுவாசிக்கும் போது இழந்து போன ஆசீர்வாதங்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளுகிறோம்.

போதனை : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் என்று முற்றிலுமாக விசுவாசிக்கும் போது, பாவத்திலிருந்தும் வியாதியிலிருந்தும் சாபத்திலிருந்தும் விடுதலை பெற்று அவரால் கிடைக்கும் நிரந்தர சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஜெபம் : அன்பின் பரலோகப்பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். அவர் மூலம் எனக்கு பாவத்திலிருந்து மீட்பும் நோயிலிருந்து சுகமும் சாபத்திலிருந்து விடுதலையும் தர கெஞ்சி மன்றாடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்!

சனி, 6 ஜூன், 2009

பச்சையம்மாவும், மஞ்சளய்யாவும்

அம்மி மிதித்தலும் - அருந்ததி பார்த்தலும் - திவசம் கொடுத்தலும் - அர்த்தம் புரியாத வடமொழி மந்திரங்களும்!

அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் காலமாகிவிட்டார் என்ற செய்தியை ‘இந்து’ ஏடு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

( அதை படிக்காதவர்கள் இங்கே பார்க்கலாம் )

அக்னிஹோத்திரம் 102 வயது வரையில் வாழ்ந்தவர்.

அவரது 100வது வயது வரையில் - அவரது சொந்தச் சாதியினர், அவர் வேதங்கள் அனைத்தையும் பயின்ற விற்பன்னர் என்றும், காஞ்சி மகாப் பெரியவாளின் வலது கரமாக, ஆலோசகராகச் செயல்பட்டவர் என்றும், இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத் கருடன் அமர்ந்து மத சுதந்திரத்திற்கான விதிகளை அரசியல் சட்டத்தில் உருவாக்கியவர் என்றும் ஓகோ, ஓகோ என்று புகழ்ந்து உச்சி மீது வைத்து மெச்சிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவரது 100வது வயதில் அவர் நக்கீரன் இதழில் ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதி - இந்து மதத்தின் பேரால் ஒரு குறிப்பிட்ட சாதியினர் பரப்பிடும் மூடநம்பிக்கைகளையும், ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்க வும், அறியாமை யில் அவர்களை ஆழ்த்தவும், அவமதிக்கவுமான காரியங்களைக் கண்டித்து - அவர்களின் பாரபட்சமான - ஓர வஞ்சனையான செயல்களை அம்பலப்படுத்தினார். அவற்றிற்கு ஆதாரமாக - வேதங்களையே சுட்டிக் காட்டினார்.

இது அவரது சொந்த சாதியினரை ஆத்திரப்பட வைத்தது. அவர்கள் அக்னிஹோத்திரத்தை சந்தித்து அந்தத் தொடர் பிராம்மண விரோதம் என்று கண்டித்தார்கள். உடனே அதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று வேண்டினார்கள். நிறுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டினார்கள்.

அவர்களது இச்சகப் பேச்சுக்களுக்கோ, அச்சுறுத்தலுக்கோ - எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்தார் அக்னிஹோத்திரம். தொடர்ந்து எழுதினார்; இந்து மதத்தின் பேரால் நடத்தப்படும் அக்கிரமங்களை - அட்டூழியங்களை அம்பலப் படுத்தினார்.

போதாக் குறைக்கு அந்தத் தொடரின் இரண்டாம் கத்தை ‘சடங்குகளின் கதை’ என்ற தலைப்பில் எழுதி - புரோகிதர்கள் ஓதும் கல்யாண மந்திரங்கள் - கருமாதி மந்திரங்கள் எல்லாம் எவ்வளவு ஆபாசமானவை, முட்டாள்தனமானவை - பணம் பறிக்க நடத்தும் தந்திரங்கள் என்பதையெல்லாம் அம்பலப் படுத்தினார்.

அவரது எழுத்தில் மடமையைச் சாடும் உத்வேகம் இருந்தது, பகுத்தறிவின் ஒளி துலங்கியது!

தந்தை பெரியார் அவர்கள் புரோகிதம் ஒழிந்த திருமணங்களை - சுயமரியாதைத் திருமணங்களை வலியுறுத்தியது எவ்வளவு சரியானது என்பதை - சொல்லாமல் சொல்வது போல திருமணச் சடங்குகளை சாடி எழுதினார்.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்று அழைப்பிதழில் போடுகிறீர்களே - அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? விவாகம் என்ற சொல்லுக்கு மணப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு (கடத்திக் கொண்டு) ஓடிப் போவது என்று அர்த்தம் என்று ஆணி அறைந்தது போல சனாதனிகளுக்கு சவுக்கடி கொடுத்தார் அவர்.

அம்மி மிதித்து

அருந்ததி பார்த்து

திருமணம் நடத்துவதின் பின்னணியில் - அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் ஓதும் மந்திரங்களில் எவ்வளவு ஆபாசம் - அநாகரீகம் - மடமை பொதிந்து கிடக்கிறது என்பதை அந்த மந்திரங்களை எழுதி அவற்றின் சரியான அர்த்தம் என்ன என்பதைப் புட்டுப்புட்டு வைத்தார்.

- அம்மி மிதிப்பது

- அருந்ததி பார்ப்பது

- திவசம் செய்வது

போன்ற மூடநம்பிக்கைகள் பற்றி அவர் தமது ‘சடங்குகளின் கதை’யில் விளக்கியிருப்பதை மட்டும் படித்தாலே போதும்.

உண்மையைத்

தேடும் தமிழ்

அறிவுலகத்துக்கு

சமர்ப்பணம்

என்ற முகமனோடு அவர் எழுதியுள்ளவற்றின் ஒரு பகுதி வருமாறு:-

"அம்மி மிதிப்பது!

அதாவது பெண்ணை நடை நடையாய் அழைத்து வந்து அம்மியொன்று மீது ஏறி நிற்க வைப்பார்கள். உடனே புரோகிதர்

"ஆதிஷ்ட இமம் ஆஸ்மானம்

அஸ்மே வத்வம் ஸ்திராபவா..."

நீ எப்போதும் உன் குடும்பத்தை இந்த கல்லைப் போல ஸ்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது சந்தேகப்பட்டு குடும்பம் என்ற கட்டமைப்பு உடைந்து போகாமல் இந்த கல்லைப் போல குடும்பத்தை கெட்டியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இதன் பின்னணி மலைவாழ் பழங்குடியினரிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது.

அதாவது மலைப் பழங்குடியின மக்கள் ஒவ்வொரு செய்கையின் போதும் ஒரு கல்லின் மீது ஏறி நின்று ‘இந்த கல்லைப் போல உறுதியாக இக்காரியத்தில் இறங்குகிறேன்....’ என சங்கல்பம் எடுத்துக் கொள்வார்கள்.

இதை கவனித்து பிரா மணர்கள்... அந்தக் கல்லை தூக்கி கல்யாணத்தில் போட்டார்கள்.

மலை மக்களான (கூசiயெடள)-ன் வழக்கத்தை... கல்யாணத்துக்கு கொண்டு வந்து விட்டாயிற்று. செங் கல்லை மிதித் தால்... வாழ்க்கை யும் செங்கல் போலவே உடைய லாம்.

அதனால் கருங்கல் தேர்ந் தெடுக்கப்பட்டது. அதுவும் வீடுகளில் கருங்கல்லுக்கு எங்கே போவது... அதனால் அம்மி யைக் கொண்டு வரச் சொன்னார்கள்.

சட்னி அரைப்பது, குழம்புக்கு உண்டான மசாலா அரைப்பது இவற்றுக்காக பயன்பட்டு வந்த அம்மியைப் பயன்படுத்தி - பிராமணர்கள் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள். அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் அம்மி மிதிப்பது என்ற சடங்கின் தோற்றம். அதாவது கல்லை மிதிப்பதுதான் இச்சடங்கின் கருத்துரு.

ஆனால்... வீடுகளில் கிடைக்கும் கல் அம்மி என்பதால் அம்மி மிதித்தல் ஒரு சடங்காகிவிட்டது.

அம்மி மிதிக்கும்போது அவளது பாதாதி அரவிந்தங்களில் பணிந்து... பூக்காம்புகள் சற்றே பருத்ததைப்போல அமைந்த அவளது கால் விரல்களை தன் உள்ளங்கையால் வருடியபடியே பெருவிரலுக்கு பக்கத்து விரலில் மெட்டியை மாட்டுகிறான் மணமகன்.

அப்போது... கல்யாணம் நடத்தி வைக்கும் வாத்யார்... மாப்பிள்ளையைப் பார்த்து, ‘நிமிர்ந்து மேல பாருங்கோ... அருந்ததி பாருங்கோ...’ என மேல் நோக்கி கை காட்டுகிறார்.

பையனும் பேந்த பேந்த மேலே பார்க்கிறான்.

"என்ன அருந்ததி நட்சத்திரம் தெரியுறதா?" என கேட்கிறார் வாத்யார்.

‘ம்... தெரியுதே...’ என்கிறான் பையன்.

அதாகப்பட்டது முகூர்த்தம் 5-5.30 ஆக இருக்கலாம். 6-6.30 ஆக இருக்கலாம். ஏன் 9-9.45 ஆக கூட இருக்கலாம். இப்பேர்ப்பட்ட சுபயோக சுப காலை வேளையில்... சாதாரண நட்சத்திரமே தெரியாது. பிறகு எப்படி அருந்ததி நட்சத்திரம் தெரியும்?

நான் கலந்துகொண்ட கல்யாணம் ஒன்றில் பையன் இதுபோலத்தான் ‘அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது’ என சொல்லிவிட்டான்.

நான்... கொஞ்ச நேரம் கழித்து ‘ஏண்டாப் பயலே... உன் கல்யாண முகூர்த்தம் - 7.30-8.15 விடிந்து 2 மணி நேரத்துக்கும் மேலே ஆகிவிட்டது. சூரியன் வானத்தில் சூப்பராய் ஜொலிக்கிறான்.

இப்பேர்ப்பட்ட நேரத்தில் உனக்கு அருந்ததி நட்சத்திரம் எங்கே தெரிந்தது? எனக்கும் கொஞ்சம் காட்டேன்’ - எனக் கேட்டேன்.

அவன்... பதறிப்போய் வாத்யார் தெரியுதுனு சொல்லச் சொன்னார். சொன்னேன் என்றான்.

இவனைப் போல பல மாப்பிள்ளைகள் மந்திரம் ஓதும் புரோகிதர்களின் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

சரி அருந்ததி யார்?

உங்களுக்குத் தெரியுமா?

சூரிய வம்சத்து மன்னர் பரம்பரை திலிபன், ரகு, அஜன், தசரதன், ராமன் - என புகழ்பெற்றது. பெரும்புகழ் படைத்த சூரியவம்ச மன்னர் குலத்தின் ராஜகுருவானவர் வசிஷ்டர்.

இவரது மனைவிதான் அருந்ததி. இரண்டு பேரும் கணவன் - மனைவி என்றால் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்களாம்.

கற்புக்கரசிக்கு தமிழர்களாகிய நாம் கண்ணகியை காட்டுவதைப் போல... வடக்கத்தியர்கள் காட்டுவதுதான் அருந்ததி. ஆனால்... நாமோ கல்யாணத்தன்று கண்ணகியை மறந்துவிட்டு அருந்ததியைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அருந்ததி - கற்புக்கரசி என்பதற்கான ஒரு கதையும் இருக்கிறது.

அதாவது அருந்ததி கற்பு நிரம்பியவள் என்பதற்காக இந்தக் கதை கட்டப்பட்டது.

தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும்.

இந்த தட்ஷன், பிரகதி என்னும் குமரியுடன் கூடிக் கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன் விளைவாக வந்து குதித்தவள் சுவாஹாதேவி.

இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும் எம மகராஜனையே கொல்லத் துணிந்தன. பார்த்தான் எமதர்மன். இவளை விட்டால் தனது அழகு என்னும் அஸ்திரத்தால் என்னையே கொன்று விடுவாள் போல, என மயங்கினான். சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன்.

அதற்காக திட்டம் போட்டான். சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான்.

தேவைப்படும்போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.

இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டனர். மோகப் போரின் முடிவில் எமனுக்கு பயங்கர களைப்பு. என்ன செய்தான்? அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.

சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். அப்போது அந்த வழியே அக்னிதேவன் நடந்து வர அவனைப் பார்த்துவிட்டாள்.

‘ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும்’ என அழைத்து அவனை அணைத்து தழுவி தன் ஆவலை தீர்த்துக் கொண்டாள் சுவாஹாதேவி.

சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள் சுவாஹா.

இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம்.

- என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.

டக்கென அவளை ஓர் எலுமிச்சை பழமாக்கி முழுங்கினான் எமன்.

சரி இதில் அருந்ததி எங்கே வந்தாள் என கேட்கிறீர்களா?...

பொறுமை பொறுமை...

அருந்ததியைப் பற்றி சொல்ல வந்துவிட்டு சுவாஹா என்பவளைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறாரே?... என்னடா இவர் என நினைகிறீர்கள்தானே.

அப்படி அல்ல... அருந்ததியின் கற்புசக்தியை நிலைநாட்டத்தான் சுவாஹாதேவி கதையே சொல்லப்பட்டிருக்கிறது.

என்ன பார்த்தோம்?...

எமன், சுவாஹாதேவியை அனுபவித்த களைப்போடு நந்தவனத்தில் தூங்கிப் போனான். அந்த நேரம் சுவாஹாதேவி அக்னி தேவனை தரிசிக்க மோகித்தாள் - அக்னியோடு போகித்தாள்.

எமன் விழிப்பதற்குள் அக்னியும் சுவாஹாதேவியும் ஆசையோடு ஆலிங்கணம் செய்து முத்தத்தால் பரஸ்பர அபிஷேகம் செய்துகொண்டு - அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர். எமன் தூங்கும்போது இவர்களின் இளமை விழித்துக் கொண்டு விளையாடிக் களித்தது.

எமன் விழித்ததும்... ஒன்றுமறியாதது போல் சுவாஹாதேவி... அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி தனக்குள் விழுங்கி விட்டது வரையில் பார்த்தோம்.

எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியோ அக்னியை எலுமிச்சைப் பழமாக்கி ஏற்கனவே விழுங்கிவிட்டாள். அப்படிப்பட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கிவிட்டான்.

இதனால் என்ன ஆனது?.... அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.

தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?

விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.

எமன் அசந்த வேளையில்... சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு. இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு.

எனவே எமனை அழைத்து... ‘உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு’ என்றார்.

அப்படியே செய்தான்.

வெளியே வந்த சுவாஹாதேவியிடம் ‘உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு’ என்றார் விஷ்ணு.

சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர்.

ஆனால்... சுவாஹாதேவியை அவள் இளமையை ருசித்த அக்னிக்கு ஆசை இன்னும் அடங்கவில்லை.

அழகுப் பதுமையாய் சதைச்சிற்பமாய் சுவாஹாதேவி காத்திருக்க... அக்னியோ சப்தரிஷி மண்டலத்தில் எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு குஷியாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டான்.

இதை தனது மனைவியான சுவாஹாதேவியிடமே சொன்னான்.

அடியேய்... உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சலிப்பாகிவிட்டது. சப்தரிஷி மண்டலத்தில் என்றும் இளமையாக இருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு தேக ஆனந்தம் கொள்ள துடிக்கிறேன் என்றான்.

நான் இருக்க ஏண்டா அவள்களுக்கெல்லாம் ஆசைப்படுகிறாய் என்றல்லவா சுவாஹா கேட்டிருக்கவேண்டும்?

கேட்டாளா?... இல்லை. பிறகு?... ‘அப்படியே ஆகட்டும்... ஆனால் ஒன்று அந்த ரிஷிகளின் மனைவிகள் போல நானே உருவம் எடுத்து வருகிறேன். நீ அனுபவித்துக் கொள்’ என்று யோசனை சொன்னாள் சுவாஹா.

சப்த ரிஷிகள் என்றால் ஏழுபேர். இவர்களில் ஒவ்வொரு ரிஷியின் மனைவியரை போலவும் உருவெடுத்து சுவாஹாதேவி வர... அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உயிர் நடுங்க உவகையாய் புணர்ந்து பூரித்தான் அக்னி. இன்னும் ஒருத்தி பாக்கியிருக்கிறாள். அவள்தான் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

ஆறு ரிஷிகளின் மனைவிகளையும் அனுபவித்தவன், அடுத்து கடைசியாக அருந்ததியை அனுபவிக்க தயாராக இருந்தான்.

சுவாஹாதேவி தனது சக்தியால் அருந்ததி போல உருவம் எடுக்க முயற்சித்தாள். ம்ஹூம். முடியவில்லை. என்னென்னமோ செய்தாள். ஆனாலும் அருந்ததி போல் அவளால் உருவெடுக்க முடியவில்லை.

ஏனென்றால்... அருந்ததி கற்புக்கு அரசி.

இதை உணர்ந்து கொண்ட சுவாஹாதேவி, அருந்ததியை பார்த்தபடி... "தேவி... நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக. இனி... அக்னி முன்னிலையில் நிகழும் ஒவ்வொரு கல்யாணத்திலும்... உன்னைப் பார்த்து வணங்கினால் அந்த தம்பதிகள் சுகம், தனம், புத்திரர்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்" என்று கூறினாளாம்.

அதன்படிதான்... இன்னும் கல்யாணத்தின் போது அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறார்கள்.

அது காலை மணி 9-9.45 சூரியதேவன் எரியும் நேரமாக இருக்கும்போதும் அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறீர்களே எப்படி?...

உங்கள் மனைவியைவிட அருந்ததிக்கு கற்பு அதிகம் என நீங்கள் நம்புகிறீர்களா?...

அம்மி மிதித்தாயிற்று. ‘அருந்ததி’ யாரென்று பார்த்தாயிற்று. அடுத்து?...

சரி... இப்போது ஒரு மகன் தன் அம்மாவை இழந்து தவிக்கிறான். தனக்கு பால் ஊட்டியவருக்கே... பால் ஊற்றும் நிலைமைக்கு வந்துவிட்டோமே என கண்கள் அழுது அழுது பெருகுகிறது.

இதயம் உடைந்து அம்மா அம்மா என கதறுகிறது. எல்லாருக்குமே வாழ்க்கை என்பது அவர்களின் அம்மா போட்ட பிச்சை. அம்மாவின் புடவையில் கட்டிய தூளியின் கட்டில்தான் சின்னக் குழந்தையில் நாம் தூங்கியிருப்போம்.

நாம் வளர வளர அதைப் பார்த்து மலர்கிறவள் தாய் மட்டும்தான்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்..."

என வள்ளுவரே தாய்மையின் உயர்வை... மகனை வைத்துச் சொல்கிறார்.

தாய்தான் உலகத்தின் ஆதாரம். பெருமாளின் மனைவியைக்கூட ‘தாயார், தாயார்...’ என மரியாதையாக அழைப்பவர்கள் நாம். அப்படிப்பட்டவள் தாய். இன்றும் பூமியில் எக்கச்சக்க அழுக்குகள் இருந்தாலும்... ஒவ்வொரு தாய் உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் புனிதமாகிக் கொண்டே வருகிறது பூமி.

அப்பேர்ப்பட்ட தாயை இழப்பதே எவ்வளவு பெரிய துன்பம்? அந்தத் துன்பத்தை தணித்துக் கொள்வதற்காக... தாய்க்கு திவசம் செய்யப் போகிறான் ஒரு பாமரன்.

அப்போது புரோகிதன் சொல்கிறான்

"என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா

பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம..."

"எங்க அம்மா ராத்திரி வேலைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னைப் பெற்றாளோ தெரியாது. ஆனால்... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாகக் கருதுகிறேன். அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன்..."

என்பதுதான் அந்த மந்த்ரத்தின் அர்த்தம். உன் தாயை உன் கண்முன்னே நடத்தை கெட்டவள் என சொல்வதுதான்... அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்த்ரத்தின் நோக்கம்.

இப்படிப்பட்டதுதான் இறுதிச் சடங்கு.

நேருஜி இறந்தபோது கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் "சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா?...", "தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ..." என்று கேட்டான்.

அதே போல அம்மாக்களை இழிவுபடுத்தும் இறுதிச் சடங்கே உனக்கொரு நாள் இறுதிச்சடங்கு செய்ய மாட்டோமா?..."

- என்று எழுதியிருக்கிறார் என்பதைவிட உள்ளம் குமுறி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார் அக்னிஹோத்திரம்!

அதனால்தான் அவர்மீது - கோபம். அவரது மறைவு பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருட்டடிப்பு!

அவரது 100வது வயது வரையில் - அவரை

சுருதி ஸ்மிருதி இதிஹாஸ

புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்

வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி

மஹோ பாத்யாய

மகா மஹோ பாத்யாய

அக்னிஹோத்திரம்

ராமானுஜ தாத்தாச்சாரியார்

என்று நீட்டி மூழக்கி போற்றிப் புகழ்ந்தார்கள். இந்துமத சடங்குகளையும் அதில் அடங்கியுள்ள மூட நம்பிக்கைகளையும் அவர் அம்பலப் படுத்தியதால் இப்போது அவர் நினைவே அவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது.

சூட்சுமம் புரிகிறதா?






பச்சையம்மாவும், மஞ்சளய்யாவும்

தமிழ்நாட்டை மாறி மாறி ஆள்வது கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் என்று நீங்கள் நம்பினால் தவறு. ராகுவும் கேதுவும்தான் நம்மை ரகசியமாக ஆள்கின்றன.

நல்லதுக்கு நாள் குறிப்பது, யாருடன் கூட்டணி, எந்தத் தேதியில் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பது, எத்தனை தொகுதிகள் போட்டியிடுவது, என்ன கலரில் சால்வை போர்த்துவது, பிரசாரப் பயணத்தை எந்தத் திசையில் துவக்குவது என்பது வரை 'அரசியல் அஸ்ட்ராலஜர்கள்'தான் பாலிடிக்ஸ் பாதையைத் தீர்மானிக்கிறார்கள்.

ஜெயலலிதா பச்சையம்மாவாகவும், கருணாநிதி மஞ்சளய்யாவாகவும் மாறியதன் மர்மம் குறித்து விமர்சனங்கள் வம்பிழுத்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. முதல்வர் பதவியேற்க தேதியும் நாளும் குறிப்பதில் ஆரம்பித்த பழக்கம், கூட்டணிக் கட்சித் தலைவரைச் சந்திக்கக்கூட நேரம் குறிப்பதில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

மெகா குடும்பத்தின் மகா கூட்டணி மீண்டும் சேர்ந்ததுகூட ஜோசியர் குறித்துக் கொடுத்த தேதி, நேரத்தில்தான் நிகழ்ந்ததாகத் தகவல். தலைவர்கள் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழிதான் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

இதனால்தான் அரசியல் ஆசான்களை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள் ஜோதிடர்கள். குறித்துக் கொடுத்ததில் குருட்டாம்போக்கில் ஏதாவது நடந்ததும் 'ஆஸ்தான ஜோதிடர்' அந்தஸ்து மார்க்கெட் மதிப்பை அதிகரிப்பது வேடிக்கையான வாடிக்கை.

ஆஸ்தான ஜோதிடர் கலாசாரத்தை ஆரம்பித்துவைத்தவர் எம்.ஜி.ஆர்தான். அவருக்கும் வித்வான் லட்சுமணனுக்கும் இருந்த உறவு ஊரறிந்த ரகசியம். 'கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் தினமும் அவர் பேரை ஜெபிக்கணும்னு சொன்னாங்க. அதுக்குப் பதிலா 'கிருஷ்ணன்'னு ஒரு வேலைக்காரனை கூடவே இருக்கிற மாதிரி பாத்துக்கிட்டார். தினமும் 'கிருஷ்ணா... கிருஷ்ணா'ன்னு கூப்பிட்டுட்டு இருந்தார்!' என்றெல்லாம் கதைகள் உண்டு. அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவின் ஜோதிடப் பிரியம் உலகப் பிரசித்தம்!

எம்.பி. ஆனதால் டெல்லி அரசியலில் ஆர்வம்காட்டி வந்த ஜெயலலிதாவை, அவரது ஆரம்ப கால நண்பர் சேலம் கண்ணன் அனுப்பிவைத்ததாகச் சொல்லி ஒரு ஜோதிடர் சந்தித்திருக்கிறார்.

அவர்,'நீங்க மாநில அரசியலுக்கு வாங்க. வந்தால் முதலமைச்சர் வாய்ப்பு கைகூடும்!' என்று சொன்னாராம். அப்போது சிரித்திருக்கிறார்

ஜெயலலிதா. அதன் பிறகுதான் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்பது என்று தன்னை முன்னிலைப்படுத்த ஆரம்பித்து, பாப்பு லாரிட்டி வர ஆரம்பித்ததும், தொடர்ந்து ஜோசியம் பார்க்க ஆரம்பித் தார் என்கிறார்கள்.

அவர் சொன்ன மாதிரியே 1991-ல் ஆட்சியைப் பிடித்ததும், இவை அனைத்தும் உண்மையான கணிப்புகள்தான் என்று மனப்பூர்வமாக நம்ப ஆரம்பித்தார். அதனுடைய வளர்ச்சி, இன்று அவருக்குத் தெரியாத ஜோசியர்களும் இல்லை, பரிகாரங்களும் இல்லை. அதைவிட, இன்று அவரே பாதி ஜோசியராகிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

அவரைப் பார்க்க ஒரு ஜோசியர் வந்தபோது, 'அதிசாரத்துல குரு மாறுதா?' என்று கேட்டபோது ஆடிப் போனாராம் அவர். இந்த மாதிரியான டெக்னிக்கல் வார்த்தைகள் சாதாரண ஆட்களுக்குத் தெரியாது. ஜோதிடம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார்.

பெங்களூரு வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த ஜோசியப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்தார். அவர்தான் சீனியர் புஷ்ஷூக்கு போர் நடத்த நேரம் குறித்துக் கொடுத்தவராம்.

'பிருஹத் ஜாதகம்' புத்தகம் அம்மா வசம் எப்போதும் இருக்கும். இப்போது அவர் ஜோசியர் களை அழைத்துப் பேசுவதெல்லாம் தனது சந்தேகங்களைக் கேட்பதற்குத்தானாம்.

96' தேர்தல் தோல்விக்குப் பிறகு, பரிகாரங்கள் பக்கமாக ஜெயலலிதாவின் சிந்தனை போனது. குருவாயூரப்பன் கோயிலுக்குப் போகும்போது அறிமுகமானவர் உன்னிக்கிருஷ்ணப் பணிக்கர். செல்லமாக அவரை கார்டன் ஆட்கள், 'யு.கே' என்று அழைக்கிறார்கள்.

இவர் வருகைக்குப் பிறகு பையனூர் பங்களாவே யாகம் வளர்க்கும் இடமாக மாற்றப்பட்டது. அவர் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பினார் ஜெ. பச்சை கலர் தேர்வும் அப்படித்தான் நடந்தது.

2001 முதல் 4 வருட காலங்கள் யு.கே. இல்லாமல் எந்தக் காரியமும் நடக்காது என்ற சூழ்நிலை தொடர்ந்தது. அப்போது வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்காது என்ற கணிப்புகள் வந்தபோது, பரிகார பூஜை நடத்தலாம் என்று தேதி குறித்தார் பணிக்கர். இதற்கு மொத்தச் செலவு 4 கோடி ரூபாயாம்.

ஆனால், அந்தத் தேர்தலில் 40-ல் ஒரு தொகுதியைக்கூட ஜெயலலிதாவால் கைப்பற்ற முடியவில்லை என்று ரிசல்ட் வந்தபோது அந்தக் கோபம் பணிக்கர் மீது திரும்பியது. அதோடு அவர் கதை முடிந்தது.

அதன் பிறகு வந்தவர் திருப்பூர் வெற்றிவேல். 'நான் ஜோசியர் அல்ல. அருள்வாக்கு சொல்பவன்' என்பார். தினமும் கார்டனுக்குப் போய் நாள், நட்சத்திரம் சொல்லி வந்தார்.

அதன் பிறகு இவரும் அவர்களுக்குச் சரி வரவில்லை. ஒரு சமயம் காழியூர் நாராயணன், வித்யாதரன், நம்புங்கள் நாராயணன் ஆகிய மூன்று பேரையும் ஒருசேர கார்டனுக்கு அழைத்து, ஜெயலலிதா கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறார்.

கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்துவது, அர்ச்சனைகள் செய்வது, தோஷங்கள் நீங்க பரிகாரங்கள் செய்வது போன்ற அனைத்தையும் சசிகலா கவனித்துக்கொள்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன் அடித்து ஊத்திய மழையில்கூட உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமி நரசிம்மசாமி கோயிலுக்குப் போய், பரிகார பூஜையைத் தடங்கல் இல்லாமல் முடித்து வந்துவிட்டார் சசிகலா.

தஞ்சைப் பக்கமாக இருந்து வரும் சில குறி ஜோசியர்களுக்கு சசிகலாவின் புண்ணியத்தால், நல்லகாலம்!

இப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் தி.மு.க-வின் ஜோசிய உறவுகள் மறைமுகமானவை.

தை மாதம் முதல் நாள்தான் இனி தமிழ்ப் புத்தாண்டு என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், சமயச் சொற்பொழிவாளர் அறிவொளி பேசினார், ''இனிமேல் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லாமல் போகுமா என்று என்னிடம் சிலர் கேட்டார்கள்.

அதுவும் இருக்கும். அது ஜோதிடக்காரர்கள் உருவாக்கியது. ஜோதிடம் என்றும் இருக்கும். ஜோதிடம் பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்ம தலைவரும் பார்ப்பார். அது எனக்குத் தெரியும்'' என்று சொல்லிப் பாராட்டினார்.

கருணாநிதிக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தியே கின்னஸ் சாதனை வாங்க இருக்கும் ஜெகத்ரட்சகன் நடத்திய கூட்டத்தில் அறிவொளி பேசியது அவரது கவனத்துக்குப் போகாமல் இருந்திருக்காது.

அவருக்குப் பதிலாக, அவரது குடும்பத்துப் பெண்கள் பல ஜோசியர்க¬ளைத் தங்கள் வசம் வைத்துள்ளார்களாம். ஆரம்பத்தில் திருவாரூரில் பார்வையற்ற ஜோசியர் ஒருவர் இருந்தாராம். குடும்பம் விரிய விரிய, ஆளுக்காள் தனித் தனி ஜோசியர்களை நம்புகின்றனர்.

மு.க.ஸ்டாலின் மனைவி சாந்தா, இதில் அதிக ஆர்வம்கொண்டவர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் கொல்லிமலைச் சித்தர் இதில் முக்கியமானவர். சில பரிகார பூஜைகள் அங்கு நடத்தப்படுகின்றன. சூரியன் நம்பூதிரி, ஸ்டாலின் வீட்டுக்கு வந்து செல்கிறார்.

செல்விக்கும் காந்தி அழகிரிக்கும் இதில் தீவிர நம்பிக்கை உண்டு. கடந்த ஓராண்டாகக் குடும்பத்துக்குள் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க செல்வி ஜோசியரைப் பார்த்துதான் முதலில் தங்கள் கவலையைச் சொன்னார்.

அவர் சொன்ன பரிகாரங்களை செல்வி சிரமேற்கொண்டு செய்து முடித்ததுதான், 'குடும்ப போட்டோ' எடுக்கும் வரை கொண்டுபோய் நிறுத்தியதாம். அனைத்தும் கைகூடிய பிறகு மறுபடியும் நன்றிப் பரிகாரமும் செய்து வந்திருக்கிறார் செல்வி.

ராஜாத்தி அம்மாள், கருமாரியம்மன் பக்தை. கருணாநிதியின் 77-வது பிறந்த நாளையட்டி திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 77 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்ததுவைத்ததும் அப்போது கருணாநிதி கோயிலுக்குள் போய் அத்திருமணங்களை நடத்திவைத்ததும் நடந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த கருமாரி தாசர் ராஜாத்திக்கான நல்லது கெட்டதைச் சொல்லி வந்தாராம். கருணாநிதி அணியும் மஞ்சள் துண்டு ரகசியம், தி.மு.க - தி.க. மோதலின்போது பூதாகரமாகக் கிளம்பி, சமாதான காலத்தில் அடங்கிவிடும் சமாசாரம்.

'மஞ்சள் துண்டு மடாதிபதி' என்று திராவிடர் கழக மேடையில்தான் முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் பட்டப் பெயர் கொடுத்தார். அதற்கு கருணாநிதி வரிசையாகச் சொன்ன காரணங்கள் நிறைய.

எனக்குக் கழுத்து வலி, மெத்தை போன்ற துண்டு அணியச் சொன்னார்கள், கண்ணுக்கு இதமான நிறத்தில்தான் சால்வை அணிய வேண்டும், எனக்கு இந்த நிற சால்வைதான் அழகாக இருக்கும்... இப்படிப் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

கடைசியாக புத்தர் நிறம் மஞ்சள்தான் என்று கருணாநிதி கண்டு பிடித்தார். குரு பலமிழந்து இருந்தால், மஞ்சள் கல் மோதிரமோ, சட்டையோ, துண்டோ அணிவது வழக்கம். அதன்படிதான் அவர் அணிய ஆரம்பித்தார்.

96'க்குப் பிறகு அவருக்கு ஏற்றம் ஏற்பட்டது இதனால் தான் என்பது ஊரறிந்த வதந்தி. இப்படி தி.மு.க., அ.தி.மு.க. வட்டாரத்து குடும்பங்களுக்கு வித்யாதரன், ஷெல்வீ ஆகிய ஜோசியர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் ஆலோசனைகளைத் தந்து வருகிறார்களாம்.

விஜயகாந்த் பக்தியும் பரிகாரங்களும் வெளிப்படையானவை. இதில் அதிக ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா. முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் போய்விட்டு வந்து தான் செய்கிறார்கள்.


ஏ.எம்.ராஜகோபாலனைச் சந்தித்து கேட்டுக்கொள்கிறாராம் சரத்குமார். நிறைய கோயில்களுக்கு ராதிகாவுடன் அவர் தரிசனம் தருவதன் பின்னணி இதுதானாம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானதும் வாஸ்து அடிப்படையில் சத்தியமூர்த்தி பவனையே மாற்றிக்கொள்ளும் அளவுக்கு தங்கபாலுவின் நம்பிக்கைகள் பலமானவை.

நம்மூர் ஜோசியர்களின் துல்லியக் கணிப்புகளைப் பார்த்து கடல் கடந்துகூட தலைவர்கள் வருகிறார்கள். ஷெல்வீயை, இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொடர்ந்து வந்து சந்திக்கிறார்.

எதிர்பார்ப்புகள் நிறைந்தது அரசியல் உலகம். அதனால்தான் எதிர்காலத்தைக் கணிப்பவர்களுக்கு இங்கு அளவுக்கதிகமான மரியாதை. சில நம்பிக்கை வார்த்தைகளை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்வதைத் தாண்டி, ஜோசியர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் பயணமாகி வாழ்க்கையை இழந்த தலைவர்கள் நிறைய.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் அவர். 'நிழல் முதல்வர்' என்று சொல்லும் அளவுக்கு அனைத்தையும் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீங்கள்தான் முதல்வர் என்று மூத்த ஜோசியர் சொன்னார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக ஜானகி அணி தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு ஜெயலலிதாவிடம் போய் அமைச்சராகும் அளவுக்கு நெருக்கடி வந்தது.

நேரம் சரியில்லை என்று பரிகாரம் சொல்லப் போன ஜோசியர், கதவு இருந்த இடத்தை மாற்றி அங்கு செக்யூரிட்டி உட்காரும் ஓய்வு அறையாக ஆக்கச் சொன்னார்.

அது மாதிரியே வாசல் இடிக்கப்பட்டன, புது அறைகள் கட்டப்பட்டன. பால் காய்ச்சப்பட்டது. பால் காய்ச்சிய அன்று மாலையே அமைச்சர் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

தசாபுத்திதான் காரணம் என்பார்கள் ஜோசியர்கள். சொந்தப் புத்தி சரியாக இருந்தால் எந்தப் புத்தி தடுக்க முடியும்?

திங்கள், 25 மே, 2009

திறவுண்டவாசல்

FMPB மற்றும் சில கிறிஸ்துவ நிறுவனங்கள் கடந்த 25 ஆண்டுகளாக தென்-குஜராத் பகுதியில் மிக தீவிரமான சுவிசே மற்றும் சமூக பணியில் ஈடுபட்டுவருகிறது.

குறிப்பாக ஃபில் மற்றும் குக்னா மக்கள் மத்தியில் எழுத்தறிவு, மருத்துவம், வேதாகம மொழி பெயர்ப்பு, சபைகள் நிறுவுவது என பல வழிகளில் சமுகப் பணியாற்றி வருகிறது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக FMPB தனது ஊழியத்தை தென் குஜராத் பகுதியில் தமது ஊழியத்தை ஆரமித்தது, அனேக மிஷனெரிகளின் உழைப்பால் சபைகள் நறுவி அனேக மக்கள் தங்கள் பாவ வழிகளைவிட்டு சிலுவையின் மேல் கிறிஸ்து இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிரோடு எழும்பியதை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.

அந்த பகுதியில் உபத்திரவங்களின் மத்தியில் சபை எவ்வாறு நிறுவப்பட்டது, மக்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு மாறியுள்ளது என பல நிகழ்வுகளை விவரித்தனர். இந்த பகுதியில் சுமார் 2000 சபைகள் நிறுவப்பட்டுள்ளன்.

நம் மிஷனெரிகளின் உழைப்பையும் அர்பணிப்பான வாழ்வையும் தேவன் அவர்களை பயன்படுத்தியவிதத்தை எண்ணி வியப்பதுண்டு.

கடந்த சில ஆண்டுகளாக , குறிப்பாக தீய வகுப்புவாத சக்திகள் குஜராத்தில் வலுவாக காலுண்றிய பிறகு சுவிசே பணிகளை தடுக்கும் முயற்சியில் ஈட்டுபட்டு வருகின்றனர். அதில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்,

மேலும் தங்களது அடுத்த கட்ட பணியாக "கர் வாபஸி"(घर वाबसि or Ghar Wapsi - வீடு திரும்பு or Back to Home) என்னும் திட்டத்துடன், தென் குஜராத்தின் டாங்ஸ்(Dangs) மாவட்டத்தில் உள்ள சுபிர்(Subir) ல் ஒரு கும்ப மேளா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த குதியில் அனேக கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கட்டாயமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கும்பமேளா பிப்ரவரி 11- 14 -ம் தேதி வரை அங்கு நடை பெறும்.

கும்பமேளா என்பது ஒரு சில பகுதயில் தான் நடத்த முடியும், அதாவது புனித நகரம் அல்லது புனித இடம் என்று செல்லபபடும் ஹரித்துவார்,காசி,நாசிக். இந்த இடங்களில் மட்டும் பல காலமாக கும்பமேளா நடை பெற்று வருகிறது. இந்த இடங்களைத் தவிர வேறு எங்கும் கும்மமேளா நடைபெறுவதில்லை.

அப்படியிருக்க "சுபிர்" எனப்படும் ஒரு காட்டு பகுதியில் , அதுவம் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் கும்பமேளா நடை பெறப்போவது நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதற்காக சுமார் நாண்கு கோடி மதிப்பில் ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது.

இந்த கும்பமேளாவின் போது இந்த பகுதியில் கிறிஸ்தவர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை தாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காவி கொடியை அனைத்து இந்துகளின் வீடுகள் மேலும் கட்டாயமாக பறக்கவிடும்படி கூறிவருகின்றனர்.

கொடி பறக்காத வீடுகள் கிறிஸ்துவர்களின் வீடுகள் என அடையாளம் காணப்படுகிறது. கும்பமேளாவின் போது சுமார் ஜந்து இலட்சம் மக்கள் அங்கு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மக்களுடன் மக்களாக கலந்து இருக்கும் வெளிஆட்கள்(2002 குஜராத் கலவரத்தின் போது முஸ்ஸிம்களை தாக்கியது போன்று.) மூலம் கிறிஸ்தவர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டு தாளங்களை தாக்கி நீர்முலம் ஆக்கி அதன் முலம் அந்த பகுதியில் தங்கள் தளத்தை வலுவாக்கவும், பயந்த மக்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கொண்டுவரவும் "கர் வாபஸி" என்ற இந்த திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டு வருகின்றனர்.

இதற்காக வெளி ஆட்கள் குறிப்பாக அண்டை மாநிலங்களான மாஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து "சுபிர்" பகுதியில் குவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த நிகழ்சிகளை குறித்து கிறிஸ்துவ அமைப்புகள் மைய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரிவித்துள்ளனர். மாநில பா.ஜ.க. அரசு இதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது ஊரறிந்தது.

இந்த பகுதியில் போதிய அளவு பாதுகாப்பு இருக்குமா? என்பது ஐயமே. மேலும் தற்போது ஒரு C.D இந்த பகுதியில் காண்பிக்க பட்டுவருகிறது,

அதில் கிறிஸ்துவர்களை இராவணனுக்க ஒப்பாக சித்தரித்தும், அவர்களை வதம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாதாரண மக்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக திருப்பி விடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் அங்கு ஒரு வித பதட்டமான சுழ்நிலை நிலவிவருகிறது.

கிறிஸ்துவின் மக்கள் ஒரு நாளும் ஆயதங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், வாணத்தையும் பூமியையும் தம் வார்த்தையால் உண்டு பண்ணி கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஜனம் என்பதால், சுபிர் கிறிஸ்தவர்கள் ஒருகாலும், எந்த சுழ்நிலையிலும் பின்வாங்க மாட்டர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும்?

ஜெபம்.

ஆம் நண்பர்களே, ஜெபம் மட்மே நமக்கு ஜெயம் கொடுக்கும். முழங்கால் யுத்தம் முற்றிலும் வெற்றி தரும்.(தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.1கொரி -4:20)

நம் கடந்த கால அனுபவஙகள் முலம் நாம் இதை உணர்நதுள்ளோம். "நான் "சுபிர்" பகுதியில் இல்லை ஆகவே இதனால் எனக்கோ என் குடுபத்தினர்க்கோ எந்த பதிப்பும் இல்லை,

நான் இந்தி பிரச்சனைகள் எதுவும் இல்லாத பகுதியில் இருப்பதால் தேவனுக்கு நன்றி" -என இருந்து விடாமல் எஸ்தர் புத்தகத்தில் உள்ள இந்த வசனங்களை நினைவில் கொள்ளவும்

எஸ்தர் 4-13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொனனது:

நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.எஸ்தர் 4:14

நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்;

நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

ஆம், நண்பர்களே ஏற்ற காலத்தில் மவுனமாயிராமல், கிழ்கண்டவற்றை நம் ஜெபங்களில் நினைவு கொள்ளவும்.

1. கிழ் கண்ட கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் சபைகள் பணியாற்றி வருகிறது. அவர்களின் பாதுகாப்புக்காக, - CNI,IEM,FMPB,NMS,Roman Catholics Chruch.

2. மிஷனெரிகள், சபைகளின் மேய்ப்பர்கள், உள்ளுர் ஊழியக்காரர் களின் பாதுகாப்புக்காக (பவுல் இவ்வாறு கூறுகிறார் -

எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்;

நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும்மனுஷருக்கும் வேடிக்கையானோம்.1 கொரி 4:9)3.

இந்த உபத்திரவத்தின் உடே சபைகள் மேலும் வளர,4. Dangs மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்புக்காக

5. வகுப்பு வாத சக்திகளின் மனமாற்றத்திற்காக, அவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிலுவை அன்பை புரிந்து கொண்டு இரட்சிக்கப்பட.(நான்(இயேசு) உங்களுக்குச்சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர் களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு - 5:44)6.

அங்குள்ள சபைகள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் அனைத்தும் தாக்குதல்கள் எதுவும் நடந்தால் முற்றிலும் அமைதி காப்பது என்று முடிவு எடுதுள்ளனர்.

இந்தமுடிவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் (நான்(இயேசு) உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;

ஒருவன் உன்னை வலதுகன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு - 5:39)

உங்கள் கருத்துகளை நீங்கள் இங்கு பதியலாம். "சுபிர்" பகுதியில் நடைபெறும் நிகழ்சிகளை திரட்டி விரைவில் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

மேலும் இது குறித்த செய்திகள் நவம்பர் 18 Week -கில் காணலாம்

பி.கு.:- முடிந்தால் இந்த மின்-ஆஞ்சலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் இந்த ஜெப யுத்ததில் பங்கு பெறும் படி செய்யுங்கள்).

வெள்ளி, 15 மே, 2009

சந்திரக்கடவுள் - அல்லா

அநேகர் நினைக்கின்றனர், யூதர்களும், கிறிஸ்தவர்களும், மற்றும் இஸ்லாமியர்களும் ஒரே கடவுளாகிய யெகோவா தேவனை வழிபடுகின்றனர் என்று. ஆனால் உண்மை அதுவல்ல.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே தேவனை வழிபடுகின்றனர் என்பது உண்மை. ஆனால் இஸ்லாமியர்கள் ? குர்-ஆனில் சொல்லப்படும் அல்லா அரேபியர்களின் புற மத கடவுளா?

அல்லா எனும் வார்த்தை அல்-இலா எனும் வார்த்தையில் இருந்து தோன்றியது. அல் என்றால் (the), இலா என்றால் (GOD).

முன்பிருந்த அநேக சரித்திர ஆய்வாளர்கள் கருதினார்கள் அல்- இலா எனும் வார்த்தை எல் அல்லது எலோகிம் எனும் வேதாகம வார்த்தையிலிருந்து உருவாகியிருக்க வேண்டுமென்று.

ஆனால் உண்மை அதுவல்லவென்று இப்பொழுது அநேக சரித்திர ஆய்வாளர்கள் அந்த கருத்தை ஏற்க மறுக்கின்றார்கள்.

காரணம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவுக்கும் அரேபியர்களினது புரதான தெய்வமாகிய ஹ_பால்-(அல்லா)க்கும் அநேகம் ஒற்றுமைகள் இருக்கின்றபடியாலும், அதே சமயம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வழிபடும் தெய்வமாகிய யெகோவா தேவனுக்கும் இஸ்லாமியர்களினது அல்லாவுக்கும் அநேக வேற்றுமைகள் இருக்கின்றபடியாலும்;, ஆய்வாளர்கள் இப்படி கருதுகின்றனர்.

யெகோவா தேவனை நாங்கள் கர்த்தர்(கடவுள்) என்று சொல்லுவது போல, ஹ_பால்-ஐ அரேபியர்கள் அல்லா என்று அழைத்தனர்.

அல்லா என்றால் கடவுள் என்று அர்த்தம் -

The God = Jehova

Allah = Hubal

இப்படி சரித்திர, வேத, வரலாற்று, மற்றும் அகழ்வாராய்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதுவதற்கான காரணம் என்னவென்றால்.

சந்திரக்கடவுள்கள்

அகழ்வாராய்ச்சியாளர்கள, நைல் நதி முதல் துருக்கி வரையிலுள்ள மத்திய ஆசியப்பகுதியில் அநேகம் சந்திரதெய்வங்களை கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஆதி நாகரிக மக்களாகிய சுமேரிய மக்கள் சந்திரனை தெய்வமாக வழிபட்டிருக்கின்றனர், சந்திரனுக்கு வௌ;வேறு பெயர்களை அவர்கள் வைத்து வழிபட்டனர்: நன்னா, சுயென், அசிம்பாபர்.

இந்த சந்திரதெய்வத்தின் சின்னம்(அடையாளம்): வளர்பிறை நிலவு

மெசொப்பத்தாமிய மக்கள் மத்தியில் சந்திரனை வழிபடும் பழக்கம் எல்லாரிடமும் பிரபல்யமாக இருந்தது. அசீரியர்கள் பாபிலோனியர்கள், அக்காடிய-ர்கள் சுயென் எனும் பெயரை "சின்" ஆக மாற்றி, சந்திரனை தங்கள் பிரியமான தெய்வமாக மாற்றினார்கள்.

புரதான சிரியாவிலும், கானானிலும் சந்திரதெய்வத்தின் குறியீடு வளர்பிறை நிலவிற்குள் முழுநிலவை வைத்திருந்தனர்.

சந்திரக்கடவுளின் மனைவி சூரியக்கடவுள், அவர்களுக்கு 3 நட்சத்திரங்கள்(பிள்ளைகள்) இருந்தன.

உதாரணம்:- சின்"னுடைய பிள்ளை இஷ்தார்.

எகிப்திலும் சந்திரக்கடவுளை வழிபட்டனர்" சந்திரத்தெய்வத்தின் வேலை: மனிதனையும் கடவுளையும் நியாயம் தீர்ப்பது.

பழையேற்பாட்டுக்காலத்தில் பாபிலோனிய கடைசி அரசன் நபோநிதுஸ் (கி.மு 555- 539) தாய்மா-வைக் கட்டி, மத்திய ஆசியா தான் சந்திரதெய்வத்தின் பிரதான இடம் என்பதை நிரூபித்தான்.

புரதான சவுதி அரேபியாவில் சந்திரன் தான் முதற்கடவுள் என பல ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். சீனாய் மலை கூட ... "சின்" எனும் வசனத்தின் ஒரு பகுதிதான்.

மெக்காவிலும் அதே சந்திரனைத்தான் வழிபட்டனர், " பெயர் அல்-இலா (ஹ_பால்);. அல்-இலா முகமதுவிற்கு பிறகு அல்லா-வாக மாறியிது.

முகமதுவும், அவனுடைய குடும்பமும் இந்த அல்-இலா(அல்லா)வைத்தான் வழிபட்டு வந்தனர்.

ஏன் அல்லா(அல்-இலா) எனும் பெயரை முகமது அந்நிய தெய்வங்களாக சொல்லவில்லை என்று. மற்ற தெய்வங்களின் பெயர்களை முகமது சொல்லியிருக்கிறான், ஆனால் ஏன் இந்த பெயரை மட்டும் சொல்லவில்லை?

ஏன் என்றால் முகமது அல்லா-வினுடைய பிள்ளைகளையும், மற்ற 360 தெய்வங்களையும் தான் அகற்றியிருக்கிறான்.

ஆனால் அல்லாவை மட்டும் தனிக்கடவுளாக, எல்லாக்கடவுளுக்கும் மேலான கடவுளாக அதே சந்திரக்கடவுளை மாற்றினான்.

அல்லா என்றால் அரேபியர்களுக்குத்தெரியும் சந்திரக்கடவுள் தான் என்று.

முகமது அரேபியர்களுக்கு சொல்லும்பொழுது அல்லா-வை சந்திரக்கடவுளாக சொன்னான்.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும்பொழுது அல்லவை யெகோவா தேவன் என்று சொன்னான்.

ஆனால் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் கர்த்தராகிய யெகோவா தேவனை சரியாக அறிந்தபடியால் முகமதுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


அரேபியா- முகமதுவிற்கு முற்பட்ட காலம் (கி.பி 610க்கு முதல்)

காபா - தற்போதைய மெக்கா ...


இஸ்லாம் எனும் மார்க்கம் உருவாக முன்பு அரேபியர்கள் மத்தியில் பலவிதமான தெய்வ வழிபாடுகள் இருந்தது. காபாவிலே மட்டும் ஏறக்குறைய 360 தெய்வங்கள் அவர்களுக்கு இருந்தன.

ஹ_பால் (ர்ரடியட ) எனும் தெய்வம் அங்கேயிருந்த தெய்வங்களுக்குள் முன்னுரிமையான தெய்வமாக இருந்தது. ஹ_பால் ஒரு சந்திரக்கடவுள.;

ஏறக்குறைய கி.மு 2000 ஆண்டளவிலிருந்து சந்திரக்கடவுளை வழிபடுவது அரேபியர்களின் வழக்கமாக இருந்தது. மெக்காவில் தான் இந்த ஹ_பால்- ஐ வைத்து அரேபியர்கள் வழிபட்டனர்.

அங்கே அல்லாவையும் வணங்கினார்கள். ஆனால் அல்லாவிற்கு எந்தவிதமான சிலையையும் அவர்கள் வைக்கவில்லை. இதனால் அரேபியர்கள் ஹ_பால்-ஐ அல்லாவிற்கு பதிலாக கும்பிட்டார்கள்,

அதனிடமே தங்கள் விண்ணப்பங்களை வைத்தனர். அல்-இலாவுக்கு சிலை இல்லாததால் அரேபியர்கள் ஹ_பால் எனும் சிலையை அல்-இலாவாக பாவித்து வணங்கினர்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால்: ஹ_பால் தான் அல்லா.

தற்போது இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவை முன்பு : அல்-இலா என்று அழைத்தனர். கி.பி 610ற்கு பிற்பாடு முகமதுவினால் இப்பெயர் அல்லாவாக மாற்றப்பட்டது.

அரேபியர்கள் மத்தியில் ஒரு மரபு வழிக்கதை இருக்கின்றது, அவர்கள் அல்லாவை கும்பிடுகின்ற சமயம் ஹ_பால்-க்கு அருகில் நின்று வணங்குவார்கள் என்று.

ஹ_பால்-ஐ அவர்கள் காபாவின் உச்சியிலே வைப்பார்கள். ஹ_பால் உடன் இன்னும் 3 பெண் தெய்வங்களை அவர்கள் வைத்து வணங்கினார்கள்.

அல்- லத்

அல்- உத்சா

மனாத்

இந்த மூன்றும் அல்லாவின் பிள்ளைகள்.

அல்லா என்றால் - கடவுள். அரேபியர்களை பொறுத்தமட்டில் அல்லா என்றால்: ஹ_பால்.

(ஹ_பால் தான் அல்-இலா என்பதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. இருவரும் ஒகே கடவுளா அல்லது வௌ;வேறான கடவுளா என்பதில் தான் அந்த கருத்து வேறுபாடு).

முகமதுவின் அல்லா, முகமதுவின் குர்-ஆன்

முகமது உருவாக்கிய புதிய மதத்தில் ஹ_பால்(அல்லா) தான் கடவுள், அத்துடன் வேதாகமத்தை தனக்கு சாதகமாக மாற்றி புதிய மதத்தையும், ஹ_பால் சிலை ஏதும் இல்லாமல் அல்லாவை-யும் உருவாக்கினான்.

குர்-ஆன் உண்மையில் அரேபியர்களின் கலாச்சாரத்தையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும், முகமதுவின் சொந்த வசனங்களையும், கட்டளைகளையும் மற்றும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அப்படியே உண்மையாகவும், சில பகுதிகளை பொய்யாகவும், சில பகுதிகளை தனக்கேற்றதாகவும் திரிபுபடுத்தி எழுதப்பட்டிருக்கின்றது.

ஆதாரங்கள்

Collier's Encyclopedia: அல்லாவைப்பற்றி:

அரேபியர்கள் மத்தியில் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே அல்லா எனும் முதற்கடவுள் இருந்தது" என்று. (பக்கம் 570)

Britanica: மெக்காவைப்பற்றி: (அரேபிய சரித்திரம், பக்கம் 1045, 1979)

தற்பொழுது நடப்பதுபோல ஹஜ் யாத்திரை, மற்றும் அநேக சடங்கு முறைகள் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே மெக்காவில் நடைபெற்றது.

The Joy of Sects, Peter Occhigrosso, 1996

Die Hadsch, F. E. Peters, p 3-41, 1994

Muhammad und Muhammadanism, S. W. Koelle, 1889, p. 17-19

First Encyclopedia of Islam, E.J. Brill, 1987, Islam, p. 587-591

Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 38-49

Muhammad's Mecca, W. Montgomery Watt, Chapter 3: Religion In Pre-Islamic Arabia, p26-45

History Of The Arabs, Philip K. Hitti, 1937, p 96-101

The Hajj, F. E. Peters, p 3-41,

Muhammad and Muhammadanism, S.W. Koelle, 1889, p. 17-19

History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10

Meet the Arab, John Van Ess, 1943, p. 29

Fabled Cities, Princes & Jin from Arab Myths and Legends, Khairt al-Saeh, 1985, p. 28-30

Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 16-17

Karen Armstrong, Muhammad, (New York: San Francisco, 1992) p. 69.

Britannica, Arabian Religions, p1057, 1979

Southern Arabia, Carleton S. Coon, Washington, D.C. Smithsonian, 1944, p.399

History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10

Islam in the World, Malise Ruthven, 1984, p 28-48

Muhammad The Holy Prophet, Hafiz Ghulam Sarwar (Pakistan), p 18-19, Musli

இஸ்லாம் - அல்லா

இஸ்லாமியர்கள் கூறுவது போல: அல்லாவும் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கடவுளும் ஒன்று+ஆ?

ஏன் இஸ்ரவேலர்களும், கிறிஸ்தவர்களும் முகமது நபியையும், குர்-ஆனையும் தள்ளி வைத்தனர். என்ன காரணத்தினால் அவர்கள் தள்ளி வைத்தனர்? சிறிது ஆராய்வோம்.

யெகோவா தேவனிடம் இல்லாத அல்லாவின் சில தன்மைகள்:

அல்லா மிகப்பெரிய சதிகாரன்

ஸீரா 3: 54 (குர்- ஆன்)

ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத் திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் (செல்லப்பெயர்: Bhagdad Bob) அவர் தன்னுடைய பேச்சிலே குறிப்பிட்டிருந்தார், அல்லா எல்லாரை விடவும் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் என்று. இதனுடைய அர்த்தம் என்ன ?

ஸீரா 3: 54 சொல்கிறது அல்லா சூழ்ச்சிக்காரன் என்று. அரபிய மொழியில் Makara என்று எழுதப்பட்டிருக்கின்றது. Makara எனும் அரபிய வார்த்தைக்கு சூழ்ச்சி, தந்திரம் அல்லது சதி என்று பொருள்படும்.

இதே Makara எனும் அராபிய வசனம் பரிசுத்த வேதகமத்தில் சாத்தானுக்கு பாவிக்கப்படுகின்றது (ஆதியாகமம் 3:1)

காலிப் அபு பக்ர் ஒரு தடவை சொன்னார், அல்லாவினுடைய சூழ்ச்சியின் சக்திக்கு தான் அஞ்சுவதாக.

ஸீரா 8: 30 (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக.

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

ஸீரா 10: 21 மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது

'திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும் நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சதி, சூழ்ச்சி, தந்திரம் இப்படிப்பட்ட தன்மைகளை உடையவர் இல்லை எங்கள் யெகோவா தேவன்.

சத்தியம் செய்தல்

யெகோவா தேவனுக்கும், அல்லாவிற்கும் இடையிலுள்ள இன்னுமொரு பெரிய வித்தியாசம் என்னவென்றால்: யெகோவா தேவன் தம்மேல் (அவர் மேல்) மட்டும் தான் சத்தியம் செய்வார்.

அவர் தம்மேல் மாத்திரம் சத்தியம் செய்வதற்கான காரணம்: சத்தியம் செய்வதற்கு அவரைவிட பெரியவர் யாருமில்லை என்பதனால்.

எபிரேயர் 6:13 ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:

ஏசாயா 45:23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன், இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது, இது மாறுவது இல்லையென்கிறார்.

எரேமியா 22:5 நீங்கள் இந்த ர்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறாh

ஆனால் குர்-ஆன் கூறும் அல்லா தன்னைவிட சிறிய எல்லாவற்றின் மீதும் சத்தியம் பண்ணுகிறார்.

வானத்தின் பேரில் சத்தியம் குர்-ஆன் 86: 1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக 74:32 (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

74:33 இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

74:34 விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

53:1 விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

எழுதும் எழுதுகோலின்மீது சத்தியம்
68:1 நூன்- எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!


நகரத்தின் மீது சத்தியம்
90:1 இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.


படைப்புக்களின் மீது சத்தியம்
92:1 (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

92:2 பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

92:3 ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-


அல்லா எல்லாவற்றின் மேலும் சத்தியம் பண்ணுகின்றார், ஆனால் யெகோவா தேவன் தம்மீது மாத்திரம் சத்தியம் செய்கின்றார்.

இப்படியிருக்கையில் இருவரும் ஒன்று என்று சொல்வது "பொருந்தவில்லை".

தவறான கனவை காட்டும் அல்லா

குர்-ஆன் 8:43 (நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக!

எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான் நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.

8:44 நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான் இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் -

இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.

முகமது நபியினுடைய கனவில் அல்லா பொய்யான காட்சியை காண்பிக்கின்றார். ஏனென்றால் போரில் எதிரிகள் அதிகமாக இருக்கின்றபடியால், எதிரிகளுக்கு முஸ்லிம்கள் பயந்து போரை நிறுத்திவிடுவார்கள் என்பதனால்.

வசதியானவர்களுக்கு மட்டும் அல்லாவின் கண்களில் தயவு

17:16 நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம். ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள்.

அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.

வசதியில்லாதவர்கள் ? ஏழைகள் ? அவர்களுக்கு நேர்வழியை பின்பற்ற வேண்டுமென்று அல்லா சொல்ல மாட்டாரோ ?

கடவுளுடைய பெயர்கள்

வேதாகமத்தில் - எபிரேய மொழியில்

எலோகிம் (கர்த்தர்) 2550 அல்லா(கடவுள்)
அடோனாய்(தேவன்) 340 ராப்(தேவன்)
யெகோவா(இருக்கின்றவராக இருக்கிறேன்) 6823 எதுவுமில்லை

பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய எந்தப்பெயரும் ஏன் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை. ஏன்? குர்-ஆன் சொல்கின்றது மோசேக்கு தேவன் வேதத்தை அருளினார் என்று,

அப்படியானால் குறைந்தபட்சம் யெகோவா (இருக்கிறவராக இருக்கின்றேன்) என்கின்ற பெயராவது குர்-ஆன் இல் குறிப்பிடப்பட்டிருக்கலாமே? ஏன் குறிப்பிடப்படவில்லை?

அல்லா என்றால் அரபு மொழியில் கடவுள் என்று அர்த்தம். எந்தக்கடவுளைப்பற்றி முகமது குர்-ஆனில் குறிப்பிட்டிருக்கின்றார்?

நிச்சயமாகத்தெரியும் வேதாகமத்தில் அல்லாத ஒரு கடவுளை என்று. காரணம் வேதாகமத்தில் உள்ள கடவுளுடைய எந்தப்பெயரும் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை என்பது தான்.

குர்-ஆனை மட்டும் முகமது நபி உருவாக்கவில்லை, ஒரு புதிய கடவுளையும் குர்-ஆனோடு அறிமுகப்படுத்தியிருக்கின்றான்.

நான் நினைக்கின்றேன் இப்படிப்பட்ட குணாதிசயங்களை உடைய அல்லாவிற்கும், யூதர்களும், கிறிஸ்தவர்களும் வணங்கும் யெகோவா தேவனிற்கும் அநேக வேற்றுமை இருப்பதால்- அன்றும், இன்றும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் முகமதுவையும், அல்லாவையும், குர்-ஆனையும் தள்ளிவைத்தனர் என்று.

இஸ்லாம்

இஸ்லாம் மதத்தை உருவாக்கிய முகமது நபி கி.பி சித்திரை மாதம், 20ம் திகதி, 571ம் ஆண்டு மெக்காவிலே (தற்காலத்து சவுதி அரேபியா) பிறந்தான். சிறுவயதிலே தாயையும், தந்தையையும் இழந்த முகமதுவுக்கு, அவனுடைய சிறியதகப்பன் புகலிடம் கொடுத்தார். முஹமது ஒரு வர்த்தக வியாபாரியாக தொழில் செய்து வந்தான்.

பின்பு முஹமது தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தான். அதனால் மிகவும் பணக்காரன் ஆனான்.

முகமதுவிற்கு 40 வயதாக இருக்கையில்: ஒருநாள் தன்னுடைய மனைவியாகிய கதியாவிற்கு சொன்னான்:

ஹிரா எனும் குகையில் அல்லாவுடைய தூதன் காபிரியேலை சந்தித்ததாகவும், தன்னை ஓதுவீராக என்று சொன்னதாகவும், தான் அதற்கு எனக்கு ஓத தெரியாது என்று தான் சொன்னதாகவும்,

மூன்றாம் முறை ''படைத்த உம் இறைவனின் திருப் பெயர் கொண்டு ஓதுவீராக! கரு வறைச் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நிலையிலிருந்து அவன் மனிதனைப் படைத் தான்.

ஓது வீராக! உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில் அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுத்தான்""(96:1-5) எனக் கூறியாதாகவும், பின்னர் காபிரியேல் தூதன் திரும்பி சென்று விட்டதாகவும்.

பின்பு 22 வருடங்களாக முகமது நபியின் மரணம் வரை காபிரியேல் முகமதுவுடன் பேசியவைகள் எனப்படுபவைகளே குர்-ஆனில் அடங்கியுள்ளது.

கதியா தான் முகதுவினால் முதலாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டவள். அதன் பின்பு முகமது ஜனங்களுக்கு அல்லாவைப்பற்றி கூறத்தொடங்கினான். ஆரம்பத்தில் முகமதுவை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக மெக்காவிலே முகமதுவிற்கு எதிர்ப்பு வந்தது. அதனால் மெதினாவுக்கு முகமதுவும், முகமதுவின் ஆட்களும் தப்பியோடினார்கள். மெதினாவிலே முகமதுவினுடைய போதனைக்கு வரவேற்பு இருந்தது.

8 வருடங்களுக்கு பின்பு முகமது மெக்கவை கைப்பற்றினான். இப்போது மெக்கா ஒரு புனித நகரமாக விளங்குகின்றது.

முகமதுவையும், குர்-ஆனையும் அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் ஏற்றுக்கொள்ளவவில்லை. இன்றும், என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிறிஸ்துவுக்கு பின்

571: முகமது பிறப்பு
623: முகமது மெதீனாவுக்கு செல்லுதல்
631: முகமதுவினால் மெக்கா கைப்பற்றப்பட்டது
633: முகமதுவின் மரணம்

குர்-ஆன்- அறிமுகம்

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆன் எழுதப்படவில்லை. முகமதுவுக்கு எழுதப்படிக்கவும் தெரியாது. முகமதுவினுடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய போதனைகளை குறித்து பல வித்தியாசமான கருத்துக்கள் இருந்தது. முகமதுவின் வார்த்தைகள் அழிந்து விடுமோ, மாற்றப்பட்டுவடுமோ என்று கருதினர்.

கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து அலி என்ற கலிபா குர்-ஆன் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். அலியின் மரணத்தின் பின்பு கலிபா உத்மான் அரேபியாவை ஆணடார்.

குவைது என்ற போர்வீரன் உத்மானிடம் குர்-ஆன் வாக்கியங்களை குறித்து பேசினான். அதன் பின்பு அவர் 14 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, குர்-ஆன் வாக்கியங்களை சேகரிக்க முயன்றார்.

முகமது வாய் வழியாக சொன்னவற்றை கேட்ட அநேகர் வந்து முகமது இதையெல்லாம் என்று சொன்னார்கள். அதிகளவு ஜனங்கள் வந்ததனால், இனி யாரும் குர்-ஆன் வாக்கியங்களை கொண்டுவர வேண்டாம் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதுவரை சேகரித்த வாக்கியங்களை எல்லாம் தொகுத்து அமைத்தனர்.

இந்த நிகழ்ச்சி கி.பி 650- 656 வரையில் நடந்தது. குர்-ஆனின் தொகுப்பில் எவை சேர்க்கப்பட வேண்டும், எவை சேர்க்கப்பட கூடாது என்று உத்மான் கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வமான குர்-ஆன் ஒன்று தான் இருக்க வேண்டுமென்று இப்படி செய்யப்பட்டது.

தன் காலத்தில் கொடுக்கப்பட்ட குர்-ஆனின் பிரதியை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, அல்லது அப்படி கருதப்படுகின்ற எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், அல்லது துண்டுப்பகுதிகளாக இருப்பினும் அவற்றையும் எரித்து விட வேண்டுமென்று உத்மான் கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6: 479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது.

ஹதீஸ்- அறிமுகம்

இஸ்லாமியர்கள் குர்-ஆனிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவம் ஹதீஸ் கலைக்கும் கொடுக்கின்றார்கள். ஹதீஸ்- இல் முகமது நபியினுடைய உரைகள், செயல்கள் (வாழ்க்கை), அவர் அனுமதித்த காரியங்கள் ஆகியவைகள் அடங்கியுள்ளது.

உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் நபிமொழிகள்:

ஸஹீஹ் அல்புகாரி (100 சத விகிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நடைமுறையில் இருப்பதும்)

ஸஹீஹ் முஸ்லிம்

சுனன் இப்னுமாஜா

சுனன் அபுதாவூது

ஜாமி உத் திர்மிதீ

சுனன் நஸாஜி

இவற்றில் குர்ஆனுக்கு அடுத்து ஆதாரப்பூர்வமானது என அனைத்துத் தரப்பினராலும் அ';கீகரிக்கப்பட்டுள்ளது ஸஹீஹ் அல்புகாரி ஆகும். புகாரா என்னும் ஊரில் பிறந்த இமாம் முஞம்மது பின் இஸ்மாயீல் என்பவரால் வகுக்கப்பட்டது தான்: ஸஹீஹ் அல்புகாரி எனும் நபி மொழி தொகுப்பு ஆகும்

வியாழன், 2 ஏப்ரல், 2009

ஓட்டுக்கட்சிகளை மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?

ஓட்டுக்கட்சிகளை மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?


”ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால், அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை.

1950&லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் ‘வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று யாரும் சொல்ல முடியாது.

ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று ‘தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்?’ என்று கேட்டால், ‘எதுவும் நடக்காது’ என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சாலைவசதி, குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக் கூட ‘முருகனுக்கு மொட்டைப்போட்டா ஏதாவது நல்லது நடக்கும்’ என்று நம்பிக்கை இருக்கிறது. ஓட்டுப் போடுகிறவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கூட கிடையாது.

இருந்தாலும் ஓட்டுப்போடுகிறார்கள் என்றால், அது வேறு வழியில்லாத கையறு நிலை. இரண்டாவது இது ஒரு ஆஸ்வாசம். கருணாநிதி மாற்றி, ஜெயலலிதா. அந்தம்மாவை மாற்றி கருணாநிதி என்று மக்கள் தங்களின் கோபத்தை தணித்துக்கொள்வதற்கான வாய்ப்பு.

மூன்றாவது வாக்காளர்களில் கணிசமான பிரிவினர் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டு வாங்கிட்டுப் போறவன் எப்படியும் எதையும் செய்ய மாட்டான்னு தெரியும். அதனால் உடனடியா ‘இப்ப என்ன தர்ற?’ என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அண்ணாச்சிக் கடையில் சோப்பு, ஷாம்பு வாங்கும் வாடிக்கையாளன் ‘என்ன ஆஃபர் இருக்கு?’ என்று கேட்பதுபோல ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் ஆஃபர் கேட்கும் அளவுக்கு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

கீழ்மட்ட கிராமங்கள் வரை இந்த ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இந்தப் பணத்தை வாங்கி விநியோகிப்பவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன.

‘அந்த ஊர்ல அவ்வளவு கொடுத்தீங்க, எங்களுக்கு மட்டும் இவ்வளவுதான் கொடுத்திருக்கீங்க’ என்று ‘உரிமை’யை போராடிப் பெறும் குழுக்களாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ஜனநாயகத்தை ‘இது இப்படித்தானே இருக்க முடியும்?’ என்று அதன் சகல சாக்கடைத்தனங்களோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

இது தேர்தலுக்கு மட்டுமில்லை. ‘போலீஸுன்னா அப்படித்தான் இருக்கும், கோர்ட்டுன்னா அப்படித்தான் இருக்கும்? வேறு எப்படி இருக்க முடியும்?’ என்பதுவரைக்கும் நீள்கிறது.

வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது. எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும். அதுதான் தீர்வு.

அது வரைக்கும் நம் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே… அதனால் இதற்கு ஒரு மாற்று கிடையாது என்று சிந்திக்க வேண்டியது இல்லை. ஓட்டுப்போடுவது என்ற நடவடிக்கை 1950&களில் நம்பிக்கையோடு ஆரம்பித்தது.

இன்று அது ஒரு கொடுக்கல்&வாங்கள் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அவநம்பிக்கையின் எல்லையில் நின்றுகொண்டுதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள்.

‘இருந்தாலும் போடுறாங்கல்ல’ என்பது இந்த அமைப்பு முறையை நியாயப்படுத்துவதற்கும், இதனால் ஆதாயம் அடைபவர்களும் சொல்கிற ஒரு வாதம், அவ்வளவுதான்.

வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை, பேச்சுரிமை என மற்ற உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

சரி, அப்படியானால் என்னதான் மாற்று?


” ‘தேர்தலே கூடாது என்கிறீர்களா, ஜனநாயகமே கூடாது என்கிறீர்களா, சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?’ என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை. இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம்.

ஓட்டுப்போடும் உரிமை இருப்பதினால் மட்டுமே இது ஜனநாயக நாடாகிவிடாது. வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தருவதும் இல்லை, விரும்புவதும் இல்லை.

கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை என இவை எல்லாம் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். பேச்சுரிமைக் கூட அடிப்படை உரிமைதான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?


வேறு ஒரு உதாரணத்தின் வழிக்கூட இதை பேசலாம். இப்போது ஈழப் பிரச்னையில் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்கள், அந்த ஒடுக்குமுறையின் கீழ் வாழ சம்மதிக்கவில்லை.

ராஜபக்ஷே என்ன சொல்கிறார்? ‘பெரும்பான்மை தமிழர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள், ஈழம் கேட்பவர்கள் சிறுபான்மையினர்’ என்கிறார். இப்போது இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான சிறந்த ஜனநாயக வழி என்ன?

தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்களா, தனித்திருக்க விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் அந்த கருத்துரிமையின் மீது குண்டு வீசப்படுகிறது. இதை ஆதரிப்பவர்கள்தான், சுப்பிரமணியன் சாமியின் மீது முட்டை வீசியதை கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்கிறார்கள்.

இதில் நான் சொல்ல வந்த விஷயம், வாக்குரிமைதான் ஜனநாயகம் என்ற சித்திரம் ஒரு மோசடி. அது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. மற்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லை.

அது ஈராக்கில் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை மாதிரி. ஜனநாயகம் பற்றிய இந்த புரிதலின்மையுடன் மக்கள் வைக்கப்பட்டிருப்பது அவர்கள் இந்த மோசடிக்கு இரைவாதற்கு ஒரு முக்கியமான காரணம்.


இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும். பொருத்தவரைக்கும் ‘புதிய ஜனநாயகம்’ என்று ஒரு மாற்றை சொல்கிறோம்.

அதில் தேர்தல் உண்டு. ஆனால் அந்த தேர்தல் இப்படி ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது. டாடாவையும், அவரால் துப்பாக்கி சூடுபெற்ற சிங்கூர் விவசாயியையும் சமப்படுத்தி வாக்காளப் பெருமக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் மோசடியை அது செய்யாது.

அது, விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும்.

ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்கங்கள், சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும்.

அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும், தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.

அதற்குள்ளே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்கள் போடும் சட்டங்களை தாங்களே அமுல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.


இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம்.

இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும்.

கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக, அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு தொழிற்சங்க தேர்தலைப்போல அது எளிமையானதாக இருக்கும். செயலாளர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எடுத்துவிடலாம்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. இந்த உத்தரவாதங்கள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் என்பது உண்மையிலேயே இயங்கும். உண்மையிலேயே அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக இருக்கும். அப்படி ஒரு மாற்றைதான் நாங்கள் முன் வைக்கிறோம்.

”ஊழல் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியுமா..?”

”ஊழல் மட்டுமல்ல. உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் மையமான பிரச்னை. ஊழல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு.

‘ஊழல் மட்டுமே பிரச்னை. ஆகையால் நல்லவர்களைத் தேர்தெடுங்கள்’ என்றுதான் அதை நியாயப்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள். நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? நான் ரொம்ப எதார்த்தமா கேட்கிறேன்.

ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ இந்த ரெண்டு கேள்விகள்தானே இன்னைக்கு டிக்கெட் கிடைக்க அடிப்படையா இருக்கு? கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது.

நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது? அதனால் ஊழல்தான் பிரச்னை என்பது அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை திருப்பக்கூடிய ஒரு வாதம். இந்த அமைப்பை சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வாதம்.”

ஈழப் பிரச்னையில் இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை எப்படி எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்?

”ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும். ‘ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன். முதல் தீர்மானம் நான்தான் போட்டேன்’ என்று கருணாநிதி சொல்வார். ‘போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார்.

ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள்.

இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு, சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர். அப்போது ‘உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும்’ என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது.

அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை. ‘இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம்’ என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள்.

ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.இந்தியாவின் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை.



இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது, மஹிந்திரா கார் கம்பெனிக்கும், டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட்,

அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது, திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சி&க்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது, போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார்.

இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம், ‘அவர்கள் நம் ரத்த உறவுகள்’ என்பது. இது ரொம்ப அபத்தமானது.

எந்த ஒரு இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலில் எவை பேசப்பட வேண்டிய பிரச்னைகளாக இருக்க வேண்டும்?

எவை பேசப்பட வேண்டியவையோ அவைப்பற்றி இவர்கள் யாரும் பேசப்போவதில்லை. கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி, இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா, இது கொண்டு வந்து சேர்த்த நன்மை, தீமைகள் என்ன என்பதுபற்றி வலது, இடது கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தக் கட்சியும் பேசாது.

இந்த கொள்கைகள்தான் நாட்டின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களா இருந்திருக்கு. இந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் இந்தியா முழுவதும் பல மக்கள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை.

நகர்மயமாதலில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 50:50 என்ற விகிதத்திற்கு தமிழ்நாட்டின் நகர&கிராம விகிதாச்சாரம் வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக விவசாயம் சுருங்கிவிட்டது.

அதனால்தான் வட மாநிலங்களைப்போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு இல்லை. இந்தப் பிரச்னைப்பற்றி பேசப்போவதில்லை. இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக சென்னையை சுற்றி வந்திருக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எவற்றிலும் தொழிற்சங்க உரிமை கிடையாது.

தொழிற்சங்கம் ஆரம்பித்த குற்றத்துக்காக 250 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை நேரம் என்பது இல்லாமல் போய்விட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசப்போவதில்லை.

அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதை எதிர்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எதிர்ப்பு என்ற உணர்வே தெரியாத அடிமைகளைப்போல பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றியும் பேசப்போவதில்லை.


எது பேசப்படும் என்றால், ஜெயலலிதாவுக்கு ஒரு பாய்ண்ட் போதும். குடும்ப ஆட்சி. அந்தம்மாவுக்கு அது போதும். அது சட்டமன்ற தேர்தலா, நாடாளுமன்ற தேர்தலா, உள்ளாட்சித் தேர்தலா… அதெல்லாம் தேவையில்லை.

அத்தோட சேர்த்து ‘ஹைகோர்ட்ல அடிக்கிறாங்க, லா காலேஜ்ல அடிக்கிறாங்க, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, தீவிரவாத சக்திகள் தலைதூக்கி விட்டன’ இவ்வளவுதான் அந்தம்மாவுக்கு பாய்ண்ட்.

கலைஞரைப் பொருத்தவரைக்கும் நல்லாட்சி, சாதனைகள். அதைத்தவிர தளபதி அழகிரி இருப்பதால் அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கலாம்.

கொள்கை என்பது இப்போது கிடையாது. பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக்கும் தொடர்பில்லை. ஆனால் இவர்களுக்குள் ஆழமான வேறொரு கொள்கை ஒற்றுமை இருக்கிறது.

தனியார்மய, தாராளமய கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் உள்பட எல்லோருக்கும் ரொம்ப தீர்க்கமான ஒற்றுமை இருக்கிறது. அதுதான் இவர்களை ஒன்றிணைந்திருக்கிறது. இவர்களுக்கு இப்போது உள்ள பிரச்னை எல்லாம் தங்களுடைய வேற்றுமையை மக்களிடம் நிரூபிப்பதுதான்.

‘நாங்க வேற’ன்னு காட்டனும். ஹமாம், லக்ஸ், ரெக்சோனா சோப்பு வியாபாரிகள் எப்படி தங்களது சோப்பு மற்றதைவிட வேறுபட்டது என்று காட்டிக்கொள்கிறார்களோ அதுபோல ‘நாங்க வேற கட்சி’ என்று நிரூபிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு வேற்றுமை தேவைப்படுகிறது.

அதன் வழியா அதிகாரத்தை சுவைப்பதற்கு. மற்றபடி கொள்கை வேறுபாடு என்பது இல்லை. இந்த வேறுபாடு பொய்யாக இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலின் விவாதப் பொருள்களும் பொய்யாகவே இருக்கின்றன.

நம்ம நாட்டுல எதுடா எலெக்ஷன் பிரச்னைன்னா, ஜெயலலிதா முடியைப் பிடிச்சு இழுத்தா அதுதான் அந்த எலெக்ஷன் பிரச்னை. கருணாநிதி ‘ஐயோ கொல்றாங்க’ன்னு கத்துனா அந்த தேர்தலின் பிரதான பிரச்னை அதுதான்.

காங்கிரஸ் மீது இப்போது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றாலும் அது ரொம்ப வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஜெயலலிதா ரொம்பத் தாமதமா ஈழப் பிரச்னையைப்பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க.

அவங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசமாட்டாங்க. சரியா சொல்லனும்னா இதுக்கு மேல பேசத் தேவையில்லைன்னு நினைக்கிறாங்க.

இறையாண்மை என்ற சொல் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


”இறையாண்மை என்ற சொல்லுக்கு அர்த்தமாவது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை. அரசுகளுக்கு இடையேயான உறவைப் பொருத்தவரை ஒரு நாடு தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை அல்லது அதிகாரம்தான் இறையாண்மை என்று அழைக்கப்படுகிறது.


ஜனநாயகத்தின் பொய்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்கலாம். உயர்நீதிமன்றம் என்பது என்ன? அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு கட்டடம்.

திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம்.


திராவிடக் கட்சிகள்பற்றிய உங்கள் பார்வை என்ன?

”திராவிட இயக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அதை மறுக்க முடியாது. இதை நான் பெரியார் என்ற பார்வையிலிருந்து சொல்கிறேன். அதற்குப் பிறகு திராவிட இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது.

அவர்கள் அறிவித்துக்கொண்ட கொள்கைகளான சாதி ஒழிப்பு முக்கியமானது. ‘திராவிடம்’ என்பதெல்லாம் பொதுவான வார்த்தை.

சாதி ஒழிப்பு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் ஏன் போகலை என்றால் இந்த நிறுவனத்துக்குள் அவர்கள் வந்தது ஒரு முக்கியக் காரணம்.

அப்படி இந்த நிறுவனத்துக்குள் திராவிட இயக்கம் வரும்போது பார்ப்பனர் அல்லாத உயர்சாதி, உயர் வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறுகிறது.

அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உடனேயே பார்ப்பனர்கள் உடனான சமரசம் தொடங்குகிறது. பிறகு வட இந்திய தரகு முதலாளிகளும் தேவைப்படுகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து மறுக்கிறார்கள். காங்கிரஸ் தேசியவாதிகள், பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கத்தின் பாத்திரத்தை மறுப்பது என்பது வேறு. நாங்கள் மறுப்பது என்பது வேறு.”

ஞாயிறு, 15 மார்ச், 2009

தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
Posted on August 7, 2008, 5:41 am, by tamil99, under கட்டுரைகள்.
கணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.

அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப்படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில் பயிற்றுவிக்கப் படும் பாமினி, ஆகியவற்றோடு தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு தமிழக அரசால் தரப் படுத்தப் பட்ட விசைப்பலகையாக அங்கீகரிக்கப் பட்டு இலங்கை, சிங்கப்பூர், அரசுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட தமிழ்99 விசைப்பலகை முறை போன்றவை அதிகம் புழக்கத்தில் உள்ளவை. இவற்றை எழுத கணினிக்கு பலவிதமான தட்டச்சு செயலிகளும் கிடைக்கின்றன.

அவற்றில் முரசு அஞ்சல், அழகி, குறள் தமிழ்ச்செயலி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்தச் செயலிகளில் மேற்கண்ட எல்லா முறைகளும் இணைந்தே இருக்கின்றன. தேவையான தட்டச்சு முறையில் தட்டச்சு செய்ய இயலும். தமிழா குழுவினரால் உருவாக்கப் பட்ட எகலப்பை என்னும் திறமூல விசைப்பலகை இயக்கி தமிழ்99, அஞ்சல், பாமினி தட்டச்சு முறைகளுக்கு தனித்தனியாக கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தில் அனைத்துச் செயலிகளிலும் தமிழில் உள்ளீடு செய்ய இயலும்.

தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
அஞ்சல் முறையில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர்நெடில்களை எழுத இருவிசைகள், கா,கீ,கூ,கே,கை,கோ,கௌ போன்ற உயிர்மெய் நெடில்களை எழுத 3 அல்லது 4 விசைகள் அவசியம். ங,ஞ, த, ண,ள போன்ற குறில் எழுத்துக்களைக்கூட 3 விசைகள் பயன்படுத்தியே எழுத வேண்டியுள்ளது.

பாமினியில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் நெடில் எழுத்துக்களை எழுத shift உடன் 2 எழுத்து அவசியம். கீ,ஙீ,சீ….வரிசை, கே,ஙே,சே,ஞே…வரிசை போன்ற எழுத்துக்களை எழுத 3 விசைகள் அழுத்த வேண்டும். கோ,ஙோ,சோ,ஞோ….வரிசை எழுத்துக்களுக்கு 4 விசைககள் அழுத்த வேண்டியதாக உள்ளது.

தமிழ் தட்டெழுத்து முறையிலும் பாமினியைப் போலவே அதே விசைகள் அவசியம். கூடவே ழ வரிசை எழுத்துக்களை எழுத ழ=2, ழொ,ழோ,ழௌ=4, பிற ழ வரிசை எழுத்துக்கள்=3 என அதிகமான விசைகளைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.

தமிழ்99 அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.

விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…

இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது. விளக்கமான ஒப்பீடு மற்றும் பயிற்சி முறைகளை கணிச்சுவடி மின்னூலில் காணலாம்.

9 Comments »கேளுங்கள்! சொல்கிறோம்!!
Posted on December 17, 2007, 6:21 am, by tamil99, under கேள்விகள்.
கணினியில் தமிழ் எழுதுவது குறித்த உங்கள் சந்தேகங்களை இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம்…

13 Comments »Recent Comments
vijayan on தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
ரவிசங்கர் on கேள்விகள்
நம்பி.பா on கேள்விகள்
ரவிசங்கர் on கேள்விகள்
சுப்பையா வீரப்பன் on கேள்விகள்
ரவிசங்கர் on கேள்விகள்
ilangovan on கேள்விகள்
ரவிசங்கர் on கேள்விகள்
ப. இராசமோகன் on கேள்விகள்
angayatcanny on கேள்விகள்
ரவிசங்கர் on கேள்விகள்
prashanth on கேள்விகள்
angayatcanny on கேள்விகள்
angayatcanny on கேள்விகள்
இதயநிலா on மென்பொருள்கள்
Recent Posts
தமிழ்99 உதவிக்கு (0091) 99431 68304 அழையுங்கள்
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
கேளுங்கள்! சொல்கிறோம்!!

வியாழன், 12 பிப்ரவரி, 2009

ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு; கூட்டணி உடைப்பு; இதெல்லாம் முற்றிலும் உண்மையான விசயங்கள். நம்ம வீட்டிலே, இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, நம்மலாலே மத்தவங்க பிரச்சனையை எப்படி தீர்த்துவைக்க முடியும்?

இன்றைக்கு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண முயலும்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும்; தமிழக கட்சிகள், மத்தியில் ஆளும் காங்கிரஸுக்கு அளித்துவரும் ஆதரவை நீக்கிக்கொண்டு விட்டால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் பல்வேறு கோணங்களில், பிரச்சனையை ஆய்வு செய்து பார்த்து செயல்பட வேண்டியதாக இருக்கிறது.

இதெல்லாம், மிகவும் உண்மையான விசயங்கள். வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இது ஒரு 'இடியாப்பச் சிக்கல்' போல் தோன்றும். இலங்கை பிரச்சனைக்கு எதுக்கு இங்கே ஆட்சி கவிழ்ப்பு நடக்கணும் என்று கேள்வி மேல் கேள்வி எழும்பும். வெளி ஆட்களுக்கு புரியவே புரியாது.

நம்ம வீட்டிலேயே இப்படி 'இடியாப்பச் சிக்கலை' வைத்துக் கொண்டு, நம்மலாலே எப்படி அடுத்தவங்க பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும். ஆதலால்தான், பிரச்சனையில் மேலும் மேலும் குழப்பம் உண்டாகிக்கொண்டு இருக்கின்றது.

'இடியாப்பச் சிக்கலில்' தற்பொழுது ஒரு சிக்கல் தீர்ந்து கொண்டு வருகிறது. அதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு; அது காலத்தின் தீர்வு; தற்பொழுது, காங்கிரஸ் ஆட்சிகாலம் முடிவடைவதால், ஒரு சிக்கல் விலகிவருகின்றது. இனியும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு என்று பயப்படத்தேவையில்லை.

அதே சமயத்தில், புதிய சிக்கல் ஒன்று உருவாகி வருகிறது. அது என்னவென்றால், வரும் பாராளுமன்றத் தேர்தல், அதற்கேற்ற கூட்டணி, தேர்தல் பிரச்சாரம்.

ஆக, நம்ம வீட்டிலே இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, நாம போய், இலங்கை பிரச்சனையை எப்படி தீர்த்துவைக்க முடியும். அவங்க விதி அவ்வளவுதான்.

இந்த 'ஆட்சி கலைப்பு' அது உள்நாட்டு விவகாரம். அது உண்மையான விவகாரம்கூட. இதையாவது சரி செய்யலாம் அல்லவா? அதையும் சரி செய்யாமல் இருந்தால் எப்படி?

இப்படியே விட்டு வைத்தால், நாளைய அரசாங்கமும், எப்பவும் 'ஆட்சி கலைப்பு' என்ற பயத்தோடேயே, எப்படி தெளிவாக சிந்திக்க முடியும்; அப்புறம் எப்படி செயலாற்ற முடியும்.

'ஆட்சி கலைப்பு' இல்லாமல், ஆட்சியில் இருப்பவர்கள் செயலாற்ற வேண்டுமானால், ஆளுநரை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்ன தயக்கம்?

அப்படி, மக்கள் நேரடியாக மாநிலத்தை நிர்வாகிக்கும் தலைவரை தேர்ந்தெடுத்தால், அரசியல் கட்சிகள் அழிந்துவிடும். யாரும், சட்டமன்ற சீட்டு கேட்டு, கட்சி வாசலில்வந்து காத்திருக்கப் போவதில்லை. ஆட்களே வராவிட்டால், கட்சி காணாமல் போய்விடும்.

தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதை, சில கட்சி தலைவர்கள் ஆதரித்து வரவேற்கிறார்கள்; சிலர் அப்படி ஏதுவும் வந்துவிடக்கூடாதே என்று, அஞ்சுகிறார்கள்.

தலைமைப்பண்பு உடைய தலைவர்கள், தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள், இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள். தன்னம்பிக்கையில்லாதவர்கள்தான், புதிய மாற்றங்களை தவிர்க்கின்றார்கள்.

கட்சியின் அடிப்படையில் பார்க்கும்போதுதான், சீனியர் கட்சி, ஜுனியர் கட்சி, சின்ன கட்சி, பெரிய கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி என்ற பாகுபாடு தோன்றும். தலைமைப் பண்பின் அடிப்படையில் பார்க்கும்போது, அனைத்து தலைவரும் சமம் என்ற எண்ணம் உருவாகும்.

சாதரண உண்மைங்க: இந்தியாவில், அனைத்து மக்களுக்கும், எழுதப்படிக்கத் தெரியும் என்ற நிலை வந்து விட்டது. ஆதலால், இனி தேர்தல் சின்னம் தேவையில்லை; மக்கள் வேட்பாளரின் பெயரை படித்து ஓட்டுப் போடுவார்கள் என்றாகி விட்டால், கட்சி அலுவலகத்துக்கு, சீட்டு கேட்டு யாரும் வந்து நிற்கப்போவதில்லை. அந்த ஒரு சாதரண மாற்றத்திலேயே, கட்சிகள் அழிந்து போய்விடும். ஆக, மாறிவரும் மாற்றங்களை உணர்ந்து, புதிய வழியில் சிந்தியுங்கள்.

கடல் என்று இருந்தால், புயல் வரத்தான் செய்யும். புயல் வருமுன் காப்பவனே அறிவாளி; வந்தபின் தவிப்பவன் ஏமாளி.

ஆக, அரசு நிர்வாகத்துக்கு ஸ்திரத்தன்மை வேண்டும். அதுதான் முக்கியமான இன்றைய தேவை. அந்த தேவையை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்துத்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாற்றாக வேறு ஏதாவது வழியிருந்தாலும், அதனை செயல்படுத்துங்கள்.

மாற்றாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, ஒரு முறை மாநில முதல்வரை தேர்வு செய்து விட்டால், பதவிப் பிரமாணம் எடுத்து விட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அவர்தான் மாநில முதல்வர்; அந்த முதல்வரை, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, பதவியை பறிக்க இயலாது என்று கொண்டு வாருங்கள்.

அப்படி செய்தால், கட்சிகளும் காப்பாற்படும். அரசு நிர்வாகமும் ஸ்திரத்தன்மையை அடையும். 'ஆட்சி கலைப்பு' என்ற பயமில்லாமல், தெளிவாக சிந்தித்து, முடிவெடுத்து, செயலாற்ற முடியும்.

மக்கள் நம்பிக்கைவைத்து ஓட்டுப்போட்டு சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்கின்றனர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைவைத்து, மாநில முதல்வரை ஒருமுறை, ஒரே ஒரு முறை மட்டுமே, தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான். அதற்குபிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையேயில்லை; அதை முற்றிலுமாக நீக்கிவிடலாம்.

ஆக, ஏதாவது உருப்படியாக செய்யுங்க; புலம்புதை விட்டுட்டு; இலங்கை குடுமக்களை, அவுங்க அரசாங்கமே அழிப்பதை, உங்களாலே ஒன்னும் செய்ய முடியாது; எல்லோரும்போல, நீங்களும் சேர்ந்து தொலைக்காட்சியில், இண்டர்நெட்டில் வேடிக்கையை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால், 'ஆட்சி கலைப்பு', உள்நாட்டு விவகாரம். அதையாவது சரி செய்யலாமே.

சனி, 7 பிப்ரவரி, 2009

பிரபலங்களின் பார்வையில் "கிறிஸ்துமஸ்"

மனிதன் தான் பிறந்தது முதல் கொண்டாட்டங்களையும் சடங்குகளையும் உருவாக்கி கொண்டான். பண்டிகை என்பது மனித குலத்தில் ஒரு வளமான பண்பாடு.

இன்னும் சொல்லப்போனால் எப்போதும் அழுதுக்கொண்டும், முட்டி மோதிக்கொண்டும் இருப்பது மட்டுமே மனித குலத்தின் இயல்பல்ல.

கடுமையான நெருக்கடிகளின் மத்தியிலேயும் மகிழ்ச்சியின் ஒளிக்கீற்றைக் கண்டு குதூகலிப்பது மனித இயல்பு.

சாமான்யன் முதல் சாம்ராஜ்யங்களை ஆள்வோர் வரை கொண்டாட்டமென்பது பொதுதான். ஆனால் கொண்டாடுகிற விதம்தான் வித்தியாசமானது.

கிறிஸ்துமஸ் ஒரு மனித நேய விழா. பிரபலங்கள் எப்படி கிறிஸ்துமஸை பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா.

தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் அருட் திரு. வின்சென்ட் சின்னதுரை, டி.வி. பிரபலம் ஜேம்ஸ் வசந்தன், திரைப்பட இசை அமைப்பாளர் இமான், திரைப்பட பின்னணி பாடகி கிரேஸ், சிறுகதை எழுத்தாளர் வினோலியா நீதி ஆகியோரை சந்தித்தோம்.

பேதங்கள் இல்லாத, பிளவுகள் இல்லாத சமத்துவ எண்ணம் கொண்ட, மனித நேயம் கொண்ட, அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ்கிற சமுதாயமாய், மனிதனாய் நாம் மாற வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதே இக்கிறிஸ்மஸ் பெருவிழா...

கிறிஸ்துமஸ் என்பது கொடுக்கும் காலம். வசூலிக்கும் காலமல்ல. தேவன் தன் ஒரே மகனையே இந்த மண்ணுக்காக "கொடுத்த" காலம். எனவே வசூல் அல்லது நன்கொடை என்ற பெயரில் யாரிடமும் பெறாமல் நாமே ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும்...

கிறிஸ்துமஸ் காலங்களில் கொஞ்சம் அதிகமான உதவிகள் செய்வோம். முன்பெல்லாம் வரும் வாழ்த்துக்களைவிட இப்போது சினிமா துறைக்கு வந்த பின் திரைப்பட துறையினரிடமிருந்து வாழ்த்துக்கள் வருகிறது...

இந்த வருட கிறிஸ்துமஸுக்கு ஒரு சிறப்பு உண்டு. மடிப்பாக்கத்தில் அப்பா வீட்டில் மூன்றாவது மாடியில் ஒரு சேப்பல் (சர்ச்) கட்டியுள்ளார். அதில் இந்த வருட கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று உள்ளம் பூரிக்கிறார் கிரேஸ்...

கடவுள் தன் சொந்த மகனையே இந்த உலகுக்கு தந்த நாள் கிறிஸ்துமஸ். கடவுள் மனிதனை அளவுக்கு அதிகமாக நேசித்ததன் விளைவு தான் கிறிஸ்துமஸ்...

இயேசுநாதர் தே‌ர்‌ந்தெடுத்த 12 சீடர்கள்!

இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம்.

இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர்.

இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம்.

இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

இஸ்ரேலின் பெத்லேகம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை யோசேப்பு, தாயார் மரியாள்.

இயேசுபிரான் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில் கடைசி மூன்றரை ஆண்டுகள் அவரே தே‌ர்‌ந்தெடுத்த 12 சீடர்கள் அவருடன் இருந்தனர்.

12 சீடர்களின் பெயர்கள் : (மத்தேயு 10 : 2-4)

1. பரிசுத்த சீமோன் (பேதுரு என்று அழைக்கப்பட்டவர்)
2. பரிசுத்த அந்திரேயா
3. பரிசுத்த யாக்கோபு (செபெதேயுவின் குமாரன்)
4. பரிசுத்த யோவான்
5. பரிசுத்த பிலிப்பு
6. பரிசுத்த பர்த்தலேமியு
7. பரிசுத்த தோமா
8. பரிசுத்த மத்தேயு
9. பரிசுத்த யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்)
10. பரிசுத்த ததேயு
11. பரிசுத்த சீமோன் (கானானியன்)
12. யூதாஸ் காரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இவரின் பெயருக்கு முன்பு பரிசுத்த என்ற வார்த்தை சேர்க்கப்படமாட்டாது.)

யூதாஸ் காரியோத் சீடர் பங்கினை இழத்தல் :

இயேசுநாதரின் போதனைகளை அன்றிருந்த ரோமானிய அரசும், யூத மதவாதிகளும் சிறிதும் விரும்பவில்லை. இயேசுவை பழித் தீர்க்க வகை தேடினர்.

அவரைப் பிடித்து பழி சுமத்த சதி செய்தனர். இத்திட்டத்தின் படி இயேசுநாதரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்தை அணுகி 30 வெள்ளிக்காசுகளை கொடுத்தனர்.

இதற்கு கைமாறாக காரியோத், இயேசுநாதரைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டு அதன்படியே செய்தான்.

ரோமானிய அரசு, குற்றமற்ற இயேசுவின் மேல் பழி சுமத்தியது, இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

இப்பாவச் செயலைக் கண்ட யூதாஸ் மனமுடைந்தான். குற்றமில்லா இரத்தத்திற்கு பழியாகிவிட்டதை எண்ணி வேதனையடைந்து தான் வாங்கிய 30 வெள்ளியை வாங்கியவர்களிடம் கொடுக்கச் சென்றான்.
அவர்களோ மறுத்துவிட, அப்பணத்தை தேவாலயத்தில் எறிந்துவிட்டு தூக்குக் கயிற்றில் உயிர் விட்டான். (மத். 27 : 5)