சனி, 27 டிசம்பர், 2008

‌‌மகிழ்வூ‌ட்டு‌ம் ‌கி‌றி‌ஸ்தும‌‌ஸ் தா‌த்தா

'ஸிண்டர் கிளாஸ்' என்னும் டச்சு வார்த்தையின் அமெரிக்க வடிவமே 'சேண்டா கிளாஸ்’. அமெரிக்காவில் குடியேறிய மக்களிடமிருந்து இந்த கிறிஸ்துமஸ் தாத்தா வழக்கம் அமெரிக்காவிற்குள் குடியேறியிருக்க வேண்டும்.
பரிசுகள் வழங்குவதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், பொம்மைகள் தயாரிப்பதும் என கிறிஸ்துமஸ் தாத்தாவும் பிரபலமடையத் தொடங்கினார்.
1822இல் வெளியான 'எ விசிட் ஃப்ரம் செயின்ட் நிக்கோலஸ்’ என்ற பாடல் (எ நைட் பிஃபோர் கிறிஸ்துமஸ்) கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி விளக்குகிறது. அவர் பைப் புகைத்தபடி வருவார். ஒரு பெரிய பையில் குழந்தைகளுக்காக பொம்மைகள் சுமந்து வருவார்.
மூக்கு செர்ரி பழம் போலவும், கன்னங்கள் ரோஜா போலவும் ஜொலிக்கும். வெண்தாடி மிருதுவான பனியைப் போல அலை பாயும். இப்படி விவரிக்கும் இந்தப் பாடல் உலகப்புகழ் பெற்றதாகி விட்டது. இதுவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை ஒரு பொதுவான சித்தரிப்புக்கு இட்டுச் சென்றது.
நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வெள்ளைக் குதிரையில் வருகிறார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் கழுதை மேல் அமர்ந்து வருகிறார். நவீன யுகத்தில் சமீபத்தில் ஹெலிகாப்டரில் தாத்தா வந்திறங்கியது புதுமைச் செய்தி.
இத்தாலியில் பிஃபானா என்னும் கிறிஸ்துமஸ் பாட்டி இருந்திருக்கிறார். கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போலவே குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.

தாத்தா இன்றைய கொண்டாட்ட விழாக்களில் ஒரு கோமாளியாகவோ, குழந்தைகளுக்குச் சிரிப்பூட்டும் ஒரு நபராகவோ இருக்கிறார். ஆனால் அவருடைய வாழ்வு, வாழ்வின் வெற்றிடங்களை மனிதநேயம் கொண்டு நிரப்புவதாகவே இருக்கிறது.
நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பரிசுகள் வழங்குவது விழாவையோ, கிறிஸ்துமஸ் தாத்தாவின் நினைவையோ அர்த்தப்படுத்தாது. ஏழைகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் பரிசு கொடுத்து அரவணைப்பதே விழாவை அர்த்தப்படுத்தும்.இயேசுவே சொல்கிறார்...
‘உங்களை அன்பு செய்பவர்களையே நீங்களும் அன்பு செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை'‘எ‌ல்லோரிடமும் அன்பு செய்யுங்கள்’ என்ற தேவ குமாரரின் வேதவாக்கையே கிறிஸ்துமஸ் தாத்தா தனது செய்கையால் ஒரு பாடமாக்கியுள்ளார்.

‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌ந‌ட்ச‌த்‌திர‌ம், மர‌ம், தா‌த்தா


‌கி‌றி‌ஸ்ம‌ஸ் எ‌ன்றது‌ம் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ந‌ட்ச‌த்‌திர‌ம், ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் மர‌ம், ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா இ‌ல்லாம‌ல் இரு‌க்குமா. அவ‌ற்‌றி‌ன் ‌பி‌ன்‌ன‌ணி எ‌ன்ன எ‌ன்று இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ல் பா‌ர்‌ப்போ‌ம். ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ன் துவ‌க்கமாக அனை‌த்து தேவாலய‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌கி‌றி‌ஸ்துவ‌ர்க‌ளி‌ன் இ‌ல்ல‌ங்க‌ளி‌‌ன் வாச‌ல்க‌ளிலு‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் தொ‌ங்க‌‌விட‌ப்படு‌ம்.‌கி‌றி‌ஸ்து ‌பிற‌‌ந்த டிச‌ம்ப‌ர் 25-ம் தேதி உலகெ‌ங்‌கிலு‌ம் உ‌ள்ள கிறி‌ஸ்துவர்களும், அவரைப் பின்பற்றுவோரும் இயேசுவின் பிறப்பை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.

பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக‌த்தா‌ன் தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களை அல‌ங்காரமாக தொ‌ங்க ‌விடு‌கி‌ன்றன‌ர்.டிச‌ம்ப‌ர் மாத‌ம் ‌பிற‌ந்த உடனேயே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் கொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌ற்கான ஒரு அழை‌ப்பு ம‌ணியாக அனை‌த்து ‌கி‌‌றி‌ஸ்துவ‌ர்க‌ளி‌ன் இ‌ல்ல‌ங்க‌ளிலு‌ம் இ‌ந்த ந‌ட்ச‌த்‌திர‌‌த்தை ‌‌மி‌ன் ‌விள‌க்கு அல‌ங்கார‌த்துட‌ன் தொ‌ங்க ‌வி‌ட்டு, தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.


‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌ந‌ட்ச‌த்‌திர‌ம், மர‌ம், தா‌த்தா
ப‌ரிசுகளோடு வரு‌ம் ‌கி‌றி‌‌ஸ்ம‌‌ஸ் தா‌‌த்தா!‌கி‌றி‌‌‌ஸ்‌ம‌ஸ் நா‌ட்களு‌க்கு மு‌ன்னதாகவே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா‌வி‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நட‌த்த‌ப்படு‌ம். ஒ‌வ்வொரு ‌கி‌றி‌‌ஸ்துவ ‌வீடுக‌ளு‌க்கு‌‌ம் ‌கி‌றி‌‌ஸ்ம‌ஸ் தா‌‌த்தா செ‌ன்று இயேசு ‌கி‌றி‌‌ஸ்து‌வி‌ன் து‌திபாடலை பாடி ம‌கி‌ழ்‌ந்து உ‌ற்சாகமாக ஆடுவா‌ர்க‌ள். ஒ‌வ்வொரு ‌வீடு‌க‌ளிலு‌ம் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா‌வி‌ன் வரவை பெ‌‌ரியவ‌ர்களு‌ம், ‌சிறுவ‌ர்களு‌ம் ஆன‌ந்தமாக எ‌தி‌ர்நோ‌க்‌கி இரு‌ப்ப‌ா‌ர்க‌ள்.‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா வ‌ந்தவுட‌ன் இயேசு பால‌ன் ‌பிற‌ந்தா‌ர் எ‌ன்ற புது‌ப்பாட‌ல் பாட‌ப்ப‌ட்டு குழ‌ந்தைக‌ளு‌க்கு இ‌னி‌ப்பு வழ‌ங்க‌ப்படு‌ம். ‌அ‌ப்போது இயேசு பால‌னி‌ன் ‌பிற‌ப்பு ப‌ற்‌றிய ந‌ற்செ‌ய்‌தியை அனைவரு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சிகரமாக கூற‌ப்படு‌ம்.இத‌ி‌ல் அநேக ‌விசுவா‌சிக‌ள் கல‌ந்து கொ‌ண்டு இரவு நேர‌ங்க‌ளி‌ல் இயேசு‌வி‌ன் ‌பிற‌ப்பு நாளான ‌கி‌‌‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை ப‌ற்‌றி கூற‌ப்படு‌ம். அ‌ப்போது பெ‌ரியவ‌ர்க‌ள், இளைஞ‌ர்க‌ள், ச‌ிறுவ‌ர்-‌சிறு‌மிக‌ள் கல‌ந்து கொ‌ண்டு ‌கி‌‌றி‌ஸ்து‌வி‌ன் ‌பிற‌ப்பை ப‌ற்‌றி உ‌ற்சாகமாக அனைவ‌ரிட‌த்‌திலு‌ம் செ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

பல பகு‌தி‌க‌ளிலு‌ம் டிச‌ம்ப‌ர் மாத‌ம் துவ‌ங்‌கிய‌தில‌் இரு‌ந்தே பெ‌‌ரிய பெ‌ரிய வ‌ணிக ‌நிறுவ‌ன‌ங்க‌ளி‌‌ன் ‌வா‌யி‌ல்க‌ளி‌ல் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா ‌நி‌ன்று கொ‌ண்டு கடை‌க்கு வரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை அ‌ளி‌‌‌ப்பதை‌யு‌ம், பெ‌ரியவ‌ர்களு‌க்கு கைகுலு‌க்‌கி வா‌ழ்‌த்து‌க்க‌ள் கூறுவதையு‌ம் காணலா‌ம்.
‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை துவ‌ங்குவத‌ற்கு மு‌ன்பே ‌கோ‌யி‌ல், ‌வீடுக‌ளி‌ல் ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ள் இயேசு‌ ‌பிற‌ந்ததை ஞாபக‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் மா‌ட்டு‌த் தொழுகை போ‌ல் அமை‌த்து அ‌தி‌ல் மர‌ங்க‌ள் செ‌ய‌ற்கையாக வை‌த்து ஆடுக‌ள், மே‌ய்‌ப்ப‌ர்க‌ள் போ‌ல் ‌சி‌த்த‌ரி‌த்து வை‌க்க‌ப்படு‌ம்.‌பி‌ன்‌ன‌ர் அதனை சு‌ற்‌றி ‌மி‌ன் ‌விள‌க்குக‌ள் பொரு‌த்த‌ப்ப‌ட்டு அ‌ந்த இடமே பக‌ல் போ‌ல் காட‌்‌சி அ‌ளி‌க்கு‌ம். காலை மாலை இரு வேளைகளு‌ம் ‌கி‌றி‌‌ஸ்தவ‌ர்க‌‌ள் மெழுகுவ‌ர்‌த்த‌ி ஏ‌ந்‌தி ஜெப‌ம் செ‌ய்து இறைவனை புக‌ழ்வா‌ர்க‌ள்.இயேசு‌ ‌பிற‌க்கு‌ம் போது வான‌த்த‌ி‌ல் இரு‌ந்து ந‌ட்ச‌த்‌திர‌ம் தோ‌ன்‌‌றியதை ‌நினைவுகூறு‌ம் வகை‌யி‌ல் ஒ‌வ்வொரு ‌வீடுக‌ளிலு‌ம் ‌‌‌‌மி‌ன் ‌விள‌க்குகளா‌ல் அல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள் தொட‌ங்க‌விட‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.‌

அ‌ன்று ‌‌கி‌‌றி‌‌ஸ்தவ‌ர்க‌ள்‌ பு‌த்தாடைக‌ள் அ‌ணி‌‌ந்து அ‌திகாலை 5 ம‌ணி‌க்கே கோ‌யிலு‌க்கு செ‌ன்று ‌பிரா‌ர்‌த்தனை செ‌ய்து இயேசு‌வி‌ன் புக‌ழ்பாடுவா‌‌ர்க‌ள். அ‌ப்போது ஒருவ‌ரு‌க்கொருவ‌ர் த‌ங்க‌ள் அ‌ன்பை ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். ‌பி‌ன்ன‌ர் த‌ங்க‌ள் ‌வீடுக‌ளி‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ப‌ண்ட‌ங்களை கொடு‌க்கு‌ம் போது 'கேப்‌பி ‌கி‌றி‌ஸ்ம‌ஸ்' எ‌ன்று இயேசுவை பு‌க‌ழ்‌ந்துரை‌ப்பா‌ர்க‌ள்

தேவ குமாரரின் அழைப்பு

ஜீவிதத்திற்கான வழியையும், அணுகுமுறையையும் காட்டியதோடு நிற்கவில்லை, இறையனுபவத்தை பெறுவதற்கான வழியையும் காட்டுகிறார் தேவ குமாரர். இதோ அவர் கூறியது: “இடுக்கான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; (இறையுலகின்) வாசலிற்க்குப் போகும் வழி விரியும்; வழி விசாலமுமாயிருக்கிறது; அந்த வழியில் பிரவேசிப்பவர்கள் அனேகர்.” என்றும், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றும் கூறி தெளிவாக வழிகாட்டியுள்ளார் (மத். அதி.7.13,14).நம்முடைய புறத்தை நாடும் புத்தியையும், புலன்களையும் அடக்கி நமது ஜீவனின் உட்சென்று நமது உண்மையறிய கர்த்தர் வழிகாட்டியுள்ளார் என்று மேற்சொன்ன விவிலிய வாசகங்களை விளக்கிக் கூறியுள்ளனர் ஆன்மீக முன்னோடிகள்.நம்மை நாமறிந்து இறைவனின் பாதையில் நடப்பதை திசை திருப்பக்கூடிய போலிகளையும் கர்த்தர் அடையாளம் காட்டியுள்ளார்:“கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்தில் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று கூறியது மட்டுமின்றி, அவர்களின் செயல்களால் அவர்களை அடையாளம் காணுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்: “அவர்களுடைய கனிகளால் (செயல்களால்) அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்புதர்களில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பி அடையாளம் காட்டியுள்ளார்.தன்னை கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவர்கள் அல்ல, “பரலோகத்திலிறுக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி நடக்கின்றவனே பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார் தேவ குமாரர்.இப்படி வாழ்வையும் விளக்கி, அதனை எதிர்கொள்வதற்கு வழியும் காட்டி, இறைவனை நாடச் சொல்லி, அதற்கான ரகசியத்தையும் எடுத்துரைத்து ஒரு முழு வழி காட்டியாய் வாழ்ந்தார் தேவ குமாரர்.
webdunia photo
WDகர்த்தர் பிறப்பு இவ்வுலகிற்கு நல் வழிகாட்டியது, அவரது உலக வாழ்வின் முடிவு நம்மை, நாம் வாழும் இவ்வுலகை புனிதப்படுத்தியது.நமது வாழ்வின் ஒளியாய் திகழும் கர்த்தரின் பிறப்பை உளமார மகிழ்ந்து கொண்டாடுவோம். அவர் காட்டிய உண்மைப் பாதையில் நடந்து அவர் உறுதியளித்த பரலோக சாம்ராஜ்யத்தை வரவேற்கத் தயாராவோம்.


உலக வரலாற்றில் புகழ்பெற்ற பேரரசர்களில் இஸ்ரவேலை ஆண்ட சாலமோன் ஒருவர் என்பதை அறிவோம். அவருக்குப் பின் இஸ்ரவேல் முடியரசு இரண்டாக உடைந்து ஏறக்குறைய 400 ஆண்டுகள், அதாவது கி.மு. 587 வரை சிற்றரசர்கள் வசம் இருந்தது. அந்நாட்களில் பல தீர்க்கதரிசிகள் தோன்றி தமக்கு வெளிப்பட்ட இறைவனின் தரிசனங்களை மக்களுக்கு தெரிவித்து வந்தனர். அவர்களில் கி.மு. 7-ம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய ஏசாயா மீகா என்னும் தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்திய தரிசனங்களில் முக்கியமான ஒன்று மேசியாவின் பிறப்பாகும். இச்செய்தியை விவிலியத்தில் இவ்வாறு காணலாம் : 1. ஏசாயா (7 : 14) - "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்".2. ஏசாயா (9 : 16) - "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்".3. மீகா (5 : 2) - பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்".ரோம பேரரசு : கி.மு. முதலாம் நூற்றாண்டில் இஸ்ரவேல் நாடு ரோம பேரரசின் கீழ் இருந்தது. அப்போது ரோம பேரரசின் கிழக்குப் பகுதியை மார்க் அந்தோணியும், மேற்குப் பகுதியை ஆக்டேவியனும் ஆண்டு வந்தனர். மார்க் அந்தோணி ஆக்டேவியனின் சகோதரி ஆக்டேயாவை மணந்திருந்தான். இந்த மார்க் அந்தோணிதான் சரித்திரப் புகழ்பெற்ற ஜூலியஸ் சீசரை கி.மு. 44 ஆம் ஆண்டு காசியஸ், புரூடஸ் என்பவர்களால் கொலை செய்ய உதவியாய் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.காலம் செல்ல, அந்தோணி ஆக்டேவியாவை பிரிந்து எகிப்து அரசி கிளியோபாட்ராவை அடைந்து தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளையும் பாலஸ்தீன நாட்டின் பகுதிகளையும் அவளுக்குக் கொடுத்தான். இது எகிப்து நாட்டு ஏரோது மன்னனுக்கும், ஆக்டேவியனுக்கும் பிடிக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆக்டேவியன் கி.மு. 31-30ல் அந்தோணி-கிளியோபாட்ராவை ஆக்டியம், அலக்ஸாந்திரயா போர்களில் தோற்கடிக்க, இருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த வெற்றிக்குப் பின் பாலஸ்தீன எல்லைப் பகுதியும் ஆக்டேவியனின் ஆட்சியில் கீழ் வந்தது. தன் பெயரை அகஸ்துராயன் என்று மாற்றி முதல் ரோம பேரரசனானான் என்பது வரலாறு.யோசேப்பும் - மேரியும்
webdunia photo
WDஅந்நாட்களில் ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரவேல் பகுதியிலுள்ள நாசரேத் என்னும் ஊரில் சாதாரண ஒரு குடும்பத்தில் மேரி என்னும் ஒரு பெண் இருந்தாள். மேரிக்கு வயது வந்தபோது, பெற்றோர் அவ்வூரில் தச்சுத்தொழில் செய்யும் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நியமித்தனர். அவள் கன்னிகையாயிருக்கையில் ஒரு நாள் காபிரயேல் என்னும் தேவதூதன் வெளிப்பட்டு - "மரியாளே, நீ கர்ப்பவதியாகிஒரு குமாரனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக" என்று சொல்லி மறைந்தான். (லூக்கா 1 : 31) மேரி திகைத்தாள். உடனே இச்சம்பவத்தை தன் இனத்தாராகிய, வயதில் மூத்த எலிசபத் குடும்பத்தாருக்கு தெரிவித்தாள். அவர்கள், பிறக்கப் போகும் ராஜாவின் தாயாக மேரியை, கடவுள் தெரிந்து கொண்டதை அவளுக்கு விளக்கினர்.நாட்கள் சென்றது. மேரி கர்ப்பவதியானாள். இதைக் கண்டு யோசேப்பு குழப்பமடைந்தான். ஒரு நாள் கர்த்தருடைய தூதன் அவனுக்கு சொப்பனத்தில் வெளிப்பட்டு, கர்த்தன் தன் "குமாரனை இவ்வுலகிற்கு அனுப்ப மேரியை தெரிந்து கொண்டதை" அறிவித்தான். யோசேப்பின் மனக்கலக்கம் தீர்ந்தது. கர்த்தர் கட்டளையின்படி வழி நடத்தப்படுவதை தெரிந்துக் கொண்டான்.
இந்நிலையில் ரோம அரசனான அகஸ்துராயன் உலகமெங்கும் முதலாம் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று கட்டளைப் பிறப்பித்தான். எல்லாரும் தங்கள் தங்கள் ஊருக்குப் போனார்கள். யோசேப்பு, தாவீதுராஜாவின் வம்ச வழியில் வந்தவராதலால் தாவீதுராஜா பிறந்த ஊராகிய பெத்லகேமுக்கு தன் மனைவி மேரியை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. மேரி கர்ப்பமாயிருந்தபடியால் அக்காலத்து நீண்ட பிரயாணத்திற்குப் பயன்படுத்தும் கழுதை மூலம் தொலை பயணப்பட்டனர்.
webdunia photo
WDபெத்லகேமை அடைந்து தங்குவதற்கு எங்கும் இடம் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு மாட்டுத் தொழுவத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. அங்கு அன்றிரவு தங்கினர். இரவில், மன்னர்களின் மன்னன் ஏழை கோலமெடுத்து, மாடுகள் மத்தியில், தன்னையே தாழ்த்தினவராய் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேற இவ்வுலகில் வந்துதித்தார். இயேசு பிறந்தபோது நடந்தவைகள் :1. மேய்ப்பர்களுக்கு செய்தி : அந்நாட்களில் பெரும்பாலான மக்கள் மேய்ப்பர்களாகவே இருந்தனர். அவர்கள் தங்கள் மந்தைகளுடன் வயல்வெளியிலேயே தங்கி வாழ்ந்தனர். இந்த பாமர மக்களுக்கே இயேசுவின் பிறப்பின் செய்தி கொடுக்கப்பட்டது. இதனை விவிலியத்தில் இவ்வாறு காணலாம் :"எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" (லூக்கா 2 : 10)"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" (லூக்கா 2 : 14)
webdunia photo
WD2. நட்சத்திரம் : இயேசு பிறந்தபோது "கிழக்கே நட்சத்திரம் தோன்றி பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் நின்றது". (மத்தேயு 2 : 9)இயேசுவை காண வந்த ஞானிகள் அந்த நட்சத்திரத்தை பின் தொடர்ந்து "கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்துக் கொள்ள வந்தோம் என்றார்கள்". (மத்தேயு 2 : 2)இப்பிரபஞ்சத்தின் அதிகாரி என்பதற்கு சான்றாக அவரின் பிறப்பின்போது ஒரு நட்சத்திரம் ஒளி வீசியதை, "அவருடைய நட்சத்திரம்" என்று விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை காணலாம். 3. ஏரோது ராஜா: ரோம ஆட்சியில், பாலஸ்தீன பகுதியை ஏரோது ஆள, அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்த பூலோக மன்னன், பிரபஞ்ச மன்னன் பிறப்பை கேட்டு கலக்கமுற்றான். கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு சொப்பனத்தில் தோன்றி ஏரோது பிள்ளையை கொலை செய்யத் தேடுவான். ஆகவே எகிப்துக்கு ஓடி நான் சொல்லும் வரை அங்கே இரு என்றான். யோசேப்பும் அவ்வாறே செய்தான். அந்நாட்டு மன்னனான ஏரோதுவால் இறையரசர் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் இயேசுவின் உலக வாழ்க்கை, மோசேயின் காலத்தில் முன்னுரைக்கப்பட்டு (உபாகமம் 19 : 15-18) ஏரோதின் காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்தது (யோவான் 6 : 14).

தேவ குமாரரின் அழைப்பு!

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று தன்னை நாடி வந்த மக்களுக்கு கர்த்தராகிய ஏசு கிறிஸ்து உறுதியளித்தார்.மானுட இனத்தை மட்டுமின்றி, மரம், செடி, கொடிகள் உட்பட தான் இப்புவியில் படைத்த ஜீவன்கள் அனைத்தையும் நொடிப்பொழுதும் கைவிடாமல் காத்துவரும் இறைவன், எவருடைய வேண்டுதலையும் மறுப்பதில்லை என்பதை மானுடத்திற்கு உணர்த்தவே தேவ குமாரராகிய ஏசு கிறிஸ்து இவ்வாறு கூறினார் (மத். அதி. 7.7).அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், நமக்கு ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், எல்லாம் பெற்றிருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற வரண்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை நன்கு அமைந்திருந்தும் சமூக வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் உரசல்கள், வாழ்வை கேள்விக்குறியதாக்கும் மோதல்கள் என்று மனிதன் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஏங்கித் தவிக்கும் போது, அவனது நெஞ்சத்தில் பிறக்கும் கேள்விகள், தேடல்கள். அந்த நிலையில் மானுடன் தனது கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்து இறைவனை நோக்கி திரும்புகிறான். அறிவு கொண்டு சிந்தித்து உரிய பதில் கிட்டாமல், மேற்கொண்டு செல்ல பாதை தெரியாமல், திக்கற்ற நிலையில் அவனுடைய மனதிலிருந்து எழுந்த கேள்விக்குத்தான் ஆண்டவர் அளித்த பதில், “கேளுங்கள் கொடுக்கப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்” என்பது.
webdunia photo
WDதேவ குமாரர் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் கூறுகிறார் : “ஏனென்றால் கேட்பவன் எவனும் பெற்றுக் கொள்கின்றான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுக்கிறவனுக்கு திறக்கப்படும்” என்று உறுதி கூறியதோடு நிற்காமல், நீங்கள் கேட்பவற்றையே இறைவன் வழங்குவார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்: “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்கு கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு கூறுகிறார்: “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு அதி.7. 9,10,11).நமது வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் சுய நல போக்குகளும், தான்தோன்றித்தனமாக செயல்களுமே நமது துன்பங்களுக்கு காரணம் என்பதையுணர்த்தி, அதனைத் தவிர்க்க ஏசு பெருமான் கூறுகிறார், “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களாகும்” என்று வழிகாட்டியுள்ளார்.வாழ்க்கை நடைமுறைகளில் நாம் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறையையும், கொள்ளவேண்டிய மனப்பான்மையையும் இவ்வாறு தெளிவாக கூறியுள்ள ஏசு கிறிஸ்து, ஆன்மீகப் பாதையையும் அற்புதமாய்க் காட்டியுள்ளார்.

தேவ குமாரரின் பிறப்பும் கிறிஸ்மஸ் பண்டிகையும்

'கிறிஸ்துமஸ் ' என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பதும், கிறிஸ்தவ‌ர்க‌ள் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு கி.பி. 336ஆம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.

இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ஆம் நாள்தானா ? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர்.

பைபிளில் எந்த இடத்திலும் இயேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், 'பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார், '

என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், 'நடு‌ங்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆடு மாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது... '

என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றிவிட முடிவு செய்து அறிவித்தன!முதன் முதலில் கிறிஸ்துமஸ் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.


ரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்து அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் அறிவிக்கின்றது.

இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார்.


WDகிறிஸ்துமஸ் நாளில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை அளித்துத் தங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொள்கின்ற உன்னதம் துவங்கியது எதனால் ?

ஏன் இந்த நாளில் மட்டும் பரிசுப்பொருட்களை அளித்துக் கொள்கின்றார்கள் மக்கள்.

புனித மத்தேயு எழுதிய பரிசுத்த வேதாகமத்தின்படி, 'உலகை உய்விக்கப் பிறந்துள்ள அன்னை மேரியின் தவப் புதல்வராம் குழந்தை இயேசுவைக் கண்டு தரிசிக்க வந்த மூன்று ராஜாக்கள் அந்தக் குழந்தையின் முன் மண்டியிட்டு வணங்கினர்.

பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொக்கிசங்களைத் திறந்து பொன்னும் பொருளும் பரிசுகளாக அளித்தனர்... ' என்ற அந்த நாள் தான் பரிசுகள் இன்று வழங்கப்படுவதின் மூலமாகக் கருதப்படுகின்றது.


WDஎந்த நாளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிப் படர்ந்துள்ள ஒரு விடயம் ஆகும். கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் முதன் முதலாக வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை லண்டன் மாநகரைச் சாரும்.

கிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம்.

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது.

குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புகளோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா!